கல்வியின் இரண்டாவது கொள்கை, ஒரு மனத்தின் வளர்ச்சியைப் பற்றி அம்மனத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதே. பெற்றோர் அல்லது ஆசிரியார், குழந்தையை வலுக் கட்டாயமாகத் தம் விருப்பத்திர்கேர்ற்ப உருவாக்க முயல்வது பண்பற்ற செயலாகும்.
குழந்தை, தன் இயல்புக்கேற்றவாறு தானாகவே விரிவடையுமாறு ஊக்குவிக்கப்பட வேண்டும்.
தம் குழந்தை சில குறிப்பிட்ட குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றோ, ஒரு குறிப்பிட்ட தொழிலை மேற்கொள்ள ஆயத்தமாக வேண்டும் என்றோ பெற்றோர் முன்பிருந்தே முடிவு செய்து கொள்வதை விட பெருந்தவறு கிடையாது.
தன் இயல்புக்கு உரிய தர்மத்தைக் கைவிடுமாறு ஒருவனை வற்புறுத்துவது, அவனுக்கு நிரந்தரமான தீங்கு விளைவிப்பதாகும், அவனது வளர்ச்சியை சிதைவுபடுத்தி முழுமையற்றதாகச் செய்வதாகும். இது ஒரு மனித ஆன்மாவிற்கு இழைக்கப் படும் சுயநலமிக்க கொடுமையாகும், நாட்டிற்கே இழைக்கப்படும் ஊராகும். ஏனெனில் அவன் அளித்திருக்கக் கூடிய நல்ல பயன்களை நாடு இழக்கிறது, அதுமட்டுமல்லாமல், முழுமையற்ற, அக்கறையற்ற, செயற்கையான, இரண்டாம் தரமான சாதாரண பயன்களே நாடு பெறுகிறது.
கல்வியின் மூன்றாவது கொள்கை, அருகிலிருப்பதை அடிப்படையாகக் கொண்டு தொலைவிலிருப்பதை நோக்கிச் செல்வது. இயல்பான, சுயமான வளர்ச்சியே மெய்யான முன்னேற்றத்திற்கான நிபந்தனையாகும்.
கடந்தகாலம் நமது அடிப்படை. தற்காலம் நம் கையில் இருக்கும் பொருள். எதிர்காலம் நமது இலக்கு, சிகரம். தேசியக் கல்வி அமைப்பில் இம்மூன்றும் தமக்குரிய இயல்பான இடத்தைப் பெற வேண்டும்.
- ஸ்ரீ அன்னை.
No comments:
Post a Comment