வருமானத்தை உயர்த்த நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான அன்னையின் முறைகள்
- Sri Karmayogi Avarkal
எந்த வயதிலும் நாம் பெறும் வருமானத்தை உயர்த்த முடியுமா? அன்னை அன்பர்கட்குச் சிறப்பான வழியேதும் உண்டா? என்ற இரு கேள்விகளை எழுப்பி, நாம் பாடகரானாலும், பள்ளி ஆசிரியரானாலும், மார்க்கட்டில் கமிஷன் ஏஜெண்டானாலும் வியாபாரியானாலும், மேற் சொன்னவகைகளில் நாம் ஓர் அளவுக்கு வாழ்க்கையை அமைத்துக்கொண்டோம். அதன் பலன் சம்பளம் 7000 வருகிறது என்பவர் ஒருவர். கச்சேரிகளில் மாதம் 50,000 ரூபாய் வருகிறது என்பவர் மற்றொருவர். மாதம் 80,000 ரூபாய் சம்பாதித்த என் கடை தற்சமயம் அதில் பாதியை சம்பாதிக்கிறது என்பவர் அடுத்தவர்.
இவர்கள் வருமானம் உயர வழியுண்டா? அன்னையின் பங்கு என்ன?
அன்பர் செய்யக் கூடியதென்ன?
வருமானத்தை உயர்த்த விரும்புபவர் தங்கள் துறைகளில் உள்ள வாய்ப்பை மட்டும் அறிவர். வேறு வாய்ப்புகளைத் தங்களுக்கில்லை என நினைப்பார்கள். வாய்ப்பு நம்மைத் தேடிவந்தால் அது நமக்குரியது. விழிப்பாக இருந்து, risk எடுத்து வாய்ப்பை ஏற்றுப் பலன் பெற முன்வருபவர்கட்கு அபரிமிதமான பலன் வரும்.
வருமானம் உயரவேண்டும் என்பவர் தம் வேலைகளை நினைத்துப் பார்த்தால், 10 இடங்களிலாவது தம் ஆர்வத்தை உயர்த்த முடியும் என்று காண்பார். அதைச் செய்தால் உடன்பலன் உண்டு. மனம் வருமானத்திலிருக்கும். எப்படி அதிகமாக உழைக்கலாம் என்பது தோன்றாது. வருமானத்தை விட்டு, உழைப்பை மனம் நாடினால் பலன் உண்டு. இந்த ஒரு விஷயத்தை மட்டும் முழுவதும் சரி செய்தவர் வருமானம் தவறாது இருமடங்காகும்.
ஆபீசில் சம்பளத்திற்கு வேலை செய்பவர் எனக்கெப்படி அதிக வருமானம் வரும் என நினைப்பார். பொதுவாக ஆபீஸ் வேலையை 50% உண்மையுடன் செய்கிறோம். 100% உண்மையுடன் செய்தால், பலன் ஆபீஸ் மூலமாக வரும். தவறினால், தவறாது வேறு வழியாக வரும். உண்மைக்குப் பலன் உண்டு. நம் சொந்த அனுபவத்தில் பலரை நாம் நினைவு படுத்த முடியும். அன்பர்கட்குப் பலன் அபரிமிதமாக உண்டு. சந்தேகமுள்ளவர் செய்து பார்த்தால் அறிவார். ஆபீஸ் வேலையை மட்டுமல்ல, சொந்த வேலையையே 50% ஆர்வத்துடன் செய்பவர் பலர்.
பொதுவாக வாழ்வின் அம்சங்கள் பல. வருமானத்தை உயர்த்த அவை பயன்படும். வருமானத்திற்கும் அவற்றிற்கும் உள்ள தொடர்புகளை நாம் அறிவதில்லை. சுத்தம், பேச்சு, கணக்கு, தொடர்பு, (correspondence between two events) காலம், punctuality, importance of records போன்றவை வருமானத்தை உயர்த்தப் பயன்படும்.
மேற்சொன்னவை மொத்தம் 12 அம்சங்கள். ஒவ்வோர் அம்சமும் 10 levels ஆகப் பிரிகின்றன. இந்தப் 12 அம்சங்களிலும் 1 level உயர்ந்தால் வருமானம் இருமடங்காகும். 3ஆம் levelஐ 12 அம்சங்களிலும் எட்டி, நாலாம் levelஐயும் அடைய முயலும் பொழுது வருமானம் 10 மடங்கை எட்டும். எட்டியபின் வருமானம் அங்கே நின்று நிலை பெற முயன்று வெற்றி பெற வேண்டும். முயற்சி அதிகம் தேவை. முயல முன்வருபவர்கட்குப் பலன் நிச்சயம். வழி தெரியாதவர் தெரிந்து பலனடையலாம். முறைகளைப் பின்பற்றாமல் பலன் வாராது. இவற்றை விரிவாகக் கருதுமுன் சில பொதுவான கருத்துகளைக் காண்போம்.
