Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Monday, August 26, 2013

அன்னை முறைகளின் படி தொழிலில் முன்னேற்றம் அடைவது எப்படி?

மதர்ஸ் சர்வீஸ் சொஸைட்டி தொழில் நுணுக்கங்களை ஆராய்ந்து 3 புத்தகங்கள் எழுதக் காரணமாயிருந்தது. இப்புத்தகங்கள் அமெரிக்காவில் பிரசுரமாகியுள்ளன. மூன்றாவதாக வெளியிடப்பட்ட புத்தகத்தை Garry Jacobs உம் Robert Macfarlane உம் சேர்ந்து எழுதியுள்ளார்கள். இலாபத்தை இரட்டிப்பது எப்படி, தொழிலை இருமடங்காக்குவது எவ்விதம் என்பதே புத்தகத்தின் முக்கிய கருத்துகள். Vital Corporation என்பது புத்தகத்தின் பெயர்.

அப்புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.....


மூலதனத்தின் அம்சங்கள், அது நம்மை நாடிவர நாம்செய்யக்கூடியது, அம்முறைகளின் சிறப்பு ஆகியவற்றை விளக்கும் முயற்சியே இக் கட்டுரை. 

விரயத்தை விலக்க வேண்டும்

பத்து ரூபாய்க்கு வாங்க கூடிய பொருளைப் பதினொரு ரூபாய்க்கு வாங்கினால் அது பெரிய நஷ்டமாகாது. ஆனால், தொழிலில் அப்பொருள் தினமும் 1000 பயன்பட்டால் நஷ்டம் ஒரு ரூபாயில்லை. ஆயிரம் ரூபாய்; வருஷத்தில் 3 லட்சம் ரூபாய் நஷ்டமாகும். அது சரிவாராது. பத்து ரூபாய்க்கு விற்கும் பொருளை எந்த முதலாளியும் பதினோரு ரூபாய்க்கு வாங்கமாட்டார். அத்துடன் மொத்தமாக வாங்குவதால் 8½ ரூபாய்க்கு பேரம் பேசி வாங்குவார். இதில் எவரும் தவறு செய்வதில்லை. ஆனால் எந்தத் தொழிற்சாலையிலும் 10,000 ரூபாய் சரக்கு பல காரணங்களால் பல மாதம் பயன்படாமலிருப்பதுண்டு. அது இருப்பது தெரியாமல் மேலும் ஒரு 10,000 ரூபாய் சரக்கு வாங்குவதுமுண்டு. அதுபோன்ற விரயங்கள் அநேகம். ஒரு ஸ்தாபனத்தில், ஆரம்பித்த 6 மாதத்தில் 18 லட்சம் செலாவணியாகியிருந்தது. அவர்கள் எலக்டிரிக் பில் 5½ லட்சம் கட்டியிருக்கிறார்கள். அங்குள்ள எலக்டிரிக் பொருள்கள் எல்லாம் 24 மணி நேரம் செயல்பட்டாலும் 12 லட்சமே மொத்த பில்லாக இருக்கும். இதை யாரும் கவனிக்கவில்லை. ஒரு வீட்டில் போன் பில் 75,000 ரூபாய் ஆயிற்று. கேட்க, நம்பமுடியாத விஷயமாக இருக்கிறது. உச்சகட்ட உதாரணங்கள் இவை. நம் ஸ்தாபனத்தில் எலக்ட்ரிக் பில் 15,000 வரவேண்டும். அது 15,500 ரூபாயாக இருந்தால் அதைக் கவனித்து விலக்குவது அவசியம். அதுவே பணத்திற்கு நாம் செலுத்தும் கவனம். நாம் எப்பொருளைக் கவனிக்கின்றோமோ, அப்பொருள் நம்மை நாடி வரும் என்பதுகொள்கை. 30 வருஷமாக அனுபவத்தில் கண்ட உண்மை.

கணக்கு எழுதுவது

நாள் தவறாமல் கணக்கு எழுதுவதாலும், பிழையில்லாமல் எழுதுவதாலும் நாம் செய்த செலவுக்கு நம் கவனத்தைச் செலுத்துவதாகும். கணக்கு எழுத பாக்கியிருந்தால், அதை எழுதி முடித்தவுடன் பல திசைகளிலிருந்தும் பணம் வருவதைக் காணலாம். கணக்கைத் தவறாமல் எழுதும் தொழிலில் பணத்தட்டுப்பாடு இல்லை என்பதைக் காணலாம்.

நாம் செய்யும் தொழிலில் 10 பாகங்களிருந்தால், எதனால் லாபம் வருகிறது, எங்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று விளக்கமாகப் புரியுமாறு கணக்கை எழுதுவது மேலும் சிறப்பு.

