Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Monday, July 22, 2013

ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் -10



ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் -10

(From the Book : அருளமுதம்)

- திரு. கர்மயோகி அவர்கள்

இடையறாத அன்னையின் நினைவு என்ற நிலையை அடைதல் எப்படி?

"நினைவு என்பதென்ன'' என்பது ஒரு பெரிய தத்துவ விசாரம். ஞாபகம் என்பது அனைவருக்கும் முழு அளவில் இருப்பதில்லை. அதிக ஞாபக சக்தி உள்ளவர்களைக் கண்டு உலகம் வியக்கும். ஞாபகமே மனிதன் என்றும் கருதுபவருண்டு. மேல் மனத்திற்குத்தான் (surface mind) ஞாபகம் உண்டா, இல்லையா என்ற பிரச்சினை. உள்மனம் (inner mind) அப்பிரச்சினையைக் கடந்தது. அதற்கு அத்தனையும் நினைவுண்டு. நம் காதில் படாமல் நம்மைச் சுற்றி எழும் ஒலிகளும், நம் கவனத்தைக் கவராத காட்சிகளும் அங்குப் பதிவு செய்யப்படுகின்றன. மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டுவரும் திறன் உள்மனத்திற்குண்டு. மேல்மனம், உள்மனத்திலிருந்து பிரிக்கப்பட்டு, அறியாமையால் செப்பனிடப்பட்டது. அதனால், அதற்கு மற்ற அம்சங்களைப்போல, நினைவும் அளவுக்குட்பட்டது. மனத்திற்கு ஒரு மையம் உண்டு. அம்மையத்திற்கு அக்கரையுண்டு. அந்த அக்கரையில் படும் நிகழ்ச்சிகளை மனம் நினைவிருத்தும். மற்றவற்றை நினைவில் இருத்துவதில்லை. நிகழும்பொழுதே நினைவிருத்தப்படாதவற்றை, மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவதில்லை. எனவே, இடையறாத நினைவு என்பது எந்த விஷயத்திலும் மனிதனுக்கு இருப்பதில்லை.


நாயன்மார் ஆண்டவனை இறைஞ்சிக் கேட்பது இடையறாத நினைவு. பகவானுடனிருந்த சாதகர் அவர் அறையிலேயே தூங்குவார். ஒரு மணி நேரம்கூட அறையை விட்டு வெளியில் போகாதவர். தனக்கு ஏதாவது கூறும்படி பகவானைக் கேட்டார். இரவும், பகலும், எப்பொழுதும் அகலாத இறைவன் நினைவு வேண்டும் எனப் பிரார்த்திக்கச் சொன்னார். அந்தச் சாதகர் இறைவன் முன்னாலேயே இரவும், பகலும் இருக்கிறார். இருந்தாலும், கண் முன்னாலிருப்பது மனத்தில் நிலைத்திருக்கும் என்பதில்லை. மனத்தில் நீங்காமல் பகவான் குடிகொண்டால்தான் நீங்காத நினைவு ஏற்படும். இந்த நினைவு அன்னை மீதிருக்க வேண்டுமெனில் மனத்திற்கு அதிகத் திறன் வேண்டும். எளியவற்றை எளிமையாக நினைவிருத்தலாம். சிக்கலானவை, பெரியவை, விளங்காதவை நினைவில் எளிதில் தங்கா. அன்னையை மனத்திலிருத்த முழுத் திறனும் - சக்தி - தேவை. மனம் வேறெதிலும் ஈடுபடாமலிருந்தால் அன்னையை நினைக்க முடியும். மனத்தில் எண்ணம் எழுந்தால், மனத்தின் சக்தியை ஓரளவு எண்ணம் எடுத்துக்கொள்ளும். அதனால் அன்னையை நினைவுபடுத்துதல் கடினம். எண்ணமற்ற மனம் அன்னையை நினைவுகூரத் தேவை. எண்ணமே கூடாதுஎனில், எண்ணம் பேச்சாக மாறி வெளிவந்தால் அன்னை நினைவு அகலும். எனவே, வாயால் ஒரு வார்த்தை பேசினாலும் அன்னை நினைவு விலகும் என்பது உண்மை. மௌனத்தைத் தபஸ்விகள் நாடியதன் காரணத்தில் இதுவும் ஒன்று. பேசும் அவசியம் ஏற்பட்டால் என்ன செய்வது? அன்னையை நீங்காத நினைவுடன் பெற மனம் விழைந்த பின் பேச்சு தானே அற்றுப்போய், குறைந்துவிடும். அன்னை மௌனத்தைப் பாராட்டவில்லை. Controlled Speech அளவுடன் பேசுவதையே அன்னை பாராட்டினார். பேசும் சந்தர்ப்பம் எழுந்தால், நாம் பேசினால் அது பேச்சு. பேச்சு மனத்தை அன்னையிடமிருந்து விலக்கும். எழும் பேச்சை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், தேவையான பேச்சுக்கு அவர் அனுமதி அளிப்பார். அது அளவோடுள்ள பேச்சு. இது நாம் பேசுவதில்லை. இது நம்முள் அன்னை பேசுவதாகும். இப்பேச்சு மௌனத்தைக் கலைக்காது, அன்னை நினைவை அதிகப்படுத்தும். இதன்றி நம் மனத்தில் எழும் எண்ணம், சமர்ப்பணமின்றி வெளிவருவது பேச்சு. அதுபோன்ற சொல் வாயால் ஒன்றுகூட வரக்கூடாது.

