Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Thursday, November 8, 2012

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - 26


ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம். 

திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். 

முறைகள்:

  • விரயத்தை விலக்கு.
  • அளவுகடந்த அர்த்தமற்ற விரயத்திற்கு அர்த்தம் உண்டென அறியலாம்.
  • நமக்குள்ள திறமையை நமக்கு மறக்குமாறு நடக்க வேண்டும் - நாமே பாராட்டினால் அது வளரும்.
  • சுயநலமிக்குச் சேவை செய்யாதே.

இன்றைய பகுதியில் மேற்கண்ட முறைகளுக்கான (Practices / Methods), கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். 

 -----------------------------------------------------------------------------------------------------
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ...........
-----------------------------------------------------------------------------------------------------

முறை:

விரயத்தை விலக்கு.

முறைக்கான விளக்கம்:

பொருள்கள், சக்தி, நேரம், இடம், வாய்ப்பு ஆகியவற்றின் விரயத்தை முழுவதும் விலக்கியவர் வருமானம் இரண்டு மடங்காகும். உண்மையில் 10 மடங்காகும்.

18 ரூபாய் 80 பைசாவுக்கு வாங்கக்கூடிய பொருளை 18 ரூபாய் 90 பைசாவுக்கு வாங்காத மனநிலை விரயத்தை விலக்குவது.நாம் வழக்கமாகச் செய்யும் வேலைகளுக்குத் தேவைப்படும் நேரத்தைக் குறித்து அவற்றைக் குறைக்க முயல்வது ஒரு முறை.

குளிக்கும் நேரம் 25 நிமிஷமானால், எதையும் விலக்காமல் கவனமாகக் குளித்தால் 25 நிமிஷம் சுருங்கும். 1 மாதம் கழித்து 25 நிமிஷம் 15 நிமிஷமாவது தெரியும். அந்த 10 நிமிஷம் எனக்கு என்ன செய்யும் எனக் கேட்பதைவிட 1 மாதம் இது போல் எல்லா வேலைகளையும் efficient திறமையாக மாற்றினால் தினமும் 11 1/2 மணியில் முடிந்த வேலை 81/2மணியில் முடியும். அதற்குள் வருமானம் 2 அல்லது 5 மடங்கு உயர்ந்திருப்பதைக் காணலாம்.

Energy சக்தியை அப்படிக் கவனித்தால், மற்ற எல்லா விஷயங்களிலும் விரயம் அறவே விலக்கப்பட்டால் முடிவில் நம்நிலை அடுத்தக் கட்டத்திற்கு வரும். 5 ஆண்டுக்குப்பின் வரவேண்டிய பிரமோஷன் இப்பொழுது வரும். Pay scale மாறி சம்பளம் கணிசமாக உயரும்.

முனிசிபல் கௌன்சிலர் பதவியை மனம் நாடும்பொழுது MLA சீட் கிடைக்கும்.

விரயத்தை விலக்க எடுக்கும் முயற்சி முழுமுயற்சி.இம்முயற்சி நம் திறமையை உயர்த்துவதுடன் நம் பர்சனாலிட்டியையும் உயர்த்தும்.

நம் மனம் உயர்ந்த அளவுக்கு வாய்ப்பு நம் சூழலில் இல்லையெனில் நம்மை வேறு இடம் கொண்டுபோகும்.விரயத்தை விலக்கும்பொழுது நாம் பொருள்கட்கு முடிவான கவனம் செலுத்துகிறோம்.

கவனம் கடவுளின் பொறுப்பு.

ஒரு விஷயத்தில் கிடைக்கும் பலன் கணிசமானது.எல்லா விஷயங்களிலும் கிடைக்கும் பலன் மிகப்பெரியது.விரயம் என்பது ஒரு தலைப்பு.பல தலைப்புகளும் சேர்ந்து தரும் பலன் பிரம்மாண்டமானது.

பலனை நாம் இன்றுள்ள நிலையைக்கொண்டு நிர்ணயிக்க முடியாது.

திறமை உடன் முயற்சி.

விரயத்தை விலக்க மனம் முயலவேண்டும்.

மனம் உடலைவிட ஏராளமாகப் பெரியது, முக்கியமானது.

விரயம் விலகிப் பலன் பெறாதவரில்லை.

