யோக வாழ்க்கை விளக்கம் - திரு. கர்மயோகி அவர்கள்
களைப்பு மேலிட்டபொழுது, நாம் தூங்கும்பொழுது, உடலை மீற முடியாது. அது உடல் நிர்ணயிப்பதாகும். அதுபோல் ஒருவன் செயல்கள் உடலால் மட்டும் நிர்ணயிக்கப்பட்டால் அவன் ஜடமான மனிதனாவான். பொதுவாக நாம் மண்ணாங்கட்டி என்பது அவன் போன்றவர்களையேயாகும். உடலுணர்வுள்ளவன் சுறுசுறுப்பாக இருந்தால் அவன் சுறுசுறுப்பான மண்ணாங்கட்டியாவான். அறிவில்லாமல் சம்பிரதாயத்திற்காக ஆன்மீகப் பொக்கிஷங்களை கட்டாயப்படுத்தி குழந்தைகளை மனப்பாடம் செய்யச் சொன்னால்,அறிவு வளராது, எரிச்சல் எழும். எரிச்சலை வெளிப்படுத்த முடியாவிட்டால் விரக்தி வரும். முடிவாக அவனுக்குச் சுறுசுறுப்பு வரும். அவனே சுறுசுறுப்பான மண்ணாங்கட்டி.
தெருவில் மேளசத்தம் கேட்டால் உள்ளே உட்கார முடியாது. கடைவீதி வழியே வரும்பொழுது கண்கவரும் பொருள்களைக் கடையுள்ளே கண்ணால் பார்த்தால் வாங்கவில்லை என்றாலும் உள்ளே போய்ப் பார்க்கத் தோன்றும். அவன் விருப்பாலும், அதன் எதிரான வெறுப்பாலும் உந்தப்படுவான்.
மனிதன் என்ன செய்வான்? பசி எடுத்தால் அத்தனையும் பறந்து போகும். பசித்தவன் எப்படித் திருடாமலிருக்க முடியாதோ அதுபோல் நம்மால் பல காரியங்களைச் செய்யாமலிருக்க முடியாது என்பதை எவரும் புரிந்துகொண்டாலும், அனைவரும் ஏற்க மாட்டார்கள். பசித்தால் திருடுபவனால் ஊரையோ, உலகத்தையோ, நாகரீகமான நல்ல பழக்கத்தையோ ஏற்படுத்த முடியாது. பசித்தாலும் புல்லைத் தின்னாது புலி என்பதே மனமுடைய மனிதன்நிலை. தேவையால்மட்டும் செயல்படுபவன் உடலாலான மனிதன். நியாயம் என்றால் மட்டுமே செய்பவன் நல்ல மனிதன்.
உடலுக்குரிய மனிதன் உணர்வற்ற ஜடம்.
உணர்ச்சியால் செயல்படுபவன் உணர்வுள்ள விலங்கு.
நல்லது கெட்டதுஎன்ற பாகுபாடுள்ளவனை நாம் மனிதன் என்கிறோம்.
அன்னையும் பகவானும் கூறும் சத்தியஜீவியம் இவற்றை எல்லாம் கடந்தது. நல்லதுஎனில் உலகில் உடனே தீமையிருக்கும். தீமை தனித்திருக்காது. எந்தக் கெட்டமனிதனிடமும் ஒரு நல்ல குணமிருக்கும். மனிதன் அவற்றைப் பிரித்து நல்லதைமட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.
தீமையற்ற நல்லது, நிழலில்லாத ஒளி, பொய்க் கலப்பற்ற சத்தியம் மனித வாழ்வில்லை. உலகை ஒளிமயமாக்கும் சூரிய
ஒளிக்கே அவ்வுயர்வில்லை. சூரிய ஒளியை ஆன்மீகச் சட்டப்படி ஜடத்தின் ஒளி (material light ) என்கிறார்கள். ஒளி, ஜோதி ஏற்பட்ட நேரம் ஜடம் சிருஷ்டிக்கப்படவில்லை. அதுவே ஆன்மீகஒளி (spiritual light ). அதன்முன் சூரியன் கறுமையாகக் காணப்படுகிறான். அதேபோல் (spiritual darkness) ஆன்மீகஇருட்டின்முன் நடுப்பகலுக்கு எதிரான நள்ளிரவு ஜோதிமயமாகும்.
தீமையற்ற நல்லது
சத்தியஜீவியத்திற்குரிய நல்லது ---
நல்லது * கெட்டது
கெட்டதற்கு எதிரான நல்லதன்று.
-------------------------------------------------------
How does the physical body act as a protection?
Answer by Sri Mother
The physical body acts as a protection by its grossness, by the very thing we charge against it. It is dull and insensitive, thick, rigid and hard; it is like a fortress with strong dense walls. The vital world is fluidic, there things move and mix and interpenetrate freely; it is like the waves of the sea that ceaselessly flow into each other and change and mingle. Against this fluidity of the vital world you are defenceless unless you can oppose to it a very powerful light and force from inside; otherwise it penetrates you and there is nothing to hamper its invading influence. But the body intervenes, cuts you off from the vital world and is a dam against the flood of its forces.
No comments:
Post a Comment