Pages

Monday, October 1, 2012

Prosperity Day Message : இல்லறத்தில் துறவறம் (பூரணயோகி) - Oct 1, 2012


  

சைத்தியபுருஷன் (வாழ்வின் ஆன்மா) என்பதை நம் அன்பர்கள் நன்றாக அறிவார்கள்.அதை எப்படி இங்குக் கொண்டு வருவது?

1) Being, becoming, Being of the becoming

  2) புருஷன், பிரகிருதி, பிரகிருதியின் புருஷன்

  3) ஆன்மா, வாழ்வு, வாழ்வின் ஆன்மா (சைத்திய புருஷன்)
இப்பிரிவினையைத் தெளிவாகப் புரிந்துகொண்டால் ஸ்ரீ அரவிந்தர் கூறும் 3 நிலைகளை - மேலே சொன்னவற்றிற்குரிய நிலைகள் - விளக்க முடியும். எளிய பாஷையில், மேற்சொன்ன மூன்றை - மூன்றும் ஒன்றே.

துறவறம் - இல்லறம் - இல்லறத்தில் துறவறம் என்று கூறலாம். மேலும் விளக்கம் தேவைப்பட்டால்,

a)இல்லறம் (மனிதன்) - இன்று நாம் வாழ்வது, இன்ப துன்பங்களுடையது.  கர்மத்திற்குக் கட்டுப்பட்டது, அதிர்ஷ்டம் நமக்கில்லை, எப்போதோ தானே வரலாம், நல்லது நடக்க வெகு நாளாகும். காலத்திற்குட்பட்டது.(வாழ்வு, பிரகிருதி, காலம்)

b)துறவறம் (தவசி) - தவம், இல்லறத்தின் இடர்ப்பாடுகளற்றது. வாழ்க்கைக்குரியதல்ல, கடவுளை நாடுவது, காலத்தைக் கடக்கவல்லது.(இறைவனுக்குரியது) புருஷன், காலத்தைக் கடந்தது, இறைவன் செயல் விரைவாக நடக்கும்.

c)இல்லறத்தில் துறவறம்  (பூரணயோகி) - துறவியின் தூய்மையுடன் இல்லறத்தை நடத்துவது, இல்லறம் தாழ்ந்தது என்ற மனநிலையிலிருந்து மாறி, இல்லறம் துறவியைப் பூரணப்படுத்தும் என அறிந்து, இறைவனின் கடமைகளை அவன் சார்பில் உலகில் பூர்த்தி செய்வது, காலமும், காலத்தைக் கடந்த நிலையும் சந்திக்குமிடம்.(பூரணயோகிக்குரியது, சைத்திய புருஷன்; காலமும் காலத்தைக் கடந்தநிலையும்சேருமிடம்). Instantaneous miraculousness க்ஷணத்தில் பூர்த்தியாகும் என்று பகவான் கூறும் நிலை.

மனித செயல் பூர்த்தியாகப் பல ஆயிரம் ஆண்டுகளாகும். தவசிக்கு இறைவன் செயல் விரைவில் பூர்த்தியாகும் - வாழ்வில்லை.

பூரணயோகிக்கு வாழ்வில் எந்தக் காரியமும் க்ஷணத்தில் பூர்த்தியாகும்.

இந்தியர் இந்த மூன்றாம் நிலைக்குரிய மனநிலையை நாட்டை அபிவிருத்தி செய்வதில் மேற்கொண்டால் எந்த வேகத்திலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்.

-  பிரார்த்தனை பலிக்க வேண்டும் By - Sri Karmayogi Avarkal

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam இல்லறத்தில் துறவறம் (பூரணயோகி)
               



No comments:

Post a Comment