ஆன்மாவை (அன்னையை )அழைத்தல்
ஆன்மாவை அழைப்பது சக்தி வாய்ந்தது. ஆன்மாவை "அன்னை" என்று அழைப்பதாலேயே அதில் எல்லாமே அடங்கி விடுகிறது. அது அதிக சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.
ஆன்மாவை அழைப்பதில் பல வழிகள் உள்ளன. அதன் சாராம்சம் எல்லாம் ஒன்றே தான்.
- நமக்கு மேல்மனமும் ஆழ்மனமும் உள்ளது. நாம் நமது பிரச்சனைகளைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தால், நாம் மேல்மனதில் இருக்கிறோம் என்பதைக் குறிக்கும். மேல்மனதிலிருந்து விலகிப் போக வேண்டுமென்றால், நாம் அந்தப் பிரச்சனையை மறக்க வேண்டும். அல்லது அதைப் பற்றிய தீவிர நினைவு இல்லாமல் இருக்க வேண்டும். இப்பொழுது, பிரச்சனை நம் பர்சனாலிட்டியின் ஆழத்திற்குச் சென்று அங்கு ஒரு இனம்புரியாத கவலையை உண்டு பண்ணுகிறது. பிரச்சனையின் ஆழத்திலிருந்து உன்னால் விலக முடியவில்லையென்றால், அன்னையை அழைக்கவும். அன்னையை தினமும் சில நாட்களுக்கு, மணிக்கு ஒரு முறை அழைத்தால், பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அதிகபட்சமாக மூன்று நாட்கள் பிரார்த்தனையில், எந்த ஒரு பிரச்சனையும் தீர்க்கப்பட்டுவிடும்.
- மனிதனின் முயற்சி தீர்ந்ததும், அன்னை (ஆன்மா) செயல்படுகிறார். ஒருவர் தன்னால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் எடுத்துத் தீர்க்க வேண்டும். ஆன்மா உடனே செயல்பட ஆரம்பிக்கும். கடைசி முயற்சியையும் எடுத்துத் தீர்க்க வேண்டும்.
- நாம் இப்பொழுது செய்வதை விட, திறம்பட செயல்பட்டால், அது அன்னையை அழைப்பதற்குச் சமமாகும். உதாரணமாக, மெதுவாக நடைபெற்றுவரும் வேலையில் அக்கறை காட்டுவது, ஒழுங்குமுறையைப் பின்பற்றாத இடத்தில், வேலையில் ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்தல், சிந்தனையற்ற வேலையில், சிந்தனையைச் செலுத்தி செயல்படுவது, போன்றவைகளாகும்.
- தினமும் மணிக்கு ஒரு முறை அன்னையை நினைவு கூர்வதை சில நாட்களுக்குத் தொடர வேண்டும்.
- மணிக்கொருமுறை பிரார்த்தனை செய்வதை, சரியாக மணி அடிக்கும் நேரத்தில், அன்னையை நினைப்பதை ஓரிரண்டு நாட்கள் தவறாமல், கடைப்பிடிக்க வேண்டும்.
- வீட்டை அதிக சுத்தமாக வைத்திருத்தல், தாழ்ந்த குரலில் பேசுவது, வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ சண்டை போடுவதைத் தவிர்ப்பது, அன்றாடம் கணக்குகளை சரியாக எழுதுவது போன்றவைகளை கடைப்பிடித்தல் வேண்டும்.
- நாம் கையினால் செய்யும் வேலையை எண்ணத்தினால் செய்யலாம் என்பது போல் நம் வாழ்வின் மையத்தை வெளியிலிருந்து உள்ளுறை ஆன்மாவிற்கு மாற்ற வேண்டும்.
- எந்த வேலையையும் செய்ய ஆரம்பிக்கும் முன் அன்னையை நினைவு கூர்தல் வேண்டும். சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
- பிரார்த்தனையைத் தொடர வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Invocation of Spirit
For over a year I have been writing in this column about invoking the Spirit. But every letter I receive asks how to invoke the Spirit. I wrote a long article on it and sent it to the questioners. Many caught the idea. Many more are still in doubt. When you want to go to the post office, you walk. It is an act of the body. Negotiations are conducted at the level of feelings. It is a vital act. Sometime when you don't understand something, you close the book and think. It is a mental act of thinking. Spirit is of Silence. When you want to invoke the Spirit, sit down, close your eyes -- it may not be necessary -- stop moving the body, don't talk, DON'T THINK. A stillness descends on the mind. The stillness grows into a QUIET, a calm, and finally becomes SILENCE. Silence is an aspect of the Spirit.
As Silence is one aspect of the Spirit, Peace, Unity, Truth, Knowledge, Power, Beauty, Love, Joy, Infinity and Eternity are also aspects of Spirit. As soon as Silence descends, a great power develops. You feel like getting up and running. When Peace enters you, you see it is full of energy. Light entering the mind answers unresolved question. Beauty makes you lose yourself. Joy thrills. Love fills the heart. In practice ONLY one aspect enters you. Most people cannot keep quiet. They jump up and act. That is the end of it.
Human problems are very simple to the Spirit. For someone at the age of 41, employment is very important. If only he can SIT quiet for half an hour a day, before long he will find an employment. What I call invocation of Spirit is of greater value. Once some aspect of Spirit descends, one has to be extraordinarily PATIENT till many other aspects also descend on him. At a certain moment, the inner strength becomes sufficient to raise a voice. That voice is the inner human voice, calling the Spirit or the Mother who is the Mother of Spirit. That call releases a spiritual peace, unattainable even in death. It enters the nerves, fills the cells of the body, i.e. the very Being. After such a call is saturated, the inner Spirit itself begins to call the outer Spirit. It is Jivatma calling Paramatma. It is the Individual becoming the Eternal. Man, at that moment, ceases to be a MAN. He becomes the Divine.
Source : Karmayogi.net
No comments:
Post a Comment