Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Thursday, September 20, 2012

Offering - பிரச்சனைகள் தீர்வதில், காணிக்கையின் முக்கியத்துவம் - Message of the Day -Sep 20, 2012



  

 காணிக்கை

காணிக்கையின் முக்கியத்துவம் 



உண்மையான பக்தியுடன் நீ சமர்ப்பிக்கும் ஒவ்வொரு சிறிய பொருளும் உன் முழுச் சொத்துகளையும் சமர்ப்பிப்பதற்கு ஒப்பாகும்!” 
என்று கூறுகின்ற பரம்பொருளாகிய இறைவன், மேலும் சொல்வார்: “அது போன்ற பக்தியுடன் நீ உன் இஷ்ட தெய்வத்திற்குச் செய்யும் சமர்ப்பணத்தையும் நானே பெற்றுக் கொள்கின்றேன். அது மட்டுமன்று; நீ எந்தத் தெய்வத்திற்கு உன்னை உண்மையுடன் சமர்ப்பணம் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்வதும் நானே”. இன்னும் விளக்கமாகக் கூறுவதாக இருந்தால், மனத்தில் உள்ள பக்தியும், ஆர்வமும் முழுமையாகவும், தூய்மையாகவும் இருந்தால், தெய்வத்திற்குச் செய்யும் அர்ச்சனை மட்டுமில்லை; மற்ற மனிதர்களுக்குச் செய்யும் சேவையும் முடிவில் பரம்பொருளைச் சென்று அடைகின்றது.


இழந்த பார்வையைத் திரும்ப வேண்டுபவன் பார்வையைப் பெற்றபிறகு, தங்கத்திலோ, வெள்ளியிலோ கண் செய்து காணிக்கை செலுத்துகின்றான். கோயில்களில் அர்ச்சனை செய்யும்பொழுது தேங்காய் உடைப்பது வழக்கம். எப்படி ஒவ்வொரு மலருக்கும் ஒரு சிறப்புத் தன்மை இருக்கின்றதோ, அது போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனித் தன்மை உண்டு.


பிரச்சினைகள் தீர வேண்டும் என்று பிரார்த்திப்பவர் பொருளைக் காணிக்கையாக அளிப்பது வழக்கம். இந்த வழக்கம் எல்லா மதங்களிலும் உள்ள மக்களிடமும் இருக்கின்றது. அது அன்னையிடமும் பொருந்தும். ஆத்ம சிலாக்கியத்தை மட்டும் விழையும் அன்பர்கள் மலர், பத்ரம் (இலை), பழம் முதலியவற்றைக் கொடுப்பார்கள். இவ்வாறாக தெய்வ வழிபாட்டில் ஏதேனும் ஓர் உருவத்தில் காணிக்கை இடம் பெறுகின்றது.

முதியவரான வீரசைவ பிரம்மச்சாரி ஒருவர் அன்னையைத் தரிசிக்க வந்தார். ஆசிரமத்தில் அவருக்கு மேற்கூறிய விளக்கம் தெரிவிக்கப்பட்டது. “அன்னைக்குக் காணிக்கை அளித்தால், அது உங்களுக்குப் பெரிய நன்மையைத் தேடித்தரும்” என்று அவரிடம் கூறப்பட்டது. அவரோ, “நான் காணிக்கை செலுத்தப் போவதில்லை. எனக்குப் பொருள் இலாபம் வேண்டாம். அன்னையின் ஆசீர்வாதம் மட்டும்தான் தேவை” என்று கூறி, அன்னைக்கு மலர்க் காணிக்கையைச் செலுத்தி, அன்னையின் ஆசீர்வாதத்தைப் பெற்றதோடு ஆத்ம விளக்கமும் பெற்றார்.


அவர் ஒரு தொழில் அதிபர். 30 ஆண்டு காலமாகத் தொழில் செய்து வந்தும் பெரிய வளர்ச்சி எதுவும் இல்லை. ஆனால், அன்னையைத் தரிசனம் செய்தபிறகு அவருடைய தொழில் நிலை முற்றிலும் மாறிவிட்டது. இந்த முப்பதாண்டு காலத்தில் கிடைத்த ஆர்டர்களைவிட இந்த ஓராண்டு காலத்தில் ஆர்டர்கள் அதிகமாகக் கிடைத்தன. அதாவது தொழில் 30 மடங்கு உயர்ந்தது. என்றாலும் வருமானம் மட்டும் உயரவில்லை. பழைய வருமானமே நீடித்தது.


அதற்கு என்ன காரணம்? சிந்தித்தார். முன்பு அன்னையைத் தரிசிக்கச் சென்ற சமயத்தில், ‘நான் காணிக்கை செலுத்தப் போவதில்லை. எனக்குப் பொருள் இலாபம் வேண்டாம். அன்னையின் ஆசீர்வாதம் மட்டும்தான் தேவை’ என்று, தாம் கூறியது அவருக்கு நினைவு வந்தது. அவர் விரும்பியது போலவே அன்னையின் ஆசீர்வாதம் கிடைத்தது. ஆர்டர்களும் 30 மடங்கு பெருகின. ‘பொருள் இலாபம் வேண்டாம்’ என்றார். அதனால் இலாபம் கிடைக்காமல் போயிற்று. அவர் தம் தவற்றை உணர்ந்து அன்னையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு காணிக்கை செலுத்தினார். மூன்றே மாதங்களில் 30 ஆண்டு கால வருமானத்தைப் பெற்றார்.


வழிபாட்டில் காணிக்கைக்குள்ள முக்கிய இடத்தைச் சுட்டிக் காட்டும் நிகழ்ச்சியாக அது விளங்குகிறது.

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam
               






No comments:

Post a Comment

Followers