Pages

Monday, September 2, 2013

சிந்தனை மணிகள் - ஸ்ரீ அரவிந்தரின் Thoughts and Aphorisms

From a translated book (Sinthanai Mnikal ) of "Thoughts and Aphorisms"by Sri Aurobindo in Tamil

சிந்தனை மணிகள் - ஸ்ரீ அரவிந்தரின் Thoughts and Aphorisms என்ற நூலின் தமிழ் மொழி பெயர்ப்பில் இருந்து சில துளிகள்.


  • நீங்கள் கொண்ட கொள்கைகளுக்கு அறிவென்ற நாமத்தைச் சூட்டாதீர்கள். மற்றவர்கள் போற்றும் கொள்கைகள்  பிழையிலிருந்தும், அஞ்ஞானத்திலிருந்தும், வஞ்சனையிலிருந்தும் எழுகின்றன என்று கருதாதீர்கள். பிற வகுப்பினரின் வேரூன்றிய கொள்கைகளையும் அவர்களின் சகிப்புத் தன்மையின்மையும் கண்டு எள்ளி நகையாடுதல் அழகன்று. 

  • பயனற்ற பொருளற்ற வறட்டு வேதாந்த வலைகளில் சிக்காமல், அவற்றைப் புறக்கணிப்பீர். பசையற்ற பாழான அறிவாம் புழுதி உம்மீது படியா வண்ணம் அகன்றே நிற்பீர். நல்லியல்பும் நற்செய்கையும் , வாய்ந்து அரும்படைப்பையும், அமர வடிவையும் இடையறாத இன்பத்தையும் நல்குகின்ற முறையிலே பயன்படுத்திக் கொள்ளும் அறிவே சாலச் சிறந்ததாகும்.

  • ஆண்டவன் என் அகக் கண்களைத் திறந்துவிட்டான். அப்பொழுது இழிவில் பெருந்தன்மையையும், அருவருப்பில் ஒரு கவர்ச்சியையும், சிதைவில் ஒரு பூரணத்தையும், கோரத்தில் ஒரு வனப்பையும் நான் கண்டேன்.

  • பிறர் துன்புறுவதைக் காணும் தோறும் இப்படியா இடும்பை வர வேண்டும் என்று நான் வருந்துவேன். ஆனால் எனக்குப் புறம்பாயுள்ள ஒரு பூரண ஞானம் இந்தத் துன்பத்தில் எழும் ஒரு நலத்தைக் கண்டு அத்துன்பத்தை ஏற்கிறது.

- ஸ்ரீ அரவிந்தர் 



No comments:

Post a Comment