Pages

Friday, September 28, 2012

Functioning from the Spirit- ஆன்மாவிலிருந்து செயல்படுதல்- Message of the Day- Sep 28,2012

ஆன்மாவிலிருந்து செயல்படுதல்

 ஆன்மாவிலிருந்து செயல்படுவதற்கு அறிவிலிருந்தோ உணர்வு அடிப்படையிலான மனோபாவங்களிலிருந்தோ, உடலளவிலான பழக்கங்களிலிருந்தோ செயல்படாமலிருப்பது அவசியம். இதர பகுதிகளில் செயல்படாமல் இருப்பது அவசியம் என்றாலும் ஆன்மாவை செயலில் ஈடுபடுத்துவதற்கு அது போதுமானதாகாது. அதற்கு உள்ளிருந்து வரும் உற்சாகமோ (Inspiration) அல்லது வெளியிலிருந்து வரும் நிர்பந்தமோ தேவைப்படுகிறது. இதில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டுமே இருந்தாலும் ஆன்மா உடனடியாக செயல்படுகிறது. உடனடியாகவும் பலன் கிடைக்கிறது. குறைந்த பட்சமாக விரும்பும் புதிய பலன்கள் சுற்றுப்புற சூழலில் கிடைக்க ஆரம்பிக்கின்றன.

டாம் கூத் (Gooth) என்பவர் ஒரு அமெரிக்கர். அவர் உலகத்தை சுற்றி பயணம் செய்பவர். அவர் மூன்றாவது உலக நாடுகளிலுள்ள ஏழைகளுக்காக உள்ள பொருளாதார திட்டங்களில் அக்கறை கொண்டவர். அவர் தொழில் நுட்பம் கண்டு பிடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். பரவலாக ஊடுருவியுள்ள ஏழ்மையை போக்குவதற்கு அவருடைய தொழில் நுட்பம் எல்லோரையும் சென்ற அடைய வேண்டுமென்பது அவரது நோக்கம். அவர் சைக்கிள் ரிக்ஷாவில் மோட்டாரை பொறுத்துவதில் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அதில் அதிக நேரம் கொல்கத்தாவில் செலவழித்தார். ஆனால் இது மட்டும் அவருடைய முக்கியமான குறிக்கோள் அல்ல. அவர் சென்ற நாடுகளில் ஆன்மீகத்திற்கு பேர்போன எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்தார். பலவித யோகங்களைப் பற்றி தெரிந்து கொண்டார்.

ஒரு முறை மெக்சிக்கோவில் வோல்க்ஸ் வேகன் (VOLKS WAGEN) ஓட்டிக்கொண்டு பிரயாணம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் பிற்பகலில் ஒரு ஓட்டலில் மதிய உணவுக்குப் பிறகு ஒரு மணி நேரங்கழித்து, அவருடைய பாஸ்போர்ட் மற்றும் பணம் வைத்திருக்கும் பர்ஸ் அடங்கிய தோள்பை இருக்க வேண்டிய இடத்தில் இல்லாததைக் கண்டார். வண்டியை நிறுத்தி தேடிப்பார்த்தார். ஓட்டலுக்கு திரும்பிச் சென்று, மீண்டும் திரும்பி வந்து அவர் எங்கெல்லாம் ஓய்வு எடுத்து இருந்தாரோ அந்த இடங்களில் எல்லாம் தேடிப் பார்த்தார். ஆனால் பலன் இல்லை. அது உண்மையில் எல்லா நம்பிக்கையும் இழந்த நேரம். அவருக்கிருந்த அறிவுத்திறனெல்லாம் தீர்ந்து விட்டிருந்தன. அத்தகைய சூழ்நிலைக்குரிய, தான் கேள்விப்பட்ட அத்தனை வழிமுறைகளையும் நினைவுபடுத்திப்பார்த்தார். ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை. திடீரென்று அவருக்கு அன்னை சொன்னது மனதில் பட்டது. அது "கடுமையான நம்பிக்கையற்ற நேரம்தான் என்னை அழைப்பதற்கு உகந்த நேரம்''. அந்த நினைவு வந்ததும், அவர் புல்தரையில் பத்மாசனம் போட்டு உட்கார்ந்து அன்னையை அழைத்தார். அவருடைய இதயத்திலிருந்த பாரம் குறைந்து விட்டது. மீண்டும் பிரயாணத்தைத் தொடங்க நினைத்தார். வண்டியை ஓட்ட ஆரம்பிக்கும் முன் அருகிலிருந்த ஒரு புதரின் மேல் அவருடைய பை இருப்பதைக் கண்டார். மனத்தின் உள்ளிருந்து கேள்விகள் எழுப்பப்படவில்லை. மாறாக உண்மையான நன்றி உணர்ச்சி ததும்பியது. அவர் உடல் புல்லரித்தது. ஆன்மா எப்பொழுதும் பொய்ப்பதில்லை. அதற்கு தவறோ அல்லது தோல்வியோ தெரியாது. அது யாரையும் தெரிந்து வைத்திருக்கவில்லை. இருப்பினும், அது எப்படி வருகிறது என்பது குறித்து ஒரு விளக்கம் வரவேற்கப்படுகிறது.

Functioning from the Spirit

Functioning from the Spirit demands NOT functioning from the mind or vital attitudes or physical habits. Though not functioning from other parts is essential, it is not enough to release the Spirit into action. It needs an inspiration from inside or a compelling pressure from outside. Should either be there, preferably both, the Spirit acts at once and the results follow instantaneously, at least the new desirable results start flowing into the outer environment.

Tom Gooth is an American and a world traveller. His interest is in the economic programmes, especially for the poor, in the third world nations. He was particular about devising some simple technology which would be accessible to all so that the pervasive poverty would be alleviated. He was trying to fit a motor to the cycle rickshaw and spent a lot of time in Kolkatta. But this was not his main interest. He visited every spiritual place in any country he had visited and learnt about various yogas.

