Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Friday, May 11, 2012

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் -10


ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம். 
திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில முறைகளுக்கான, கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். 
-----------------------------------------------------------------------------------------------------
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ...........
-----------------------------------------------------------------------------------------------------

முறை 8 :

உள்ளம் அடங்கினால் உலகை உள்ளே நாடு.

உள்ளே போ. உலகம் உள்ளே தெரியும்வரை உள்ளே போ. உலகை வெளியில் காண்பதற்குப் பதிலாக உள்ளே காண்பது உண்மையை அறிவது

முறைக்கான விளக்கம் :

இவை பெரிய யோகப் பயிற்சிகள். பொதுவாக மனம் அடங்கவில்லை, உள்ளே போக முடியவில்லை என்பார்கள். ஆனால் பக்குவமுள்ளவர் பலர் என்பதால், அவர்கட்கு இது பலிக்கும். பலிப்பது பெரியது. ஒருவருக்கு இது பலித்தால், இதன் மூலம் எதுவும் பலிக்கும். பெரியது, சாமானியர்கட்கு இல்லை என்பது உண்மை. சாமானியர்கட்குப் பெரியது பலிப்பது அன்னையிடம் பலரும் கண்டது.


புறம் உலகம்; அகம் மனம். அகமே புறம். புறத்தில் பல ஆண்டுகளில் நடப்பது அகத்தில் சில நாட்களில் நடக்கும். இதன் உச்சகட்டம் புறம் அகமானால் யுகம் க்ஷணமாகும். அகத்தில் ஜகத்தைக் காணலாம். அதற்கு மனம் அடங்கி, சலனமிழந்து, மௌனம் சிறந்து, அதன் பின்னுள்ள மௌனம் வெளிப்பட்டு, அதிலிருந்து செயல் எழுந்துப் புறத்தை அடைய வேண்டும். இது பிரபஞ்ச வாழ்வில் ஒரு மைல்கல். இதுவரை ஜடம் உலகை ஆண்டது. இனி ஆத்மா ஜடமான உலகை ஆளும். ஒரு யோகி நாற்காலியில் உட்கார்ந்தபடி உலகில் எந்த இடத்திற்கும் தம் சக்தியை அனுப்பலாம் என்றார் பகவான். அதுபோல் அவர் உலக யுத்தத்தை வென்றார்.


..............................தொடரும்.


Download the Audio Format of this book by clicking the following link.
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

Thanks,
AuroMere Meditation Center ,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India

No comments:

Post a Comment

Followers