Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Friday, August 2, 2013

அன்னையிடம் பிறருக்காகப் பிராத்தனை செய்யும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்

பிறருக்காகப் பிரார்த்தனை செய்யும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் 

  • பிறருக்காக பிரார்த்தனை செய்யப் போகிறீர்களா?
  • அதற்கு அன்னையின் முறைப்படி அவர்கள் தகுதியானவர்களா?
  • ஆரம்பநிலை பக்தர்களுக்கும், அன்னையை முதன்மையாகக் கொண்ட அன்பர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
  • சுபாவத்தில் தவறு உள்ளவர்களுக்காகச் செய்யும் பிரார்த்தனையின் முடிவு என்ன?
  • அவ்வாறு பிரார்த்தனை செய்வதற்கு முன், உங்களின் சுபாவத்தில் உள்ள குறைகளை மாற்றிக் கொண்டு விட்டீர்களா?


இந்தக் கேள்விகளுக்கு திரு கர்மயோகி அவர்கள் கூறும் விளக்கங்களைக் காண்போம்.

சுபாவத்தால் மாறுபட்டவர்களுக்குப் பிரார்த்தனை செய்தால் அந்தப் பிரார்த்தனையும் எதிராகப் பலிக்கும்.

தகப்பனார் கருமியாக இருப்பார். மகள் தாராளமாகச் செலவு செய்பவரானால், தகப்பனார் பெண்ணுக்குச் செல்வம் சேர பிரார்த்தனை செய்தால், மகளுக்கு நஷ்டம் வரும். சுயநலமில்லாத மகன் லஞ்சம் வாங்கும் சுயநலமான தகப்பனாருக்காகப் பிரார்த்தனை செய்தால் 15 வருஷமாக லஞ்சம் வாங்கி அகப்படாத தகப்பனார், வழக்கில் மாட்டி ஜெயிலுக்குப் போவார்.

பக்தனுடைய பிரார்த்தனை பலிக்கும். பிறருக்காகவும் ஓரளவுக்குப் பலிக்கும். மாற்றத்தை (shift) விரும்புபவர், யோகத்தை நாடுபவர். பக்தன் நிலையிலிருந்து மாறியவர், உயர்ந்தவர். மனிதன் இறைவனாகும் பாதையை நாடுபவர் அவர். இறைவன் உலகத்துக் கொடூரங்களைப் பார்த்துக் கொண்டு சும்மாவும் இருக்கக் கூடியவர். கருணாமூர்த்தியாகவும் செயல்படக் கூடியவர். இறைவனின் எந்த அம்சம் செயல்படுகிறது? ஏன் செயல்படுகிறது? என்பது மனித சிந்தனைக்குட்பட்டதன்று. பகவானுடைய தாயார், தகப்பனார், அண்ணன், அன்னையுடைய மகன் இவர்கள் வாழ்க்கை இக்கருத்துக்கு எடுத்துக்காட்டு.


நான் நினைத்தது நடந்தால்தான் நம்புவேன்.
என் மகள் கண் கசங்கினால் அன்னை மீது எனக்கு நம்பிக்கை போய்விடும்.
என் மகன் பாஸ் செய்யாவிட்டால், இது சக்தியுள்ள தெய்வம் என எப்படி நம்புவது?
எனக்குக் காரியம் கூடி வந்தால்தான் நீ தெய்வம் என்று பேசுபவர்கள் ஆரம்பநிலை பக்தர்கள்.

இவர்கள் அன்னையிடம் வரவேண்டும் என்பதில்லை. எந்தக் கடவுளுக்கு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தாலும், இது போன்ற பிரார்த்தனைகள் பலிக்கும். இது போன்ற பிரார்த்தனைகள் பலிப்பதால்தான் சில கோயில்கள் பிரபலம் அடைந்து ஆயிரக்கணக்காகவும், இலட்சக்கணக்காகவும் மக்கள் அங்குச் செல்கின்றனர். ஏதோ காரணத்தால் அது போன்ற பிரார்த்தனை எந்தக் கோயிலும் பலிக்காதவர்கள் அன்னையிடம் பிரார்த்தனை செய்து பலன் கண்டுள்ளார்கள்.