Once he was in Mexico driving a Volkswagen. One afternoon, an hour after leaving the hotel where he had stopped for lunch, he suddenly saw that the shoulder bag which contained his wallet and passport was not in its usual place. He stopped and searched, drove back to the hotel and returned to search at each of the road-side spots where he had paused to rest, but all in vain.
It was truly a moment of despair. All his mental resources were at an end. He recollected every formula he had heard appropriate to the situation but there was no relief. Suddenly, it occurred to him that the Divine Mother had said, "The most desperate moment is the best to call me." He sat on the grass in padmasana and called. The weight on his heart lifted. He thought of resuming his driving. Before he started the van, he glanced around and suddenly saw his bag on a nearby bush! No questions were raised from inside, but there was pure gratitude. His body thrilled. The Spirit never fails, as it knows none. Still, how does it come about is an explanation that is welcome
-  Spirituality and Prosperity 1- By - Sri Karmayogi Avarkal

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam
               
Savitri - 125

Sri Aurobindo's Savitri
Daily Savitri - 125

Out of apprenticeship to Ignorance
Wisdom upraised him to her master craft
And made him an archmason of the soul,
A builder of the Immortal's secret house,
An aspirant to supernal Timelessness:
Freedom and empire called to him from on high;
Above mind's twilight and life's star-led night

- Savitri by Sri Aurobindo, Book 1, Canto III - The Yoga of the King: The Yoga of the Soul's Release, Page 26

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series

Thursday, September 27, 2012

அதிகாரம் நிர்வாகத்திற்கு அவசியம் - Message of the Day, Sep 27, 2012

மேல் அதிகாரி சொல்லிய சிறு வேலைகளைச் செய்யாவிட்டால் தண்டிக்கமாட்டார்கள், கண்டிப்பார்கள். சில சமயங்களில் கண்டிப்பதும் இல்லை. சோம்பேறித்தனமாக இது போலிருப்பதுண்டு வேண்டு மென்றே செய்வதுண்டு (desire to cross authority). அந்தச் செயல் எவ்வளவு சிறு செயலானாலும் அது தவறு. நமக்குள்ள முன்னேற்றத்தை அது தடுக்கும். ஒரு மெஷினைப் பூட்டும்பொழுது ஒரு மறை குறைவாக விட்டுவிட்டால், மெஷின் ஓடும், ஆனால் அதன் திறமை 25% குறைந்துவிடும் என்பதை இன்ஜீனியர் அறிவார். 98.40 F இருக்க வேண்டிய டெம்பரேச்சர் 99.4 இருந்தால் உடல் வேலை செய்யும் திறன் அளவு கடந்து பாதிக்கப்படும் என்பதை டாக்டர் அறிவார். Authority அதிகாரம் என்று நமக்கு வேண்டாததன்று அதுவே உலகத்தின் சொத்து. ரோடில்லாவிட்டால் வாழ்க்கையில்லை, தபால் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது. இவற்றை நடத்துவது நாட்டின் நிர்வாகம். நிர்வாகம் அதிகாரத்தால் இயங்குகிறது. வீட்டிலும், வெளியிலும் நாம் அதிகாரத்திற்கு அறிவோடு பணிந்தால்தான் நாட்டில் அதிகாரம் இயங்கும். ஏதோ ஒருவன் அவன் அதிகாரியை எதிர்க்கிறான் என்பது வேறு. நமக்கு அதிகாரியை எதிர்க்கும் மனப்பான்மை வந்துவிட்டால், நாளைக்கு நாம் அந்த அதிகாரத்தைப் பெறமுடியாது. அதிகாரம் நிர்வாகத்திற்கு அவசியம். மனித வாழ்வுக்குக் காற்றும், நீரும் அவசியம் என்பதைப் போல் அவசியம்.
அதிகாரத்தையும் அதன் அவசியத்தையும் புரிந்து கொள்வது நம் சொந்த வாழ்வின் எதிர்காலத்தையும் அதன் வளர்ச்சியையும் புரிந்து கொள்வதாகும். எண்ணத்திலும் அதிகாரத்திற்கு எதிராக போகும் நிலை எழக்கூடாது.
இரு விஷயங்களுக்குள்ள தொடர்பை நீ பார்க்கத் தவறியதுண்டா? இரு விஷயங்களுக்கிடையே இல்லாத தொடர்பை இருப்பதாக நீ நினைத்தது உண்டா? அப்படியானால் அது உன் வாழ்வில் நிரம்பியிருக்கும் அதற்கு மடமை எனப் பெயர்.
Manitha Subhavam, Malarntha Jeeviyam July-2000 - Sri Karmayogi Avarkal

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam
               
Savitri - 124

Sri Aurobindo's Savitri
Daily Savitri - 124

All the grey inhibitions were torn off
And broken the intellect's hard and lustrous lid;
Truth unpartitioned found immense sky-room;
An empyrean vision saw and knew;
The bounded mind became a boundless light,
The finite self mated with infinity.
His march now soared into an eagle's flight.

- Savitri by Sri Aurobindo, Book 1, Canto III - The Yoga of the King: The Yoga of the Soul's Release, Page 25

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series

Wednesday, September 26, 2012

Savitri - 123

Sri Aurobindo's Savitri
Daily Savitri - 123

The landmarks of the little person fell,
The island ego joined its continent.
Overpassed was this world of rigid limiting forms:
Life's barriers opened into the Unknown.
Abolished were conception's covenants
And, striking off subjection's rigorous clause,
Annulled the soul's treaty with Nature's nescience.

- Savitri by Sri Aurobindo, Book 1, Canto III - The Yoga of the King: The Yoga of the Soul's Release, Page 25

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series

Tuesday, September 25, 2012

Audio : English- (Book Reading Sep 21) - Experience of a devotee

Audio : English  - Experience of a devotee 
Book Name: Beautiful Vignettes of Sri Aurobindo and the Mother

(Book Reading Program - Sep 21, 2012) - ( Duration : 4 mins.)

Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - English version of the Weekly Book Reading Program of this week presented by Mrs. Janaki a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play the following audio Players or the link to listen to the Audio Version - English

=======================================
Player 2:

Book Reading - English Vesion - Sep 21, 2012

Experience of a devotee 

Beautiful Vignettes of Sri Aurobindo and the Mother

       Next Book Reading Program on , Sep 28, 2012 @ Auromere Meditation Center  ( 5.30 - 6.00 PM)

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Act - Life - Accomplishment - Message of the Day, Sep 25, 2012

An act is the unit of life or accomplishment.

Life is an accomplishment of existence. Life is a field for accomplishment. A work that ends in giving the expected result is accomplishment. There are physical accomplishments of projects executed. One who leads a cross section of people accomplish in the vital field of leadership. Conceptions of an Idea, a formula, etc. are accomplishments of the mind.

All such accomplishments are live and give life to existence. One who is violently rejected by the lady of his love, inwardly endeavouring to rise to the level of her expectation of acceptance, accomplishes in Romance.

  • Life and accomplishment are correlated synonyms.
  • Building the Trans Siberian Railway is a big accomplishment.
  • Getting rid of Hitler for the world is a universal accomplishment.
  • Having an abscess operated and healing well is an accomplishment for a diabetic patient.
  • It is an accomplishment for The Secret when one gets the car he has visualised.
  • There are as many accomplishments or types of accomplishments as there are walks of life.
  • The Secret is espousing an old formula that Man can accomplish anything, if only he chooses.
  • When we say an act is the unit of life or accomplishment, we lay serious foundations for a new way of thought on earth. Though it is not unknown, it is not known for the purposes we lay down here.
  • Accomplishments can be big, even universal or global, but Acts are microscopic, within our external and internal grasp. He who masters the act, masters the accomplishment.
  • Any accomplishment breaks down into innumerable acts.
  • They fall into various types in the beginning.
  • As we proceed, they begin to show a certain specialisation.
  • At one point each type of act becomes unique.
  • At that point, all acts resolve into the same components lending themselves to mastery.