Zazanias

ஸஸானியாஸ் என்பவர் தம் வியாபாரத்தை 10 கோடியிலிருந்து 18 கோடிக்கு உயர்த்தினார். திவாலாகப் போனவர் கடை ஒன்றை வாங்கினார். தம் தொழிலில் பயன்படுத்திய முறைகளை இங்கும் கடைப்பிடித்தார். வாடகை, எலக்டிரிக் பில், சம்பளம், சரக்கு விலை, ஸ்பேர் செலவு, பயணச் செலவு போன்ற தொழிலின் செலவுகளைப் பட்டியலாக எழுதி அவை மொத்த வியாபாரத்தில் எத்தனை சதவீதம் என்று கணக்கிடுவது அவர் பழக்கம். 15 ஆண்டு தொழிலில் ஒவ்வொரு செலவும் மொத்தத்தில் எத்தனை சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்று அவர் கணக்கிட்டிருந்தார். அவற்றுள் எலக்டிரிக் பில் 2½% என்பது அவரது புள்ளி. திவாலான கடையில் அது 6% ஆக இருந்தது. அதைப் பார்த்தவுடன் அவருக்கு அங்குக் கோளாறு என்பது புரிந்தது. அத்துடன் அதே கோளாறு மற்ற இடங்களிலுமிருக்கும் என்று நினைத்து அக்கடையை வாங்கி, கோளாற்றை விலக்கினால் இலாபம் என்று கணக்கிட்டார். முதலில் எலக்டிரிக் பில்லை 2½% க்குக் கொண்டு வர பெருமுயற்சி செய்தார். அதில் வெற்றி பெற்றவுடன், மற்ற அம்சங்களையும் தம் திட்டப்படிக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தார். ஓரிரு மாதங்களில் கடை இலாபகரமாக மாறிவிட்டது.

ஒவ்வொரு செலவுக்கும் உரிய பங்கை நிர்ணயித்தால் பணம் விரயமாகாது. அது நாம் பணத்திற்கு உரிய கவனம் செலுத்துவதாகும்.

சுத்தம்

அன்னை பக்தர்களுக்குச் சுத்தத்தின் முக்கியத்துவம் தெரியும். தொழில் செய்யும் பக்தர்கள், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் சுத்தத்தை மேற்கொள்வது வழக்கம். சுத்தம் முடிந்தவுடன் பணம் வருவதைக் காணலாம்.

தரையை மட்டும் பெருக்கும் சுத்தம் முதல் நிலை. பொருள்களைத் துடைத்து வைக்கும் சுத்தம் அடுத்த நிலை. பொருள்கள் உள்ள அலமாரியில் சுத்தத்தை ஏற்படுத்துவது அடுத்த நிலை. அது போல் சுத்தத்திற்கு 6 அல்லது 7 நிலைகளைக் குறித்து நம் தொழில் எந்த நிலையிலிருக்கின்றதோ அதிலிருந்து அடுத்த நிலைக்குச் சுத்தத்தை உயர்த்த வேண்டும்.

பழைய பாக்கியைத் திருப்பித் தருவது

பழைய பாக்கியைத் தருவது அவசியம். பிறருடைய பணம் நம்மிடம் பாக்கியாக இருக்கும் வரை, நமக்கு வர வேண்டியது வாராது. எவ்வளவு சிறு தொகையானாலும் எவ்வளவு நாள்பட்டதாக இருந்தாலும், பழைய கடனை அறவே அழிக்கவேண்டும்.

சேர வேண்டியதை வசூல் செய்யவேண்டும்

பாக்கியைத் தருவது போல், நமக்குச் சேரவேண்டியது பிறரிடம் நாள் கடந்து தங்கியிருந்தால், அதனால் மற்ற தொகைகள் நிலுவையாகும். நிதானமாக, முறையோடு, வாடிக்கைக்காரர்களுக்குச் சலிப்பு ஏற்படாத முறையில் நமக்குரியதை தவறாமல் வசூலிக்க எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். சிறு தொகை என, பாராமுகமாக இருக்கக்கூடாது.

சிப்பந்திகளுக்குச் சம்பளம்

சம்பளம் நாள் தவறாமல், தாமதமில்லாமல் கொடுக்கப்படவேண்டும். அதற்குரிய முயற்சியைச் சிரமப்பட்டு எடுத்த நிறுவனம், தங்கள் பணத்தட்டுப்பாடு 90% விலகியதைக் கண்டனர்.

Payables

நாம் கொடுக்க வேண்டியவற்றைத் தாமதமின்றிக் கொடுக்கவேண்டும்.

