அன்னை அன்பர்கள், புதிய கண்ணோட்டத்தில், சகுனம் என்பதை எப்படிப் பார்க்கலாம்?
சிறியது, பெரியது, சௌகரியமானது, சந்தோஷம் தரக்கூடியது, ஆகிய அனைத்தும் ஆரம்பத்திலும், பின்னர் நடைமுறையிலும் தொடர்ந்து தவறாது நிகழ்ச்சிகள்மூலம் நமக்குச் செய்தி அளிப்பது சகுனம் எனப்படும்.
நடந்த விஷயங்களை நினைத்துப் பார்த்தால் நல்லதாக முடிந்தவை, கெட்டதாக முடிந்தவை ஆரம்பத்திலிருந்தே காட்டும்.
ஜடஉலகில் நிகழ்வனவெல்லாம் சூட்சும உலகில் ஏற்கனவே நிகழ்ந்தவற்றின் வெளிப்பாடுகள்தாம். எனவேதான் சகுனங்கள் ஜடஉலகில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிவிப்பதாக அமைகின்றன. நாம் சகுனம் என்று கூறுவது Life Response வாழ்வின் எதிரொலியில் ஒரு பகுதி.
வாழ்க்கையில் நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகள், உத்தியோகம், course திருமணம், கூட்டாளி, டெக்னாலஜி போன்றவை, இந்த ஞானம் உள்ளவர்க்கு Life Response வாழ்வை நிர்ணயிக்கக்கூடியவை.
- சுபமாக முடிவதைச் சுப சகுனம் காட்டும்.
- சுப சகுனம் அர்த்தமுள்ள ஆரம்பம்.
- அது முடிவைத் தன்னுட்கொண்ட அர்த்தபுஷ்டியுள்ள ஆரம்பம்.
- ஒருவர் மகாபுருஷனாக உலகில் வாழ்வதை அவர் பிறந்த சமயம் சுற்று வட்டாரம் பெற்ற சுபிட்சம் குறிக்கும்.
- நம் வாழ்வின் முடிவில் நம் உலகம் செழிப்பாக, இன்று நம்மைச் சுற்றியுள்ளவர் அதன் அறிகுறியைக் காண வேண்டும்.
ஒரு NGO கார் வாங்கினார். நமக்கும் காருக்கும் என்ன சம்பந்தம் என நினைத்துப் பார்த்தார். முதல் முறை அவர் தரிசனத்திற்கு வரும்பொழுது திருவிழா நாள் என்பதால் பஸ் கூட்டமாகி இடமில்லாமல், உடனிருப்பவர் கார் ஏற்பாடு செய்தது நினைவு வந்தது. 12 வருஷங் கழித்து வரப்போகும் கார் முதல் நாளே அறிவித்துவிட்டது. நாம் கூறும் உதாரணத்தைவிட அன்பர்கள் முதல் முறை ஆசிரமம் வந்தபொழுது நடந்ததும், பிறகு இன்றுவரை அவர்கள் வாழ்வும் மிகத் தெளிவாகத் தொடர்பைக் காட்டும்.
செயலை அலசி, ஆராய்ந்து பார்த்தால், அதுவும் கடந்து போனதை ஆராய்ந்தால் தொடர்பு, விவரம் புரியும். நாம் முறையோடு செய்யும் காரியங்கள் முதலிலேயே அபரிமிதமாகப் பலனைக் காண்பிப்பது அளவு கடந்த வளர்ச்சிக்கு அறிகுறி.
சம்பளமும், இலாபத்தில் 5% பங்கும் எனக் கம்பனியில் மானேஜரானவர், இன்று தன் பெருஞ்சொத்து எப்படி வந்தது எனச் சிந்தித்தார். முதற் கம்பனியில் அவர் முதல் வருஷத்தில் மிகுந்த இலாபம் எடுத்துக் கொடுத்தபொழுது முதலாளி 5%க்குப் பதில் 10% கொடுத்தார். மானேஜர் 5% போதும் என்று 10%ஐ மறுத்துவிட்டார். முதல் வருஷம் 5 மாறி 10 ஆனது வளர்ச்சியைக் காட்டுகிறது. Short termகைக்கு மெய்யான ஆதாயத்தைக் கருதாது நீண்ட நாள் சேவையை மானேஜர் பாராட்டியதால் பெருஞ்சொத்து வந்தது.
தோட்டம் வாங்கியவர் முதல் அறுவடையைத் திருடன் கொண்டுபோனான் என்றார். 10ஆண்டுகளில் தோட்டம் அவர் கையை விட்டுப் போயிற்று.
ஒரு ஸ்தாபனத்தில் ஒரு முக்கிய ஊழியர் துரோகம் செய்தபொழுது ஸ்தாபகர் அவருடைய முதல் கடிதத்தில் தன்னை "வைரம்'' என விவரித்ததைக் கூறினார். தன்னையே ஒருவர் "வைரம்'' என்றால் அது உண்மையிலேயே "கரி'' என்று பொருள். பின்னால் வரும் துரோகத்தை "வைரம்''சுட்டிக்காட்டுகிறது.
ஒரு வேலையைச் செய்யும்பொழுது சகுனம் நல்லதானாலும், கெட்டதானாலும் முன்னாலும் வரும், பின்னாலும் தெரியும். முன்னால் வரும் சகுனம் தெளிவாகப் புரியும். மற்ற நேரம் நாம் கவனக்குறைவாக இருந்தால் தவறான சகுனம் பின்னால் எழும். அப்பொழுது சரி செய்வது கடினம். சிரமப்பட்டு சரி செய்யலாம். முன்னாலேயே தவறான சகுனமில்லாமல்லை. நம் மனத்தில் படும் அளவு தெளிவாக இல்லை.
இதற்கு வழியில்லையா? உண்டு.
இப்புதிய கண்ணோட்டத்தில் எல்லாச் செயல்களும்,அசைவுகளும் சகுனங்களாகும். நாம் அனுபவத்தால் அதை அறியவேண்டும்.
சகுனத்தையும் காண முடியாதவருக்குப் பலன் நிலையை விளக்கும். பலன் தவறானால், நாம் தவறு. அதையும் காண முடியாதவன் அத்தவற்றை ஆயிரம் முறை திரும்பத்திரும்பச் செய்வான். அப்படிப்பட்டவர் சொல்லை ஏற்கக் கூடாது. அவர் பிறரல்லர், அவரே நாம்.
- பிரார்த்தனை பலிக்க வேண்டும், யோக வாழ்க்கை விளக்கம் - திரு. கர்மயோகி அவர்கள்
- இது நாம் ஆரம்பித்ததா? அன்னை ஆரம்பித்ததா?
- நாம் ஆரம்பித்தவற்றில் மட்டும் தவறு எழும்.
இப்புதிய கண்ணோட்டத்தில் எல்லாச் செயல்களும்,அசைவுகளும் சகுனங்களாகும். நாம் அனுபவத்தால் அதை அறியவேண்டும்.
சகுனத்தையும் காண முடியாதவருக்குப் பலன் நிலையை விளக்கும். பலன் தவறானால், நாம் தவறு. அதையும் காண முடியாதவன் அத்தவற்றை ஆயிரம் முறை திரும்பத்திரும்பச் செய்வான். அப்படிப்பட்டவர் சொல்லை ஏற்கக் கூடாது. அவர் பிறரல்லர், அவரே நாம்.
- பிரார்த்தனை பலிக்க வேண்டும், யோக வாழ்க்கை விளக்கம் - திரு. கர்மயோகி அவர்கள்
No comments:
Post a Comment