The act is a unit of life even as the atom is a unit of matter with which the universe is pervaded.

Of course, the act, in its turn is a universe in itself, into which we do not go, as it is the territory of philosophy. To know the basis of such a philosophy is vastly useful to master the act.

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam
               
Savitri - 122

Sri Aurobindo's Savitri
Daily Savitri - 122

A mystery of married Earth and Heaven

Annexed divinity to the mortal scheme.
A Seer was born, a shining Guest of Time.
For him mind's limiting firmament ceased above.
In the griffin forefront of the Night and Day
A gap was rent in the all-concealing vault;
The conscious ends of being went rolling back:

- Savitri by Sri Aurobindo, Book 1, Canto III - The Yoga of the King: The Yoga of the Soul's Release, Page 25

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series

Monday, September 24, 2012

தாயம்மாள் - சிறு கதை

  தாயம்மாள்  

                                             - இல.சுந்தரி

காலை 11-மணி சுமாருக்கு வழக்கம்போல் தாயம்மா தயிர்க்கூடையுடன் கோமுட்டித் தெருவிற்குள் நுழைந்து வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு வரிசையாய்த் தயிரோ, மோரோ கொடுத்துக்கொண்டு வருகிறாள். டாக்டர் (L.M.P.) சத்தியநாராயண செட்டியார் வீட்டில் கூடையை இறக்கி "டாக்டரம்மா'' என்று குரல் கொடுத்தாள். டாக்டரின் மனைவியை இவள் இப்படி அழைப்பது வழக்கம். "இதோ வந்துட்டேன் தாயம்மா. கடிகாரமே பார்க்க வேண்டாம். தாயம்மா வந்தால் மணி 11'' என்று சொல்லியவண்ணம்  மோர் வாங்கும் பாத்திரத்துடன் வந்தாள் ரெங்கநாயகி. எதைப் பார்த்தாலும் என்னவென்று கேட்காமல் இருக்கமுடியாத ஒரு குணம் அவளுக்கு. "என்ன தாயம்மா? இரண்டு பானைகள்தானே கொண்டு வருவே ஒண்ணு தயிரு, ஒண்ணு மோரு. புதிதாக ஒரு கலயம் எதுக்கு? மோரும் தயிரும் கலந்த கலப்படமா? என்றாள். ''இது இஸ்பெசல் தயிறு'' என்றாள் தாயம்மா  "இஸ்பெசலா?அது என்ன ஸ்பெஷல்?'' என்றாள் ரெங்கநாயகி. செட்டியார் சம்சாரம் எங்க குலதெய்வத்துக்கு நேந்துகிட்டு தினமும் தயிர் நேவித்தியம் வைக்குது. அதுக்குத்தான் இந்த தயிர்'' என்றாள் தாயம்மா.

"எதுக்காக நேந்துகிட்டாங்களாம்?" என்றாள் ரெங்கநாயகி. "கிருஷ்ணன்சாமியாண்ட என்ன நேந்துக்குவாங்க எல்லாம் புள்ளவரம்தான்'' என்றாள் தாயம்மா இயல்பாக. "ஏதேது செட்டியார் சம்சாரம் புள்ளவரம் வேண்றாங்களா?'' என்று ஏளனமாய்க் கேட்டாள். "ஏன் டாக்டரம்மா அப்படி கேக்குற. செட்டியார் சம்சாரத்துக்குப் புள்ள பொறந்தா ஆவாதா?'' என்று அவள் நொடிப்பைத் தன் வினாவால் வீழ்த்தினாள் தாயம்மா. "அது சரி'' என்றவண்ணம் உள்ளே சென்றாள் ரெங்கநாயகி. செட்டியார் பொஞ்சாதி தங்கம்.  அதும் மனசுக்கு அதுக்குப் புள்ள பொறக்காம போகுமா? எங்க குல (இடையர்குல) தெய்வம் அதும் பிரார்த்தனையை நெறவேத்தாம போவுமா! என்று பொருமியவண்ணம் கூடையைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாள்.அடுத்தது சங்கர் செட்டியார் வீடு.

"செட்டியாரம்மா! தயிர் கொணாந்திருக்கேன்", என்று சப்தமிட்டு அழைத்துக்கொண்டே கூடையை இறக்கித் திண்ணையில் வைத்து விட்டு தலைச் சும்மாட்டைக் கீழே வைத்துவிட்டு உட்கார்ந்தாள். செட்டியார் மனைவி இரண்டு பாத்திரங்களுடன் உள்ளிருந்து வெளிப்பட்டாள்.

"இந்தா தாயி. நீ சாமிக்கு நேந்துகிட்டேனதும் நானும் பயபக்தியா தனியா ஒரு சட்டியிலே ஒரையூத்தி கொணார்ந்திருக்கேன். ஒன் தவம் பலிக்கணும். எங்க சாமி ஒங்க வூட்ல வந்து பொறக்கணும். நா கண்குளிரப் பாக்கணும்'' என்று அளவு கடந்த ஆர்வத்துடன் கூறினாள். குற்றமற்ற குலம் இடையர் குலம் என்பது எவ்வளவு உண்மை.

மோரை அலுமினியப் பாத்திரத்திலும், தயிரை வெள்ளிப் பேலாவிலும் வாங்கிக்கொண்ட செட்டியார் மனைவி, இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு எனக்குக் குழந்தை பிறக்கும் என்று இவள் கற்பனை செய்கிறாள்.உண்மையில் நான் பிள்ளைவரம் வேண்டியா விரதமிருக்கிறேன்? வந்திருக்கும் "அதிதி'' வெளியுலகிற்குத் தெரியக்கூடாது என்பதால் அதிகப்படி தயிர் வாங்குவதற்கு ஒரு காரணமாக கடவுளுக்குப் படைப்பதற்கு என்று ஒரு பொய் சொன்னேன். இதை இவள் இவ்வளவு அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள் என்று எண்ணியவாறு உள்ளே சென்றாள்.

தாயம்மாவின் கற்பனை செட்டியார் மனைவியையும் தொற்றிக் கொண்டது. அப்படியொரு சின்னக் கண்ணன் இந்த வீட்டில் தவழ்ந்தால் எப்படியிருக்கும் என்றெண்ணியபோதே நினைவு இனித்தது. இல்வாழ்வில் புகுந்த பெண் ஒரு பிள்ளைச் செல்வத்தை எதிர்பார்ப்பதில் தவறென்ன இருக்கிறது? "மங்கலம் என்ப  மனைமாட்சி, மற்றதன், நன்கலம் நன்மக்கட் பேறு'' என்று வள்ளுவர் சொல்லவில்லையா? பொன் அரைஞாணும், பூந்துகில் ஆடையுமாய்ப், பொற்சதங்கை ஒலிக்கத் தவழ்ந்து வந்து குழந்தை காலைக் கட்டிக் கொண்டதுபோல் ஒரு பிரமை. முகம் பிரகாசித்து மெய்மறந்து நின்றாள் செட்டியாரின் மனைவி. மாடியில் பகவான் புன்னகை புரிந்தார்.

