அன்னையின் அற்புதங்கள் - 1 அன்னைக்குச் சூட்சுமச் சக்திகள் பல இருந்தன. சாதரணமாக நம்மால் பார்க்க முடியாத அல்லது கேட்க முடியாத விஷயங்களை அன்னையால் பார்க்கவோ அல்லது கேட்கவோ முடியும். அன்னைக்கும், உலகிலுள்ள கடவுளர்க்கும் நேரடியான தொடர்புகள் உண்டு. உயிரற்ற ஜடப் பொருட்களும் அன்னையிடம் தங்கள் குறைகளை முறையிட்டு நிவாரணம் பெற்ற நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. ஒருநாள் மாலை நேரம். ஆறு மணி. அன்னை ஆசிரமத்தில் உள்ள ஒரு சாதகரை அழைத்து, " ஆரோவில்லில் இருக்கும் மாத்ரி மந்திர் (அன்னைக்குச் சாதகர்கள் எழுப்பிக் கொண்டிருந்த கோயில்) அருகிலுள்ள ஆலமரம் ஒரு துன்பத்தால் வாடுகின்றது. சற்று நேரத்திற்கு முன்னால் அந்த ஆலமரம் தன் துயரைச் சொல்லி என்னிடம் முறையிட்டுக் கொண்டது. ஆகையால் அந்த மரம் இருக்கும் இடத்திற்கு உடனே விரைந்து சென்று, அதற்கு ஏற்பட்டுள்ள துன்பம் எதுவாக இருந்தாலும், அதை நீக்கி விட்டு எனக்குச் செய்தி அனுப்பி வைக்கவும்" என்று கூறினார். அன்னையின் அற்புதங்கள் தொடரும்.... Reference Book : Annaiyin Tharisanam - By Thiru. Karmayogi Avarkal |
Pages
▼
No comments:
Post a Comment