இது முதல் நிபந்தனை. இடையறாத அன்னை நினைவை நாடுபவர் வாயால், ஒரு சொல்லும் சமர்ப்பணமின்றி வரக்கூடாது. ஒலி, ஒளி, மணம் போன்றவை புலன் வழி உள்ளே வருகின்றன. புலன் வழி வருபவற்றை மனம் ஏற்றுப் புரிந்துகொள்கிறது. அன்னை புலன்களிலில்லை, மனத்திலில்லை, ஆன்மாவில் - சைத்தியப்புருஷன் - இருக்கிறார். ஆன்மாவே அன்னையை நினைக்க முடியும். மனத்தில் எழும் எண்ணம் அன்னை நினைவுக்குப் புறம்பானது. எனவே, மனத்தையும் கடந்து புறவெளியில் உலவும் புலன்களால் அன்னையை நெருங்க முடிவது இல்லை. ஓர் ஒலி கேட்கிறதுஎனில், காது மனத்திற்கு அதைச் சொல்கிறது. ஒயை ஏற்கும் மனம், ஒலியை ஏற்று, அதன் பாதை வழியே ஒலி உற்பத்தியான இடத்தை நாடுகிறது. அன்னை வெளியில் இல்லை. அகத்தில் ஆன்மாவிலிருக்கிறார். அன்னை நினைவை நாடுபவர் ஒலி கேட்டவுடன், மனத்தைத் தாண்டி உள்ளே வீற்றிருக்கும் ஆன்மாவைத் தட்டி எழுப்பி, வெளியே போகும் சந்தர்ப்பம் வருகிறது. போகாதே, உள்ளே போய் அன்னையைக் காணுதல் தேவை என்று சொல்ல வேண்டும். அதைச் சொல்ல ஒயை உள்ளே அனுமதிக்காமல், ஒலி மனத்தைத் தொடுமுன் அன்னையை நினைந்து, ஆன்மாவை நாட வேண்டும்.

எந்தச் சப்தம் கேட்டாலும், சப்தம் மனத்தைத் தொடுமுன் அன்னையை அழைக்க வேண்டும்.


