Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Monday, December 17, 2012

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - 28


ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம். 

திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். 

முறைகள்:

  •  நன்றியறிதல் உடல் புல்லரிக்க வேண்டும்.
  •  சைத்தியப்புருஷன் அழைக்க வேண்டும்.
  • எந்த முறையையும் தேடாதே.
  • ஒரு முறையைத் தேர்ந்தெடுத்து அதைச் சிறப்பாகச் செய்.
  • சுறுசுறுப்பில் அமைதி வேண்டும்.
  • சக்தி, வீர்யம், தெய்வப் பிரகிருதியைக் கடந்த சிரத்தையை நாடு.
  • Life Responseஐ மதித்து நட.

இன்றைய பகுதியில் மேற்கண்ட முறைகளுக்கான (Practices / Methods), கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். 

 -------------------------------------------------------------------------------
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி. 
----------------------------------------------------------------------------------

முறை:

 நன்றியறிதல் உடல் புல்லரிக்க வேண்டும்.

முறைக்கான விளக்கம்:
உடல் இறைவனை ஏற்பது நன்றியறிதல். 
நம்மை மறந்து அன்னையை நினைத்தால்
பலன் வருவது நிச்சயம்.
அதைப் பெரும்பலனாக்கலாம்; முழுப் பலனாகவும் செய்யலாம்; வந்தது நிலைப்பதாகவும் செய்யலாம்; நிலைத்தது தொடர்ந்து உயர்வதாகவும் செய்யலாம்.
இந்த முறையையே அன்னையாகவும் மாற்ற முடியும்.

நமக்குச் சொந்த பழக்கங்கள் உண்டு; எதற்கும் லிமிட் உண்டு; விடாமுயற்சி அவசியம். ஒன்று முடிந்தால் அடுத்ததற்குப் போகத் தாமதிக்கக் கூடாது. இதெல்லாம் பார்த்தால் முடியாது' என்பன போன்று சுமார் 20 அல்லது 25 பழக்கங்கள் உள்ளன. அவற்றை நாம் தவறாது பின்பற்றுகிறோம். அதற்குப்பதிலாக அம்முறைகளைப் பற்றி அன்னை என்ன கூறியுள்ளார்என அறிந்து அவற்றைப் பின்பற்றுதல் சாலச்சிறந்தது.

நமக்கு தர்மபுத்திரன், சிவனடியார்கள், ஆழ்வார்கள், சரித்திரத் தலைவர்கள், காந்தி, நேரு போன்றவர்கள் செய்தவை அடிக்கடி வழிகாட்டும்.

முறை முழுமை பெறும்பொழுது பலன் முழுமை பெறும்.
புல்லரிப்பது முழுவதும் இனிமையாக ஏற்பது.

இதுவரை நடந்தவற்றிற்கு நன்றியறிதல் கூறுபவர்க்கு எதிர்காலம் பெரியது.
நன்றி என்பது நம்முள் உள்ள இறைவன் அருள் வழி வரும் இறைவனைத் தொடுவது.

நன்றி கூறுபவர் எதிர்காலப் பலனை எதிர்பார்த்த நன்றி போக, அந்தஸ்தால் பெற்ற நன்றியையும் விலக்கினால், உண்மையான நன்றியை ஒருவர் கண்டிருந்தால், மீண்டும் மீண்டும் கண்டிருந்தால் அவருக்கு நன்றியறிதல் உண்டு.

இதுவரை செய்த எந்த யோகமும் உடலைத் தொடவில்லை.

உயிரிலும், மனத்திலும் உள்ளே போய் ஆழத்தைத் தொடவில்லை.

நெற்றிக்கண் நக்கீரருக்கு நன்றியை எழுப்பவில்லை; அகங்காரத்தை எழுப்பியது.

தெய்வங்கள் இறைவனை மறந்துவிட்டனர்.

நன்றி சமீபத்தில்தான் பிறந்தது.

அன்னை ஸ்ரீ அரவிந்தர் வீட்டைக் காட்டியவருக்கு நன்றி செலுத்தினார்.

இத்தாலிய சாணக்கியர் மாக்சிவல் "பிள்ளைகள் தகப்பனாருக்குப் பின் அவரை எளிதில் மறந்துவிடுவார்கள்'' என்றார்.

50 ஆண்டிற்குமுன் சமையல்காரன் 10 இலட்சம் சம்பாதித்தான். பெரிய மகனிடம் பெட்டிசாவியைக் கொடுத்தான்.

