Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Thursday, May 10, 2012

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - 9


ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம். 
திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில முறைகளுக்கான, கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். 
-----------------------------------------------------------------------------------------------------
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ...........
-----------------------------------------------------------------------------------------------------

முறை 7 :

வெறுப்பின்பின் இறைவன் உள்ளதைக் கவனி.

முறைக்கான விளக்கம் :


வெறுப்பு அன்பின் தலைகீழ் உருவம் என்பது தத்துவம். அன்பு மேலுலகினின்று பொய்யான நம் உலகுக்கு வந்ததால் வெறுப்பாகத் தெரிகிறது. வெறுப்பு வெறுப்பன்று, அன்பேயாகும். நம் மனத்தில் வெறுப்பு இல்லாவிட்டால் நமக்கு வெளியில் வெறுப்புத் தெரியாது. சர்வம் பிரம்மம் எனில் வெறுப்பும் பிரம்மம். பிரம்மம் வெறுப்பின்பின் உள்ளது; அதனுள் கருவாக இருக்கிறது எனலாம். வெறுப்பே பிரம்மம் எனவும் கூறலாம். இது தத்துவம். 

நடைமுறையில் மூன்று நிலைகள்: (1) அறிவது, (2) உணர்வது, (3) உணர்வது செயல் இனிப்பது. கிருஷ்ண பரமாத்மாவின் உபதேசப்படி அர்ஜூனன் சண்டையிட்டான். பீஷ்மரையும் தாக்கினான். ஆனால் அபிமன்யூ இறந்தபொழுது அவனுக்குத் தாங்கவில்லை. கிருஷ்ண பரமாத்மா தெய்வீக மனத்தைச் சார்ந்தவர் என்பதால் அவரால் அறிவையும், உணர்வையும் தர முடிந்தது. உடலை கிருஷ்ணனுடைய சக்தி தொடமுடியாது. சத்தியஜீவியம் தொடும். அது யோகத்தின் முடிவான நிலை. அந்த நிலையில் வெறுப்பால் செய்யும் காரியங்கள் உடல் இனிக்கும்; அன்பாகத் தெரியும்.


..............................தொடரும்.


Download the Audio Format of this book by clicking the following link.
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

Thanks,
AuroMere Meditation Center ,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India

No comments:

Post a Comment

Followers