Good Evening! Wishing you a great day! Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Monday, August 5, 2013

பெற்ற அருளின் பெரும் பேற்றை ஆயுள் முழுவதும் நிலைக்க என்ன செய்யலாம்?

அன்னையின் அருளைப் பெற்றால் மட்டும் போதுமா?

பெற்ற அருளின் பெரும் பேற்றை ஆயுள் முழுவதும் நிலைக்க என்ன செய்யலாம்? 

முதலில் பெற்று, பின்னர் இழந்த அருளை, மீண்டும் எப்படிப் பெறலாம்?

என்பது போன்ற கேள்விகளுக்கு திரு கர்மயோகி அவர்கள் அளிக்கும் விளக்கங்கங்களைக் காண்போம்.

புதியதாய் அன்னையிடம் வரும்பொழுது நமக்கும், அன்னைக்கும் உள்ள இடைவெளி பெரியதாய் இருப்பதால், நடக்கும் நிகழ்ச்சிகள் ஆச்சரியமாக இருக்கின்றன. அன்னை பழகிப்போனபின் புதுமை குறைந்து, நிகழ்ச்சிகள் பழமையாய்விடுகின்றன. அதனால் அன்னையிடம் இருந்து நாம் பெறக்கூடியது அவ்வளவுதான் என்பது இல்லை. புதுமையுணர்வு தொடர்ந்திருந்தால், புதுமை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும். அன்னையைப் பல அளவுகளில் நாம் அறியலாம்.

முதற்கட்டம் முடிந்து பழகிப்போனபின், அன்னையை அதிகம் தெரிந்து கொள்ள முயன்றால் ஆரம்ப காலத்தைப்போல் மீண்டும் வாழ்க்கை மாறும். ஒவ்வொரு கட்டம் பழகிப்போனபின், அன்னையை அதிகமாக ஏற்றுக்கொள்ள முயல்வது, தொடர்ந்து அன்னையை நம் வாழ்வில் ஆரம்ப காலத்தில் செயல்பட்டபோல் செயல்பட உதவும். அதிகமாகத் தெரிந்துகொள்ள உதவுவது ஆர்வம் (aspiration). அன்னையின் சக்தியைப் பெற்றுத் தருவது அழைப்பு. எனவே ஆர்வமும், அழைப்பும் சேர்ந்து, தொடர்ந்து செயல்பட்டால், அன்னை என்றும் நம் வாழ்வில் புதுமணம் பரப்பும் நறுமலராக விளங்குவார்.

ஒருவர் அன்னையை நாள் முழுவதும் நினைவுகூர்ந்தால் அவர் அகவாழ்வு ஒளி பெறும்; சிறக்கும். ஆனால் இக்காரணத்தாலேயே அன்னை செயல்பட ஆரம்பித்துவிடமாட்டார். ஏராளமாகப் படிக்கும் பையனுக்கு அறிவு அதிகமாகும். ஆனால் அப்படிப்பட்ட படிப்பால் ஒரு பட்டத்தை எடுத்துவிட முடியாது. பட்டம் பெற அதற்குரிய புத்தகங்களை ஆழ்ந்து பயில வேண்டும். அதே போல் அன்னையை இடைவிடாது நினைத்தால் மனநிலையை உயர்த்துமே தவிர, எந்தக் குறிப்பிட்ட காரியத்திலும் அன்னையை வெளிப்படுத்த உதவாது.

ஒரு செயலில் அன்னை வெளிப்பட வேண்டுமானால், அச்செயல் அன்னையின் சக்தியால் நிரம்பி வழிய வேண்டும். 

அன்னையை வாழ்வில் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளுதல் முழு யோகம் என்பதால், அதைக் கருதாது, ஏதாவது ஒரு முழுக் காரியம் (complete act) அன்னையால் நிரப்பப்பட்டு அன்னையின் புதுமை பொலிவுற வெளிப்படுதல் எப்படி என்பதை மட்டும் கருதுவோம். தீவிர பக்தர் எவராலும் இதைச் செய்ய முடியும் என்பதால் இதை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். நாம் எடுத்துக்கொண்ட செயலின் எல்லாச் சிறு பகுதிகளிலும் அன்னையை நினைவுகூர்ந்தால் அன்னை அச்செயலில் வெளிப்படுவார். கடைக்குப் போவதை ஒரு முழுக் காரியமாகக் கொண்டு இந்தச் சோதனையைச் செய்யலாம். கடைக்குப் போவதுடன் தொடர்புள்ள எல்லாச் சிறு செயல்களிலும் அன்னையை நினைத்துச் செயல்பட்டால், போய் வந்தவுடன் அன்னை அச்செயல் முழுவதுமாகப் புதுமையை நிரப்பித் தம் முத்திரையிட்டது தெரியும்.