நாம் நடமாடிக்கொண்டிருக்கிறோம், பேசுகிறோம், ஏதாவது செய்துகொண்டேயிருக்கிறோம். சும்மா உட்கார்ந்திருக்கும் பொழுதும் உடல் லேசாக அசைகிறது, கை, கால்களை அசைக்கிறோம், கண் சிமிட்டுகிறோம், ஆடையைத் திருத்துகிறோம். உடல் இருள் நிறைந்தது. மனம் ஒளியுடையது. உடலால் அன்னையை நினைப்பது கடினம். மனத்தில் அன்னை நினைவை நிலைநிறுத்தியபின், உணர்வைக் (vital) கவனித்தால், உணர்வு ஓயாமல் அசைந்துகொண்டே இருப்பதைக் காணலாம். விளையாடும் குழந்தையிடம் எதையும் சொல்வது சிரமம் என்பதுபோல், வேகமாக அசையும் உணர்விடம்எதையுமே சொல்ல முடியாது. அதை நிறுத்தி, அன்னையை நினைக்கும்படி சொல்வது எளிதல்ல. இது எவ்வளவு சிரமம் என அறிய உணர்வையே அன்னையை அழைக்கச் சொன்னால், அது முடியாது என எளிதில் காணலாம். அது முடிந்தால், க்ஷணத்தில் உடல் சக்தியால் நிரம்பி, யானை பலம் வருவது தெரியும். உடல் அதையும் தாண்டி இருளே உருவானது. உடலிடம் அன்னையைப் பற்றிச் சொல்ல மனம் முயன்றால், உடலைத் தொட்டவுடன், அதனிருளில் மனம் தன்னையே இழந்து திகைப்பதைக் காணலாம். இடையறாத அன்னை நினைவு பலிக்க வேண்டுமானால், உடலே அன்னையை நினைவுகூர வேண்டும். (Gross) ஸ்தூல உடலில்லாத தெய்வங்களால் இடையறாத நினைவு முடியாது எனத் துர்கா அன்னையிடம் கூறினார். இடையறாத அன்னை நினைவு ஸ்தூல உடலுக்குரியது. அது இருள் மயமானதெனினும் அதுவே சாதிக்க வல்லது. எனவே, உடல் அசைந்தால், அசைவுள்ள இடத்தில் உணர்வு எழுந்து மனத்தை அடையும்.

அதற்குப் பதிலாக, அசைவு எழுமுன் அங்கு அன்னையைக் கண்டால், அன்னை எழுந்து மனத்தையடைந்து, ஆன்மாவுக்குச் சென்று நினைவை நிலைப்படுத்துவார்.

உடல் அசையும்பொழுது அசையுமிடத்தில் அன்னையைக் காணுவது அவசியம்.

நம்முடலின் அசைவு நம்முள் எழுவது. உடலின் பகுதிகள் வேறு பொருளைத் தொட்டு, தொடு உணர்வு ஏற்பட்டாலும் சட்டம் இதுவே ஆகும்.

எந்தப் பொருளைத் தொட்டாலும், தொடுமுன் அதன்மீது அன்னையின் திருவுருவத்தைக் காண வேண்டும்.

காது ஒளியைக் கேட்டு மனத்தை அடைவதைப்போல், கண்

தான் கண்ட காட்சியை மனத்திற்கு எடுத்துச் செல்வதால்,கண்ணில் கண்ட காட்சிகள் மனத்தைத் தொடுமுன் அன்னையின் உருவம் மனத்தைத் தொட வேண்டும்.

நம் மனதில் எழும் எண்ணங்களை கட்டுப் படுத்திவதன் முக்கியத்துவம்: 

அதேபோல் எண்ணத்தைப் பற்றி முதல் சொல்லியதால்,ஓர் எண்ணம் தோன்றினால் அதை விலக்கி, அன்னை நினைவால் அதை மாற்ற வேண்டும்.

