அகந்தை கரைய, பூரண சரணாகதியை செய்யும் மூன்று முறைகள்
- பூரணச் சரணாகதியை 3 வகைகளாக உருவகப்படுத்தலாம்.
- அக்கருத்தையும், அதைப் பிரதிபலிக்கும் செயலையும் கீழே குறிப்பிடுகிறேன்.
1. “உன் திருவுள்ளமே நிறைவேற வேண்டும்; என் விருப்பமன்று”.
பிரதிபலிக்கும் செயல்: சாஷ்டாங்க நமஸ்காரம்.
2. “நீ நினைத்தபடி மட்டுமே நிகழட்டும், நீ நினைத்தபடி மட்டுமே நிகழட்டும்”.
பிரதிபலிக்கும் செயல் : புத்தகத்தைப் பிரிப்பதைப் போல் தலையிலிருந்து கால் வரை உன்னைப் பிளந்து இறைவன் முன் வை.
3. “யுகாந்தர காலத்திற்கும் உனக்கே நான் உரியவன்”.
பிரதிபலிக்கும் செயல்: அவன் மடியில் தவழும் குழவியாக உன்னைப் பாவிக்க வேண்டும்.
இவற்றுள் எந்த ஒன்றையாவது முறையாகச் செய்தால் அகந்தை கரையும்.
- ஸ்ரீ கர்மயோகி அவர்கள்
No comments:
Post a Comment