உண்மையில் இவர்கள் வீட்டிற்குச் சிலர் வந்திருக்கின்றனர். அன்றிரவு ஏழு மணியிருக்கும், மாலை மறைந்து இருள் தொடங்கிவிட்டது. செட்டியார் பரபரப்பாய் இருந்தார். மனைவியை அழைத்து, "இங்கு முக்கியமான ஒருவர் வரப் போகிறார்.மேலே மாடியிலே அவருக்கு அறை ஒதுக்கியிருக்கிறேன். அவர் இங்குதான் தங்கப் போகிறார். அவர் இங்கிருப்பது ஒருவருக்கும் தெரியக்கூடாது. பெண்களிடம் ரகசியம் தங்காது என்பார்கள். இதை நீ வெளியிட்டால் நமக்குத் தெய்வக்குற்றம் வந்து சேரும்'' என்றார். பணிவுடன் ஏற்றுக் கொண்டாள் செட்டியாரின் மனைவி. "போ, நீ உள்ளே போ'' என்று அவளை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே வருபவரை வரவேற்கச் சென்றார். வருபவரைக் காணும் ஆவலுடன் சமையலறை ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு நின்றாள். நான்கைந்து பேர் வருகிறார்கள். நடுநாயகமாய் வந்தவர்தாம் முக்கியமானவர்போலும். வேட்டியை மூலக்கச்சம் வைத்துக் கட்டியிருந்தார். முழுக்கை ஜிப்பா அணிந்திருந்தார். மேலே குறுக்காக ஒரு துண்டு அணிந்திருந்தார். குறுந்தாடி வைத்திருந்தார். பின்புறம் அலையலையாய் சிகை கழுத்துவரை நீண்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஏதோ தெய்வீகமானவர் என்று காண்போர் புரிந்து கொள்ளும்வண்ணம் கண்களில் அசாதாரண ஒளி. இத்தனைக்கும் அக்காலத்தில் அவரை ஓர் ஆன்மீக மனிதராகக் கூட யாரும் அறிந்திருக்கவில்லை.

மேலே தங்கியிருக்கும் ரகசிய விருந்தாளிக்கு அதிகப்படி தயிர் வாங்கினாள்.தாயம்மா நீண்ட காலமாய் தயிர் கொடுப்பவள். சிறிது அதிகப்படி வாங்கினால்கூட "யாரு விருந்தாளி?'' என்பாள். உண்மையைச் சொல்லமுடியாத நிலையில் ஸ்ரீகிருஷ்ணருக்கு  நிவேதனம் செய்வதாய் நேர்ந்து கொண்டதாய்ச் சொன்னாள். அதைத் தாயம்மா தன் கள்ளமில்லாத வெள்ளையுள்ளத்தில் பெரிய சித்திரமாய்த் தீட்டிவிட்டாள்.

மேலேயுள்ள விருந்தினர்க்கு மிக அக்கறையுடன் சிரத்தையுடன் சமைத்தாள். தயிரை மட்டும் ஒரு வெள்ளிப் பேலாவில் பத்திரமாக அனுப்புவாள். கடவுளுக்கு நிவேதனம் என்று தாயம்மாவிடம் சொன்னது பொய்யாகக்கூடாது என்பதால் மானசீகமாய் ஸ்ரீகிருஷ்ணர் ஆவலுடன் அத்தயிரை உண்பதுபோல் கற்பனை செய்துகொள்வாள். மேலே போகும் ரசம், குழம்பு, கூட்டு, பொரியல் யாவும் உண்ணப்பட்டிருக்கும். தயிர்மட்டும் மீதம் திரும்பி வரும். ஒரு நாள் மேலேயிருந்தவர்களில் ஓரிளைஞர் கீழே வந்தபோது செட்டியார் மனைவி அவரிடம் சாப்பாடு நன்றாக உள்ளதா என்று பிரியமாய்க் கேட்க, அவரும் வித்தியாசமான தமிழில் ரொம்ப நல்லாயிருக்கு என்றார். தயிர் ஏன் மீந்துவிடுகிறது போட்டுக் கொள்வதில்லையா? என்று கேட்டதற்கு தாங்கள் யாவரும் தயிர் உண்ணும் பழக்கமில்லை யென்றும், அவர் (முக்கியமானவர்) மட்டும் அன்புடன் அளித்ததை உண்ணாதிருக்கக் கூடாது என உண்பதாகக் கூறினார்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு மானசீகமாய்க் படைத்தது என்பதால் அந்த மீதித் தயிரை இவள் தவறாது உண்பது வழக்கம். அடிக்கடி இவள் கற்பனையிலும் கனவிலும் கூட கண்ணன் தவழ்ந்தான். இவள் நெஞ்சு நிறையும்வண்ணம் சிரித்தான்.

தாயம்மா, "ஏதேனும் விசேஷமுண்டா?'' என்று கேட்கத் தொடங்கிவிட்டாள். கல்யாணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன? முப்பது வயதுக்குமேல் பிள்ளைப் பேறா? அவளுக்கு வெட்கமாயிருந்தது. "என்ன தாயம்மா இது? இத்தனை வயதிற்குமேல் உண்டாக முடியுமா?'' என்றாள்.

"ஏன் தாயி அப்பிடி சொல்லுற. எங்க குலதெய்வம் நம்புறவங்கள, நல்லவங்கள ஏமாத்தாது. உனக்காக இல்லாங்காட்டியும், தெனமும் பக்தியா தயிர் கொணாந்து தர்ரேன்னே எனக்காகவாச்சும் ஒன் வீட்ல என் சாமி வந்து பொறக்கும் பாரு. சாமியை வேண்டிக்கினா நம்பிக்கை வேணும். எங்க கொலத்து சனங்களப் பாரு. ஒரு கொறையில்லாம இருக்கோம்'' என்று கூறிச் சென்றாள்.

தாயம்மாவைப்போல் கள்ளமில்லாத உள்ளங்களுக்குத்தான் கடவுள் புலப்படுவார் என்றெண்ணிக் கொண்டாள் செட்டியார் மனைவி.

சில மாதங்களில் இரவோடிரவாக வேறு வீடு மாறிச் சென்று விட்டனர் அந்த விருந்தினர். போகும்போதும் அந்தப் புனிதரின் பார்வையை செட்டியாரின் மனைவி தரிசித்தாள். திடீரென தன் கனவிலும், கற்பனையிலும் வரும் ஸ்ரீ கிருஷ்ணர் முகம்போல அவர் கண் தோன்றியது. உடம்பு சிலிர்த்தது. வீடு வெறுமையானது. நாளையிலிருந்து அந்தப் புனிதருக்கு உணவு படைக்கும் பாக்கியம் இல்லை என்ற ஏக்கம் எழுந்தது.