1) சுத்தம் 2) பேச்சு 3) கணக்கு 4) காலம் 5) punctuality 6) human relationship 7) குணம் 8) திட்டமிடுதல் 9) energy 10) silent will 11) efficiency 12) initiative ஆகிய 12 அம்சங்களை எடுத்து ஒவ்வொன்றையும் 10 levelகளாகப் பிரித்து எல்லாவற்றிலும் இரண்டாம் நிலையை அடைய முயல்பவர் வருமானம் இருமடங்காகும். இங்கு ஒவ்வொன்றிலும் 4 நிலைகளைக் கூறுகிறோம். 4ஆம் நிலையை எல்லா அம்சங்களிலும் அடைய முயன்றால் வருமானம் 10 மடங்காகும். நிச்சயமாக இருமடங்காகும்.
இப்பயிற்சியை ஆரம்பிக்கு முன் இப்பலன்கட்கு எதிரான குணங்கள், பழக்கங்கள், சுபாவமிருந்தால், அவற்றை அகற்ற முயலவேண்டும். அவற்றை அறவே அகற்றாமல் இம்முறைகள் பலன் தாராது.
சுத்தம்
பேச்சு
கணக்கு
காலம்
Punctuality
Human relationship
குணம்
Planning
Energy
Silent will
Efficiency
Initiative
மேற்சொன்னவை வருமானத்தை 10 மடங்காக்கப் போதும். தனிமனிதனானாலும், வியாபாரமானாலும் சட்டம் ஒன்றே. மீண்டும் சில கருத்துகளை வலியுறுத்துகிறேன்.
எந்த மனிதனும் தானே முனைந்தால் எந்தக் காரியங்களையும் அவனால் செய்யமுடியும்.
அவற்றுள் பணம் சம்பாதிப்பதுவே மிக எளியது. நல்லவன் எனப் பெயர் எடுப்பது மிகக் கடினம்.
சம்பாதிப்பதற்கு உழைப்பு அத்தியாவசியம். உழைப்பை விரும்பும் மனம் எந்த அளவு பணமும் சம்பாதிக்கும்.
"நான்" என்பது எந்த அளவுக்கு விலகுகிறதோ அந்தஅளவுக்குப் பணம் எளிதில் வரும்.
குறுக்கு வழிகளை மனம் தேடினால், அவர் குட்டையில் விழுவார்.
சம்பாதிக்கத் தேவையான எனர்ஜி முழுவதும் நம்குணங்களில் புதைந்துள்ளது.
நம்மை நாம் அறிவது வருமானத்தைப் பெருக்க உதவும்.
மேற்சொன்னவை எதுவும் இல்லாமல் அன்னை மீது நம்பிக்கை மட்டும் ஆழமாக இருந்து வேலையை முன் போல் செய்தால் வருமானம் இருமடங்காகும். சில சமயங்களில் 10 மடங்காகி பிறகு இறங்குவதும் ஏறுவதுமாக இருக்கும்.
மேற்சொன்ன முறைகளை அன்னையை முன்னே வைத்து Mother First எனச் செய்தால் 12 அம்சங்களில் முதல் நிலையை எட்டினால் வருமானம் 10 மடங்காகும். 70,000 தினமும் வியாபாரமான கடையில் இம்முறைகள் பின்பற்ற எடுத்துக் கொண்டபொழுது 1,68,000 ஆகவும், 2,72,000 ரூபாயாகவும், 7,20,000 ரூபாயாகவும், 10,000,00மாகவும் தினசரி சேல்ஸ் 4 மாத காலத்தில் உயர்ந்தது. ஒரு சில நாள் வியாபாரம் அது. சராசரியில் 2 இலட்சமாக அது விற்கிறது. அக்கடையில் சுத்தம் கூட இன்னும் நிலையாக முதல் நிலையில் ஏற்படவில்லை. முடிந்ததை முடிந்தபொழுது ஆர்வமாகச் செய்ததில் வந்த ஒரு சில பலன்கள் இவை.
அன்னை மட்டும் வருமானத்தை இருமடங்காக்குவார்.
முறைகள் மட்டும் வருமானத்தை இருமடங்காக்கும்.
அன்னையும் முறைகளும் வருமானத்தை 10மடங்காக்கும்.

- இன்று நம் வீடுகள் உள்ள நிலை, தரையைப்பெருக்குவது.
- ஒட்டடை, அலமாரி அடியில், ஸ்டோர் ரூமில் வாரம்தோறும் சுத்தம் செய்வது.