ஒரு காரியம் என்பது எண்ணமாக உதித்து, உணர்வாகப் பூரித்து, செயலாக நடக்கிறது. ஒரு டிக்ஷனரி வாங்க வேண்டும் என்றவுடன் அன்னை நினைவுக்கு வருவதில்லை. எந்தக் கடையில் வாங்கலாம், எத்தனை மணிக்குப் போகலாம், யாரை அழைத்துப் போகலாம் என்றெல்லாம் மனதில் தோன்றும். முதலில் எண்ணம் தோன்றியவுடன், அதை விலக்கி அன்னையை நினைக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு எண்ணத்தையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும். அதாவது எண்ணத்தை விலக்கி, அன்னையை நினைக்க வேண்டும். அதையே இங்குச் சமர்ப்பணம் என்று கூறுகிறேன். அதேபோல் கடையுள் நுழைந்தவுடன், அங்குள்ளவரைப் பார்த்தவுடன் இவர் இனியவர்' அல்லது இவனைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது. இன்று இவன் நிற்கிறான்' என்று விருப்பான உணர்வோ, வெறுப்பான உணர்ச்சியோ தோன்றும். எண்ணங்களைச் சமர்ப்பணம் செய்ததுபோல் உணர்ச்சிகளையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

அதாவது

உணர்ச்சிகளை விலக்கி, அன்னையை உணர வேண்டும். அதேபோல் நம் ஒவ்வொரு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஆசிரம தரிசனங்களுக்கு வருவதை ஒருவர் சமர்ப்பணத்தின் முழுப்பிடியில் கொண்டுவந்தார். தொடர்ந்து 22 வருஷங்களாக எந்த தடைகளும், ஆபீஸ் இன்ஸ்பெக்ஷன், முக்கியமான திருமணங்கள், தவிர்க்க முடியாத முக்கியத்துவங்கள், உடல்நலக் குறைவு, புயல், வெள்ளம் ஆகிய எதுவும் அவர் தரிசனங்களுக்குப் போவதை ஒரு முறைகூட தடை செய்யவில்லை. எல்லாம் தாமே ஒதுங்கி, விலகி வழிவிட்டன. அவர் செய்த சமர்ப்பணத்தை அன்னை ஏற்றுக்கொண்டதற்கு அது அடையாள முத்திரை.

தம் வீட்டில் தியானம் குறிப்பிட்ட நேரத்தில் செய்ய ஏற்றுக் கொண்ட பக்தர், தியான நேரத்தில் மின்சாரம் நிற்கக்கூடாது என்பதற்காக, தியானம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் சமர்ப்பணம் செய்ததன் விளைவாக, வாரத்தில் 10 முறை நின்றுபோகும் கரெண்ட், 12 ஆண்டுகளாக ஒரே ஒரு தடவைகூட அவருடைய தியான நேரத்தில் நின்றதில்லை. ஒரு கடையில் நீங்கள் சேல்ஸ்மேனாக இருந்தால், விற்கும் ஒவ்வொரு பொருளையும் இதுபோன்ற சமர்ப்பணத்திற்கு உட்படுத்தினால், வருஷம் பத்தானாலும், உங்கள் கையால் விற்ற பொருள்கள் பத்தாயிரமானாலும், ஒரே ஒரு பொருளிலும் குற்றம், குறை, திருப்பிக்கொடுப்பது என்பதெல்லாம் இருக்காது. குழாய் கிணறு (bore well) தோண்டுவது, லாட்டரி சீட்டு வாங்குவது போல் இதை மேற்கொண்டு திவாலானவர்கள் அநேகர். சமர்ப்பணத்திற்கு ஆளாக்கி, தாம் தோண்டிய 15, 10 கிணறுகளிலும் வற்றாத ஊற்றைக் கண்டுபிடித்தார் ஓர் அன்பர். பாங்கில் கடன் பெறுவதைச் சமர்ப்பணம் செய்து, தம்முடைய சிறு அக்கௌண்டில் 3 ஆண்டு காலம் தாம் கேட்டவையெல்லாம் பெற்றார் மற்றொருவர். அதிலும் ஒரு சிறப்பு. பாங்க், ஈடில்லாமல் அவருக்கு தானே முன்வந்து 13 இலட்சம் கொடுக்க வேண்டும் என்று கருதியது. இந்தக் கருத்தின் முழு விளக்கம் கொடுப்பதற்குமுன், இதனுடன் சம்பந்தப்பட்ட வேறு சில முக்கியமான விஷயங்களையும் கருத வேண்டியிருக்கிறது.