எண்ணம் தோன்றியபின் மின்னல் வேகத்தில் - மனோ வேகத்தில் - நகருவதால், தோன்றியபின் அதைக் கட்டுப்படுத்துவது இயலாது. எண்ணம் மனத்திற்குரியது; மனத்தில் தோன்றுகிறது. அன்னை நினைவு ஆன்மாவுக்குரியது; ஆன்மாவில் எழுவது. நாம் மனத்தில் விழிப்பாக இருப்பதால் எண்ணம் தோன்றுகிறது. ஆன்மா, எண்ணம் தோன்றும் மனத்தைவிடப் பெரியது; வலிமையானது. ஆன்மாவில் நாம் விழிப்பாக இருந்தால், மனம் அசைந்து எண்ணம் எழுமுன், ஆன்மா அசைந்து அன்னை நினைவு எழும். இந்த விழிப்பும் (உஷாரும்) அன்னை நினைவுக்கு அவசியம்.

எண்ணங்கள் தோன்றுமுன் அன்னை ஒளி ஆன்மாவிலிருந்து புறப்பட்டு மனத்தில் பளிச்சிட வேண்டும்.

ஐம்புலன்களை நாம் அறிவோம். எண்ணம், கவலை போன்றவை அவற்றைக் கடந்தவை. எண்ணம் மனத்திற்குரியது; கவலை உணர்வுக்குரியது. கவலை சகஜமாக எழும். எழுந்தமாத்திரம் உணர்வைக் கவ்விக்கொள்ளும். உணர்விலிருந்து மனத்தை எட்டி, கவலை நியாயமானது எனக் கூறும். மனம் அதை ஏற்றால், பிறகு கவலையை அழித்தல் கடினம். மனத்தைக் கட்டுப்படுத்துவதைவிட உணர்வைக் கட்டுப்படுத்துவது சிரமம். சிரமமாயினும் செய்வது அவசியம்.

ஒரு கவலை மனத்தில் எழுந்தால், வலிய அதை விலக்கி, அன்னையை அங்கு, இனி அக்கவலை எழாவண்ணம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

யோசனை என்பது பல எண்ணங்கள் சேர்ந்தது. இந்தக் காரியத்தைச் செய்யலாமா எனில், அதனுள் பல எண்ணங்கள் திரண்டிருக்கும். யோசிக்க ஆரம்பித்தால் எண்ணங்கள் செயல்படும். செயல்பட ஆரம்பித்த எண்ணங்கட்கு வலிமை அதிகம். வலிமை சேர்ந்தபின் அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம். அவற்றை மீறி அன்னை நினைவு எழாது. யோசித்து நாம் ஒரு முடிவுக்கு வருகிறோம். முடிவைச் செயல்படுத்தினால், பலன் வரும். அப்பலன் நம் முடிவையும், யோசனையையும் பொருத்தது. தினமும் நமக்குப் பல்வேறு யோசனைகள் எழுகின்றன. எனவே, அன்னை நினைவு யோசனையற்ற மற்ற நேரங்களுக்கேயுரியது எனத் தோன்றுகிறது. இந்த மனப்பான்மையுடன் அன்னை நினைவைப் பெறலாம். ஆனால் இடையறாது பெற முடியாது. இதை மாற்ற வேண்டும். யோசிக்கும் பொழுது யோசனையை நம்புகிறோம். அதை நம்பினால் பலன் யோசனையால் நிர்ணயிக்கப்படும். யோசிக்காமல் செயல்படுவதைவிட யோசனை மேல். யோசனையைவிட நம்பிக்கை உயர்ந்தது. நாம் யோசிப்பதற்குப் பதிலாக, நம் முடிவை விட உயர்ந்த அன்னை முடிவை நாடுதல் சிறப்பு. அன்னையை நினைவுகூர்ந்தால் நம்பிக்கை நம்மிடமிருந்து அன்னைக்கு மாறுகிறது. மாறியபின் செயல்படுவது அன்னை முடிவு. அது பெரியது. அதை நம்பினால், யோசனையை விலக்கி, அன்னையை நினைவுகூர வேண்டும்.

ஒரு யோசனை மனதில் தோன்றினால், இதை யோசிப்பதைவிட அன்னையை நினைப்பதால், யோசனையால் ஏற்படும் பலன் முழுவதும் ஏற்படும் என்று அன்னையை நினைக்க வேண்டும்.