மறுநாள் காலை, செட்டியார் இவளிடம், "சாமி வீதியுலாவுக்கு வெளியே சென்றதும் கோயில் வெறிச்சென்றிருக்கும் அதுபோலல்லவா இருக்கிறது?'' என்றார்.

"எனக்கும் சமையல் செய்ய ஆர்வமாய் இல்லை'' என்றாள் அவர் மனைவி.

"இன்று முதல் நிவேதனத்தயிர் வேண்டாம்'' என்றாள் தாயம்மாவிடம்.

"ஆறு மாதம் நேந்துக்கினியா தாயி'' என்றாள் தாயம்மா.

வேறு வழியில்லாமல் "ஆமாம்" என்று சொல்லி வைத்தாள் செட்டியார் மனைவி. இரண்டு மாதம் கழித்து செட்டியார் மனைவி மயக்கமடைந்தாள். திடீரென கீழே விழப் போனவளை அவளுடன் பேசிக்கொண்டிருந்த செட்டியார் பதறிப்போய் கீழே விழாமல் பிடித்து படுக்கையில் சாய்த்தார். பக்கத்து வீட்டு அம்மாவை அழைத்து துணைக்கு வைத்துவிட்டு நான்கைந்து வீடுகள் தள்ளியிருக்கும் டாக்டர் சத்தியநாராயணனை அழைத்து வந்தார். அக்காலங்களில் கார், டோக்கன், க்கியூ என்ற பந்தாக்களில்லை. தெருவிற்குப் பத்து டாக்டர்களிலர். நோயாளிகளும் இலர். செட்டியார் தம் தெருக்காரர் என்பதால் அழைத்தவுடன் டாக்டர் வந்து விட்டார்.

"ஏன் இப்படி நேர்ந்தது? என்ன செய்தாள்?'' என்று செட்டியாரிடம் டாக்டர் விசாரித்தார். பேசிக்கொண்டே நின்றவள் திடீரென மயங்கி விழப்போனாள், என்று கூறினார் செட்டியார். மனைவிக்கு என்ன நோயோ என்று கலங்கி நின்றிருந்தார்.

நாடியைப் பிடித்துப் பார்த்த டாக்டர், "செட்டியாரே உம் மனைவியின் விரதம் பலித்துவிட்டது" என்று குறும்பாய்ச் சிரித்தார். "என்ன சொல்கிறீர்கள்" என்று விழித்தார் செட்டியார். "சரிதான் உம் மனைவி பிள்ளை வரம் வேண்டி ஸ்ரீகிருஷ்ணருக்குத் தயிர் நைவேத்யம் செய்த கதை தெரியாதா உமக்கு?" என்றார். "சரி, நீர் அப்பாவாகப் போகிறீர். மனைவியை நன்றாய்க் கவனியும்", என்று டானிக் எழுதிக் கொடுத்துவிட்டு ஊசியும் போட்டுவிட்டுப் போனார். செட்டியாருக்கு ஒன்றும் புரியவில்லை. வியப்பு ஒருபுறம், மகிழ்ச்சி ஒருபுறம்.

அவள் விழித்தெழ நெடுநேரம் ஆகிவிட்டது. செட்டியார் தூக்கமும், விழிப்புமாய்க் காத்துக் கிடந்தார். திடீரென விழித்தவள் "மணி என்ன? நான் ஏன் படுத்திருக்கிறேன்! சாப்பிட நேரமாகி விட்டதா?'' என்றாள். "சாப்பிடும் நேரமெல்லாம் தாண்டிவிட்டது. இந்தா இந்தப் பாலைக் குடி சற்றுத் தெம்பாக இருக்கும்'' என்று பரிவுடன் கொடுத்தார் செட்டியார். "நல்லாயிருக்கு நீங்க எனக்குப் பணிவிடை செய்யறது'' என்று வெட்கத்துடன் எழுந்திருக்கப் போனாள்.

"நீ இப்ப எழுந்திருக்க வேண்டாம். உனக்கு ஓய்வு வேண்டும் என்றார் டாக்டர்'' என்றார் "டாக்டரா? எனக்கு என்ன உடம்புக்கு? நான் நன்றாகத்தானேயிருக்கிறேன்'' என்றாள். "சரிதான் நீ ஸ்ரீகிருஷ்ணரை வேண்டிக்கொண்டது டாக்டருக்குத் தெரிந்திருக்கிறது. எனக்குத் தெரியவில்லையே'' என்றார் செட்டியார்.  

செட்டியார் மனைவிக்கு மிகவும் வெட்கமாய்ப் போய்விட்டது. "அதெல்லாமில்லீங்க மாடியில் தங்கி இருப்பவரை யாரும் அறியக்கூடாது என்றீர்களா அவருக்கு வாங்கும் தயிரை எதற்கு என்று தாயம்மா கேட்டாள். உண்மையைச் சொல்ல முடியாமல் ஸ்ரீகிருஷ்ணருக்கு நைவேத்யம் என்றேன். தாயம்மா தானே பிள்ளை வரம் என்று கற்பனை செய்துகொண்டு தெருப்பூரா சொல்லி விட்டாள்'' என்றாள். "கள்ளமில்லாதவள் சொல்லல்லவா?பலித்து விட்டது", என்றார் செட்டியார்.

"என்ன சொல்றீங்க?" என்றாள் இன்ப அதிர்ச்சியுடன். "நான் அப்பாவாகப் போகிறேன். நீ அம்மாவாகப் போகிறாய்" என்றார். "எனக்கொரு கதை நினைவுக்கு வருகிறது. பழங்காலத்தில் வீரசைவர்களுக்கு ஓரிடத்தில் பந்தி போஜனம் நடைபெற்றதாம். பசி மிகுதியால் ஒருவன் அந்தக் கூட்டத்தில் புகுந்தானாம். ஒவ்வொருவர் கழுத்திலும் ஒரு கயிற்றில் வெள்ளைத் துணியில் ஏதோவொன்று சுற்றி கட்டித் தொங்கியதாம். அது இன்னதென தெரியாத இவன் ஒரு கத்தரிக்காயை வெள்ளைத் துணியால் கட்டி கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு வரிசையில் நின்றானாம். உள்ளே பந்தியில் உட்கார்ந்தவுடன் ஒவ்வொருவரும் கழுத்திலுள்ள வெள்ளைத் துணியால் சுற்றிய சிவலிங்கத்தைப் பிரித்தெடுத்து மகேசுவர பூஜைக்காக இலைக்கு முன் வைத்தனராம். அப்போதுதான் இவனுக்குத் தோன்றியதாம், "கடவுளே என்னை மன்னித்துக் காப்பாற்று'' என்று வேண்டியவண்ணம் கழுத்துக் கயிற்றில் தொங்கிய வெள்ளைத்துணியைப் பிரித்தபோது கத்தரிக்காய் லிங்கமாக மாறியிருந்ததாம். நீயும் ஊரார் முன் தலைகுனிய வேண்டாமெனக் கடவுள் வரம் தந்துவிட்டார்'.