மாற்றம் (shift) என்று நான் சொல்வது இந்நிலையைக் கடந்து அன்னையை வாழ்வின் ஒளிவிளக்காக ஏற்பவர்களுக்காக, ஆரம்ப நிலை பக்தர்களுக்கேற்றதன்று shift மாற்றம்.

மாற்றத்தை நாடுபவர்கள் யோகவாழ்வை உயர்ந்த மனித வாழ்வை நாடுபவர்கள். யோகத்திற்கு உரியவர்கள் அதற்கும் அடுத்த கட்டத்தைத் தேடுபவர்கள். இந்தக் கட்டத்தில் என் மகன் என்ற சொல்லுக்கும் இடம் இல்லை. நான் நினைத்தது என்பது எழக்கூடாது. ஏனெனில் நான் போனபின் வரும் கட்டம் இது. எவருடைய நலனையும் பெற்றோர், உடன் பிறந்தோர், பிள்ளைகள் கருதாமல் அதை இறைவனின் பொறுப்பில் விட்டுவிட்ட நிலை இது. என் தம்பி என்பவருக்கு இந்நிலை உரியதன்று, அது முதல்நிலை பக்தனுக்குரியது. மாற்றத்தைத் தேடுபவர்கள் இது போன்று பேசுதல் சரியில்லை. இருந்தாலும் மாற்றம் மனித வாழ்வைச் சேர்ந்தது என்பதால் எல்லா உயர்ந்த மனித ஆர்வங்களும் அவர்களுக்குப் பலிக்கும்.

கருணையாலும், பாசத்தாலும், அன்பாலும், தேவையாலும் செய்யும் பிரார்த்தனைகள் பலிக்கும். அதுவும் பிறர் சுபாவத்தின் முரண்படாத அளவில் பலிக்கும். அகந்தையாலும், அறியாமையாலும், நிபந்தனை விதிக்கும் மனப்பான்மையாலும் செய்யும் பிரார்த்தனைகள் மாற்றத்தைத் தேடுபவர்கட்குப் பலிக்கா.

பொறுப்பற்ற, சுயநலமான கணவரைப் பெற்ற ஊதாரித்தனமான பெண்ணுக்கு, கணவர் நடத்தை மானம் போகும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது. கணவருக்கு வேலையில்லை. வேலையிருந்தால் 6 மாதம் நீடிக்காது. என்ன வேலை என்று மனைவிக்குத் தெரியாது. சாதுரியமாகப் பேசி, கடன் வாங்கி, குடும்பம் நடத்துபவர் கணவர். மனைவி தற்கொலைக்குத் தயாரான நேரம் கணவர் அன்னையிடம் வந்தார். வேலை நிரந்தரமாயிற்று. சம்பளம் 3 மடங்காகி, மேலும் உயர்ந்தபடியிருந்தது. மனைவிக்கு லேசாக நம்பிக்கை வந்தது. கணவரிடம் தேவைகளைக் கேட்பதற்குப் பதிலாக அன்னையைக் கேட்டார். கேட்டனவெல்லாம் கிடைத்தன. கணவர் வேலையை மீண்டும் விட ஆரம்பித்தார். ஏற்கனவே ரூ.100, 200 கடன் வாங்கியவர் மாறிய நிலையில் ரூ. 10,000, 30,000 வாங்கினார். வாழ்நாளில் கடனைக் கொடுத்ததில்லை. அன்னையைக் கேட்டால் கொடுக்கிறார்கள். என் கணவர் பொறுப்பாக இருக்க வேண்டாமா, அது நடக்க வேண்டும் என்ற எண்ணம் மனைவிக்கு எழுந்தது.

மனைவியின் நம்பிக்கை தேவைகளை அபரிமிதமாகப் பூர்த்தி செய்தது. அது அருள். நினைத்தனவெல்லாம் நடக்கவே மனைவி கணவர் மாற வேண்டும் என ஆசைப்பட்டாள். மனம் அன்னையைக் கேட்பதிலிருந்து மாறி கணவரைக் கேட்க ஆரம்பித்தது. நடந்த நல்லனவெல்லாம் நின்றுவிட்டன. சமாதிக்கு வருவதை இருவரும் நிறுத்திவிட்டனர். வேறு சாமி கும்பிடப் போவதாகப் பேசினர். அதன்பின் என்ன நடந்தது என எனக்குத் தெரியாது.