திவாலான கம்பனி விரயத்தை விலக்கினால் இலாபகரமான கம்பனியாகும்.

இது சுலபமான முறை, பெரும்பலன் தரும்.



 ---------------------------------------------------------------------------------------------------

முறை:

அளவுகடந்த அர்த்தமற்ற விரயத்திற்கு அர்த்தம் உண்டென அறியலாம்.

முறைக்கான விளக்கம்:
விரயத்தை விலக்கும் பலனை, விரயமும் தரும்என்பது ஆன்மீகச் சட்டம்; எதிரானவை உண்மை.

கட்டுப்பாடு பெரும்பலன் தரும்; சுதந்திரமும் அதே பலனைத் தரும்.

விரயம் செய்தால் எப்படிப் பலன் வரும்?

விரயம் உண்மை; பலன் வரும்என்பதும் உண்மை.

பலன் அதே நிலையில் வாராது; அடுத்த நிலையில் வரும்.

MPSC எழுதி சர்க்காரில் குமாஸ்தா ஆனவன் குமாஸ்தாவாகவே ஓய்வு பெற்றான். ஓயாது சூது ஆடுவான். சம்பளம் வீட்டிற்கு வாராது. மனைவி தன்தாயார் குடும்ப ஆதரவால் கடின வாழ்வை நடத்தினாள்.

இரண்டு பெண்கள் வயதிற்கு வந்தன.

இதுவரை சிறிய உதவிகளைச் செய்த தாயார் வீட்டில் இனியும் உதவி எதிர்பார்க்கும் நிலையிலில்லை.

மைத்துனனே இரு பெண்கட்கும் வரன் ஏற்பாடு செய்து அவன் செலவில் தலைக்கு 100 பவுன் சீர் செய்து பெரிய இடத்தில் திருமணம் செய்தான்.

அதன்பிறகும் சூது தொடர்ந்தது.

சூது தவறு, விரயம் தவறு என்பதை மறுக்க முடியாது.

விரயம் (போகாது) வெளியே போவதை அதிகப்படுத்துவதால், உள்ளே வருவது அதிகப்படும் என்பது ஒரு விதி. இன்று அமெரிக்காவில் விரயமாகும் உணவுப்பண்டம் ஒரு நாட்டைக் காப்பாற்றப் போதும் என்கிறார்.

போக்கு அதிகமானால், வரவு அதிகமாகும் என்பது சட்டம்.

இதை நாம் புரிந்துகொள்ளலாம், பின்பற்ற முயலுதல் சரிவாராது.

அளவுகடந்த விரயம் அளவுகடந்து அழிப்பதைக் காண்கிறோம்.

அவர்கட்கும் ஆத்மாவில் அளவுகடந்த பலன் வரும்.

தத்துவத்தை அறிவது பலன் தரும்.

பின்பற்ற முயல விரும்பினால் அவர்கள் அறிய வேண்டியவை அதிகமாக உள்ளன.

இதை அரசியலில் அதிகமாகக் காணலாம்.

முறையாக உழைத்த தொண்டர், தொண்டர் தலைவராகி, MLA ஆவதுண்டு.

எந்த முறையையும் பின்பற்றாமல் சந்தர்ப்பம் கிடைத்தால் எந்தத் தலைவரையும் துரோகம் செய்து கட்சித் தலைவனாக வந்தவர் நிலையை ஆராய அரசியலோ, மனோதத்துவமோ போதாது; ஆன்மீக வாழ்க்கை விளக்கம் தேவை.

விரயத்தால் அழிந்தவர் பலர்.

விரயத்தால் பலன் பெற்றவர் சிலர்.

அதை அதிர்ஷ்டம் என்கிறோம்.

நமக்குப் புரியாததை அதிர்ஷ்டம் என்று கூறுகிறோம்.

அப்படிப் பலன் பெறுபவரிடையே ஆழ்ந்து ஒரு நல்ல value குணம் புதைந்திருக்கும்.

Life Response படிப்பவர் இதையறியலாம்.

எந்த உண்மைக்கும் எதிரான உண்மையுண்டுஎன்பது இவ்விஷயத்தில் உண்மை.

முதலாளி பெற்ற அதே பலனை அவன் தொழிலாளி பெறுகிறான்.

விரயம் பெரிய சாஸ்திரம்; எளிதில் படித்து முடிக்க முடியாது.

