Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Friday, March 1, 2013

Prosperity Day -சுபிட்ச தினம் (March 1, 2013) Wishes and Messages (Tamil and English Versions)


Cannonball Tree

ஸ்ரீ அன்னை, அரவிந்தர் அன்பர்களுக்கு வணக்கம்.
அன்பர்களுக்கு எங்களது (Prosperity Day) சுபிட்ச தின நல்வாழ்த்துக்கள்.

இன்றைய தினம், அன்னையின் அருளும் பொருளும் என்ற தலைப்பிலான, திரு கர்மயோகி அவர்களின் கருத்துக்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அன்னையின் அருளும் பொருளும்

பொருளையும், வாழ்வையும், உடலையும் முற்றுமாகப் புறக்கணிப்பது மரபு வழி வந்த நம் ஆன்மீகம். அது தவம், யோகம், சன்னியாசம் ஆகிய மார்க்கங்களைக் காட்டி அப்புறக்கணிப்பு வேலையைச் செய்கிறது. ஆனால் ‘வாழ்வனைத்தும் யோகம்’(All life is yoga) என்பது அன்னையின் வழி.

அன்னை பொருளையோ, வாழ்வையோ, உடலையோ புறக்கணிக்கவில்லை. பொய்யால் வந்த பொருளையும், பொய்யின் திறத்தால் விளைந்த வாழ்வையும், உடலில் உள்ள இருளையும் மட்டுமே புறக்கணிக்கின்றார் அன்னை.


பொருளைப் பொய்யால் ஈட்டலாம்; மெய்யால் பெருக்கலாம். பொய்யால் பொருளீட்டத் திறமையும், உழைப்பும் தேவை. மெய்யால் பொருளீட்டத் திறமை, உழைப்பு ஆகியவற்றுடன் வாய்மை நிறைந்த நேர்மையும் தேவை. நேர்மையின் திறமையால் ஈட்டப்பட்ட பொருளுக்கு உரியவன் இறைவன். பொய்யின் ஜாலங்களால் ஈட்டப்பட்ட பொருளுக்குத் தலைவன் அசுரன்.

நேர்மையின் திறமையால் ஈட்டப்பட்ட பொருள் இறை வழிபாட்டுக்கு அளவுகோல். இதுவே அன்னையின் வழிக்குத் திறவுகோலும் ஆகும்.

அன்னையின் வழியில் அழைத்துச் செல்வதற்கு ஒரு துணை வேண்டும் அன்றோ? அதுவே ‘அன்னையை வழிபடுதல்’ என்ற பெருந்துணை. ‘அன்னையை வழிபடுதல்’ என்பது என்ன? அன்னையின் தெய்வாம்சத்தை உணர்ந்து, அவரை ஆன்மாவில் தெய்வமாகப் பிரதிஷ்டை செய்துகொள்வது. உடலின் உழைப்பையும், உயிரின் உணர்ச்சியையும், அறிவின் திறத்தையும் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆன்மீக ஒளிக்கு உட்படுத்திச் சமர்ப்பணம் செய்துகொள்வது. இதுவே அன்னை வழிபாடு.

அன்னை, நெஞ்சில் பிரதிஷ்டை செய்யப்படுவதால், விளக்கம் பெற்ற ஆன்மா அறிவில் ஜோதியாகவும், வாழ்க்கையில் வெற்றியாகவும், உடல் உழைப்பின் சிறப்பாகவும் வெளிப்படுகின்றது. எனவே நெஞ்சிலுள்ள ஆன்ம ஒளிக்கு, பொருளீட்டும் உழைப்பு கட்டுப்படுகின்றது. அன்னையின் அவ்வொளி நெஞ்சில் ஏற்பட்டபின், பொருள் அவனைத் தேடி வரும். அவன் பொருளுக்கு அதிபதியாகின்றான். அப்பொருள் அருளால் விளைவது.

அது அருளால் வரும் பொருளாக இருப்பதாலே, அதைச் சத்தியத்தால் மட்டுமே ஈட்ட முடியும். பொய்யோ, பொய் நிறைந்த புரட்டோ அருகில் வந்தால், அப்பொருள் மாயமாய் மறைந்துபோகும். வாய்மையாலும், வாய்மையின் நேர்மையாலும், நேர்மையின் திறத்தாலும் மட்டுமே ஈட்டக்கூடியது அப்பொருள்.