உண்மையைச் சொல்லக்கூடாது என்று ஒரு பொய் சொன்னாள். பொய்யை மெய்யாகத் திருவுரு மாற்றம் செய்ய வந்தவரல்லரோ பகவான். தம்பொருட்டு செட்டியாரும் அவர் மனைவியும் மேற்கொண்ட பொய்யை மெய்யாக்கிவிட்டார்.

மலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2000 » தாயம்மாள்

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam
               
நம் குறைகளில் இருந்து விடுபடுவது எப்படி? - Message of the Day - Sep 24, 2012

நம் குறைகளில் இருந்து விடுபடுவது எப்படி ?

  • நம்மிடமும், நம் பெற்றோரிடமும் உள்ள குறைகள் நம் எதிர்காலமாக அமைகின்றன. நம்முடைய நிகழ்காலத்தில் ஏற்படுகின்ற துன்பங்களுக்கும் அந்தக் குறைகளே காரணங்களாகும்.
  • நம்மை வாட்டும் துன்பங்களை விலக்கவும், எதிர்கால வாழ்வைச் சிறப்பாக வகுக்கவும், அந்தக் குறைகளைக் கண்டுபிடித்து, அவற்றை அடியோடு நீக்கிவிட வேண்டும். சில குறைகளை அறிந்துகொள்ள முடியும்; சில குறைகளை அறிந்துகொள்ள முடியாமலே போகலாம். அதைப் போல் சில குறைகளால் வரும் துன்பங்களை நம்மால் அடையாளம் புரிந்துகொள்ள முடியும்; பலவற்றுக்குத் துன்பங்கள் மட்டும்தான் புரியும்; ஆனால் அந்தத் துன்பங்களைத் தூண்டிவிட்ட முறைகள் என்ன என்பது புரியா.
  • குறைகள் எந்த வகையாக இருந்தாலும் அவற்றை நம்மால் அழிக்க முடியாது; மற்றவர்களாலும் அழிக்க முடியாது; அவற்றை அழிக்கும் ஆற்றல் அன்னையின் அருளுக்குத்தான் உண்டு. நம்பிக்கையோடும், பக்தியோடும் அன்னையின் அருளை நாடி, அந்தக் குறைகளை நீக்கும்படி வேண்டிக் கொண்டால், அன்னை அந்தக் கோரிக்கையை உடனே நிறைவேற்றி வைப்பார். அல்லது நம் குறைகளை எல்லாம் அன்னையின் பாதாரவிந்தங்களில் ஒப்படைத்துவிட்டால், அவர் அவற்றை இருந்த சுவடு தெரியாமல் போக்கி அருள்வார். நம் நிகழ்காலமும், எதிர்காலமும் மகிழ்ச்சிகரமாக அமையும்; நம்மை அழுத்தி வந்த பளு நீங்கும்; நடக்காது என்று கைவிடப்பட்டவை நடக்கும்; ‘வாராது’ என்று விட்டுவிடப்பட்டது தன்னாலேயே வந்து சேரும். நம்மிடம் உள்ள குறைகளை விலக்கிக்கொள்ளும் முயற்சியை தினமும் முறையாகச் செய்து வந்தால், வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகி இன்பம் பெருகும்.

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam
               
Savitri - 121

Sri Aurobindo's Savitri
Daily Savitri - 121

In the wide workshop of the wonderful world,
Modelled in inward Time his rhythmic parts.
Then came the abrupt transcendent miracle:
The masked immaculate Grandeur could outline,
At travail in the occult womb of life,
His dreamed magnificence of things to be.
A crown of the architecture of the worlds,

- Savitri by Sri Aurobindo, Book 1, Canto III - The Yoga of the King: The Yoga of the Soul's Release, Page 25

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series

Friday, September 21, 2012

ஜடத்திற்கும் சூட்சுமம் உண்டு - Message of the Day - Sep 21, 2012

Life Divine

  • நமக்கு இரு மனம் உண்டு - மேல்மனம், ஆழ்மனம்

  • நம் வாழ்வு இரு கூறானது - நாமறிந்த வாழ்வு, ஆழ்ந்த 

  • பிராணனுக்குரிய வாழ்வு

  • ஆத்மாவுக்கும் இரு நிலைகளுள்ளன - ஜீவாத்மா, சைத்தியபுருஷன்

  • அதேபோல் ஜடத்திற்கும் சூட்சுமம் உண்டு

இவை உயர்ந்த தத்துவங்கள். எனவே நமக்கில்லை என நினைப்பது இயல்பு.

உயர்ந்த தத்துவங்களை உன்னத வாழ்வாக மாற்றுவது ஸ்ரீ அரவிந்தம்.

இக்கருத்தின் ஆன்மீக உண்மையை தத்துவரீதியாக நன்றாக விளக்கி நீண்ட கட்டுரைகளை எழுதமுடியும். வாழ்விலும் பல்வேறு வகைகளில் இதன் உட்கருத்தை எடுத்துரைக்க முடியும். எதற்கும் உதவாது என்று எடுத்தெறியப்பட்டவை எல்லாவற்றையும் மீறி உயர்வதை மட்டும் சில உதாரணங்களால் கூறி, அதன் தத்துவத்தை எடுத்துரைப்பதே என் நோக்கம்.
  • குருடன் ஒதுக்கப்படுவது பழைய வாழ்வு.Helen Keller மலர்ந்தது புதிய நிலை.

  • ஊரைவிட்டு வெளியே வாழ்ந்தவன் தாழ்த்தப்பட்டவன். நாட்டின் ஜனாதிபதியாகி உலகப் பிரசித்தி பெற்ற விருது பெறுவது நாராயணன்.

  • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழவு கோலும் மிஞ்சாது என்பது சென்ற நூற்றாண்டு. ஏக்கரில் ஒரு லட்சம் சம்பாதிப்பது இன்றைய நவீன விவசாயம்.

  • வழுக்கி விழுந்தவன் எழுந்திருப்பதில்லை. வாழ்வு இனி அவனுக்கில்லை என்பது பழைய நிலை. தொழிலில் வழுக்கி விழுந்தவனை வாழ வைக்க ஸ்தாபனம் ஏற்பட்டுள்ளது புதிய நிலை. 

  • திருடனுக்குத் தூக்கு, விபசாரம் அபசாரம் என்பது மனிதன் அறிந்தது. திருடனுடைய அடி திருவடி, விபசாரியின் கற்பு தெய்வீகமுடையது என்பது ஸ்ரீ அரவிந்தம். 

  • ஜடம் என்றால் கல், மண், களிமண், கேலிக்குரியது, அசைவற்றது, எதற்கும் உதவாது என்று நாமறிவோம்.