அடுத்த நாள் பெரிய மருமகள் காலையில் அவருக்குப் பழைய சோறும், கணவனுக்குப் பலகாரமும் சேர்ந்து பறிமாறினாள்.
காரியம் முடிந்தபிறகு கணம் தவறாமல் பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்வது உலகம்.

நன்றியறிதலுக்கு 40 சந்தர்ப்பம் எழுந்தாலும் ஒரு முறையும் நன்றி உள்ளிருந்து எழாது.

வாழ்க்கையில் நன்றி செலுத்த வேண்டிய அனைத்தையும் நினைத்துச் செலுத்தியபின், பாக்கியாக இருப்பது 40 பங்கிருக்கும். நன்றி உடலில் பிறந்ததில்லை.

மனம் நன்றியை அறியாது.
ஆத்மா நன்றிக்குரியது.

அது வெளிவருவதில்லை.
ஆத்மா வாழ்வுமூலம் நன்றியாக மலர்வது அன்னை வாழ்வு.
அன்னையை அறிந்ததற்கே நன்றி உரியது.


நன்றி நம்மை நல்லவராக்கும்.


 ------------------------------------------------------

முறை:

 சைத்தியப்புருஷன் அழைக்க வேண்டும்.

முறைக்கான விளக்கம்:
இது வளரும் ஆன்மா; ஆன்மாவைக் கடந்த நிலை.

கம்பனியில் முதலாளி ஆன்மா, மேனேஜர் சம்பளக்காரன்.

மானேஜர் முதலாளி அளவு திறமை பெற்று, பொறுப்பேற்றால் கம்பனி ஓஹோஎன வரும். அது சைத்தியப்புருஷனாகும்.

மனம் அறிவு பெற்றது, உடல் திறமை பெற்றது, இவை பகுதிகள் என்பதுடன் ஆத்மாவுடன் தொடர்பில்லாதவை; ஜீவனற்றவை.

வளரும் ஆன்மா அறிவில் ஆன்மாவாக உதயமாகும்; அது மேதமை.

உடலின் திறமையில் ஆன்மாவாக எழும்; அவன் செயல்வீரன்.
முதலாளி மகன் கம்பனியில் இன்ஜீனியர், ஆடிட்டராக வேலை செய்வதை

வளரும் ஆன்மா - சைத்தியப்புருஷனுக்கு - எனக் கூறலாம்.

நாம் செய்யும் வேலையில் உடல் திறமையை வெளிப்படுத்தும், உயிர் உணர்ச்சி தரும், மனம் அறிவால் விளக்கம் தரும், ஆன்மா சாட்சியாகப் பின்னாலிருக்கும்.

உடல் திறமையை நம்பாவிட்டால், உயிர் உணர்ச்சியை நம்பாவிட்டால், மனம் அறிவை நம்பாவிட்டால் நம்மால் சமர்ப்பணம் செய்ய முடியும்.

திடீரென ஒரு கம்பனிக்கு கவர்னர் வரப்போகிறார் என்றால் எதுவும் ஓடாது. உத்தரவு கொடுக்க நேரமிருக்காது. கவர்னர் வந்துவிட்டால் நமது சட்டங்கள் எதையும் செலுத்த நேரமிருக்காது. அவரவர் இஷ்டப்படி நடக்க வேண்டியிருக்கும். சமயத்தில் அது முதலாளியில்லாத நேரமாகவும் இருக்கும். கவர்னர் வந்து போனபின், "எப்படி நடந்தது, என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அனைவரும் தானே சிறப்பாக நடந்தனர். இது போல் கம்பனி என்றுமேயிருந்ததில்லை. கவர்னர் வேலை நடப்பதைக் கண்டு பிரமித்துப் பாராட்டினார்'' என்று சொல்வார்கள்.
இதை சைத்தியப்புருஷன் வெளிப்பட்டுச் செயல்படுதல் எனலாம். பாடகர், மேடைப்பேச்சாளர், நடிகர் ஆகியவர்கட்கு இதுபோன்ற நேரம் வந்தால் அற்புதமாக இருக்கும். Mood வந்தாலும் இப்படியிருக்காது என்பர். He was in his form, அவர் தம்நிலையிலேயே இல்லை என்பர் (ஆங்கிலத்தில் உண்டு என்பதை தமிழில் இல்லையென்று கூற வேண்டியிருக்கிறது).