 ---------------------------------------------------------------------------------------------------

முறை:

நமக்குள்ள திறமையை நமக்கு மறக்குமாறு நடக்க வேண்டும் - நாமே பாராட்டினால் அது வளரும்.

முறைக்கான விளக்கம்:
 நாம் பாராட்டாததைப் பிறர் பாராட்டுவர்.

அழகானவர் தம்அழகை நினைந்து மகிழ்வார்.

ஏதோ காரணத்தால் தன்அழகை தான் உணருவதில்லையெனில் உலகம் அதைப் பாராட்டும்.

திறமைக்குப் பலன் உண்டு.

பலனை அதிகமாகக் கருதினால், திறமையைக் கருத முடியாது.

நாம் கருதாததைப் பிறர் கருதுவர்.

Silent willஇல் நாம் கூறாததைப் பிறர் கூறுவதும், இங்கு நாம் பாராட்டாததைப் பிறர் பாராட்டுவதும் ஒன்றே.

1947 முதல் 1977 வரை இந்திய சர்க்கார் ஆயிரம் துறைகளில் முயன்று எல்லாத் துறைகளும் வெற்றிடமாக இருந்ததால், செய்ய வேண்டியவை ஏராளம்.

எவ்வளவு செய்தாலும், செய்ய வேண்டிய பாக்கி ஏராளமாக இருந்தது.

சர்க்கார் தான் செய்ததை நினைக்க நேரமில்லை.

உலகம் இந்தியா செய்தவற்றைக் கூர்ந்து கவனித்துப் பாராட்டியது.

நம்மைப் பிறர் பாராட்ட வேண்டும் எனில் எந்தத் திறமைக்காகப் பாராட்ட நாம் நினைத்தாலும், அது நம்மனத்தை விட்டகன்றால் உலகம் பாராட்டும்.

நாமே பாராட்டியபின் உலகம் பாராட்டாது.

உள்ள திறமையை எப்படி அறியாமலிருக்க முடியும்?

நம்திறமை ஒரு விஷயத்தில் 80%ஆனால் நாம் மேலும் பெற வேண்டியதை மட்டும் கருதினால், நாம் பெற்றதை நினைக்க முடியாது.

இது சிறப்பின் தன்மை.

சிறப்படைய ஒருவர் முயன்றால் அவர் முயற்சிக்கு முழுச்சக்தியும் செலவாகும். அதனால் உள்ளதைப் பாராட்ட சக்தியிருக்காது.

என்னுடைய திறமை எவர் கண்ணிலும் படவில்லையென வாழ்நாள் முழுவதும் குறைப்படுபவர், திறமையேயற்றவராக இருப்பார்.

சுமார் 1 பக்கம் தவறில்லாமல் ஆங்கிலம் எழுதத் தெரியாதவர், உடனுள்ள அனைவரிடமும் தம் ஆங்கிலப் புலமையின் பெருமையைப் பறைசாற்றினார். கேட்டவர் அனைவரும் விபரம் தெரியாதவர் என்பதால் அதை ஏற்றுப் பாராட்டினர். புலமைக்குச் சோதனைக் காலம் வந்தது.

அஸ்திவார அறிவுமற்றவர்என அம்பலமானார்.

தங்கள் திறமையைத் தாங்களே வியந்துகொள்பவர் எந்தத் திறமையும் அற்றவர்களாக இருப்பார்கள்.

உலகம் நம்மைப் பாராட்ட வேண்டியது நமக்கு அவசியமில்லை.

நாம் திறமையைப் பெறுவது அவசியம்.


பெற்றதை முழுமைப்படுத்தினால் அதைப் பெறலாம்.

அம்முயற்சி பெருவெற்றி பெறும்.

நம் சக்தியனைத்தும் அதில் செலவானால் நம்மால் நம்மைப் பாராட்ட இயலாது.

நாம் அதை மறப்போம்.

நாம் மறந்ததை உலகம் ஏற்கும்.


-------------------------------------------------------------------------------------

முறை:

சுயநலமிக்குச் சேவை செய்யாதே.

முறைக்கான விளக்கம்:
சுயநலத்தை எவரும் விரும்பமாட்டார்.

பிறர் சுயநலத்திற்குச் சேவை செய்வது நாம் சுயநலமாக இருப்பதைவிடத் தவறு. ஏனெனில் அது வளரும்.