ஆன்மீகம் ஜடத்திற்கும் சூட்சுமமுண்டு என்கிறது. ஸ்ரீ அரவிந்தம் அதை ஆழமாக ஆமோதிக்கிறது. மேலும் ஸ்ரீ அரவிந்தம் இருளை அடர்ந்த ஒளி என்றும், தீமை என்பதை நன்மையின் சிறப்புருவம் என்றும், வலியை ஆனந்தத்தின் உச்சகட்டம் என்றும் தொடர்ந்து கூறுகிறது. நடைமுறையில் நமக்கு இது எப்படிப் பயன்படும்?

கஷ்டம் வந்த காலத்து மனிதன் துவண்டு போகிறான். சிலர் சமாளிக்கின்றார்கள். அன்பர்கள் கஷ்டம் வந்த காலத்தில், அதிர்ஷ்டம் எதிரான ரூபத்தில் வந்துள்ளதாக அறியவேண்டும். 

அறிந்து பயன்பெற்றவர் அனுபவம் - உள்ள வேலையைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில் எடுத்த முயற்சி பெரிய வேலையைத் தந்தது.

பாஸ் செய்ய முடியாது என்றவன் மனம் மாறியபொழுது பள்ளியில் முதல்வனானான்.

உள்ளூர் பள்ளியை முடிக்காத 9 பேர்களுள்ள குடும்பத்தில் ஒருவன் வெளியூர் பட்டம் பெற்றான்.

ஜடத்தை ஜடமாக ஏற்று மடிவது பழைய வாழ்வு. ஜடத்திற்கு சூட்சுமம் உண்டு என்பதை அறிவது ஸ்ரீ அரவிந்தம். சூட்சுமத்தை அறிந்தால் கஷ்டத்தின் மறுபுறம் தெரியும். அதை ஏற்று, அதன் பயன் பெற முயன்றால் கஷ்டம் மட்டும் தீராது. அதன் மூலம் அதிர்ஷ்டம் வரும்.

 திரு. கர்மயோகி அவர்கள் மலர்ந்த ஜீவியம் பிப்ரவரி 2000 » ஜடத்திற்கும் சூட்சுமம் உண்டு

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam
               
Savitri - 120

Sri Aurobindo's Savitri
Daily Savitri - 120

To turn this frail mud-engine to heaven-use.

A Presence wrought behind the ambiguous screen:
It beat his soil to bear a Titan's weight,
Refining half-hewn blocks of natural strength
It built his soul into a statued god.
The Craftsman of the magic stuff of self
Who labours at his high and difficult plan

- Savitri by Sri Aurobindo, Book 1, Canto III - The Yoga of the King: The Yoga of the Soul's Release, Page 25

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - 23

ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம். 

திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். 

முறைகள்:
  • ஆழத்தில் ஜீவன் விழைவது கிடைக்கும்.
  • நினைவைக் கடந்து செல்வது. 
  • ஆழ்ந்த உறுத்தலை ஆராய்ச்சியால் கரைப்பது அல்லது எரிச்சல்படாமல் இருந்து அழிப்பது.
  • உயர்ந்த வலிமையை உயர்த்துவது.
  • நடக்கும் என்பதால் நடத்திக் கொள்ளாதே.
  • மனத்தை அடிமையிலிருந்து விடுதலை செய். (உ.ம்.) பணத்திற்கு அடிமையாகாதே.
இன்றைய பகுதியில் மேற்கண்ட முறைகளுக்கான (Practices / Methods), கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். 

 -----------------------------------------------------------------------------------------------------
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ...........
-----------------------------------------------------------------------------------------------------
(Use the mouse scroller to read the PDF file)

Download the Audio Format of this book by clicking the following link.
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

Thanks,
AuroMere Meditation Center ,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India

Tags: Sri Aurobindo, Sri Annai, Mother, Yoga Sakthi, Methods, Pratices, Karmayogi, Philosophy, Sri Aravindar, Sri Annai, character, transformation, Yoga, Yoga Sakti in life, 

Thursday, September 20, 2012

Offering - பிரச்சனைகள் தீர்வதில், காணிக்கையின் முக்கியத்துவம் - Message of the Day -Sep 20, 2012

 காணிக்கை

காணிக்கையின் முக்கியத்துவம் 

உண்மையான பக்தியுடன் நீ சமர்ப்பிக்கும் ஒவ்வொரு சிறிய பொருளும் உன் முழுச் சொத்துகளையும் சமர்ப்பிப்பதற்கு ஒப்பாகும்!” 
என்று கூறுகின்ற பரம்பொருளாகிய இறைவன், மேலும் சொல்வார்: “அது போன்ற பக்தியுடன் நீ உன் இஷ்ட தெய்வத்திற்குச் செய்யும் சமர்ப்பணத்தையும் நானே பெற்றுக் கொள்கின்றேன். அது மட்டுமன்று; நீ எந்தத் தெய்வத்திற்கு உன்னை உண்மையுடன் சமர்ப்பணம் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்வதும் நானே”. இன்னும் விளக்கமாகக் கூறுவதாக இருந்தால், மனத்தில் உள்ள பக்தியும், ஆர்வமும் முழுமையாகவும், தூய்மையாகவும் இருந்தால், தெய்வத்திற்குச் செய்யும் அர்ச்சனை மட்டுமில்லை; மற்ற மனிதர்களுக்குச் செய்யும் சேவையும் முடிவில் பரம்பொருளைச் சென்று அடைகின்றது.

இழந்த பார்வையைத் திரும்ப வேண்டுபவன் பார்வையைப் பெற்றபிறகு, தங்கத்திலோ, வெள்ளியிலோ கண் செய்து காணிக்கை செலுத்துகின்றான். கோயில்களில் அர்ச்சனை செய்யும்பொழுது தேங்காய் உடைப்பது வழக்கம். எப்படி ஒவ்வொரு மலருக்கும் ஒரு சிறப்புத் தன்மை இருக்கின்றதோ, அது போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனித் தன்மை உண்டு.

பிரச்சினைகள் தீர வேண்டும் என்று பிரார்த்திப்பவர் பொருளைக் காணிக்கையாக அளிப்பது வழக்கம். இந்த வழக்கம் எல்லா மதங்களிலும் உள்ள மக்களிடமும் இருக்கின்றது. அது அன்னையிடமும் பொருந்தும். ஆத்ம சிலாக்கியத்தை மட்டும் விழையும் அன்பர்கள் மலர், பத்ரம் (இலை), பழம் முதலியவற்றைக் கொடுப்பார்கள். இவ்வாறாக தெய்வ வழிபாட்டில் ஏதேனும் ஓர் உருவத்தில் காணிக்கை இடம் பெறுகின்றது.

