Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Thursday, December 20, 2012

ஒரு செயலின் விவரங்களை, ஸ்ரீ அன்னைக்கு சமர்ப்பணம் செய்வது எப்படி?



ஒரு செயலின் விவரங்களை, ஸ்ரீ அன்னைக்கு சமர்ப்பணம் செய்வது எப்படி?

 செயலைச் சமர்ப்பணம் செய்வதைவிட அதன் விவரங்களைச் சமர்ப்பணம் செய்வது கடினம். இதற்கு நம்பிக்கை விவரமாக இருக்க வேண்டும்.


சமர்ப்பணம் விவரமானால் கடினமாகும்.


.படிக்காத தகப்பனார் பையன் காலேஜில் படிக்க அனுமதித்தால் பணம் தருவார். அதற்குமேல் அவரால் பையன் படிப்பைப் புரிந்து கொள்ள முடியாது.


.படித்த தகப்பனாருக்குப் பையன் படிப்பின் விவரங்களெல்லாம் தெரியும்.அவற்றுள் பங்கு கொள்வது அவ்வளவு சுலபமன்று. விவரமான சமர்ப்பணம் அது போன்றது.


.வட்டிக் கடைக்காரன் கம்பனிக்குக் கடன் கொடுப்பதும், பாங்க் கடன் தருவதும் இதுபோன்றது. வட்டி கொடுத்துவிட்டால் கடைக்காரன் எதுவும் கேட்க மாட்டான். பாங்க் பிராஜக்ட் ரிப்போர்ட்டி லிருந்து ஸ்டாக் ஸ்டேட்மெண்ட்வரை அனைத்தையும் கேட்கும். வந்து பார்வையிடும்.


.விவரமான சமர்ப்பணம் செய்ய, விவரம் தெரிய வேண்டும்.


.பயணம், டிக்கட் வாங்குவது, இன்டர்வியூக்குப் போவது, பதில் சொல்வது ஆகியவற்றை விவரமாகச் சமர்ப்பணம் செய்ய சமர்ப்பணம் எப்படி வேறுபடுகிறது எனத் தெரிவது அவசியம். டிக்கட் வாங்க வரிசையில் நிற்பதைச் சமர்ப்பணம் செய்ய நிற்க பொறுமையிருக்காது என்பதை சமர்ப்பணம் செய்ய வேண்டும். 

இன்டர்வியூவைச் சமர்ப்பணம் செய்ய டென்ஷனைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும். நமக்குத் தெரிந்த பதிலைச் சொல்லும் ஆசையைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும். சமர்ப்பணம் எவ்வளவு விவரமாக இருக்கிறதோ அந்த அளவுக்குப் பலன் உண்டு.


.அட்மிஷனுக்குப் போகும் பையன் பொதுவாகச் சமர்ப்பணம் செய்தால் அட்மிஷன் கிடைக்கும். விவரமாகச் சமர்ப்பணம் செய்தால் அதன் பலன் பிறகு தெரியும். ஹாஸ்டல் நல்ல ரூம் கிடைக்கும்பொழுது,செக்ரடரியாகத் தேர்ந்தெடுக்கப்படும்பொழுது, ஸ்காலர்ஷிப் கிடைக்கும் பொழுது, பேச்சுப் போட்டியில் பரிசு பெறும்பொழுது, அன்று இன்டர்வியூவில் செய்த சமர்ப்பணத்தின் சுவடுகள் தெரியும்.


.விவரமான சமர்ப்பணம் முழுமையான சமர்ப்பணம்.


.ஒரு காரியத்தைச் சமர்ப்பணம் செய்யும்பொழுது, அதன் எதிர்கால வரலாறு முழுவதையும் சமர்ப்பணம் செய்யலாம். எதிர்காலப் பலன் அதை அறிவிக்கும்..சமர்ப்பணம் விவரமாக இருப்பதுபோல் தீவிரமாக இருக்க முடியும்.


.விவரமும், தீவிரமும் கடந்து நெகிழ்ந்த சமர்ப்பணம் உண்டு.


.ஒரு செயலில் உலகம் அடங்கும் என்பதால் ஒரு செயலின்.சமர்ப்பணமான வாழ்வைவிடப் பெரிய சந்தோஷமில்லை என்று அன்னை கூறியதின் பொருள் இதில் தெரியும்.


-யோக வாழ்க்கை விளக்கம் V - திரு. கர்மயோகி அவர்கள் 



Thanks,
AuroMere Meditation Center ,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India


Tags: Sri Aurobindo, Sri Annai, Mother, Yoga Sakthi, Methods, Pratices, Karmayogi, Philosophy, Sri Aravindar, Sri Annai, character, transformation, Yoga, Yoga Sakti in life, யோகசக்தி வாழ்வில், ஒரு செயலின் விவரங்களை, அன்னைக்கு எப்படி சமர்ப்பணம் செய்யலாம்  ? 




         

No comments:

Post a Comment

Followers