அடக்கம், அன்பு, அருள் ஆகியவை தெய்வத்தின் அம்சங்கள். அடக்கம் உயர்ந்து அன்பாகவோ, அருளாகவோ மாறும் நிலையுண்டு. அந்நிலையில் ஓர் அம்சம் தன் சிறப்பால் அம்சத்திற்கு (பகுதி) உரிய முழுமையான தெய்வமாகிறது. இது பக்தன் தெய்வமாகும் பாதை. ஞானம், பக்தி, கர்மமும் இதே சக்தியை உடையவை. ஞானத்தின் சிறப்பால் பக்தியையும், கர்மத்தின் உயர்வையும் பெறும் நிலையில் பக்தன் தெய்வமாக மாறுகிறான்.
அன்பரின் திருவடியில் தெய்வத்தின் திருப்பாதங்களைக் காண்பது உயர்ந்த பக்தி. அதனால் அவற்றைச் சிரமேற்தாங்கும் அடக்கம் பக்தனை அருள் உருவான அன்னையாக மாற்றி அவரை அருள் சுரக்கும் ஊற்றாக மாற்றும்.
" "பக்தனை அன்னையாக மாற்றுவது அன்பரின் திருவடியில் தெரியும் அன்னையின் பாதங்கள்''.
No comments:
Post a Comment