சட்டம், நாணயம் சிறிய சொத்து. குடும்பத் தகராற்றால், குடும்பத்தில் உரிமையில்லாதவர் சொத்தை அனுபவிக்கின்றனர். உரிமையுள்ளவருக்குக் கேட்டுப் பெறும் மனநிலையில்லை. நாட்கள் கடந்தன. குடும்பத் தலைமை மாறும் நேரம். மாறியபின் சொத்து என்ன ஆவது? இன்று தவறாக அனுபவிப்பவர் சொத்தையே எடுத்துக்கொள்ளும் நிலை. சொத்து, பணம் விஷயத்தில் உரிமையுள்ளவர் கேட்டாலும், அனுபவிப்பவரிடமிருந்து பெறுவது அரிது. அதுவே உலக அனுபவம். அன்னை அனுபவம் வேறு. தகுதியில்லாதவருக்கு அன்பர் உரிமையை விட்டுக்கொடுத்தால், சூட்சும உலகில், அன்பருக்கு உள்ளதும் போகும். பிறர் பொருள் நம்மிடமிருக்கக்கூடாது என்பதுபோல் நம் உடமை உரிமையற்ற அடுத்தவர்க்குப் போகக்கூடாது என்பதும் உண்மை. அன்பர் தினமும் ஒரு முறை அன்னையிடம் சொல்வதை எழுத்தால் எழுதி வைப்பார். தலைமை மாறும் நேரம் தலைமை மறைந்தது. உரிமையற்ற அனைவரும் ஒன்றுசேர்ந்து உரிமையுள்ளவரை சொத்தைப் பெற்றுக் கொள்ளும்படிக் கேட்டனர். அன்பரைப் பொருத்தவரை அது அன்னை செயல். அந்தச் சொத்து சம்பந்தமான பணம் ஒன்று, தொகை கணிசமானது. சொத்து வந்தவுடன் பணத்திற்குரிய தஸ்தாவேஜும் வந்தது. அன்பருக்கு இதுபோன்று ஒரு விஷயமிருப்பதே தெரியாது. தஸ்தாவேஜு காலாவதியாகி மாதக்கணக்காகிவிட்டது. அதனால் அன்பர் அதைப் பொருட்படுத்தவில்லை. மேலும் பல மாதங்கள் கழிந்து ஒரு சமயம் உறவினர் ஒருவர் வந்தார். "அந்தப் பணம்'' என்ன ஆயிற்று எனக் கேட்டார். காலாவதியாகிவிட்டது என்றார் அன்பர். உறவினர் அந்த தஸ்தாவேஜை எடுத்துப் போனார். பணத்துடன் திரும்பிவந்தார். "உலகில் சட்டமா முக்கியம், நாணயமில்லையா?'' என்று கூறி பணத்தை உரியவரிடமிருந்து பெற்று வந்ததாகக் கூறினார்! சொத்துக்காகச் செய்த பிரார்த்தனை, தாமறியாத பணம் காலாவதியான பின் வர உதவியது பணத்தைப் பெற்று வந்த உறவினர் அறியாத ஒன்று! Source: மலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2000 » அன்பர் உரை Thanks, AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center) (ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்) Pallikaranai, Chennai. TN, India. Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam |
Pages
▼
No comments:
Post a Comment