ஒரு முழுக் காரியம் (complete act) அன்னையின் சக்தியால் நிரப்பப்பெறுமானால், அன்னை தம்மை அக்காரியத்தில் முழுவதுமாக வெளிப்படுத்துவார். எந்த முறையினால் அக்காரியம் சக்தியைப் பெற்றது என்பது முக்கியமில்லை. ஆழ்ந்த பிரார்த்தனைக்கு அதே பலன் உண்டு. ஜீவனின் ஆழத்திலிருந்து பிரார்த்தனை கிளம்புவதால் அது அன்னையின் சக்தியைப் பூரணமாகப் பெறுகிறது. அன்னையின் அற்புதத்தை அச்செயலில் காண்கிறோம். தம் படிக்கும் பழக்கத்தைச் சமர்ப்பணம் செய்து, அன்னையை ஒருவர் தம் படிப்பில் கண்டுவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அவர் படித்துக்கொண்டிருக்கும்பொழுது 20 வருஷமாகச் சொந்த ஊரில் செய்துகொண்டிருந்த வேலை இன்று வெளியூருக்கு மாற்றலாகப்போகிறது என்ற செய்தி கிடைத்தால், சமர்ப்பணத்தால் அவர் படிப்பு பெற்ற பெரும்பலன் அப்பொழுது அவர் செய்யும் பிரார்த்தனைக்குக் கிடைக்கும். தாம் மாற்றலாகக்கூடாது என அவர் செய்யும் பிரார்த்தனைக்கு சமர்ப்பணத்தில் முழு ஆற்றல் ஏற்பட்டு, பிரார்த்தனை சிறப்பாகப் பூர்த்தியாகும். ஆழ்ந்த பிரார்த்தனைக்கும், சமர்ப்பணத்திற்குள்ள திறனுண்டு. பயத்தால் பீடிக்கப்பட்ட நிலையில் செய்யும் பிரார்த்தனைகள் முழுமையானவை. ஏனெனில் அவை ஆழத்திலிருந்து வருபவை. அன்னை அவற்றை முழுமையாகப் பூர்த்திசெய்வார்.

ஒரு செயலில் அன்னை தம்மை வெளிப்படுத்துவது என்றால் என்ன? நம் ஊனக்கண்ணுக்கு அன்னையின் வெளிப்பாடு தெரியுமா? அன்னையின் சக்தியைத் தெளிவாக விளக்க முடியுமா?

வாழ்க்கைக்கும், அதற்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்ட முடியுமா?

இன்றிருக்கும் நிலையைக் காப்பாற்ற முயல்வதே வாழ்க்கையின் இயல்பு. வாழ்க்கையில் சிருஷ்டி என்று நாம் சொல்வது நமக்கு ஏற்கனவே தெரிந்த காரியங்களைச் சிறப்பாகச் செய்வதைத்தான். அன்னையின் சக்திக்கு ஒரு சிறப்புண்டு. புதியதாகப் படைக்கும் ஆற்றல் அதற்குண்டு. சிருஷ்டிக்கும் (creative) திறனுடையது அன்னையின் ஆற்றல் என்றால் இதுவரை நாம் கண்டறியாததைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் என்று பொருள். புது வழியில் பிரச்சினைகளைத் தீர்ப்பது, புதிய முறையில் செயல்படுவது, புதிய வாழ்க்கைப் பாதைகளைச் சமைப்பதே அதன் குறிப்பான திறன். பழைய பிரச்சினைகளுக்குப் புதிய பாணியில் தீர்வு காண்பது, புதிய வாய்ப்பை ஏற்படுத்துவது அன்னைக்குரிய சிறப்பு. அன்னையின் சக்தியால் ஏற்படும் அனைத்துக்கும் ஒரு முத்திரை உண்டு. ஏதாவது ஒரு வகையில் அது புதியதாக இருக்கும். அதற்கும் மேலாக, இந்தப் புதிய சக்தியை உற்பத்தி செய்யும் திறமையும் உடையது. தானே வளரும் தன்மையுடையது.

