திரு கர்ம யோகி அவர்களின் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்
நல்லதே நடக்கும்', நல்லது மட்டுமே நடக்கும்'
என்ற எண்ணம் இறைவனை எண்ணத்தில் வெளிப்படுத்தும் முயற்சியின் வெற்றியாகும். இது நடக்காது' என்று நினைப்பவன் மனிதன். மனிதனுள் உள்ள தெய்வம் இது நடக்கும்' என்று பேசும். இது நடக்காது' என்று தோன்றுவதை, இது நடக்கும்' என்று நாம் முயன்று மாற்றும்பொழுது நம்மை விலக்கி, நான்' என்பதை விலக்கி, நம்முள் உள்ள மனிதனை ஒதுக்கி, உள்ளுறை தெய்வத்தைப் பேசவைப்பதாகும். எண்ணத்தை ஆன்மீக எண்ணமாக மாற்றுவதாகும். எண்ணத்தின் அளவில் ஆன்மாவுக்கு ஓர் இடம் கொடுப்பதாகும். அதன் வழியே அன்னையின் ஆதிக்கத்திற்கு அதிக இடம் கொடுப்பதாகும்.
புற நிகழ்ச்சி எதுவானாலும் அகவுணர்வு நல்லது மட்டுமே நடக்கும் என்று அகமகிழ்ந்து சொல்லுமானால், அளவிறந்த நன்மையை அவ்வுணர்வு ஏற்படுத்தக்கூடியது. அத்தகைய சிறப்பு மனித உள்ளத்திருந்தால் அன்னை அங்கு அமுதத்தைச் சுரக்கச்செய்வார்.
எந்த ஒரு நிகழ்ச்சியோ, செய்தியோ நம்மைத் தேடி வரும் பொழுது, இது நல்ல செய்தியாக மட்டுமே இருக்கும்' என உண்மையாக மனத்தளவில் நம்புபவர்கட்கு நல்ல செய்திகள் மட்டுமே வருவதை நான் பார்த்திருக்கின்றேன்.
(Spiritual truths) ஆன்மீக நிகழ்ச்சிகளின் பலன் அடுத்த பிறவியில் தெரியும். அன்னை பக்தர்களுக்கு அதுவும் உடனே தெரியும்படி நிகழ்ச்சிகள் நிகழும்.
நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தை அன்னை அளவின்றி வற்புறுத்தியுள்ளார்கள். குப்புற விழுந்தாலும் அதுவும் அருளின் செயலே என்று நாம் உணர வேண்டும் என்று அன்னை அருளுக்கு விளக்கம் கொடுக்கும்பொழுது சொல்கிறார்கள். இக்கூற்றில் பொதிந்துள்ள உண்மை பெரியது. எனினும் ஒரு பெரிய ஆன்மீக உண்மையைச் சுட்டிக்காட்டும் கூற்றாக எடுத்துக்கொண்டபின் மட்டுமே இதன் பயனை நாம் அடைய முடியும். தர்க்கத்துக்குரிய கருத்தாக எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்யலாம் என்றால், இக்கட்டுரையின் நிலை அதற்கு இடம் கொடுக்காது. தர்க்கத்திற்குரிய இடத்தில் தர்க்கரீதியாக அவ்வுண்மையை நிலைநாட்ட முடியும். அதைத் தவிர்த்து ஆன்மீகப் பேருண்மையை சுட்டிக்காட்டும்.
அமெரிக்கர் ஒருவர் பாண்டிச்சேரி வந்திருந்தார். 56 வயதானவர். மனைவி, 3 வயதுவந்த குழந்தைகளை விட்டுவிட்டு வந்திருந்தார். அவருடைய வீட்டில் (telex) தந்தி வசதி இருந்தது. இங்கு வந்து தங்குமிடத்திலும் அதே வசதியிருந்ததால், தம் மனைவியிடம் வீட்டுச் செய்திகளை அடிக்கடி அனுப்பும்படிச் சொல்லி இருந்தார். வந்தவர் வந்த வேலையில் மூழ்கித் தம்மை மறந்திருந்தார். 7 நாட்களாக மனைவியிடமிருந்து ஒரு செய்தியும் இல்லை. அதாவது அவர் வேலையைப் பற்றிய செய்திகள் அடிக்கடி வருகின்றன. வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய செய்திகள் ஒன்றுகூட இல்லை. 7ஆம் நாள் அவர் மனம் உடைந்துவிட்டார். செய்தி நல்லதாக இருந்திருந்தால் என் மனைவி அனுப்பியிருப்பாள். நல்ல செய்தியில்லை என்பதால் அதை இங்கு அனுப்பி என் வேலையைக் கெடுக்கக்கூடாது என்று எண்ணி அனுப்பாமலிருக்கிறாள் என்று தீர்க்கமான முடிவுக்கு வந்து கலங்க ஆரம்பித்தார். இப்படிப்பட்ட நேரங்களில் அன்னை என்ன ஆலோசனை கூறுகிறார் என்றறிய முயன்றபொழுது, "நல்லது மட்டுமே நடக்கும்'' என நினைத்து மற்ற எண்ணங்களை விலக்க வேண்டும் என அன்னை கூறியிருப்பது தெரியவந்தது. அவர் மனம் அதை ஏற்றுக்கொண்டது. உணர்ச்சி ஏற்றுக்கொள்ள மறுத்தது. போராடி உணர்ச்சியைத் தம் கட்சியில் சேர்த்துக்கொண்டார். அது மனநிம்மதியைக் கொடுத்ததுடன், மன நிறைவையும் கொடுப்பதைக் கண்டு வியந்து, தன் வியப்பை விளக்கிக்கொண்டிருக்கும்போது வீட்டில் உள்ள தந்தி ( telex) மெஷின் அடிக்க ஆரம்பித்து "everyone here is in top form'' அனைவரும் இங்கு அற்புதமாக இருக்கிறார்கள் என்ற செய்தி வந்தது. இதுவே நல்லது மட்டும் நடக்கும் என்ற எண்ணத்திற்குள்ள பலம். நினைத்ததை நடத்திக் கொடுக்கும் திறம்.

No comments:
Post a Comment