எவரும் தம் வேலையில் இதுபோன்ற நேரத்தைக்காணலாம். அன்பான, ஒற்றுமையான குடும்பக் கல்யாணத்தில் இதைக் காணலாம். "இது நம் வீட்டு விசேஷமாக நடக்கவில்லை. பெரிய இடத்துப் பெரிய விசேஷமாக அன்னை நடத்தினார்'' என்று கூறுவதைக் காணலாம்.

நம்மை மறந்து அன்னையை நினைத்தால் சைத்தியப்புருஷன் வெளிவருவான்.
              -----------------------------------------
முறை:

கொடுமையை சந்தோஷமாக ஏற்றுக்கொள்.

முறைக்கான விளக்கம்:
சுயநலமி, பேய், கொடுமை ஆகியவற்றுக்குச் சட்டம் ஒன்றே.

வருபவை நமக்குரியவை என்பதே அச்சட்டம்.

ஆத்மா ஆழத்தில் புதைந்திருந்தால் அது வெளிவரக் கொடுமை அவசியம்.
நம்மைக் கொடுமை செய்பவர் அச்செயலுக்குக் கருவி. அச்செயல் அருள்.

சுயநலமி, பேய், கொடுமைக்குச் சட்டம் ஒன்றானாலும் அவை செயல் வேறுபடும்.

தோசை, இட்லி, உப்புமா அரிசியால் செய்யப்பட்டிருந்தாலும் ருசி வேறு, பாகம் வேறு.

சுயநலமிக்குத் தன்னை மட்டும் தெரியும்; வெட்கமிருக்காது. பேய் பயங்கரமாகச் செயல்படும்.
கொடுமை செய்பவருக்கு ஈவு, இரக்கம் இருக்காது; தீவிரம் இருக்கும். அன்பு செலுத்த வேண்டியவர் கொடுமை செய்வதை மனம் ஏற்க முடியாது; உயிரும், உடலும் பதைபதைக்கும்.
இப்பதைபதைப்புமூலம் புதைந்துள்ள ஆத்மா வெளிவருகிறது.

8 தலைகீழ் மாற்றங்களில் இது 5 முதல் 8 வரை ஓரிடத்தில் அமையும். அன்பாகத் தேடிவரும் குழந்தையை ஆத்திரமாக அடித்த தாயாரை அன்றே அக்குழந்தை மறந்துவிட்டது. கடைசி நேரம் அக்குழந்தை அருகிருக்க முடியவில்லை. கொடுமையை ஏற்ற ஆத்மா அன்றே தாயார் முகத்தில் விழிக்கக் கூடாதுஎன முடிவு செய்துவிட்டது, வாராத மகளுக்கே தெரியாது.
கொடுமைக்கு ஆளான குழந்தைகள் கடைசி நேரத்தில் கொடுமை செய்தவரருகில் இருக்கமாட்டார்கள்என்பது பொதுச்சட்டம்.
இந்த ஆன்மீக உண்மை எட்டிக்காய்.
கேட்கவும் மனம் சம்மதிக்காது.

உலகில் அன்பில்லை, ஆதாயம் மட்டுமிருக்கிறதுஎன்பது உண்மை.
கேட்டால் மனம் ஏற்காது.

ஏற்றால் உடலெல்லாம் கொப்புளம் வரும்; தோல் கறுத்துப்போகும்.

தோல் வியாதிக்கு இது ஓர் அடிப்படை.

மனமும் ஏற்று, செயலையும் ஏற்பது யோகம்.

ஏற்பதுடன் எரிச்சலும் படக்கூடாது.

சந்தோஷப்படும்பொழுதுதான் பலன் வரும்.
அதனால் அன்னை எவரையும் யோகம் செய்ய அழைப்பதில்லை.

இந்த ஞானம் வாழ்வை வளப்படுத்தும்; பிச்சைக்காரனைப் பெரிய கோடீஸ்வரனாக்கும், தொண்டனைத் தலைவராக்கும்.

            -------------------------------------
முறை:

 எந்த முறையையும் தேடாதே.

முறைக்கான விளக்கம்:
எந்த முறையும் சக்திவாய்ந்தது; பெரும்பலன் தரவல்லது.

எந்த முறையையும் நாடாவிட்டால், பலன் தானே வரும். அது பெரியது என்பது ஆன்மீக உண்மை.

