உடல்நலன் பற்றிய ஸ்ரீ அன்னை,
ஸ்ரீ அரவிந்தரின் கருத்துக்கள் - 1
- உடல் எப்பொழுதும் நலமாக இருக்கிறது. அதன் நலத்தை அதிகரிக்கும் அவசியம் இல்லை என்பது ஸ்ரீ அன்னை, ஸ்ரீ பகவான் கருத்து.
- மனம் குறுக்கிட்டு உடலின் போக்கை மாற்றும்பொழுது உடலுக்குச் சோர்வு ஏற்படுகிறது.
- மனம் என்பது உலகில் உற்பத்தியானபின், அதன் ஆட்சியில் உலகம் வந்து விட்டது. அதற்கு உடலும், மற்ற ஜடப்பொருட்களும் உட்பட்டன. மனம் என்பது ஜீவனின் ஒரு பகுதி. அது ஆட்சி செய்ய ஆரம்பித்தால் அதன் ஆட்சியில் நியாயம் இருக்க முடியாது.
- உலகம் ஏற்பட்ட முதலில், ஜடம் சுதந்திரமாய் வாழ்ந்தது. உணர்வு எழுந்தபின் ஜடம் சுதந்திரத்தை இழந்தது. மனம் வந்தபின் ஜடம் கடுமைக்கு உட்படுத்தப்பட்ட்டது.
- இவ்வாறு நெடுநாளாய் துன்பப்படும் மனம் தன்னைக் கொடுமைப்படுத்துவதை மட்டுமே எதிர்பார்க்கிறது என்கிறார் அன்னை.
- ஆயிரத்தில் ஒன்றே நோய். மற்றவை நாம் ஏற்படுத்துபவை என்கிறார் அன்னை.
- உடல் மனத்திற்கு கட்டுப்பட்டது என்பதற்கு விளக்கமோ உதாரணமோ தேவையில்லை. ரப்பர் பாம்பு மேலே பட்டவுடன் உடல் பதறுகிறது. மனம் நம்புவதை உடல் ஏற்கிறது.
- உடலுக்கு நோய் இல்லை. நோய் வந்தாலும் தானே குணப்படுத்திக் கொள்ளவல்லது.
- உடலை அதிகமாகக் கவனித்தால் நோயுறும்.
உடல் நோய்வாய்ப்பட்டால் அதைக் குணப்படுத்த அன்னை கூறும் வழிகளைக் காண்போம்......
ஸ்ரீ அன்னை, அரவிந்தரின் கருத்துக்கள் தொடரும்...........
Reference Book : Venugaanam - By Thiru Karmayogi Avarkal
No comments:
Post a Comment