எங்கெல்லாம் புதிய பாதை தென்படுகிறதோ, புதிய வழி உற்பத்தியாகிறதோ, புதியதாக ஏதாவது ஒன்று இருக்கிறதோ, அங்கெல்லாம் அன்னையிருப்பதற்கு நியாயம் உண்டு. முரடன் சாந்தமாகப் பழகினால், வழக்கத்திற்கு மாறாக முதலாளி இனிமையாகப் பேசினால், விதண்டாவாதக்காரன் நியாயமாகப் பழகினால், சுக்காஞ்செட்டி தாராளமாக இருந்தால், பேரத்திற்குப் பேர்போனவன் சொன்ன விலைக்கு வாங்கிச்சென்றால், அன்னை அங்கெல்லாம் செயல்படுகிறார் என அறியலாம்.

வாழ்க்கை ஆற்றொழுக்காகப் போகிறது. அதற்கு ஒரு முறை உண்டு. எதற்கும் ஒரு காலவரையறையுண்டு. பட்டம் வாங்க 4 ஆண்டுகள் தேவை என்றால், எவராலும் அதை 4 மாதத்தில் பெற வழியில்லை. காலத்தின் கதியைக் கதிரவனாலும் மாற்ற முடியாது.

பட்டத்திற்கு 4 ஆண்டு, வாழை பலன் தர 12 மாதம், பிறந்த குழந்தை நடக்க ஒரு வருஷம் என ஒவ்வொரு செயலுக்கும் முறையும், கால வரையறையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஏட்டில் படித்ததை வாழ்க்கை அனுபவமாக மாற்ற சில ஆண்டுகள் தேவை. பதட்டப்பட்டவன் அடங்கப் பல மணி நேரம் தேவை. காலம் வந்துவிட்டால் நடக்கும்; நடந்துவிடும். அதை யாராலும் தடுக்க முடியாது. காலம் வருமுன் அதை முடிக்க உலகில் ஒரு சக்தியில்லை. காலத்தின் முன் அனைத்தும் தலைவணங்கும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது வழக்கு. அன்னையின் சக்தி விரைவானது. ஒரு வினாடியில் 26,000 மைல் சுற்றளவுள்ள பூமியை 7 முறை சுற்றிவரும் ஒளியின் வேகத்தைவிட அதிக வேகமாகச் செயல்படக்கூடியது. மின்னல் வேகத்தில் செயல்படுவதே அதன் இயல்பு. மனித வாழ்வின் இருள் அதன் வேகத்தைத் தடுக்கின்றதே தவிர அன்னையின் சக்திக்குரிய வேகம் அபரிமிதமானது.

அதன் வேகம் சிருஷ்டிக்கு முன் உள்ள இறைவனின் சக்திக்குரிய வேகம். அது மனிதனுக்குத் தெரியாமற்போகாது. அலுவலக விசாரணையை (departmental enquiry) ஆரம்பிக்கப் பல மாதங்களாகும். குற்றம்சாட்டியபின் அதை நீக்க எல்லாவிதமான சாதகச் சூழ்நிலைகள் இருந்தாலும், மீண்டும் பல மாதங்களாகும். 4 வருஷம் திட்டம்தீட்டி, 6 மாத காலமாகத் தயார்செய்து ஓர் அன்பர் மீது சுமத்தப்பட்ட அபாண்டத்தை, அன்னையிடம் ஒரு நாள் காலை 10 மணிக்குச் சொன்னபொழுது, அன்று மாலை குற்றப்பத்திரிகை கிழித்தெறியப்பட்டு குற்றத்தைச் சுமத்தியவர் தலைகுனிந்து, வெட்கி, தான் செய்த பாவத்தை அழித்தெறிந்தார். அன்னையின் முத்திரைக்கு மற்றோர் அடையாளம் உண்டு. அன்னையால் தீர்ந்த பிரச்சினைகளில் சொச்ச, நச்சம் என்றிருக்காது; பாவத்தைப் பவித்திரமாகத் துடைத்து எடுத்துவிடும்.