நாம் செய்யும் காரியங்களை நாம் ஆரம்பிக்கிறோம்; செய்கிறோம். அதற்கு வரும் பலனைப் பெறுகிறோம். சமர்ப்பணம் செய்தால் அன்னையின் பலன் வருகிறது. அதைவிட உயர்ந்த நிலை

ஒன்றுண்டு. காரியத்தைப் பல பாகங்களாக்கி, ஒவ்வொரு பாகத்தையும் சமர்ப்பணம் செய்தால், காரியம் பெரிய அளவில் அன்னை பலனை அளிக்கும்.

ஒரு காரியம் செய்யும்பொழுது அதைப் பல பாகங்களாக்கி ஒவ்வொரு பாகத்தை நினைக்கும் முன்னும், மனம் அன்னையை நினைக்க வேண்டும்.

கடந்த கால நினைவு வந்தபடியிருக்கும். அவற்றுள் நல்லவை, கெட்டவை கலந்திருக்கும். நல்ல காரியங்கள் மனத்தைச் சந்தோஷப்படுத்தும். அந்நேரம் நாம் அன்னையை மனதால் நமஸ்காரம் செய்து, நன்றியுணர்வால் நிறைதல் நினைவை நிலைப்படுத்தும்.

நமக்கு நடந்த எந்த நல்ல காரியம் நினைவுக்கு வந்தாலும், உடனே அன்னையை மனதால் நமஸ்கரித்து, நெஞ்சால் நன்றியை உணர வேண்டும்.

கெட்டவை நினைவுக்கு வந்தால், மனம் வேதனைப்படுகிறது. வேதனைப்பட்டாலும், வருத்தப்பட்டாலும் நடந்தவை - கெட்டவை - வலுப்படும். நாம் எப்பொழுதும் உணர வேண்டிய ஒரேயுணர்வு சந்தோஷம். கெட்டவை நினைவு வந்தால் சந்தோஷம் எப்படி வரும்?

கெட்டவை பல காரணங்களுக்காக நடக்கின்றன.

1. பின்னால் வரக்கூடிய பெரிய கெட்டதைத் தவிர்க்க,

2. நம் மனம் உணர வேண்டியவைகளை உணர,

3. நம்மை விட்டு விலக்க வேண்டியவர்களை விலக்க,

என்பன போன்ற பல காரணங்களுக்காக அவை நடப்பதை நாம் அறிந்து, வருத்தப்படுவதையும், வேதனைப்படுவதையும் மாற்றி, நமக்கு ஏன் அவை நடந்தன எனப் புரியவில்லை; எனவே, வருத்தப்படுவதுசரியில்லை என்று முடிவு செய்தால் சரி. அப்படியும் அந்நிகழ்ச்சி மனத்தை விட்டகலவில்லைஎனில், அவற்றின் வரலாற்றைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

நமக்கு நடந்த எந்தக் கெட்டது நினைவு வந்தாலும் அந்நினைவைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

நமக்குப் பலர் பற்றிய நினைவுகள் வந்தபடியிருக்கின்றன. ஒருவரைப் பற்றி நினைத்தால் நினைவு அவ்வழியே பல நிகழ்ச்சிகளுக்கு ஓடுகிறது. ஓடியபின் அன்னை நினைவு விலகும். யாரையும் நினைப்பதைவிட, அன்னையை நினைப்பது மேல் என மனத்தை மனிதரிடமிருந்து அன்னைக்கு மாற்ற வேண்டும்.

யார் நினைவு வந்தாலும், அன்னையை நினைப்பது மேல் என நினைவை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எரிச்சல் பல விதம். கோபத்தை அடக்கினால் எரிச்சல் வகிறது. எரிச்சலை அடக்கினால் விரக்தி ஏற்படுகிறது. அதை விலக்க முயன்றால் படபடப்பு வருகிறது. Irritation, annoyance, irksomeness, pinpricks, tension, listlessness, impatiencence எரிச்சல், குத்தல், சலிப்பு, பொறுக்க முடியவில்லை எனப் பல உருவங்களில் எரிச்சலும், அதன் உருவங்களும் நம்மை நாடுகின்றன. இவை அன்னையை விட்டு விலகி அகலும் பாதைகள் என நாம் அறிய வேண்டும். அறிந்து, விலகி, அவற்றைச் சந்தோஷமாக மாற்ற வேண்டும்.

