வீடு ஆணுக்கும் குடும்பம் பெண்ணுக்கும் உரியது. பொருள் ஈட்டுவது ஆண். பெற்ற பொருளை பொறுப்புடன், கடமையுடன், பண்பாக, உரிய செயலுக்கு பயன்படும்படிச் செய்வது பெண். திறமை குறைவானால் பெரும் பொருள் வீணாகும். பொறுப்பில்லாவிட்டால் உரியவருக்குக் கிடைக்க வேண்டியது உரிமையற்றவரிடம் சென்றடையும். கடமை தவறினால் காலம் காட்டி உறுத்தும். பண்பு குறைந்தால் பெரும் செலவில் சிறு காரியம் அரைகுறையாக முடியும். இவை பெண்ணுக்கு அமைந்தது. இதை சாதிக்க அவளுக்கு செயலிலும், சொல்லிலும், உணர்விலும் கட்டுப்பாடு தேவை. கட்டுப்பாடு உயர்ந்தால் கடமை சிறக்கும், மிளிரும். கட்டுப்பாடு குறைந்தால், கட்டுத்தறியிலிருந்து விடுபட்ட மாடாகும் குடும்ப வாழ்வு. - From the article -The Greatness of Women ( பெண்ணின் பெருமை)
-Life Divine |
Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center), Pallikkaranai,
Chennai, India
No comments:
Post a Comment