மனம் செயலை முழுமையினின்று பிரிப்பதால் நாம் கடவுளினின்று பிரிகிறோம்.
Page No. 138:
Para (13)
இந்தப் பாராவில் வரும் கருத்து மிக அடிப்படையானது. புரியும். இது முன் பாராவிலும் வந்தது. மீண்டும் விளக்கமாக இப்பாராவின் கருத்துகளை வரிவிடாமல் கீழே எழுதுகிறேன். அதற்குமுன் கருத்தை மீண்டும் ஒரு முறை கூறுகிறேன்.
கடையில் துணி விற்கிறது. நாம் வாங்குகிறோம். வாங்குவதுடன் நம் கடமை முடிந்து விடுகிறது. விற்பதுடன் கடைக்காரன் வேலை முடிந்து விடுகிறது. இவ்வழி நாம் ஊரிலிருந்தும், உலகிலிருந்தும் பிரிகிறோம். நாளைக்கு கடையில் துணி வராவிட்டால், நமக்கு என்ற செய்வது எனத் தெரியாது. கடைக்காரனுக்கும் புரியாது. இது நமது இன்றைய பிரிந்த நிலை மனம் செயல்படும் வகையிது.
சத்திய ஜீவியம் இதற்கு எதிரான வகையில் செயல்படும். மனிதனைக் கடையிலிருந்தும், ஊரிலிருந்தும், நாட்டிலிருந்தும் சத்திய ஜீவியம் பிரிக்காது. மனிதன் தன்னை நாட்டுடன் இணைத்து நாட்டின் பகுதியாகக் காண்பான். நாட்டில் சர்க்கரை, அரிசி, துணி உற்பத்தியைக் கவனிப்பான். மற்றும் படிப்பு, அரசியல் அனைத்தையும் கவனித்து மனத்தால் பங்கு கொள்வான். தான் நெசவாளியானால் துணி உற்பத்தியைப் பற்றி தன் பங்கை அறிவான். இது அவனுக்கு அறிவு. நாட்டில் எப்படி துணி உற்பத்தியாகிறது என்பதை அவன் அறிவதால் மனத்தால் நாட்டின் வாழ்வில் பங்கு கொள்கிறான். மனிதன் இப்படி சிந்திக்க அவனுக்கு படிப்பு, அறிவு, நாட்டுப்பற்று, தேவை. அப்படித் தனிமனிதன் மாற நாடு மிகவும் உயர்ந்திருக்கவேண்டும். அந்த நாட்டில் துணிப் பஞ்சம் வாராது. எந்த பஞ்சமும் வாராது. அவன் எந்தத் துணியை உடுக்கிறானோ அந்தத் துணி நாட்டில் அதிகமாக உற்பத்தியாகும்.]
1) சத்திய ஜீவியம் மாறாக வேலை செய்கிறது.
2) மரமும், விதையும் மனம் காணும் வகையில் மரமாகவோ, விதையாகவோ இருக்க முடியாது.
[உலகம், ஊர், சமூகமில்லாவிட்டால், ஆலை ஏற்பட்டு துணி கடைக்கு வாராது. ஒருவர் அதை வாங்கிப் பயன்படுத்த முடியாது. நாம் அப்படி வரும் மாற்றங்களைக் கவனிப்பதில்லை. கவனிக்கவில்லை என்பதால் இல்லையெனக் கூறுகிறோம். அது மனம் செய்யும் தவறு.]
3) மரமும், விதையும் மரமும், விதையுமாக இருப்பதற்குக் காரணம் பிரபஞ்சம்.
பிரபஞ்சமில்லாவிட்டால் மரமும், விதையும் உற்பத்தியாக முடியாது.
4) பிரபஞ்சத்திற்குரிய சட்டத்தை மரத்திற்கு நாம் பயன்படுத்துகிறோம்.
5) மரம் விதையாவதும், விதை மரமாவதும் பிரபஞசத்தைப் பொருத்தது காற்று, வெய்யில், மழை.
6) குறிப்பிட்ட சட்டம், பொது சட்டத்திலிருந்து எழுகிறது.
7) மரம் விதையை விளக்க முடியாது. விதை மரத்தை விளக்க முடியாது. Climate, காற்று, வெய்யில், மழை ஆகிய பிரபஞ்சம் அவற்றை விளக்கும்.
8) கடவுள் பிரபஞ்சத்தை விளக்குவார்.
9) சத்திய ஜீவியம் மரம், விதை, பிரபஞ்சம் அனைத்தையும் ஊடுருவியிருப்பதால் அவற்றின் ஐக்கியத்துடனிருப்பதால் அனைத்தையும் விளக்குகிறது. மனம் விதை, மரம் இரண்டையும் காண்பதால் மனத்தால் அவற்றை முழுவதும் விளக்க இயலாது.
10) எனது முழுமையும், தனிமையும் ஒன்றே.
No comments:
Post a Comment