Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Tuesday, August 20, 2013

அன்னை சூழல் - Presence of Sri Mother and Sri Aurobindo in our life



எல்லாம் இறைவன் செயல். திருத்த முயன்றால் நாம் இறைவனின் செயலைத் திருத்த முயல்கிறோம். திருத்த முனையாமலிருக்கப் பயிலும் அனுபவம் இது என்பது அன்னையின் விளக்கம். நாம் இதைக் கடைப்பிடிக்க முயன்றால், பைத்தியம் பிடித்துவிடும் என்பது உண்மை. முயன்றால் அன்னை சூழல் அதிகமாகும், அன்னையை அதிகம் புரிந்துகொள்ளலாம், மேலும் ஏற்றுக் கொள்ள முடியும் என்பது பெரிய உண்மை.

வேலை தெய்வம். அதைச் செய்யும் பொழுது செய்பவரின் கைகள் அன்னையின் கையாக மாறுவதுண்டு. வேலை நடக்கும் இடத்தில் தியானத்தின் போதுள்ள சூழல் இருக்கும். பாக்டரியில் பவித்திரமாக வேலை செய்தவருக்கு மெஷின் அருகில் பொன்னிறமாக ஸ்ரீ அரவிந்தர் காட்சி அளித்தார்.
அன்னை மனிதப் பிறவியாக வந்தாலும், அவர் சூழல் எங்கும் பரவியுள்ளது. போகுமிடமெல்லாம் எதிர்பாராத உதவி கிடைக்கிறது என்பவர்கள் அன்னையின் சூழலுடைய உதவியைப் பெறுகிறார்கள் என்று அர்த்தம். இந்த சூழல் நம் வாழ்வில் சிறப்பாகவும் செயல்படும், பொதுவாகவும் செயல்படும். போலீஸ் ஸ்டேஷன் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு திருடன் ஊரைவிட்டு வெளியே போகுமுன் பிடிப்பதும் உண்டு. நாமே திருடனைப் பிடித்துக் கொடுத்தால் பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்பதுபோல் இருப்பதும் உண்டு. போலீஸுக்கு திறமையிருந்தாலும் பல்வேறு கேஸ்களில் பல்வேறு விதமாக நடப்பதைப் பார்க்கிறோம். நிலைமைக்குத் தகுந்த சுறுசுறுப்பு, பலன், வியாபாரத் தொடர்பு, அரசியல் தொடர்பு, அரசாங்க அதிகாரத்தொடர்பு, உறவினர் மூலம் தொடர்பு ஆகியவை ஓர் அகில இந்திய ஸ்தாபனம் போலச் செயல்பட்டு செல்லுமிடமெல்லாம், செய்யும் காரியங்களிலெல்லாம் உதவியாக இருப்பதை நாம் காண்கிறோம்.


அதேபோல் அன்னையின் சூழல் நாம் போகுமிடமெல்லாம் நம்மை எதிர்கொள்கிறது. நம் காரியங்களைப் பூர்த்தி செய்ய கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதுபோல் மனிதர்கள் மூலம், நிகழ்ச்சிகள் மூலமும், இயற்கையின் மூலமும் செயல்படுவதை அன்பர்கள் அறிவார்கள். அதை ஒரு சௌகரியமாகக் கொள்வதைவிட அதன் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டால், அந்தச் சூழல் நிரந்தரமாக நம்மைச் சுற்றிக்கொள்ளும்.


Their Presence - From the writings of Sri Aurobindo

Sri Aurobindo says:

It is quite sure that we are with you day and night; even if you do not yet see the Mother in your dreams or feel her presence, you should think of her as there and supporting you and that will surely help you. If there is a natural movement of your mind to identify Shiva in the way you speak of and it jumps to myself and the Mother, why not let it take the jump? Perhaps it is not a jump but a natural transition, and reconciliation and not a conflict. Certainly, your pranams are always accepted by us and always will be.

Our presence, force, peace, love are always with you. That is a thing you must realise and learn to keep the consciousness of it. If you do that, all the rest is of minor importance (your difficulties, the old nature etc.) and will be set right in due time.

No comments:

Post a Comment

Followers