எதைக் கவனித்தாலும், பாராட்டினாலும் அது வளரும்.

எதுவும் அனந்தம்; சுயநலமும் அனந்தம்.

பிறர் சுயநலத்தை வளர்ப்பதால் வளர்வது சுயநலம். அது நல்லதன்று.

அப்படிச் செய்யும் சேவை அவருக்குத் தப்பபிப்பிராயம் தருகிறது.

சுயநலம் தவறன்று, சரி என்ற முடிவுக்கு அவர் வருகிறார்.

அவர் சுயநலத்தை நாம் வளர்ப்பதால், கரைய வேண்டிய நம் சுயநலம் நம்மைச் சுடும்.

வேலை செய்யாத வேலைக்காரனுக்குச் சம்பளம் கொடுத்தால் வேலையின் மனம் புழுங்கும். அதனால் நடந்துவரும் நல்ல வேலை கெடும்.

படிக்காத மாணவர்கட்கு மார்க் போட்டு பாஸ் செய்த பேராசிரியர் தம் மகன் படிக்க மறுப்பதைக் கண்டு திகைத்தார். அவர் தவறாகப் பாஸ் போட்டதில் பலன் பெற்றவன் படிக்காதவன். அதனால் படிக்காத பழக்கம் வளர்கிறது.

அது அதிகமாகத் தன்வீட்டில் எழும் என்ற சட்டம் அவர் அறியாதது.

திருமணமானவனுடன் வாழ விரும்பினால், அந்த விருப்பம் பூர்த்தியாகாமல் தனக்கு திருமணமானபின் தன்எண்ணம் தன்வாழ்வில் வெளிப்படும்என அறிவதில்லை. இரண்டு திருமணம் தன்வாழ்வில் எழுவதின் அர்த்தம் புரியாது.

சுயநலம் கூர்மையானது.

கையால் தொட்ட பொருள் தன்னுடையதுஎன நினைப்பார்.

தான் வேலை செய்யும் கம்பனி தனக்கு வேண்டும்எனத் தோன்றும்.

அந்த எண்ணங்கட்குத் துணைப் போகக்கூடாது.

விலை பேசி நண்பருக்காக நிலம் வாங்கியவர் அது தனக்கு வேண்டும் என்றார்.

சுயநலத்தின் சுயரூபம் கடூரமானது.

கணவன், மனைவி, பெற்றோர், குரு, நண்பன், அண்ணன் என்பதால் சுயநலமிக்கு வேலை செய்து நஷ்டப்பட்டால், அத்துடன் விடாது.

அந்த நினைவு அழியும்வரை அது நம்மைச் சுடும்.

மனிதனால் தாங்க முடியாத அளவுக்குச் சுடும்.

யோகத்தை மேற்கொள்பவர்க்கு அது பயன்படும்.

குடும்பஸ்தனை அப்பழக்கம் அழித்துவிடும்.

தெரியாமலோ, வேறு வழியில்லாமலோ சுயநலத்திற்குச் சேவை செய்தால் அது உயிரையே எடுத்துவிடும்.

யோகி அதைச் சுயநலமிக்குச் செய்தால் சுயநலமியின் உயிர் போகும்.

உலகில் கடுமையானது இரண்டு; கயமை, சுயநலம் என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர் .

எக்காரணத்தை முன்னிட்டும் அதற்குச் சேவை செய்வது தவறு.


அண்ணனுக்காகத் திருடலாமா?

அதைவிட மன்னிக்க முடியாத குற்றம் சுயநலத்திற்குச் சேவை.

நல்லதிற்கே சேவை செய்வதைவிட இறைவனுக்குச் செய்வது, சேவை செய்வது மேல்என்று கூறும்பொழுது சுயநலமிக்குச் சேவை செய்வது பாவம்; அறிவீனம்.

 -----------------------------------------------------------------------------------------


.............................தொடரும்.

Read the previous Part of this Series : (Yoga Sakthi in our Life) யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - Part 25


Thanks,
AuroMere Meditation Center ,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India


Tags: Sri Aurobindo, Sri Annai, Mother, Yoga Sakthi, Methods, Pratices, Karmayogi, Philosophy, Sri Aravindar, Sri Annai, character, transformation, Yoga, Yoga Sakti in life, 

         

No comments:

Post a Comment

Followers