Pages

Monday, February 11, 2013

ஆன்மாவை அல்லது அன்னையை அழைப்பதில் ஒருவர் வெற்றி பெறுவது எப்படி?


ஆன்மாவை அல்லது அன்னையை அழைப்பதில் ஒருவர் வெற்றி பெற திரு. கர்மயோகி கூறும் வழிகள் :

ஆன்மாவை அழைப்பதில், பலரும் வெற்றி அடைய முடியும். அவர்களுக்கு, இதை மேலும் எப்படி வலுப்படுத்துவது என்பதுதான் கேள்வி. அதை செயல்படுத்த முடியாதவர்களுக்கு ஒரு வழி உண்டு. ஒருவர் அடிக்கடி கோபப்படும் பொழுது, மற்றவர்கள் அவரை அந்த இடத்தை விட்டு அகன்று, தனிமையில் அமர்ந்து சிந்திக்கும்படி அறிவுறுத்துவார்கள். அப்பொழுது அவருடைய கோபம் பெரும்பாலும் மறைந்து விடுகிறது. கோபம் போனவுடன், சிந்திக்க முடிகிறது. கோப உணர்வுக்கு அடுத்த உயர்ந்த நிலை மனம். ஆன்மா மனத்தைவிட உயர்ந்த நிலை. ஒருவர் ஆன்மாவை அழைக்கும் பொழுது, எண்ணங்கள் குறிக்கிட்டு அதைத் தடுக்கிறது. எண்ணங்கள் குறுக்கிடுவதற்குக் காரணம், மனிதன் எண்ணங்களோடு ஒன்றிப்போய் விடுகிறான். இதை உணர்ந்து கொண்ட ஒருவர், சிந்தனையிலிருந்து எண்ணங்களை விலக்கினால், ஆன்மாவை அழைப்பது சுலபமாகிவிடும். மீண்டும் ஒருவர் அது முடியாது என்று சொல்லக் கூடும்.

இப்படிப்பட்டவர்கள் தினந்தோறும் ஒரு நேரத்தை ஒதுக்கி அன்னையை அழைக்க வேண்டும். அதில் நேரம் போகப் போக எண்ணங்கள் குறைந்து அமைதி எழும். அன்னை, ஆன்மாவைவிட சக்திவாய்ந்தவர். இவ்வாறாக அன்னையை தினந்தோறும் சில நாட்கள் வரை தன்னுள் அழைத்த பிறகு, ஒரு நாள் முழுவதும் 12 மணி நேரம் அழைக்க மாற்ற வேண்டும். பிறகு 12 மணி நேரம் முழு நாள் பிரார்த்தனையை, மூன்று நாட்கள் அழைப்பாக அன்னையை அழைக்கும் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்.

அன்னையையோ, அல்லது ஆன்மாவையோ, அழைக்கும் முயற்சியை மேற்கொண்டபின், மூன்று நாட்கள் பிரார்த்தனைக்குப் பின், அன்னை ஒருவரின் ஜீவனின் மேல்நிலையில் வந்து வெளிப்பட்டதும், உடனே சில மாற்றம் ஏற்பட்டு, சில நிகழ்ச்சிகள் மூலம் செயல்படுவதை அவர் காண்பார்.


  1. அவருடைய அநேக சிறு, சிறு பிரச்சனைகள் உடனே மறைவதைக் காண்பார்.
  2. வீட்டின் சூழல் நிச்சயமான உடன்பாடாக மாறிய நிலையில் இருக்கும்.
  3. தீர்க்க முடியாத பிரச்சனை ஒன்று இருந்தால், அதில் தீர்வு காண்பதற்கு வழி பிறக்கும்.


அன்னையை அழைக்கும் பொழுது தோன்றும் இடையூறுகளும், கஷ்டங்களும் மறைந்து, ஆன்மா அல்லது அன்னை, அதிக அளவில் தன்னுடன் தொடர்ந்து இருப்பதை உணர்வார்.

அவர் ஆன்மாவை அழைப்பதை, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காலையிலும், மாலையிலும் அரை மணி நேரம் பிரார்த்தனையாக செய்ய வேண்டும். அது அவரை உயர்ந்த ஜீவிய நிலைக்கு உயர்த்தும். பிறகு அவர் செய்ய வேண்டியது,


  1. உண்மையை மட்டுமே பேச முயற்சிக்க வேண்டும்.
  2. வீட்டை, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அந்த சுத்தம் அவர் வேறு எங்கேயாவது பார்த்த அதிகமான சுத்தத்தைப் போல் இருக்க வேண்டும்.
  3. கூச்சல் போடாமல் மெதுவாக பேச வேண்டும்.
  4. எல்லா விஷயத்திலும், மற்றவருடைய கருத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.
  5. அமைதியாக இருப்பதில், அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும்.
  6. எந்த ஒரு வேலையையும் செய்ய ஆரம்பிக்கும் முன், அன்னையை நினைவு கூர வேண்டும்.
  7. பழைய தவறுகளை அறிந்து, அவை எதிர்காலத்தில் நிகழா வண்ணம் நேர்மையுடன் விலக்க வேண்டும்.
  8. தன்னை மற்றவருக்கு வழங்குவதை கடைபிடிக்க வேண்டும்.


ஒருவருடைய ஆன்மாவின் அழைப்பை, ஆன்மா ஏற்றுக்கொண்டது என்று தெரிந்ததும், அதை அவர் வாழ்வில் வளர்த்துக்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். அதை முறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்வதால் ஆன்மாவை அழைப்பதில், மேலும் முன்னேற்றம் ஏற்படும்.


- திரு கர்மயோகி அவர்கள்,  ஆன்மீகமும் ஐஸ்வர்யமும் » 12 . அனுபந்தம் - I

No comments:

Post a Comment