‘சத்தியம்’ என்பது உள்ளது. இல்லாதது பொய்; உள்ளதே உண்மை. ‘உண்மையே சத்தியம்’ என்றாலும், சத்தியத்திற்கு அநேக வடிவங்கள் உள்ளன; ஆயிரம் உருவங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு செயலுக்கும், உணர்வுக்கும், எண்ணத்திற்கும் இரு வடிவங்கள் உள்ளன. ஒன்று, சத்தியத்தின் வடிவம்; மற்றொன்று, பொய்யின் வடிவம். ‘எண்ணம்’ என்பது கருவி. இது சத்தியத்திற்கும் பயன்படும்; பொய்க்கும் பயன்படும். ‘விருப்பம்’ என்பது உணர்வு. விருப்பம் உயர்ந்த இலட்சியத்திற்குப் பயன்படுவதைப் போல, அதற்கு எதிரான காரியத்திற்கும் பயன்படும். பல்வேறு நிலைகளில் இந்த இரு வடிவங்களும் தெளிவாகத் தெரியும். பொறுமையை ‘சத்தியத்தின் வடிவம்’ என்றால், எரிச்சலை ‘பொய்யின் வடிவம்’ என்று புரிந்து கொள்வதற்குப் பேரறிவு தேவை இல்லை.

எனவே, அறிவு, பொறுமை, ஆற்றல், இன்சொல், கூர்ந்தமதி (அறிவுக் கூர்மை), மெய்ப்பொருள் காணும் திட்பம், அடக்கம், நெறி, கற்பு, திண்மை (வலிமை), சாதுர்யம் (நாகரிகம்), சமயோசிதம், இனிய பேச்சு, பிறர் மனம் அறிய முற்படுதல் போன்ற ஆயிரம் நல்ல குணங்களை, நல்ல பழக்க வழக்கங்களை ‘ சத்தியத்தின் கூறுகள்’ எனலாம்.

அதே போல சிலவற்றிற்கு எதிரான குணங்களை, பழக்கவழக்கங்களை ‘பொய்யின் பிரதிநிதிகள்’ எனலாம். நாம் கடையில் ஒரு சாமான் வாங்கும் போதும், பஸ்ஸில் டிக்கெட் வாங்கும்போதும், ரூபாய் 3 கோடி கடனை சாங்ஷன் செய்யும் உயர் அதிகாரியானாலும், அதிர முழங்கும் மேடைப் பேச்சாளரானாலும், அழும் குழந்தையைக் குளிப்பாட்டும் தாயானாலும், ஒவ்வொரு செயலிலும், நிலையிலும் எது சரி, எது தவறு, எது சத்தியம், எது பொய் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும். எனவே, அதற்கு விளக்கம் தேவையில்லை. கடமைகளைப் பொறுப்புடன், நல்ல நோக்குடன் நிறைவேற்றும் எல்லா நல்ல பழக்கங்களையும் சத்தியத்தின் பிரதிநிதிகளாகக் கொள்ளலாம். அவற்றிற்கு எதிரான எல்லாவற்றையும் பொய்யின் பிரதிநிதிகளாகத் தள்ளலாம்.

ஒருவர் இக்கருத்தை ஏற்றுச் செயல்பட வேண்டுமானால், அவர் செய்ய வேண்டியவை என்ன? அவை கீழே தரப்படுகின்றன:



  • அன்னையைத் தெய்வமாக உணர்ந்து, ஆன்மாவில் பிரதிஷ்டை செய்து, மனத்திலும், சொல்லிலும், செயலிலும் அன்னை வழிகளை மேற்கொண்டு, வாழ்க்கையை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்து வாழ எடுக்கும் முடிவு, வாழ்வின் முழுப் பெருமுடிவாக இருக்க வேண்டும்.



  • தம் கடமைகள் என்னவென்று பிறரைக் கேட்காமல் தாமே அறிந்து, உணர்ந்து, அவற்றை முழுமையாக ஆற்ற அரும்பாடுபடுதல் வேண்டும்.



  • தம் வயதிற்கும், தொழிலுக்கும், நிலைமைக்கும் (அந்தஸ்துக்கும்) உரிய திறமைகள் குறைவாக இருந்தால், அவற்றைப் பூரணமாகப் பெற முயன்று வெற்றி பெற வேண்டும்.



  • பொய்யின் திறமையால் கிடைக்கும் பலன்களை அறவே விலக்கி, தம் காரியங்களையும், கடமைகளையும் நேர்மையின் திறத்தால் பூர்த்தி செய்ய முழுமுயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • இன்றைய வாழ்வில் கடமையும், திறமையும் பூரணம் அடைந்தபின், மனச்சாட்சிக்குப் புறம்பான காரியம் ஒன்றுகூட இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.



  • இன்று கடமை, திறமை, மனச்சாட்சி ஆகியன பூர்த்தியானது போல், நம் கடந்த கால வாழ்வை ஆதி முதல் கவனித்து, அது எவ்வாறிருந்தது என்று சிந்தித்து, சோதித்து, குறையுள்ள இடங்களை உணர்வால் நிறைவு செய்து, கடந்தகாலப் பாக்கியைப் பூர்த்தி செய்ய வேண்டும்.