வசிஷ்ட கணபதி முனிக்கு காவ்ய கண்ட கணபதி எனப் பெயர்.

இவர் உமா சகஸ்ரம் எழுதியவர்; கவி.

இவருடைய சமையல்காரன் எழுதப் படிக்கத் தெரியாதவன்.

குருவின் ஞானம் அடிமனம் வழி சிஷ்யனுக்கு வந்து சேரும்.

கவி பாராயணம் செய்த வேதம், சமஸ்கிருத ஞானம் இவனிடமிருந்து தானே பிரவாகமாக வந்தன.

ஒரு கிரேக்கப் பேராசிரியர் வேலைக்காரியிடமும் இதைக் கண்டார்.

இவர்கள் எந்த முறையையும் நாடவில்லை, கற்க முயலவில்லை.

ஞானம் தானே இவருள் பாய்ந்தது.

சர்ச்சிலோ, இங்கிலாந்தோ ஹிட்லரைத் தோற்கடித்திருக்க முடியாது.

பகவான் சர்ச்சிலின் தைரியத்தால் அவரைக் கருவியாகத் தேர்ந்தெடுத்தார்.
சர்ச்சில் இந்தியச் சுதந்திரத்திற்கு பரமஎதிரி.
பகவான் சுதந்திரத்தை சூட்சுமத்தில் பெற்றவர்.
யோகசக்தியை பகவான் சர்ச்சிலுக்கு அனுப்பினார்.

வென்றது யோகம்.
சர்ச்சில் கருவி.

இந்தியச் சுதந்திரத்தின் பரமஎதிரி, உலகச் சுதந்திரத்திற்குக்
கருவியாவது ஆன்மீக நடைமுறை.

சர்ச்சில் எந்த முறையையும் நாடி தைரியம் பெறவில்லை.
தைரியம் அவருடையது; சக்தி பகவான் அளித்தது.

வேலைக்காரர்கள் மொழி பயில்வது இவ்வழி.

முறை பலன் தரும்.

பெரிய முறை பெரிய பலன் தரும்.

முறைகளைக் கைவிட்டால் உலகம் அறியாத பலன் எழும்.
ஆப்பிளைக் கண்ட நியூட்டனோ, பாத்ரூமிலிருந்த ஆர்க்கிமிடீஸோ,
E = MC 2 என்று கூறிய ஐன்ஸ்டீனோ எந்த முறைகளாலும் இவற்றைக் கண்டுபிடிக்கவில்லை.
இராமானுஜம் எழுதிய 4 நோட்டுகளில் எதுவும் அவர் படித்த இன்டர்மீடியட் படிப்பால் வரவில்லை.

உலகத்திற்குரியது முறை.

முறைகளைக் கடப்பது உலகைத் தாண்டிச் செல்வது.

     ------------------------------------------------
முறை:

 சுறுசுறுப்பில் அமைதி வேண்டும்.

முறைக்கான விளக்கம்:
அமைதியாக இருப்பதோ, சுறுசுறுப்பாக இருப்பதோ சிரமம்.
இரண்டில் ஒன்றைச் செய்யலாம்.
எப்படி இரண்டும் சேரும்?

அமைதியிருந்து சுறுசுறுப்பு எழுகிறது என்பது ஆன்மீகச் சட்டம்.

சுறுசுறுப்பு அமைதியாவது முதற்கட்டம்.
அந்த அமைதி கலையாமல் சுறுசுறுப்பு எழுந்தால் அது பெரியது.

மேடையில் விவாதம் நடந்தால் ஒருவர் ஆர்ப்பாட்டமாகப் பேசுவார்.
கூட்டம் அவரைப் பாராட்டும்.

அவர் முடித்தபின் எதிரி எழுந்து அமைதியாக, முதல் பேசியவர் கூறியவற்றில் உள்ள தவற்றை அமைதியாக சுட்டிக்காட்டினால் விவாதம் இவருக்கு ஜெயிக்கும்.
அமைதிக்கு சக்தியுண்டு.
ஆர்ப்பாட்டத்திற்குத் திறனில்லை.

அமைதியினின்று எழும் சுறுசுறுப்புக்கு உச்சகட்டமான சக்தியுண்டு.