நம்பிக்கையுடன் தேவைகளை அன்னையிடம் கேட்ட மனைவி அபரிமிதமாகப் பெற்றவுடன், நான் சராசரி மனுஷியில்லை, உயர்ந்தவள் என்று பேச ஆரம்பித்து விட்டாள். நான் வந்தவுடன் அன்னை விலகி விட்டார். கணவர் ஊதாரி, சுயநலமி, பொறுப்பற்றவர், அளவு கடந்து பொய் சொல்பவர், கண்டவரிடமெல்லாம் காலத்திற்கும் கடன் வாங்கிக் குடும்பம் நடத்தியவர் என்பவற்றையெல்லாம் தாண்டி அன்னை உன் வாழ்வில் பலித்தார். அவர் மாற வேண்டும் எனில், அவரே மாற வேண்டும். அன்னையிடம் வந்தபின் தம் தான்தோன்றித்தனத்தை வளர்க்கும் மனப்பான்மை அவருக்கு. காரியம் நடக்கிறது, வருமானம் 10 மடங்காயிற்று என்ற உடன் மனைவிக்குக் கர்வம் எழுந்தது. கர்வம் எழுந்தால் கப்பல் கவிழ்ந்து விடும். நான் பக்தியால் அன்னையிடம் வரவில்லை. ஆதாயத்திற்காக வந்தேன் என்ற மனப்பான்மை உடைய கணவர் எந்தக் கடவுளையும் வழிபடும் மனநிலையில்லாதவர். இவர்கள் சமூகத்தில் உருப்படாத மனிதர்கள். உறவினர்களும், நண்பர்களும் ஒதுக்கியவர்கள். இவர்களும் உயரும் வழியை அன்னை காண்பித்தார். பழைய புத்தியை வலுப்படுத்தியதால் அன்னையைவிட்டே போய்விட்டனர். முதல்நிலை பக்தராக இருக்கவும் தகுதியற்றவர். சமூகத்தில் நாணயமாக வாழ இயலாதவர்.

கணவன் மனம் மாற வேண்டும் எனில், மனைவி தன் ஊதாரித்தனத்தையும், அப்பட்டமான சுயநலத்தையும் விட்டு விட்டு, அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், கணவரும் மாறுவார். தன் ஊதாரித்தனமும், சுயநலமும் பெருமையுற வேண்டும் என்பது மனைவியின் மனநிலை. அம்மனநிலை இருப்பதையும் அழிக்கும்.

ஒருவருடைய நம்பிக்கையால் அடுத்தவருக்குப் பலிக்கக் கூடாதா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.

மனைவிக்கு அடங்கிய கணவன் (hen pecked husband) உயரவேண்டும்.
திறமையற்ற கணவனுடைய வருமானம் 10 மடங்கு உயர வேண்டும்.
சுயநலமான அண்ணன் பிரபலமாக வேண்டும்.
அடங்காப்பிடாரியான மனைவியை அனைவரும் மதிக்க வேண்டும்.
அளவு கடந்து இலஞ்சம் வாங்குபவர் பெருமையுடன் வாழ வேண்டும்.
பாஸ் செய்ய முடியாத பையனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டும்.
இவை போன்று ஆயிரம் வேண்டுகோள்கள் அன்னையிடம் வரும்.