பணம் இல்லாமல் தாமதமாவது வேறு. 30 நாள் தவணைக்கு வாங்கிய தொகை 25ஆம் நாள் கிடைத்து விட்டால், 30ஆம் நாளன்று செலுத்துவது வழக்கம், அதற்குப் பதிலாக கிடைத்த அன்றே செலுத்துவது நல்லது.

கடன் வாங்குவது தவறு என்ற கொள்கையுடையவர்களுண்டு. அது தனிப்பட்ட விஷயம். இது தொழிலுக்குப் பொருந்தாது. 6 இலட்ச ரூபாய் செலாவணியுள்ளவர் பாங்கில் 60,000 ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அவரது மூலதனம் 1 இலட்சம். மேலும் கடன் பெற அபிப்பிராயம் உண்டு. ஆனால் வழி புரியவில்லை. பாங்க் பல சமயங்களில் சிறு கடனும் தரமாட்டார்கள். சில சமயங்களில் தாராளமாகவும் தருவார்கள். 6 இலட்சம் செலாவணிக்கு அதில் பாதியான 3 இலட்சம் கடன் எந்தப் பாங்க்கும் கொடுக்கும். இவருக்கு அனுபவமில்லை. அதனால் இதற்கு மேல் கிடைக்காது என்ற நம்பிக்கையில் முயலவேயில்லை. நம் தொழிலில் மற்றவர்கள் பணம் புரட்டும் முறைகள் அனைத்தையும் நாம் அறிவது அவசியம். அதில் நமக்குப் பொருத்தமானவற்றைப் பயன்படுத்தி பலன் பெற முழுமுயற்சி எடுப்பது அவசியம். தெரிந்து கொள்ளாமலிருப்பது தவறு.

செலவைக் குறைப்பது எப்படி?

விரயத்தை விலக்குவது ஒரு வகை. அறிவாலும், அனுபவத்தாலும், பிறரைப் பார்த்துத் தெரிந்து கொள்வதாலும், யோசனையாலும், புதுமுறைகளாலும், இன்று அத்தியாவசியம் என நாம் கருதும் செலவுகளில் பலவற்றைக் குறைக்கலாம். அவை அனைத்தையும் குறைப்பது ஒரு முறை. முழுமுயற்சி எடுப்பவர் 10% செலவைக் குறைக்க முடியும். 10% செலவைக் குறைத்தால் இலாபம் 100% உயரும். ஒரு கோடி செலாவணிக் கம்பெனியில் 9 லட்சம் இலாபமானால் 9% இலாபம். ஒரு கோடியில் செலவை 10% குறைத்தால் 90 லட்சமாகும். குறைந்தது10 லட்சம் இலாபமாகும். புதிய இலாபம் 19 இலட்சம். 9 இலட்ச இலாபம் 19 லட்சமாகிறது.

Purchase கொள்முதலை முறைப்படுத்துவதால் வருஷத்தில் இரண்டுமுறை புரளும் பணம், மூன்று முறை புரண்டால் அது இலாபம். வருஷத்தில் 2 கோடி ஸ்டோர் சாமான் இருப்புள்ளவர் அத்தொகையை இருமுறைக்குப் பதிலாக மும்முறை பயன்படுத்தினால் பலன் என்ன? இரண்டு கோடி மூலதனம் 4கோடி சரக்கு வாங்கப் பயன்படுகிறது. மூன்று முறையில் 6 கோடி சரக்கு வாங்கப் பயன்படும். ஸ்டோர் சரக்கு வருஷத்தில் scientific monitoring முறையாகப் பயன்படுத்தப்பட்டால் 6 முறை புரண்டு வரும் என்பது சட்டம்.

புதிய இடங்களில் பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்

ஆலையில் விழும் குப்பையை வெளியே போட இடமில்லாமல் முனிசிபாலிட்டியுடன் 3 ஆண்டுகள் தகராறு செய்த இடத்தில் இம்முறையைக் கையாள ஒரு யுக்தியைக் கண்டு, குப்பையைப் பயன்படுத்த வழி கண்டு அதைப் பிரபலப்படுத்தியபின், குப்பையால் தொந்தரவில்லை. அது பணமாகி விட்டது. இப்பொழுது குப்பைக்கு டெண்டர் ஏற்பட்டு விட்டது.

பெரிய கம்பெனிகள் பணம் சேகரிக்கும் முறைகளைச் சிறுகம்பெனிகள் அறிவதில்லை. இவர்களுக்கும் அது பயன்படும்.

தொழிலையும், விவசாயத்தையும் மேற்கொண்ட கம்பெனி, மானேஜ்மெண்ட் முறைகளை விவசாயத்தில் பயன்படுத்தி இந்தியாவிலேயே தங்கள் துறையில் அதிகபட்சம் இலாபம் பெற்றனர்.
நமக்குரிய மானேஜ்மெண்ட் முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். பணத்தைத் தவறாக மட்டுமே சம்பாதிக்கலாம் என்பதை விட்டு, நேராகச் சம்பாதித்தால் அதிகமாகச் சம்பாதிக்கலாம் என்று அறியவேண்டும். 