இது எப்படி சாத்தியம்என்று கேட்டவர்க்குப் பதில் கூறும் வகையில் 
பகவான் ஸ்ரீ அரவிந்தர், "யோகத்தில் ஓரளவு பரிச்சயம் உள்ளவரும் அமைதியின் சக்தி அபரிமிதமாக எழுவதைக் கண்டுள்ளனர்'' என்கிறார்.

அனுபவம் முதிர்ந்து, நிறைந்த பின்னரே அமைதி எழும்.

அமைதி அமைதியாக இருப்பதாலேயே காரியம் நடக்கும். போலீஸ்காரன் துப்பாக்கியால் சுடும்பொழுது அவன் அதிகாரம் தெரியும் என்பது அவசியமில்லை.
காக்கிசட்டை போட்ட போலீஸ்காரன் ஒருவன் வந்துவிட்டாலே கூட்டம் அடங்கும்.
போலீஸ்காரனுடைய செயலற்ற நிலைக்கே சக்தியுண்டு.
அவன் செயல்படும்பொழுது சக்தி அதிகம்.
சுறுசுறுப்பு அமைதியினின்று எழுந்தால் அது பெருஞ்சக்தியாகும்.
அமைதியினின்று எழும் சுறுசுறுப்பு அதுபோல் பெரியது.

பெரிய பண்ணைகள், பெரிய உத்தியோகஸ்தர்கட்கு இந்த சக்தியுண்டு.
சீனியர் வக்கீல் எதிர்கட்சிப் பத்திரத்தைக் கையெழுத்துப் போட்டுத் திருட்டுத்தனமாக எடுத்துக்கொண்டார். இதை திரும்பப்பெற சட்டப்படி கேஸ் நடத்த 2 வருஷமாவது ஆகும். எதிரிக்கு ஜில்லா ஜட்ஜ் வேண்டியவர். அவரிடம் சொன்னார். ஜட்ஜ் வக்கீலைத் திட்டலாம், மிரட்டலாம், கோர்ட்டிலிருந்து விலக்குவேன்என்று கூறலாம். அவர் அமைதியாக ரிஜிஸ்தாரை வக்கீடம் அனுப்பினார். எதிர்கட்சிக்காரர் "என் பத்திரத்தைக் கொடுங்கள்'' என்றார். பத்திரம் உடனே வந்துவிட்டது. வக்கீலுக்கு, திருடனுக்குத் தேள் கொட்டியது போலாயிற்று. ஜட்ஜின் அமைதி லேசாகச் செயல்பட்டால் பெரிய அதிகாரம் தடையின்றி செல்லும்.
முறை:

 ஒரு முறையைத் தேர்ந்தெடுத்து அதைச் சிறப்பாகச் செய்.

முறைக்கான விளக்கம்:
இங்கு சுமார் 100 முறைகளை எழுதியுள்ளேன்.
எதைப் படித்தாலும் செய்ய ஆசையாக இருக்கும்.
நமக்குப் பிடித்தமான ஒரு முறையை நிதானமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இங்கு அம்முறையில் கூறிய அனைத்தையும் perfect சிறப்பாகச் செய்ய வேண்டும்.
முழுப்பலன் கிடைக்கும்.

இம்முறையில் சொல்ல வேண்டியவை மேலும் ஏராளமாக உள்ளன. அவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.

அதற்குரிய வழிகள் 3:
1) அன்னை இம்முறையைப் பற்றி எங்கெல்லாம், என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்எனத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றால் நாம் செய்ததை எப்படி உயர்த்த முடியும்என முயல்வது.


2) அருளமுதத்தில் 34 முறைகள் உள்ளன. மற்ற தமிழ்ப் புத்தகங்களில் பல இடங்களில் இம்முறை வருகிறது. அவற்றை a research student ஓர் ஆராய்ச்சி வல்லுனர்போல் படித்து, தேடிக் கண்டுபிடித்துப் பயன் பெற வேண்டும். பிறர் தேடித் தருவது பலன்தாராது. நாமே தேடுவதே பயன்தரும்.

3) இவ்விரண்டையும்விட சிறந்த முறையொன்றுண்டு. நாம் செய்தவற்றை நினைத்து, ஆராய்ந்து, அனுபவித்து, மேலும் என்ன செய்யலாம்என இதுவரை நாம் படித்ததைக் கொண்டு கண்டுபிடித்து முறையை உயர்த்துவது முழுப்பலன் தரும்.

