எந்தப் பிரச்சினையுமில்லாமலிருக்கும்பொழுது, வேலை முடிந்து தனித்து உட்கார்ந்தால், மனத்தில் கவலை எழும். சற்று நேரம் கழித்து அலை அலையாகக் கவலை எழும். ஏதாவது வேலையிலீடுபட்டால், கவலையை மறக்க முடியும். எதற்குக் கவலை? எங்கிருந்து வருகிறது? என்று கேட்டால் அவர்களுக்குத் தெரியாது. இவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் (sub-human beings). இதேபோல் சிலருக்கு, பயம் எழும்.
இவர்கள் அரிபொருள். இவர்கள் அன்னையிடம் வந்தால் கவலை, பயம், குறைந்து நாளடைவில் மறையும். அன்னையை மேலும், மேலும் ஏற்றுக் கொள்ளும்பொழுது, இதேபோல் (causeless joy) எந்தக் காரணமுமில்லாமல், தனித்து உட்கார்ந்தால், சந்தோஷம் எழும், அலையலையாகவும் எழும், தன்னை மீறி புன்னகை மலரும். கவலையில் திளைத்தவரும் அன்னையிடம் வந்து எதிர்மாறாக மகிழ்ச்சியில் திளைப்பதுண்டு.
நாமறிந்த வாழ்வுக்கும், அன்னை இயல்பாக வழங்கும் வாழ்வுக்கும் கவலை தோய்ந்த உள்ளத்திற்கும், மகிழ்ச்சி பொங்கும் நெஞ்சத்திற்கும் உள்ள தூரம் உண்டு. மாற்றத்தை நாடிப் பெறுபவர்களுக்கு இம்மாற்றம் தவறாமல் தெரியும்.
கவலையின் சுனை மகிழ்ச்சியின் ஊற்றாவது மாற்றம்.
No comments:
Post a Comment