- வெள்ளையடிப்பது, பெயிண்ட் அடிப்பது, அலமாரியுள்ளே துடைப்பது ஆகியவற்றை வாரம்தோறும் செய்வது.
- பொருள்களை அழகாக அடுக்கித் துடைத்து வைப்பது.
பேச்சு
- நம் பேச்சின் அளவையும் ஒலியையும் முடிந்தவரை குறைப்பது.
- நம் பேச்சை எழுதிப்பார்த்து 2000 சொற்களிலுள்ள கருத்தை 200 சொற்களில் சொல்ல பயில்வது.
- அடுத்தவருக்குக் கேட்கும் அளவுக்கே தொனி எழப்பயில்வது.
- அனாவசியமான பேச்சு 90% இருப்பதை அறிந்து விலக்குவது.
கணக்கு
- நாள் தவறாமல் கணக்கெழுதாமல் படுக்கப் போவதில்லை.
- வருஷக் கணக்கை எழுதி, அனாவசியச் செலவை அறவே விலக்குவது.
- நாம் கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுத்து, வரவேண்டியதை தவறாமல் வசூல் செய்வது.
- சுமார் 40% நம் செலவு குறைவதைக் கணக்கு நமக்கு உணர்த்தும் வரை கணக்கையும், வாழ்க்கையையும் ஒத்திட்டுப் பார்த்து சிந்திப்பது.
காலம்
- நம் செயல்களைக் கவனித்துப் பொதுவாக நாம் 50% அதிக நேரம் எந்தக் காரியத்திலும் செலவிடுதலைஅறிவது.
- நம் முக்கியச் செயல்கள் எவ்வளவு நேரமாகிறது எனக்கணக்கிட்டுப் பார்த்தால், அதற்கு standard ஏற்படுத்தினால் நம் முக்கியமான காரியங்களை 1/3 நேரத்தில் முடிக்கலாம் என அறிந்து, அப்படி மாற்றுவது.
- சில்லரைச் செயல்கள் 100% அதிக நேரம் எடுப்பதைக் கண்டு தவறாமல் அவற்றிற்குரிய நேரத்தைப் பாதியாகக்குறைப்பது.
- We must become time conscious. நமக்குச் செய்ததை வீட்டிலுள்ளவர்கட்குச் செய்து பார்த்து, அவர்களிடம் சொல்லாமல் அவ்விரயத்தைத் தவிர்க்க முயலுவது.
Punctuality
- வீட்டைவிட்டு வெளியே போவது, திரும்பி வருவது ஆகிய இரண்டையும் punctual ஆகச் செய்வது.
- முக்கியக் காரியங்களை punctual ஆக செய்வது.
- முக்கியமில்லாத சிறு காரியங்களை punctual ஆகச் செய்வது.
- முக்கியமானவை, இல்லாதவை இரண்டையும், பெரும்பாலும் punctual ஆகச் செய்வது.
Human relationship
- நம்மைச் சோர்வடையச் செய்யும் தேவையில்லாத உறவுகளை அகற்றுவது.
- நம்மை உற்சாகப்படுத்தும் முக்கிய உறவுகளைப் புரிந்துகொண்டு நல்ல முறையில் பயன்படுத்துவது.
- சோர்வடையச் செய்யும் அவசியமான உறவுகளை உற்சாகப்படுத்தும் உறவுகளாக மாற்றக் கற்றுக்கொள்வது.
- நம் வேலையில் எந்த உறவும் உற்சாகம் மட்டும் தரும் உறவாக மாற்றி அமைக்கக் கற்றுக் கொள்ளுவது.
குணம்
- கோபம், எரிச்சல், பொறாமை, inferiority complex போன்ற negative குணங்களை வருமானம் சம்பந்தப்பட்ட இடங்களில் அறவே விலக்குவது.
- நம்மிடம் உள்ள பெருந்தன்மை, உதவி மனப்பான்மை, நாணயம், நல்லெண்ணம் போன்ற எல்லா உயர்ந்தகுணங்களும் வருமானம் சம்பந்தப்பட்ட எல்லா இடங்களிலும் அதிகமாக வெளிப்படச் செய்வது.
- கெட்ட குணங்கள் பிறரிடம் கண்டால், react செய்யாமலிருப்பது.
- பிறரிடம் காணும் கெட்ட குணங்கள் நம் குணங்களின் பிரதிபலிப்பு என ஏற்பது.
Planning
- வேலையைத் திட்டமிட்டுச் செய்தல்.
- ஒரு வருஷத்திற்கு வேலையைத் திட்டமிட்டு, சென்ற வருஷத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து வித்தியாசத்தை அறிதல்.
- வேலையைப் பல பாகங்களாகப் பிரித்து ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் திட்டமிடுதல்.