அதற்குப்பதிலாக அன்னை வழிகாட்ட வேண்டும்.
பலன் முழுமை பெறும்பொழுது பக்குவம் வரும்.
பக்குவம் வாராமல் பவித்திரம் வாராது.

முறையும், பலனும், முழுமையும், பக்குவமும், பவித்திரமும் நம்மால்
இதுவரை செய்ய முடியாதவற்றைச் செய்யும்.

அதைக் கடந்தது அன்னை. அன்னை மட்டும் அனைத்துமாகும்.

                    -------------------------------------
முறை:

 சக்தி, வீர்யம், தெய்வப் பிரகிருதியைக் கடந்த சிரத்தையை நாடு.

முறைக்கான விளக்கம்:
ஆர்வமாகச் செயல்படுவது சக்தி செயல்படுவது.

தீவிரமாக முழுமூச்சுடன் செயல்படுவது வீரியம்.

மனித சக்தியை தெய்வ சக்தியாக்குவது தெய்வப் பிரகிருதி. நம்பிக்கை இவற்றைக் கடந்தது.

எலக்ஷனில் பிறருக்காக வேலை செய்யாமல் ஆர்வமாகச் செயல்படுவது முதல் நிலை.

தீவிரமாக எலக்ஷனில் வேலை செய்பவன் தன்னால் முடிந்த எதையும் பாக்கி வைக்காமல் செய்பவன்.
சக்தியும், வீரியமும் நம்திறமை.
அவற்றைச் சமர்ப்பணம் செய்தால் சக்தி தெய்வ சக்தியாகும்; வீரியம் தெய்வீக வீரியமாகும்.

நமது சக்தியும், வீரியமும் சமர்ப்பணத்தால் தெய்வத்தன்மையைப் பெறுகின்றன.

நம்பிக்கை எனில் இவற்றுள் உள்ள நம் பங்கை விலக்கி முழுவதும் தெய்வ சக்தி, தெய்வீக வீரியமாவது.


ஆபத்தான வியாதி வந்தவுடன் ஆஸ்பத்திரிக்குப் போகிறோம். டாக்டர் ஆபத்தை விலக்குகிறார்; மருந்து தருகிறார்; நம்மால் செலவு செய்ய முடியும்என நம்பி செயல்படுவது நம்முடைய சக்தி, டாக்டருடைய சக்தி.

அது பலிக்கவில்லை. உள்ளூர் ஸ்பெஷலிஸ்ட், சென்னை, டெல்லி ஸ்பெஷலிஸ்ட் முயல்வது வீரியம் செயல்படுவது.
அவர்கள் செயல்படும்பொழுது சமர்ப்பணத்தை நம்புவது.
எதுவும் பலிக்கவில்லையெனில் நமது சக்தியிலும், வீரியத்திலும், சமர்ப்பணத்திலும் நம்பிக்கை போகிறது. நடப்பது நடக்கட்டும்என விட்டுவிடுகிறோம்.
நடப்பது நடக்கட்டும்என விரக்தியாக விடுவதற்குப்பதிலாக, நமது சக்தி,நம் வீரியம், நம் சமர்ப்பணம் உள்பட நாம் கலந்திருப்பதால் நாம் தொந்தரவு மட்டும் தரமுடியும். இனி இவற்றில் நம்பிக்கை போய்விட்டதால் pure faith, தூய நம்பிக்கை செயல்படும்என நம்புவது Faith.
இப்படி வாங்கிய பேனா 30 வருஷம் வருவதுடன், அதனால் எழுதிய எதுவும் வெற்றிபெறத் தவறுவதில்லைஎனக் காணலாம்.

பேயான மனைவி, கணவனையுடையவர் past cosecration, கடந்தகால சமர்ப்பணத்தால் நம் சக்தி, நம் வீரியம், நமது சமர்ப்பணத்தை withdraw வாபஸ் செய்தால் கணவன் கந்தர்வனாவான், மனைவி பஞ்சகன்னிகைகளில் ஒருவராவார்.
செய்வது ஞானத்தை சித்தியாக்கும்.
செய்ய ஏராளம் உண்டு.
பேசுவதை நிறுத்தி, செய்ய ஆரம்பிப்பது சரி.
               -------------------------------------
முறை:

 Life Responseஐ மதித்து நட.

முறைக்கான விளக்கம்:
நாம் சகுனம் என்று கூறுவது Life Response வாழ்வின் எதிரொலியில் ஒரு பகுதி.