அன்னையின் சக்தி, சத்தியத்தின் சக்தி. வாழ்வு பொய்யால் ஆனது. வாழ்வுக்கும் சத்தியம் தேவை. தன் பொய்யை ஆதரிக்கும் அளவுக்கு மட்டுமே மெய் தேவை. ஒருவர் உண்மை மட்டுமே பேச முடிவு செய்தால், தம் பூர்வோத்திரங்களை ஒளிவு, மறைவின்றி கூறினால் அவருக்கு வேலை கிடைப்பது கஷ்டம்; திருமணம் ஆகாது. உடையது விளம்பேல்', தோழனோடும் ஏழைமை பேசேல்' என்பது உலகம் எதிர்பார்ப்பது. சொல்ல வேண்டியதைச் சொல். எல்லாவற்றையும் சொன்னால் உண்மை பேசுவதாக அர்த்தமில்லை என்பதெல்லாம் சமூகம் நம்மிடம் நிர்ப்பந்தமாக எதிர்பார்ப்பதாகும். எதிர்மறையாக, அன்னை பூரணமான சத்தியத்தை முழுவதுமாக எதிர்பார்க்கின்றார். எவ்வளவுக்கெவ்வளவு உண்மையிருக்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு அன்னையின் வெளிப்பாடு சிறக்கும்.

அன்னையின் சக்தி செயல்பட தனியே அறிவு தேவையில்லை. இதன் அமைப்பு இன்று உலகில் இல்லாத ஒன்று. சக்தி வெளிப்பட்டால், அறிவு தானே செயல்படும் அமைப்பு இதனுடையது. ஏனெனில் அறிவும், திறனும் செயல்படும் அமைப்பு இதனுடையது. ஏனெனில் அறிவும், திறனும் ஒருங்கே அமைந்த சக்தி அன்னையின் சக்தி. ஓர் இன்ஜினீயர் வீடு கட்ட முற்பட்டால் அவருக்கு அறிவு இருக்கிறது. ஆள் பலமும், பணமும் வீட்டைக் கட்டி முடிக்கத் தேவை. அவை தேவையான சக்தியை அளிக்கின்றன. ஒரு காண்ட்ராக்டரிடம் ஏராளமான ஆட்களும், மூட்டையாகப் பணமும் இருந்தால், அவரால் ஒரு பாலத்தைக் கட்ட முடியாது. ஓர் அனுபவமுள்ள இன்ஜினீயரை அவர் நாடிச் செல்ல வேண்டும். நம் வாழ்வில் அறிவும், திறனும் தனித்து இயங்குகின்றன. ஒரு காரியம் நடைபெற அவை இணைந்து செயல்பட வேண்டும். அன்னையின் சக்தியில் அறிவும், அன்னையின் ஞானத்தில் சக்தியும் உள்ளுறைந்து காணப்படுகின்றன. ஒன்றில் மற்றது பிணைந்துள்ளது. தனக்கில்லாத அறிவை ஒரு மனிதன் உபயோகப்படுத்துவதைப் பார்த்தால், அது அன்னையின் சக்தி என அறியலாம். திறனற்ற ஒருவன் தன் அறிவை வெளிப்படுத்தும்போது அதற்குரிய சக்தி இயல்பாக அமைந்துள்ளது என்றால் அதை அன்னையின் ஞானம் என நாம் உணரலாம். அன்னையின் சக்தியைப் பெற்றால் அதற்குரிய ஞானம் தானே ஏற்படும். அன்னையின்

ஞானத்தை அடைந்தால் அதற்குரிய சக்தியை அதுவே கொண்டு வரும்.

அறிவிற் சிறந்த அன்பர் பல இலட்சம் சம்பாதிக்கும் திட்டத்தை ஆயிரம் ரூபாய்கூடக் கையில் இல்லாமல் ஆரம்பித்தபொழுது, திட்டத்திற்குத் தேவைப்பட்ட முழுப் பணமான ரூ.1,15,000 அவரைத் தேடி வந்தது. தேவைப்பட்ட எல்லாத் திறனையும் (பணத்தையும்) தம்மை நோக்கி இழுக்கும் திறனுள்ள அவருடைய அறிவு, அன்னையின் ஞானம் என்பதில் ஐயமில்லை.

