Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Tuesday, October 2, 2012

மணிக்கு ஒரு முறை சமர்ப்பணம் செய்யும் பிரார்த்தனை முறை.-(Prayer Method: Hourly Consecration)


  

மூன்று நாட்கள் - மணிக்கு ஒருமுறை சமர்ப்பணம் செய்யும் பிரார்த்தனை முறை - Hourly Consecration.

அன்னையை தினமும் சில நாட்களுக்கு, மணிக்கு ஒரு முறை அழைத்தால், பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அதிகபட்சமாக மூன்று நாட்கள் பிரார்த்தனையில், எந்த ஒரு பிரச்சனையும் தீர்க்கப்பட்டுவிடும்.


ஒரு மணிக்கு ஒரு முறை - அதாவது மணி அடிக்கும் நேரத்தில் - தவறாமல் அன்னையை நினைவுகூர்வது.  eg:  7.am to 7.PM (12 hours)  for 3 days  (7.am, 8.am,............... upto 7.pm)

சமர்ப்பணத்தை மேற்கொண்டு மணிக்கு ஒரு முறை பிரச்னையை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், பெரும்பலன் உண்டு.
அதற்குப் பதிலாக மணிக்கு ஒரு முறை என்பதை விட்டு, மணியடிக்கும்பொழுது அதாவது 10 மணி, 11 மணி, 12 மணிக்குச் சமர்ப்பணம் செய்ய மேற்கொண்டால் முழுப் பலனிருக்கும். 10 மணி என்றால், 9.59, அல்லது 10.1க்கு செய்வது 10 மணியாகாது. வினாடி முள் 59ஐத் தாண்டி 60ஐத் தொடும் க்ஷணம் செய்வதே முழுப் பலன் கொடுக்கும். ஒரு நாளில் நாம் விழித்திருக்கும் 15, 16 மணி நேரத்தில் இதுபோல் வினாடி தவறாமல் 5, 6 முறை சமர்ப்பணம் செய்ய ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக 15, 16 மணியும் தவறாமல் அதைச் செய்யும் நாளில் பிரச்சனையின் சுவடுகூட இருக்காது. சமர்ப்பணம் என்பது ஒரு வினாடி (Mother) அன்னை என்று நினைப்பதுவே. அதுவே இந்த முறைக்குப் போதும்.

நமக்கு மேல்மனமும் ஆழ்மனமும் உள்ளது. நாம் நமது பிரச்சனைகளைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தால், நாம் மேல்மனதில் இருக்கிறோம் என்பதைக் குறிக்கும். மேல்மனதிலிருந்து விலகிப் போக வேண்டுமென்றால், நாம் அந்தப் பிரச்சனையை மறக்க வேண்டும். அல்லது அதைப் பற்றிய தீவிர நினைவு இல்லாமல் இருக்க வேண்டும். இப்பொழுது, பிரச்சனை நம் பர்சனாலிட்டியின் ஆழத்திற்குச் சென்று அங்கு ஒரு இனம்புரியாத கவலையை உண்டு பண்ணுகிறது. பிரச்சனையின் ஆழத்திலிருந்து உன்னால் விலக முடியவில்லையென்றால், அன்னையை அழைக்கவும்.  

மணிக்கொருமுறை பிரார்த்தனை செய்வதை, சரியாக மணி அடிக்கும் நேரத்தில், அன்னையை நினைப்பதை ஓரிரண்டு அல்லது மூன்று நாட்கள் தவறாமல், கடைப்பிடிக்க வேண்டும்.
பூரண குணம் பெற மணிக்கொரு முறை சமர்ப்பணம் செய்தல்:
நாம் அன்னையை ஏற்றுக்கொண்டதால் வியாதியின் சம்பந்தப்பட்ட சக்கரத்தில் அன்னையை உருவகப்படுத்தி, மூலாதாரத்திலும் அதையே செய்து, மூச்சின் பாதையை ஒளியால் நிரப்பி, ஆன்மாவிலும் அன்னையைக் கண்டு, ஒவ்வொரு மணி அடிக்கும் வினாடியில், வினாடி தவறாமல் அன்னையை நினைவுகூர்ந்தால், மீதியுள்ள வியாதி தனக்குக் குணமாவதுடன், தன் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கும், அடுத்த தலைமுறையில் நோயுற்றவர்களுக்கும் குணம் ஏற்பட்டு, உடலின் சூட்சுமத்திலும், ஆன்மாவின் அஸ்திவாரத்திலும் வியாதி பரம்பரையையும், கர்மத்தின் ஆதியையும் இழக்கும்.

-  Source :நோயற்ற வாழ்வு, ஆன்மீகமும் ஐஸ்வர்யமும் » 04 . பகுதி - 3- Sri Karmayogi Avarkal

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam Hourly Consciousness
               



No comments:

Post a Comment

Followers