முதியவரான வீரசைவ பிரம்மச்சாரி ஒருவர் அன்னையைத் தரிசிக்க வந்தார். ஆசிரமத்தில் அவருக்கு மேற்கூறிய விளக்கம் தெரிவிக்கப்பட்டது. “அன்னைக்குக் காணிக்கை அளித்தால், அது உங்களுக்குப் பெரிய நன்மையைத் தேடித்தரும்” என்று அவரிடம் கூறப்பட்டது. அவரோ, “நான் காணிக்கை செலுத்தப் போவதில்லை. எனக்குப் பொருள் இலாபம் வேண்டாம். அன்னையின் ஆசீர்வாதம் மட்டும்தான் தேவை” என்று கூறி, அன்னைக்கு மலர்க் காணிக்கையைச் செலுத்தி, அன்னையின் ஆசீர்வாதத்தைப் பெற்றதோடு ஆத்ம விளக்கமும் பெற்றார்.

அவர் ஒரு தொழில் அதிபர். 30 ஆண்டு காலமாகத் தொழில் செய்து வந்தும் பெரிய வளர்ச்சி எதுவும் இல்லை. ஆனால், அன்னையைத் தரிசனம் செய்தபிறகு அவருடைய தொழில் நிலை முற்றிலும் மாறிவிட்டது. இந்த முப்பதாண்டு காலத்தில் கிடைத்த ஆர்டர்களைவிட இந்த ஓராண்டு காலத்தில் ஆர்டர்கள் அதிகமாகக் கிடைத்தன. அதாவது தொழில் 30 மடங்கு உயர்ந்தது. என்றாலும் வருமானம் மட்டும் உயரவில்லை. பழைய வருமானமே நீடித்தது.

அதற்கு என்ன காரணம்? சிந்தித்தார். முன்பு அன்னையைத் தரிசிக்கச் சென்ற சமயத்தில், ‘நான் காணிக்கை செலுத்தப் போவதில்லை. எனக்குப் பொருள் இலாபம் வேண்டாம். அன்னையின் ஆசீர்வாதம் மட்டும்தான் தேவை’ என்று, தாம் கூறியது அவருக்கு நினைவு வந்தது. அவர் விரும்பியது போலவே அன்னையின் ஆசீர்வாதம் கிடைத்தது. ஆர்டர்களும் 30 மடங்கு பெருகின. ‘பொருள் இலாபம் வேண்டாம்’ என்றார். அதனால் இலாபம் கிடைக்காமல் போயிற்று. அவர் தம் தவற்றை உணர்ந்து அன்னையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு காணிக்கை செலுத்தினார். மூன்றே மாதங்களில் 30 ஆண்டு கால வருமானத்தைப் பெற்றார்.

வழிபாட்டில் காணிக்கைக்குள்ள முக்கிய இடத்தைச் சுட்டிக் காட்டும் நிகழ்ச்சியாக அது விளங்குகிறது.

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam
               
Savitri - 119

Sri Aurobindo's Savitri
Daily Savitri - 119

Through which his Glory shines for whom we were made
And we break into the infinity of God.
Across our nature's border line we escape
Into Supernature's arc of living light.
This now was witnessed in that son of Force;
In him that high transition laid its base.
Original and supernal Immanence
Of which all Nature's process is the art,
The cosmic Worker set his secret hand

- Savitri by Sri Aurobindo, Book 1, Canto III - The Yoga of the King: The Yoga of the Soul's Release, Page 24

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series

Wednesday, September 19, 2012

சட்டம், நாணயம் - Message of the Day - Sep 19, 2012

சட்டம், நாணயம்

சிறிய சொத்து. குடும்பத் தகராற்றால், குடும்பத்தில் உரிமையில்லாதவர் சொத்தை அனுபவிக்கின்றனர். உரிமையுள்ளவருக்குக் கேட்டுப் பெறும் மனநிலையில்லை. நாட்கள் கடந்தன. குடும்பத் தலைமை மாறும் நேரம். மாறியபின் சொத்து என்ன ஆவது? இன்று தவறாக அனுபவிப்பவர் சொத்தையே எடுத்துக்கொள்ளும் நிலை. சொத்து, பணம் விஷயத்தில் உரிமையுள்ளவர் கேட்டாலும், அனுபவிப்பவரிடமிருந்து பெறுவது அரிது. அதுவே உலக அனுபவம். அன்னை அனுபவம் வேறு. தகுதியில்லாதவருக்கு அன்பர் உரிமையை விட்டுக்கொடுத்தால், சூட்சும உலகில், அன்பருக்கு உள்ளதும் போகும். பிறர் பொருள் நம்மிடமிருக்கக்கூடாது என்பதுபோல் நம் உடமை உரிமையற்ற அடுத்தவர்க்குப் போகக்கூடாது என்பதும் உண்மை.

அன்பர் தினமும் ஒரு முறை அன்னையிடம் சொல்வதை எழுத்தால் எழுதி வைப்பார். தலைமை மாறும் நேரம் தலைமை மறைந்தது. உரிமையற்ற அனைவரும் ஒன்றுசேர்ந்து உரிமையுள்ளவரை சொத்தைப் பெற்றுக் கொள்ளும்படிக் கேட்டனர். அன்பரைப் பொருத்தவரை அது அன்னை செயல்.

அந்தச் சொத்து சம்பந்தமான பணம் ஒன்று, தொகை கணிசமானது. சொத்து வந்தவுடன் பணத்திற்குரிய தஸ்தாவேஜும் வந்தது. அன்பருக்கு இதுபோன்று ஒரு விஷயமிருப்பதே தெரியாது. தஸ்தாவேஜு காலாவதியாகி மாதக்கணக்காகிவிட்டது. அதனால் அன்பர் அதைப் பொருட்படுத்தவில்லை. மேலும் பல மாதங்கள் கழிந்து ஒரு சமயம் உறவினர் ஒருவர் வந்தார். "அந்தப் பணம்'' என்ன ஆயிற்று எனக் கேட்டார். காலாவதியாகிவிட்டது என்றார் அன்பர். உறவினர் அந்த தஸ்தாவேஜை எடுத்துப் போனார். பணத்துடன் திரும்பிவந்தார். "உலகில் சட்டமா முக்கியம், நாணயமில்லையா?'' என்று கூறி பணத்தை உரியவரிடமிருந்து பெற்று வந்ததாகக் கூறினார்!

சொத்துக்காகச் செய்த பிரார்த்தனை, தாமறியாத பணம் காலாவதியான

பின் வர உதவியது பணத்தைப் பெற்று வந்த உறவினர்

அறியாத ஒன்று!

Source: மலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2000 » அன்பர் உரை

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam
               
Savitri - 118

Sri Aurobindo's Savitri
Daily Savitri - 118

In his climb to a peak no feet have ever trod,
He seeks through a penumbra shot with flame
A veiled reality half-known, ever missed,
A search for something or someone never found,
Cult of an ideal never made real here,
An endless spiral of ascent and fall
Until at last is reached the giant point