ரூ.100 மாதச் சம்பளம் பெறும் ஒருவர் 4 லட்ச ரூபாய்க்குத் திட்டம் தீட்டினார். பாங்க் அவரது திட்டத்தை சாங்ஷன் செய்தது. பாங்க் சேர்மனிடம் விஷயம் போனபோது அவருக்கு ஏராளமான கோபம் வந்துவிட்டது. மோசடி எனச் சந்தேகப்பட்டார். மனுதாரர் சேர்மன் முன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டார். அவரிடம் சத்தியம் இருந்தது. ஆனால் அவ்வளவு பெரிய அதிகாரியிடம் அவர் பேசியது இல்லை. ஒரு கணம் திகைத்துப்போனார். அன்னை அவர் கட்சி. இது மாதிரி சந்தர்ப்பங்களுக்குரிய அனுபவமோ, திறமையோ அவருக்கில்லை. தம் கட்சியை எடுத்துச் சொன்னார். அபரிமிதமாக வெற்றி பெற்றார். சேர்மன் அவரைப் பாராட்டினார். எப்படிப் பேசினோம் என்று அவருக்குத் தெரியாது. பின்னர் யோசித்தபொழுது தாம் கூறிய வாதங்கள் தமக்கே வியப்பளிப்பதை உணர்ந்தார். அவருடைய திறன் அன்னையின் சக்தி என்பதால், அதற்கு உரிய அறிவு தானே அவருக்கு ஏற்பட்டது.

தம்முடைய இராசியை எவரும் அறிவார்கள். என் கர்மவினை என்று சொல்வார்கள். சிலருக்கு எதுவும் பலிக்காது. மற்றவர்களுக்குப் பல தோல்விகளுக்கப்புறம் பலிக்கும். சிலருக்குப் பண விஷயம் கூடி வராது. வேறு சிலர் எதைச் செய்தாலும் புரளி பறக்கும். சிலருடைய இராசி வீட்டில் இருப்பவர்களே எப்பொழுதும் எதிர்ப்பார்கள். அப்படிப்பட்டவர் அன்னையை ஏற்றுக்கொண்டு செயலில் இறங்கி,

தங்கள் இராசியும், கர்மமும் வந்து கழுத்தை அறுக்கவில்லை என்று கண்டால் அவர்கள் செயலில் வெளிப்படுவது அன்னையின் சக்தி என நாம் அறியலாம். கர்மம் விலகுகிறது என்றால் அங்கு அன்னை இருக்கிறார்கள் என்று பொருள். வாழ்க்கை கர்மத்திற்கு அடிமை. கர்மம் செயல்பட வாழ்க்கை பூரணமாக அனுமதிக்கும். சமர்ப்பணத்தால் ஒரு செயல் அன்னையின் சக்தியால் நிரம்பினால், அச்செயலில் கர்மபலன் இருக்காது. அதை விட்டுக் கர்மம் விலகும்.

பொதுவாக அன்னையின் சக்தி எப்படிச் செயல்படுகிறது, அதன் வழிவகை என்ன என்று நாம் புரிந்துகொள்ள முடிவதில்லை. நாம் முடிவான பலனை மட்டுமே பார்க்கிறோம். நாம் இருளில் புதைந்து உள்ளோம். அன்னை மின்னலாகச் செயல்படுகிறார். இருளை விலக்கி, பலனை அளிக்கிறார். க்ஷணத்தில் நம்மிருள் மீண்டும் வந்து நம்மைக் கவ்விக்கொள்கிறது.

அன்னையின் சட்டதிட்டங்களை நாமறிவோம். அறிவை நம்பாதே; வசதியைத் தேடாதே; ஆசைப்படாதே; குறை கூறாதே;

புற நிகழ்ச்சிகளைப் பார்; முழுமுயற்சி எடு; உண்ணும் முன்னும், உறங்கும் முன்னும், பேசும் முன்னும், செயல்படுமுன்னும் அன்னையை நினைவுகூர்ந்து செயல்படு என்பதே அவர் சட்டங்கள். எளிய பக்தனால் ஆகக்கூடியதில்லை இது. பூரணமாக முடியவில்லை என்றால், பக்தன் ஒரு சிறிய செயலில் சோதித்துப்பார்க்கலாம். முறை எளிது. அன்னையை அழைத்து, செயலைச் சமர்ப்பணம் செய்து, அதை அன்னையின் சக்தியால் அளவிறந்து நிரப்பி, பலன் கருதாது பொறுமையாக இருப்பதே முறை. மேலும் ஒரு நிபந்தனை. மேற்கூறிய 10 விதிகளையும் ஒரு சிறு செயலில் பூர்த்தி செய்யும்பொழுது, பொதுவாக அன்னைக்கு எதிரான எதையும் செய்தல் கூடாது என்பது முக்கியமான நிபந்தனை.

