Pages

Thursday, October 3, 2013

நம்மை ஆக்கிரமிக்கும் எண்ணங்களில் இருந்து விடுபடுவது எப்படி?

மனத்தைப் பிடித்து உலுக்கும் எண்ணத்தை (pre occupation) விடாமல், ஒருநிலைப்படுதல், சமர்ப்பணம், சரணாகதி, ஆர்வம் ஆகியவை நிரந்தரமாக நிற்கா.நாமே உவந்து அவற்றை விடுவது கடினம்.உயர்ந்த எண்ணத்தை ஏற்று, அங்கு மனம் நிலைத்தால், உலுக்கும் பேயின் ஆட்டம் குறையும்.

எழுத்தாளர்கள் எழுதும் உற்சாகத்திற்காகக் காத்திருப்பார்கள். அனுபவசாலிகள் எழுத ஆரம்பித்தால் உற்சாகம் வரும் என்பார்கள். உற்சாகம் எழுந்து பிறகு எழுதுவதே நாம் அறியக்கூடியது.ஆனால் எழுத ஆரம்பித்தபின், ஓரிரு பக்கங்கள் எழுதியவுடன் உற்சாகம் வருவதுண்டு. இதுபோன்ற இயற்கை அமைப்புண்டு.பல வருஷங்களாகப் பிரிந்துள்ள நண்பர்கள், கணவன், மனைவி எதிரிகளாக நினைத்தாலும் பழக ஆரம்பித்தபின் துவேஷம் மறைந்து, பழைய பிரியம் எழுவதுண்டு.பள்ளியை முடித்தபின் காலேஜில் சேர்ப்பார்கள்.முடிக்காமல் சேர்க்கமாட்டார்கள்.மனம் உலுக்கப்படுவதை நிறுத்தாமல், யோக அம்சங்களான சரணாகதி போன்றவை நிலைக்காது என்பது உண்மை.பள்ளியை முடித்து கல்லூரிக்கு வருவதுபோல் சட்டத்தைத் திட்டவட்டமாகப் போட்டால், எல்லையைக் கடந்து வரும் திறமையுள்ள பலருக்கு இது தடையாக அமையும்.உலுக்கும் எண்ணத்தை விலக்க முயன்றால், விலக்க முடியாது எனத் தெரியும்.சில சமயங்களில் அது வலுப்படும்.எனவே உலுக்கும் எண்ணத்தை சற்றுப் புறக்கணித்து உயர்ந்ததை ஏற்று அதனுடன் நெருங்கி வந்தால், உலுக்கும் எண்ணம் வலுவிழந்து மறைவதைக் காணலாம்.இதுபோல் எல்லைக்கோட்டைத் தாண்டுதல் முடியும்.

குளத்தில் அடிமட்டத்தில் சேறுள்ளது.நீர்மட்டம் உயர்ந்தால் நீர் தெளிவாக இருக்கும்.அதனால் சேறு போய்விட்டது என்று பொருளன்று. நம்மை உலுக்கும் எண்ணங்கள் யோகசித்தி அளவுகடந்து முதிர்ந்து கனிந்த பிறகும் அடியில் குளத்துச் சேறுபோல் இருக்கும்.பூரணயோகம் திருவுருமாற்றத்தை நாடுவது.முதலில் மனமும், பிறகு உணர்வும், முடிவில் உடலும் திருவுருமாற்றம் அடைய வேண்டும்.இங்கு நாம் பேசுவது திருவுருமாற்றமில்லை.அதற்கு ஆரம்ப நிலையான ஆர்வம், சரணாகதி, சமர்ப்பணம் ஆகியவை.


மனத்தை நிலைப்படுத்தி ஒரு சில யோக அம்சங்களைப் பெறுதல் முதல் நிலை.அதனால், உலுக்குவதைப் புறக்கணித்து, சமர்ப்பணத்தை நாடுதல் பெரும் பலனைத் தரும்.அடுத்த நிலையில் மனம் திருவுருமாற்றமடைய இதே முறை பலன் தரும் எனினும், இந்த அளவு பலன் இருக்காது.அடுத்தாற்போல் உணர்ச்சி திருவுருமாற்றமடையும்பொழுது பலன் மேலும் குறைவாக இருக்கும். அன்னை, இவையிரண்டும் எüயவை என்கிறார்.முடிவான உடல் திருவுருமாற்றத்தில் இம்முறை எதிரான பலன் தரும்.ஏனெனில் உடலே சேறு.சேற்றை விலக்கி, மனத்தில் திருவுருமாற்றத்தை நாடினோம். உடலில் சேற்றையே திருவுருமாற்றம் செய்ய வேண்டும்.

கொலை, கொள்ளை, நடந்ததைப்பற்றிப் படிக்கும்பொழுது மனம் அருவெறுப்பு அடைகிறது.நம்மூரில், நம் குலத்தினரைக் கொலை செய்த விவரத்தைப் படித்தால், மனம் சலனமற்றுக் கேட்டுக்கொண்டிருந்தால், மனம் திருவுருமாற்றமடைந்ததாகப் பொருள். உடலில் ஊசியால் குத்தினால், தேள் கொட்டினால், வலி தெரியாமல், வலிக்குப் பதிலாக ஆனந்தம் எழுந்தால் உடல் திருவுருமாற்ற மடைந்ததாகும்.

நாமிருப்பது முதல் நிலையின் முதற்படி.இங்குச் சில உபாயங்களைப் பயன்தரும் வகையில் பின்பற்றலாம்.யோக வாழ்வை மேற்கொள்ள இந்த உபாயமும், இதுபோன்ற எந்த உபாயமும் அதிகப் பலன் தரும்.யோகத்தை மேற்கொண்டால் பலன் குறையும்.யோகம் முதிர்வதால், உபாயங்கள் பயன் தாரா.தடையாகவுமிருக்கும்.அந்நிலையில் நமக்கு ஒன்றே ஒன்றுதான் உதவும், அது sincerity உண்மை என்கிறார் அன்னை.


Book : யோக வாழ்க்கை விளக்கம் IV - திரு கர்மயோகி அவர்கள் 

No comments:

Post a Comment