இவர்கள் அர்த்தமற்றவர்கள், வெட்கம் கெட்டவர்கள் என்று அன்னை சொல்வார். தவறான மனிதர்கள் வாழ்வில் திருந்துவதில்லை. அன்னையிடம் வந்த பின் இவர்கள் திருந்த வாய்ப்பு உண்டு. திருந்த முயன்றால் அன்னை அதைப் பூர்த்தி செய்வார். மனைவிக்கு அடங்கிய கணவனுக்குச் சுயமரியாதை வேண்டும். மனைவி, தான் மாறி கணவனுக்கு அடங்க முன் வரவேண்டும். திறமையற்ற கணவனுக்கு 10 மடங்கு வருமானம் உயர மனைவிக்குக் கணவன் திறமையற்றவன் ஆனாலும் அவன் மீது மரியாதை 10 மடங்கு உயர வேண்டும். சுயநலமான அண்ணன் பிரபலமாக வேண்டியதில்லை. அதுவும் நடக்க வேண்டுமானால் அவனுக்கும் சேர்த்து தங்கை தன் சுயநலத்தை அழித்துக்கொள்ள வேண்டும். அடங்காப்பிடாரியை அனைவரும் அவமதிக்க வேண்டும். அவள் மாறி மரியாதை பெற, தன்னிடம் உள்ள எந்தக் குணம் அவளை மனைவியாகப் பெற்றதோ அதை மாற்ற கணவர் முன்வர வேண்டும். அளவு கடந்து இலஞ்சம் வாங்குபவர், போலீஸ் ஸ்டேஷனுக்குத் தம் மீது பிராது கொடுத்து சரணாகதியடைய வேண்டும். அவர் மாற வேண்டுமானால், அந்த இலஞ்சப் பணத்தில் வாங்கிய எந்தப் பொருளையும், மனைவி மக்கள் தொடக்கூடாது. அது நஞ்சு என்று உணர்ந்து நடந்தால், அவர் மாறுவார். அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், அவரைக் கைது செய்ய வேண்டும் என வீட்டில் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும். அது மனிதர்களால் முடியாது. அவர் கைது செய்யப்பட்டால் ஏற்படும் அவமானத்தை அவர்கள் அப்பணத்தைப் பார்க்கும்தோறும் உணர வேண்டும். மனத்தில் உண்மையிருந்தால், கணவர் மாறுவார், அவருக்குப் பெருமை வாராது, நல்ல புத்தி வரும். அவருக்கும் பெருமை வேண்டுமானால், வாங்கிய பணத்தை எல்லாம் அவர் திருப்பித் தரவேண்டும் என வீட்டு மனிதர்கள் பிரார்த்திக்க வேண்டும்.

சுயநலமான பெற்றோர் திறமையற்ற மகன் அளவு கடந்து சம்பாதிக்க வேண்டும் என விரும்பினால், தங்கள் வாழ்வில் மறைந்திருந்த திறமையில்லாத குணம் அவன் வாழ்வில் வெளிப்படுகிறது என்றும்,
அளவுகடந்த சுயநலமான தங்கள் வாழ்வு, அளவு கடந்த திறமையற்றதாக மகன் வாழ்வில் வெளிப்படுவதாகவும் அறிந்து, தங்கள் திறமையற்ற குணத்தையும், சுயநலத்தையும் இன்று சோதித்து மாற்ற முன்வர வேண்டும். அதைச் செய்யாமல், அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை அர்த்தமற்றதாகும்.

மனைவிக்கு ஆபத்து, உயிருக்கு ஆபத்து என்று கண்ட கணவன் ஓடிப் போய் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால், அவளுக்கு உதவும் எண்ணம் எழாவிட்டால், தான் சுயநலமி என அறிய அதிக நேரமாகாது. தான் அதுபோல் நடந்ததை மறந்தது மேலும் சுயநலம். அதை நினைவுபடுத்தித் தன் சுயநலத்தை அறிந்து அதே சுயநலம் இன்று வெளிப்படும் இடங்களையெல்லாம் கண்டு மாற முன் வந்தால், அன்னை அந்த மாற்றத்தைப் பூர்த்தி செய்வார். அதைச் செய்தால், அவருடைய பிரார்த்தனையால் துப்பு கெட்ட பையனும் வெற்றி பெறுவான்.


  • பிரார்த்தனை அவரவர்களுக்குப் பலிக்கும்.
  • அடுத்தவருக்குக் காரியம் நடக்க வேண்டுமானால் அடுத்தவரே பிரார்த்திக்க வேண்டும்.
  • பிறருக்காகப் பிரார்த்தனை செய்யும் உரிமை நமக்கில்லை, விதிவிலக்கான இடம் உண்டு.
  • அங்கு நம் பிரார்த்தனை அடுத்தவருக்குப் பலிக்க, அவருடைய குறைகள் நம்மிடமும் இருப்பதை அறிந்து, அவற்றை விலக்கிய பின், பிரார்த்தனை செய்தால் பலிக்கும் என்பது சட்டம்.



No comments:

Post a Comment

Followers