ஆன்மா கெட்ட சகுனத்தையும், நல்ல சகுனமாக மாற்றும்ஆன்ம விழிப்புள்ளவர்கள், நடப்பவைகள் எல்லாம் அவர்களுக்கு நல்லவைகளாகத் தோன்றுவதால் சகுனங்களை புறக்கணிக்கிறார்கள். எப்பொழுதும் அவர்கள் நல்ல சகுனங்களையே காண்கிறார்கள்.
வாழ்க்கையை ஒரு ஜீவனாக பாவித்து அது நம்மோடு ஒரு சிம்பல் மொழியில் பேசக்கூடியது என்பதை உணர்பவருக்கு அவர் காண்பது மற்றும் கேட்பது எல்லாம் அவருக்கு சகுனங்களாக அமையும்.
நீ வீட்டை விட்டு கிளம்பும்போது தெருவில் யாராவது ஒருவர் மற்றவரிடம் பேசும்போது "இன்று உனக்கு அதிர்ஷ்டம்” என்ற சொல் காதில் விழும் பொழுது அது உனக்கு நல்ல சகுனமாகும். ஒருவர் கெட்ட சகுனத்தைக் கண்டால் அவர் என்ன செய்வார்? சகுனத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் கெட்ட சகுனத்தைக் கண்டால் வீட்டை விட்டு புறப்பட மாட்டார்கள்.
ஆன்மாவில் (அன்னையில்) நம்பிக்கையுள்ளவர்கள் ஒரு நிமிடம் தாமதித்து ஆன்மாவை (அன்னையை) அழைத்துவிட்டு புறப்பட்டுச் செல்வார்.
அப்பொழுது சூழ்நிலை மாறி உடனே நல்ல சகுனம் தோன்றும். மேல் நிலைக்கு வரும் ஆன்மா கெட்ட சகுனத்தை நல்ல சகுனமாக மாற்றும் சக்தியுடையது.
முக்கியமான வேலை நிமித்தமாக ஒருவர் ஓரிடத்திற்கு போகும் போது பஸ்சை பிடிக்க வேகமாக ஓடினார். அதற்குள் பஸ் கிளம்பி விட்டதைக் கண்டார். அவர் அடுத்த பஸ்சில் போக முடியும் என்றாலும் இந்த பஸ்சை தவறவிட்டதை அவர் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. பஸ், பேருந்து நிலையத்தின் வெளிப்புற நுழைவு வாயிலை அடைந்தது. அவர் உடனே தனக்குள் சென்று தன்னுடைய ஆன்மீக ஆதாரத்தை தேடினார். மனதில் ஒரு தெளிவு தென்பட்டது. உடனே சூழ்நிலை மாறியது. பஸ்சும் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டது. கண்டக்டர் இந்த பிரயாணியை அழைத்து, பஸ்சில் பிரயாணிகளின் எண்ணிக்கையில் தவறு நிகழ்ந்துவிட்டதாகவும், இன்னும் சில இடங்கள் காலியாக உள்ளனவென்றும் பஸ்சில் ஏறும்படி கூறினார். இதே போன்று மற்றொரு பயணிக்கும் பஸ்சை தவறவிட்ட அனுபவம் ஏற்பட்டு, அவர் போகும் ஊருக்கு டாக்சி கிடைத்து, பஸ் டிக்கெட் எவ்வளவோ அதே கட்டணத்திற்கு பயணம் செய்யும் வாய்ப்புப் பெற்றார். இது எதை குறிப்பிடுகிறது என்றால் உள்ளே இருக்கும் ஆன்மா செயல்படத் தொடங்கியவுடன் புறச்சூழ்நிலையில் மாற்றம் நிகழ்கிறது. பலனின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. இதில் முக்கியம் என்னவென்றால் உள் வேலையின் முயற்சியினால் சகுனத்தின் தன்மையை மாற்றமுடியும். ஆன்மாவை நெருங்க முடிந்தவருக்கு அது அவரை வேறு நிலைக்கு கொண்டு செல்லும்.
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.
TN, India.
Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam Spirituality and Prosperity ஆன்மீகமும் ஐஸ்வர்யமும் » 05 . பகுதி - 4 |
Pages
▼
No comments:
Post a Comment