- வேலையை நேரம், இடம் நோக்கில் திட்டமிட்டுப் பயனடைதல்.
Energy
- எனர்ஜி விரயமாகும் அனைத்தையும் உடனே நிறுத்துவது.
- எனர்ஜி அதிகமாகும் அனைத்தையும் வருமானத்திற்குப் பயன்படுத்துவது.
- விரயமாகும் எனர்ஜியை மாற்றி அதிகமாக்க அறிவது.
- நம் சுபாவத்தில் எனர்ஜி விரயமாகும் இடங்களை வருமானத்திலிருந்து பிரிப்பது.
Silent will
- கேட்டுப் பெறும் பழக்கத்தைக் கைவிடுதல்.
- உரிமைகளைக் கேட்பதை நிறுத்துவது.
- கேட்க நினைப்பதையும் மறப்பது.
- சிறு உரிமைகளையும் அதுபோல் கேட்க நினைப்பதையும் மறுப்பது.
Efficiency
- திறமைக் குறைவானவற்றைத் திறமையாக்குவது.
- திறமையான செயல்களில் 50% திறமையை உயர்த்துவது.
- திறமையான செயல்களில் 75% திறமையை உயர்த்துவது.
- 100% உயர்த்துவது.
Initiative
- நாமே initiative எடுக்கும் இடங்களில் நிர்ப்பந்தம் இல்லாத இடங்களில் initiativeவை நிறுத்துவது.
- நிர்ப்பந்தம் உள்ள இடங்களில் முக்கியமில்லாத இடங்களில் initiativeயை கைவிடுவது.
- எல்லா இடங்களிலும் கைவிடுவது.
- மனத்தாலும் initiative எடுக்காதிருப்பது.
மேற்சொன்னவை வருமானத்தை 10 மடங்காக்கப் போதும். தனிமனிதனானாலும், வியாபாரமானாலும் சட்டம் ஒன்றே. மீண்டும் சில கருத்துகளை வலியுறுத்துகிறேன்.
எந்த மனிதனும் தானே முனைந்தால் எந்தக் காரியங்களையும் அவனால் செய்யமுடியும்.
அவற்றுள் பணம் சம்பாதிப்பதுவே மிக எளியது. நல்லவன் எனப் பெயர் எடுப்பது மிகக் கடினம்.
சம்பாதிப்பதற்கு உழைப்பு அத்தியாவசியம். உழைப்பை விரும்பும் மனம் எந்த அளவு பணமும் சம்பாதிக்கும்.
"நான்" என்பது எந்த அளவுக்கு விலகுகிறதோ அந்தஅளவுக்குப் பணம் எளிதில் வரும்.
குறுக்கு வழிகளை மனம் தேடினால், அவர் குட்டையில் விழுவார்.
சம்பாதிக்கத் தேவையான எனர்ஜி முழுவதும் நம்குணங்களில் புதைந்துள்ளது.
நம்மை நாம் அறிவது வருமானத்தைப் பெருக்க உதவும்.
மேற்சொன்னவை எதுவும் இல்லாமல் அன்னை மீது நம்பிக்கை மட்டும் ஆழமாக இருந்து வேலையை முன் போல் செய்தால் வருமானம் இருமடங்காகும். சில சமயங்களில் 10 மடங்காகி பிறகு இறங்குவதும் ஏறுவதுமாக இருக்கும்.
மேற்சொன்ன முறைகளை அன்னையை முன்னே வைத்து Mother First எனச் செய்தால் 12 அம்சங்களில் முதல் நிலையை எட்டினால் வருமானம் 10 மடங்காகும். 70,000 தினமும் வியாபாரமான கடையில் இம்முறைகள் பின்பற்ற எடுத்துக் கொண்டபொழுது 1,68,000 ஆகவும், 2,72,000 ரூபாயாகவும், 7,20,000 ரூபாயாகவும், 10,000,00மாகவும் தினசரி சேல்ஸ் 4 மாத காலத்தில் உயர்ந்தது. ஒரு சில நாள் வியாபாரம் அது. சராசரியில் 2 இலட்சமாக அது விற்கிறது. அக்கடையில் சுத்தம் கூட இன்னும் நிலையாக முதல் நிலையில் ஏற்படவில்லை. முடிந்ததை முடிந்தபொழுது ஆர்வமாகச் செய்ததில் வந்த ஒரு சில பலன்கள் இவை.
அன்னை மட்டும் வருமானத்தை இருமடங்காக்குவார்.
முறைகள் மட்டும் வருமானத்தை இருமடங்காக்கும்.
அன்னையும் முறைகளும் வருமானத்தை 10மடங்காக்கும்.
No comments:
Post a Comment