ஏதேனும் எரிச்சல் எழுந்தால், நாம் அன்னையை விட்டு விலகிப் போகிறோம் என அறிந்து, மனத்தின் திசையை மாற்றி, எரிச்சலை அடக்கி, அழித்து, கூடுமானவரை அதைச் சந்தோஷமாக மாற்ற வேண்டும்.

நமக்குப் பழக்கமில்லாத புதிய சூழ்நிலைகள் ஏற்பட்டால், நாம் யோசிக்கிறோம்; பிறரைக் கலந்து ஆலோசிக்கிறோம். அவை நல்லவை. அன்னை இதைப் பற்றி ஏதேனும் சொல்யிருக்கிறாரா என அறிய முயல வேண்டும். அன்னை இது போன்ற காரியங்களை எப்படிச் செய்வார் என நினைக்க வேண்டும். இடையறாத அன்னை நினைவுக்குப் பெருந்துணை இது. . ஒரு காரியத்தை மேற்கொள்ளுமுன், அன்னை இதைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார், அவர் இதை எப்படிச் செய்வார் எனக் கருத வேண்டும்.

பாசம் இயல்பாக எழுகிறது. பிரியம் சில சமயம் உதயம் ஆகிறது. ஆசைக்கு எப்பொழுதும் அலுவலுண்டு. வேலையில் ஆர்வம் திறமையுள்ளவர்க்குண்டு. வேகம், ஆவேசம், தீவிரம் மனதுள் எழும் நேரமுண்டு. அன்னையை ஏற்றுக்கொண்ட பின் ஆர்வம் அன்னையை மட்டும் நாட வேண்டும். எனவே, மேற்சொன்ன உணர்வுகளை அன்னை மீது ஆர்வமாக மாற்ற வேண்டும். எப்படி? குழந்தை மீது பாசம், மனைவி மீது பிரியம், துணி மீது ஆசை, வேலையில் ஆர்வம் எழும்பொழுது, இவற்றை அனுமதித்தால் நாம் மனிதனாக இருக்கிறோம். நாம் அனுமதிக்கக் கூடியது அன்னை ஆர்வமே என உணர்வு மையத்திலிருந்து - பாசம் போன்றவை எழுமிடம் - ஆன்மாவுக்குச் சென்று ஆர்வத்தை எழுப்ப வேண்டும்.

பாசம், பிரியம், ஆசை, வேலையில் ஆர்வம், வேகம், தீவிரம் மனதுள் எழுந்தால், அவற்றை aspiration ஆன்மீக ஆர்வமாக மாற்ற வேண்டும்.
செய்திகள் கவலையைத் தாங்கி வருகின்றன. சில ஏக்கத்தைக் கிளப்புகின்றன. மற்றவை மனத்தில் பாரமாகின்றன. சில உற்சாகத்தைக் கொடுக்கின்றன. நல்ல உற்சாகமானாலும், கெட்ட கவலையானாலும், இவை அனுமதிக்கப்படக்கூடியவையல்ல. சந்தோஷம், சுகம், ஆர்வம் ஆகியவை அனுமதிக்கப்படக்கூடியவை என அறிந்து, அவற்றை மாற்ற முயல வேண்டும்

ஒரு செய்தி கேட்டுக் கவலை, ஏக்கம், பாரம், உற்சாகம் எழுந்தால், இவற்றை எல்லாம் அனுமதிக்கக்கூடாது; பதிலாக அன்னை நினைவு, சந்தோஷம், சுகம், ஆர்வத்தை எழுப்பவேண்டும் என அறியவேண்டும்.