1 comment:

  1. நாமும் நாம் தற்போது செய்துகொண்டிருக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணவேண்டும் என்றால் காலத்திற்கு தகுந்தாற்போல் நம்மை நாம் அப்டேட் செய்துகொள்ள வேண்டும். அந்தக்காலத்து வழிமுறைகள் இந்த காலத்திற்கு ஒத்துவராது. ஏனென்றால் அந்தக்காலத்தில் போட்டிகள் மிகமிகக்குறைவு. ஆனால் தற்போது அப்படியில்லை எந்தவொரு தொழிலை எடுத்தாலும் அதிக அளவிலான போட்டியாளர்கள் உள்ளனர். நாம் நமதுபோட்டியாளர்களைவிட ஒருபடி மேலே சென்றால் மட்டுமே தொழிலில் முன்னேற்றம் காண முடியும். அந்த ஒருபடிதான் என்னவென்று இப்போது நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.

    பெருசா எல்லாம் ஒன்னும் இல்லீங்க. இன்டர்நெட் என்பது வெகு வேகமாக வளர்ந்துவருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இன்டர்நெட் வளர்வதற்கும் நமது தொழிலை வளர்த்துவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இருக்கிறது நண்பர்களே....! இண்டர்நெட்டினை உபயோகம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால்தான் அது வெகுவேகமாக வளர்கிறது.

    இன்டர்நெட் என்றாலே வெப்சைட்டுகள்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. நீங்களே பார்த்திருப்பீர்கள் நிறைய நிறுவனங்களும் கடைகளும் அவர்களுக்கென்று வெப்சைட் ஒன்றினை அமைத்து அதில் அவர்களது அனைத்து தயாரிப்புகளைப்பற்றியும் விவரமாக போட்டிருப்பார். மக்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்புகளின் விலை உள்பட அனைத்து விவரங்களையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்வர். இதனால் மக்களின் அலைச்சலும் நேரமும் மிச்சமாகிறது.

    உதாரணமாக, நீங்கள் சென்னையில் வசிக்கிறீர்கள் உங்களுக்கே ஒரு Dell Laptop வாங்கவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இன்டர்நெட் வளர்ச்சியடையாத காலமாக இருந்திருந்தால் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க வேண்டும். ஆனால் இப்போது அப்படியில்லை சும்மா “Dell Laptops in Chennai” என்று Google இல் சர்ச் பண்ணினால் சென்னையில் Dell Laptop எந்த எந்த கடைகளில் கிடைக்குமோ அவர்களின் வெப்சைட்டுகள் வரிசையாக வந்து நிற்கும். நீங்கள் எங்கும் அலையாமல் இருந்த இடத்தில் இருந்தே Dell Laptop கிடைக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம்.

    இப்போது அனைவரின் வீட்டிலும் கம்பியூட்டரும் இண்டர்நெட்டும் , தொலைக்காட்சியையும் கேபிள் கனேக்சனையும் போல் பெருகிவருகிறது. நீங்களும் சுதாரித்துக்கொள்ளவேண்டும். இலட்சகணக்கில் செலவுசெய்து தொழிலை ஆரம்பித்துவிட்டு அதற்கு வெப்சைட் ஆரம்பிக்க வெறும் ஆறாயிரம் செலவுசெய்ய யோசிப்பது உங்களின் முன்னேற்றத்தை தடை செய்வதாகவே அமையும்..

    எங்கு சென்று வெப்சைட் ஆரம்பிப்பது என்று இப்போது நினைக்கிறீர்களா. கவலையே வேண்டாம் நாங்களே உங்களுக்கு சிறந்த முறையில் நீங்கள் செய்யும் தொழிலுக்குத் தகுந்தவாறு ஒரு வெப்சைட்டினை அமைத்துத் தருகின்றோம். மற்றும் நாங்களே உங்களின் வெப்சைட்டை பராமரித்தும் கொள்வோம்.

    வெப்சைட்டிற்கு ஆகும் செலவு,
    Domain Name - Rs.559/Year
    Web Hosting - Rs.999/Year
    Web Designing - Rs.3499/One Time

    Web Hosting மற்றும் Domain Name சேவைக்கு வருடம் Rs.1559 செலுத்தவேண்டும். உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்வதற்காக நீங்கள் செலுத்தவேண்டிய தொகை Rs.3499. மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
    சத்தியமூர்த்தி,
    போன் : +91 9486854880

    ReplyDelete

Followers