ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம். திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில முறைகளுக்கான, கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். ----------------------------------------------------------------------------------------------------- யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ........... ----------------------------------------------------------------------------------------------------- முறை 11 :
அன்னையே உன் சரணாகதியை ஏற்றபின், அடுத்தது இல்லை.முறைக்கான விளக்கம் :
இந்த யோகம் மனிதனுக்கில்லை. அவன் பங்கு சரணாகதி. யோகம் இறைவனுக்கு என்றார் பகவான். சரணாகதி கீதை கூறுவது. அது ஆத்மா சரணடைவது. மோட்சம் கிட்டும். பகவான் கூறும் சரணாகதி வளரும் ஆன்மாவையும், நம் சுபாவத்தையும் சரணடைவது.
- குடும்பத்தைத் துறந்து மேற்கொள்வது சன்னியாசம். அது பெரியது. தன் சொத்து முழுவதையும் கொடுத்து, குடும்பத்தையும் துறந்து ஏற்பது யோகம்.
- ஆத்மாவைச் சரணடைவதற்கும், சொத்தையும் ஆத்மாவையும் சரணடைவதற்கும் இந்த வித்தியாசம் உண்டு.
- இதற்கும் அடுத்த கட்டம் சுபாவத்தைச் சரணம் செய்வது.
- சரணாகதி என்ற சொல் நம் பரம்பரையாக வந்தது என்பதால் நாம் பகவான் கூறும் சரணாகதியை அப்படி எடுத்துக் கொள்கிறோம். அது இல்லை.
- ஆத்மாவை அறிந்தவன் ஜீவன் முக்தன்.
- அதைப் பரம்பரையாக ஜீவாத்மா என்கிறோம்.
- வளரும் ஆன்மாஎன்பது மனத்திலும், உணர்விலும், உடலும் வெளிப்படும் ஆன்மா.
- மனம் அமைதியானால் வெளிப்படுவது ஆன்மா.
- மனத்தில் சொல்லெழுந்தால் அமைதி கலையும், ஆன்மா மறையும்.
- சொல் சிறப்பாக எழும்பொழுது ஆன்மா சொல்லைத் தாங்கி வருகிறது.
- கவிகட்கும், மேதைகட்கும் அது வெளிப்படும்.
- சொல்லை மனம் சொல்வதற்குப் பதிலாக மனத்தின் ஆன்மா சொல்வது மேதையின் சொல்லாகும்.
- மேதையின் சொல்லைச் சொல்வது மனத்தில் வளரும் ஆன்மா.
- மாவீரனின் செயலைச் செய்வது உயிரில் வளரும் ஆன்மா.
- செயலையும், சொல்லையும், உணர்வையும் இறைவனின் ஸ்பர்சமாக உடல் ஏற்றுப் புல்லரிப்பது உடல் வெளிப்படும் வளரும் ஆன்மா.
- சுபாவம் சரணடையாவிட்டால் சுபாவம் வெளிப்படும். மனத்தில் சுபாவம் வெளிப்பட்டால் மௌனம் கலையும்; சொல் எழும்.
- உணர்வில் சுபாவம் வெளிப்பட்டால் கோபம், பயம் எழும்.
- உடல் சுபாவம் வெளிப்பட்டால் உடல் ஜடமாக இருக்கும்; புல்லரிக்காது.
- நம் சரணாகதியை அன்னை ஏற்பது எனில் மனத்திலும், உணர்விலும், உடலும் சைத்தியப்புருஷன்எனும் வளரும்ஆன்மா செயல்பட வேண்டும்.
- அதைக் கடந்த மனிதநிலை வாழ்வில் இல்லை.
- சரணாகதியை அன்னை ஏற்றபின் உனக்கு வேறென்ன வேண்டும் என்று பகவான் கேட்கிறார்.
- சரணாகதி சமர்ப்பணம் பூர்த்தியாகும் நிலை.
- பிரச்சினைத் தீர அன்னையிடம் கூறுவது சமர்ப்பணம்.
- கூறினால் பிரச்சினை தீர்ந்துவிடும்.
- யோகம் செய்ய அந்தச் சமர்ப்பணம் போதாது.
- ஜீவனையும், சுபாவத்தையும் சரணம் செய்ய வேண்டும்.
- சரணாகதியை அன்னை ஏற்றதற்கு அடையாளம் மனம் மௌனத்தால் சிறந்து, உணர்வு ஆனந்தமடைந்து, உடல் புல்லரிப்பதாகும்.
- பக்குவமான பக்தருக்கு இதுவும் பலிக்கும்.
- இது யோக முறை, சிறந்த முறை.
..............................தொடரும்.
Download the Audio Format of this book by clicking the following link. |
No comments:
Post a Comment