அன்னை வந்தபின் தடைகள் தகர்ந்துபோகின்றன. எனினும் பிடிவாதம், வக்ரபுத்தி, பொறுப்பின்மை அன்னையின் செயல் வேகத்தைக் குறைக்கக்கூடியவை. மின்னல் வேகத்தில் வேலை நடக்கும்பொழுது தடை ஏற்பட்டால், என்ன குறை என்று யோசனை செய்தாலும், எங்கு தடை என்று பரிசீலனை செய்தாலும் உடனே அது தென்படும். விட முடியாத பழக்கங்கள், வேண்டுமென்றே செய்யும் காரியங்கள் அத்தகைய தடைகளை உற்பத்தி செய்யும். அவற்றைக் களைந்தால் மின்னல் வேகம் தொடரும். பழைய தடைகள் ஆத்ம சமர்ப்பணத்தால் விலகும். வேண்டுமென்று செய்யும் காரியங்களை விலக்க நாமே முன்வர வேண்டும். ஒரு காரியத்தை, அதாவது ஒரு வகையான காரியத்தை (உ.ம். கடைக்குப் போவது) ஓர் அன்பர் சமர்ப்பணத்தால் அன்னையின் ஆட்சிக்கு உட்படுத்திவிட்டால், அவருக்கு வாழ்க்கையில் வெற்றி கிட்டிவிட்டது என்று அர்த்தம். மற்ற வகையான செயல்களையும் அதேபோல் சமர்ப்பணத்தால் அன்னையின் ஆளுகைக்குள் கொண்டுவருதல் அவரைப் பொருத்தது. அடிப்படையானது இந்த இரகஸ்யம்; மனிதனுக்குப் பிடிபடாத ஒன்று. இரகஸ்யம் கிடைத்தபின் எந்தச் செயலையும் இதனால் வெற்றி காணச் செய்யலாம். அதே முறையைப் பயன்படுத்தி எவ்வளவு பெரிய காரியத்தையும் சாதிக்கலாம். நெடுநாளைய குறிக்கோளைப் பூர்த்தி செய்யலாம்.

ஒரு முக்கியமான கேள்வி. வழிவகை (process) தெரியும் என்பதால், பெரிய இலட்சியங்களையும் இதனால் பெற முடியும் என்றால், அதற்குரிய வலிமை எங்கிருந்து வரும்? எப்படிக் கிடைக்க முடியும்? வலிமை என்பது ஞானத்தைவிடச் சிறியது. ஞானம் மனத்தில் உதிப்பது. மனத்தைவிடச் சிறியதான பிராணனில் செயல்படுவது வலிமை. ஞானம் வழிவகையில் உள்ளது. வழிவகை புரிந்தால் ஞானம் ஏற்பட்டுவிடும். இந்த முறையை எத்தனை பெரிய திட்டத்தை நிறைவேற்றவும் பயன்படுத்தலாம். அதற்குரிய முயற்சியை விரும்பி ஏற்றுக்கொள்ளுதல் பக்தன் பங்கு. பெரியதான ஞானம் வந்தபின், சிறியதான வலிமையை அடைய பக்தன் செய்ய வேண்டியது ஒன்றுதான். தான் எடுத்துக்கொள்ளும் திட்டம் பூர்த்தியடைய முழு விருப்பத்துடனும், முழு மனத்துடனும் உழைக்க முன்வர வேண்டும்.

அன்னை உட்பட எந்தத் தெய்வத்திற்கும் இல்லாத திறன் ஒன்றுண்டு. விருப்பமில்லாத மனிதனை விருப்பத்துடன் செயல்பட வைக்கும் திறனிது. இறைவனாலும் மனிதனைக் கட்டாயப்படுத்தி அவனுக்குப் பிரியமில்லாத காரியத்தைப் பூர்த்தி செய்ய முடியாது.

மனிதன் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திட்டம், இலட்சியம் எவ்வளவு பெரியதானாலும் அன்னை அதைப் பூர்த்தி செய்வார்.

No comments:

Post a Comment

Followers