நாம் செய்தவற்றில் குறையானவையுண்டு. அவை நினைவு வரலாம். வந்தால் மனம் குறைபடும், கவலைப்படும். அதற்குப் பதிலாக, ஏன் காரியம் குறையாக நின்றது எனச் சிந்தித்தால், நம் நம்பிக்கை குறையாக இருப்பதால், காரியம் குறையாக நின்றுவிட்டது எனப் புரியவேண்டும்.

குறையான காரியங்கள் நினைவு வரும்பொழுது, கவலை ஏற்பட்டால் நம்பிக்கை குறையாக இருக்கிறது என அறிந்து, அன்னை நினைவை நம்பிக்கை வளரும் வகையில் கொண்டுவர வேண்டும்.

கோபம் வந்தபடி இருக்கும். அதேபோல் பிரியம் எழுந்தபடி இருக்கும். கோபம் பொல்லாதது; பிரியம் நல்லது. நாம் எக்காரணத்திற்காகக் கோபப்பட்டாலும், யார் மீது கோபப்பட்டாலும், நஷ்டம் நமக்கு என்ற தெளிவிருந்தால், கோபம் தணியும். தணிந்த கோபம் தணலாக நிற்கும். அன்னை நினைவு குளிர்ந்த தென்றல். அன்னையை நினைத்தால் தணிந்த கோபம் குளிர்ந்தடங்கும். கோபம் இருக்கும்வரை அன்னை நினைவு நிலைக்காது என்பதால், கோபம் எழும்பொழுது, அன்னையை நினைவுபடுத்துதல் நலம். பிரியம் நல்லது; கோபத்தைப்போல் பொல்லாததல்ல. ஆனால், யார் மீது பிரியம் எழுகிறதோ, எது மீது பிரியம் எழுகிறதோ, அதை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். பிரியம் வளர்ந்தால், அப்பொருளோடு நாம் ஐக்கியமடைய வேண்டிவரும். இது அன்னையை நினைக்கவோ, அடையவோ, இடையறாது நினைக்கவோ பயன்படாது.

யார் மீது கோபம், பிரியம் வந்தாலும், அதைவிட அன்னை நினைவு சிறப்பு என அதை நினைக்க வேண்டும்.

மனம் பக்குவப்படவில்லை எனப் பொருள். மனம் பக்குவப்பட பல வழிகள் உள. அவற்றுள் சிறந்தது அன்னையை நினைப்பது. அதைவிடச் சிறந்தது, பழிவாங்கும் எண்ணத்தையும், அதனுடன் சேர்ந்த நிகழ்ச்சிகளையும் சமர்ப்பணம் செய்து, பிறகு அன்னையை நினைப்பதாகும்.

கடந்தகாலப் பழிவாங்கும் நினைவுகள் எழுந்தால், நாம் அன்னையை நெருங்க முடியாத தூரத்தில் உள்ளோம் எனப் புரிந்து, பழிவாங்கும் நினைவை அன்னை நினைவால் மாற்ற வேண்டும்.

இடையறாத நினைவு சித்தியாகும். அது சித்தித்தால் அடுத்த கட்டத்தில் இடையறாத தரிசனம் சித்திக்கும். அதன் விளைவாக பரமாத்மா, பிரபஞ்சத்தின் ஆன்மா, ஜீவாத்மா தரிசனம் கிடைக்கும். சர்வம் பிரம்மம் என்பதை ரிஷிகள் கண்டபின், கீதையே முதன்முதலாக இம்மூன்று புருஷர்களையும் பிரித்துத் தத்துவத்தை விளக்கியதாகப் பகவான் எழுதுகிறார். ஆத்ம தரிசனம் மோட்சம். பரமாத்மாவை ஜீவாத்மா ஒன்றி, பரமாத்மாவை அடைவது பூரணயோக சித்தி, அதற்கு அடிப்படை இடையறாத தரிசனம். அதற்கு முன் நிலை இடையறாத அன்னை நினைவு.

No comments:

Post a Comment

Followers