Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Wednesday, October 3, 2012

Audio - Tamil : சுமுகமும், வாழ்வில் அதற்குரிய பலனும்

Audio : Tamil   
Topic: சுமுகமும், வாழ்வில் அதற்குரிய பலனும்  
Book Name: நறுமணம் - திரு. கர்மயோகி அவர்கள்  

(Book Reading Program -செப் 29, 2012) - ( Duration : 4 mins.)

Dear Sri Annai & Sri Aurobindo Devotees,
Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Mrs. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil

Click this link to Play the Audio


Player 1: :

=======================================








சுமுகம் என்பது சத்தியஜீவியத்தைச் சேர்ந்தது என்று ஸ்ரீ கர்மயோகி அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.


சுமுகம் இருந்தால் வெற்றி நிச்சயம் என்றுகூடக் கூறலாம். ஒரு தனி மனிதனோ, குடும்பமோ, organisationனோ முன்னேறியிருக்கிறது என்றால் அதன் பின்னணியில் சுமுகம் நிச்சயமாக இருக்கும்.


சுதந்திரத்திற்கு முன்பாகப் பல குறுநில மன்னர்களுக்கிடையே தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருந்த பூசலால் இந்திய நாட்டின் வளர்ச்சி தேங்கிக் கிடந்தது.


அந்த நிலையிலே அன்னியப் படையெடுப்பு அவசியமாகி, நாடு ஒற்றுமைப்பட்டு, சுதந்திர இந்தியா வெளிப்பட வகை ஏற்பட்டது.



அதேபோல் ஒரு கம்பெனியில் நிர்வாகத்திற்கும், தொழிலாளர்-களுக்குமிடையே சுமுகம் இருந்தால், அந்தக் கம்பெனி தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காணலாம். அப்படியில்லாமல் எப்பொழுதும் கொடி பிடிக்கும் நிலையிலுள்ள கம்பெனி விரைவில் மூடப்படுவதையும் காணலாம்.


ஒரு நாட்டிற்கு, ஒரு organisationக்கு எந்தச் சட்டமோ அதுவேதான் ஒரு தனி மனிதனுக்கும்.


ஸ்ரீ கர்மயோகி அவர்கள், "நாம் சுமுகத்தின் முக்கியத்துவத்தை அறியவில்லை, அனுபவிப்பதில்லை'' என்று கூறுகின்றார்கள்.


ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் முன்னேறுவதற்குச் சுமுகம் மிகவும் அவசியமான ஒன்று. அழகாகப் பழகுவது நமக்குச் சுமுகம் எனப் பெயர். அது நல்லது. ஆனால் சாதிக்கும் திறன் அற்றது.


உள் உணர்விலிருந்து எழுகின்ற சுமுகமே உண்மையான சுமுகம். எனக்கு என் குடும்பத்தின் சுமுகம் முக்கியம்.


அதற்காக நான் எதையுமே சந்தோஷமாக, எரிச்சல், எதிர்பார்ப்பு, மனக்கசப்பு இல்லாமல் விட்டுக்கொடுக்கின்றேன் என்ற மனநிலை அந்தக் குடும்பத்தை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.


அப்படிப்பட்ட சுமுகம் உண்மையாகப் பிறர் மீதுள்ள நல்லெண்ணத்தால் ஏற்படும் சுமுகமாகும். அந்தச் சுமுகம் வாழ்வில் சாதிக்கும் திறனுடையது.


அன்னை சுமுகம் என்று ஒரு மலருக்குப் பெயரிட்டு இருக்கின்றார்கள். அதைத் தினமும் சமர்ப்பணம் செய்து வழிபட்டால் அங்கு சுமுகம் ஓங்குவதைக் காணலாம்.


ஆன்மீகத்தில் சுமுகம் என்பது முக்கியமாக நம்முள்ளிருந்து எழும் சுமுகமாகும். அதாவது நம்முடைய ஆன்மீக ஆர்வத்திற்கு நம்முடைய personality முழுமையாகக் கொடுக்கும் ஒத்துழைப்பு ஆகும்.


நம்முடைய எண்ணம், உணர்வு, செயல், கரணங்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இறைவனை நோக்கி முன்னேற எடுக்கும் முயற்சியாகும்.





       Next Book Reading Program on , Oct 5, 2012 @ Auromere Meditation Center  ( 5.30 - 6.00 PM)


Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.









No comments:

Post a Comment

Followers