  • வீடு, சுற்றுப்புறம் ஆகியவற்றைச் சுத்தத்திற்கு எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பொதுவாக ஆத்மச் சமர்ப்பணத்தை முழுமையாகச் செய்தல் வேண்டும். எந்த நினைவு வருமுன்னும், எந்தச் செயலைச் செய்யும் முன்பும் அன்னையை நினைத்துக்கொள்ள வேண்டும்.


  • ‘பணம்’ என்ற நோக்கில் பார்க்கும்பொழுது, அதைக் குறைவறப் பெற இன்னும் சிலவற்றைக் கைக்கொள்ள வேண்டும். பொருளுக்கு அடிப்படை உழைப்பு. ஆதலால், உழைப்புக்கு எதிரான சோம்பேறித்தனத்திற்கு வீட்டில் இடம் கொடுக்கக்கூடாது. 

  • செய்த செலவுக்கு விவ
  • மான கணக்கை அன்றாடம் எழுத வேண்டும். எவ்வளவு சிறிய தொகையானாலும், நாம் பட்ட கடன்கள் எவ்வளவு நாள்பட்டதானாலும், அவற்றைக் குறையின்றித் தீர்க்க வேண்டும். 

  • தாழ்ந்த, மெதுவான குரலில் பேசுவதற்கும், செல்வத்திற்கும் தொடர்புள்ளதால், குரலைத் தாழ்த்தியும், சொற்களின் அளவைக் குறைத்தும் பேச வேண்டும். உடைந்த பொருள்கள், பழுதுபட்ட மிஷின்கள், செல்வநாயகியான லட்சுமி நம் இல்லத்திற்கு வரத் தடையானவை என்பதால், எவ்வளவு சிறிய பொருளானாலும் அதை உடனடியாகப் பழுது பார்த்துவிட வேண்டும்.

அன்னை நாகலிங்கப் பூவை ‘செல்வ வளம்’ (Prosperity flower) என்கின்றார். சிவப்பு நிற நாகலிங்கப் பூவை ‘செல்வ வளம்’ என்றும், வெண்மை நிற நாகலிங்கப் பூவை ‘தன்னலமற்ற செல்வ வளம்’ (Unselfish prosperity) என்றும் அன்னை குறிப்பிடுகின்றார்.

அன்னைக்கு நாகலிங்கப் பூவைச் சார்த்தி வணங்குதல் நலம். அது அருள் நலத்தையும், அளவற்ற பொருள் நலத்தையும் தரவல்லது.


 ----------------------------------------------------------------------------

Dear Devotees,

Today ( March 1, 2013) is a prosperity day. On this day, we would like to share some thoughts of Sri Karmayogi Avarkal from the book Spirituality & Prosperity on the title "God Proposes; Man Disposes".
God Proposes; Man Disposes

- Spirituality & Prosperity by Sri Karmayogi Avarkal

The title is an inversion of the English proverb. Since 1956 when the Force descended on earth, God seeking Man more than Man seeking God has become a greater reality. We see no God, we see only how prosperous we are. Prosperity is the God for the householder. The Force came down on earth in 1956 but began to act through the governments in 1967. From then onwards its action is more and more pronounced. Just now Man is surrounded by a plethora of social opportunities. Psychologically it is greater.

A clerk in a bank 10 years ago resigned his job and ventured on his own. His wife saw the wave of incoming prosperity more than he did. She took to Mother. The man is hardworking and resourceful. His business witnessed an expansion no one could conceive of. Almost by chance the wife took to service and excelled in it. The expanded business further expanded. This was not an opportunity during the 40's or 50's. It appeared in the 60's. No one took notice of it. Now, it is very prominent in the market. This clerk took advantage of it. How many others have refused such an opportunity or are unaware of it. God proposes that Man should prosper. Man refuses to respond to God's proposal.

Insurance is God given. It is true that insurance is more popular today than before. Here is a scheme that is willing to offset one's misfortunes. Not all avail of the scheme unless law compels. God continues to propose to Man in newer ways. Man responds to a small part of it. There is a proverb in Tamil, "There is a desire to be a Tahsildar, but your destiny is to be a donkey herd." This was a proverb when the Tahsildar was received with nadaswaram in the villages. After the descent of the Supramental Force, I feel like rewriting the proverb as, "You have the LUCK to be a Tashildar, but you desire to tend a herd of donkeys." The middle class man has not availed of even 10 % of the social opportunities. Should he do so, he will move to the upper level of the upper middle class. There are scores of examples all around. Let us be inspired by them.

Thanks,
AuroMere Meditation Center.

No comments:

Post a Comment

Followers