வாழ்க்கையில் நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகள், உத்தியோகம், course திருமணம், கூட்டாளி, டெக்னாலஜி போன்றவை, இந்த ஞானம் உள்ளவர்க்கு Life Response வாழ்வை நிர்ணயிக்கக்கூடியவை.
நமக்கு முழுவெற்றி கிடைத்தவற்றில் 1 வருஷம், 1 மாதம், 10 வருஷம் ன்னால் யோசனை செய்துபார்த்தால் வாழ்க்கைத் தெளிவாக சுட்டிக்காட்டியது தெரியும்.

போட்டோவிலிருந்து ஒருவர் தலையை வெட்டி எடுத்தனர். இது சிறுபிள்ளை குறும்பு. 4, 5 வருஷம் கழித்து அவரிறந்தபொழுது போட்டோ நிகழ்ச்சியை பலரும் உணர்ந்தனர்.
ஒரு IAS ஆபீசர் தகப்பனாருடன் கோபித்துக்கொண்டு தம் initialஐப் போட மறுத்தார்.

நண்பரையும், அவர் நட்பையும் போற்றி அதற்கடையாளமாக அவரிடமிருந்து ஒரு புத்தகம் பெற்றபொழுது அவர் பெயர் அதிலிருந்து கத்தரித்து எடுக்கப்பட்டது கண்டு வருத்தமடைந்தார்.

பிற்காலத்தில் அந்தப் பெயரே கசக்கும் நிலை வாழ்க்கை எழுப்பியது.

கெட்ட நடத்தையைக் குறிக்கும் செயல்கள் பல உள.

நீ மணக்க இருக்கும் இளைஞனுக்கு அது போன்ற பழக்கம் உள்ளது உன் கண்ணில் படவில்லை என்றபொழுது, வாழ்க்கை அடுத்தவர்மூலம் எடுத்துக்காட்டுகிறது. ஏற்பதால் என்ன நடந்தது, மறுத்ததால் விளைவு என்ன என்பதை பிற்காலம் குறிக்கும்.
இங்கிலாந்தில் 1900, 1800இல் இவள் கர்ப்பமாக இருக்கிறாள்' என ஆண்கள் பெண்களோடு பேசமாட்டார்கள். குறிப்பாகவே பேசுவார்கள். நம் நாட்டில் ஒரு பண்பாடு; மனிதன் சொற்கள், பேச்சில், எழுத்தில் வெளிவருபவை அவர் மனநிலையைக் காட்டும். நேரடியாக அது வெளிப்பட்டு மனம் அருவெறுப்புப்பட்டபின் அவரை மணக்க விரும்பினால், அம்முடிவின் பலனை அனுபவிப்பதில் ஆச்சரியமில்லை.
இதுவரை நாம் செய்த காரியங்களும், அவற்றின்வழி நாம் பெற்ற பலன்களும் நம் மனத்தில் பதிவாகியுள்ளன.

வாழ்வுக்கு அது பெரிய ஜாதகம்.
உடன் உறைபவர், உயிரின் பகுதியானவர் உயிரை எடுக்கப்போகிறார் என்பது பல ஆண்டுகள்முன் தெரியும்.
காதற்ற ஊசி காலத்திற்கும் உயிரைக் காப்பாற்றப்போகிறது என்பதை பழைய நிகழ்ச்சிகளினின்று காணலாம்.
பெரிய மனிதர்கள் வரலாறு, புகழ்பெற்ற கதைகளில் இந்த ஞானம் மண்டியிருப்பதையும், விரவியுள்ளதையும் காணலாம்.
1 மாதம் நம் வாழ்வைக் கவனித்தால் இத்தனை ரகஸ்யங்களும் வெளிவரும்.

அறிவது எளிது; பின்பற்றுவது எளிதன்று.

மனம் வேண்டாததை ஆர்வமாக விழையும்
.

Life Response பெரிய ஞானம்.
.............................தொடரும்.

Read the previous Part of this Series : (Yoga Sakthi in our Life) யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - Part 27


Thanks,
AuroMere Meditation Center ,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India


Tags: Sri Aurobindo, Sri Annai, Mother, Yoga Sakthi, Methods, Pratices, Karmayogi, Philosophy, Sri Aravindar, Sri Annai, character, transformation, Yoga, Yoga Sakti in life, யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்



         

No comments:

Post a Comment

Followers