Pages
(Move to ...)
Home
About Us
Contact Us
Prayer Time / Darshan Days
Books by Sri. Karmayogi
Prayers / Methods to Solve Problems
▼
ஸ்ரீ அரவிந்தர், அன்னை கூறியவை - PART2
திரு. கர்மயோகி அவர்களின் ஸ்ரீ அரவிந்தம் என்ற தொகுப்பில் இருந்து.
இறைவனுக்கு மனிதன் முக்கியம், மனிதனுக்கு இறைவன் முக்கியமில்லை
அறிவு புலனை விட்டகன்றால், ஆத்ம ஞானமாகிறது.
அன்னயை அறிவது அன்னை நம்மை அவரிடம் அழைப்பதாகும்.
அன்னையின் இருப்பிடம் எக்காரணத்தால் வருவதும் அதுபோன்ற அழைப்பாகும்.
அறிவை நம்பாதே. ஆன்மாவை நம்பு.
பிறர் மீது குறை கூறாதே.
எந்த நேரமும் இறைவனை நெருங்க முயல வேண்டும்.
பொய் பாதாளத்திற்கு அழைத்துச் செல்லும்.
மனிதனுக்கும், மனிதகுலத்திற்கும் சத்தியமே உறுதுணை.
மனிதனால் முடியாததை மலர்கள் பூர்த்தி செய்யும்.
நாம் பயன்படுத்தும் பொருள்கள் ஜீவனுள்ளவை.
நம் கவனத்திற்காக அவை ஏங்குகின்றன.
பிரார்த்தனை க்ஷணத்தில் பலிக்கும். அறிவு குறுக்கிட்டு தாமதப்படுத்துகிறது.
அழைத்தால் மழை வரும்.
கூப்பிட்டால் தெம்பு வரும்.
ஜடமே சச்சிதானந்தம்.
உலகை சிருஷ்டித்தது சத்திய ஜீவியம், பிரம்மா இல்லை, பிரம்மாவின் பிறப்பிடம்.
இறைவனைக் கண்டு கொண்ட ரிஷிகள்,. சிருஷ்டியை அறியவில்லை
கண்டார் விண்டிலர் என்பதை மாற்றி கண்டவர் விண்டுரைக்க முடியும்.
தம்மை நாடி வரும் அருளை அழிக்க முனைவது மனித இயல்பு.
இந்திய விவசாயி, மேல் நாட்டு மேதையை விட, இறைவனை அறிவான்.
காலத்துள் உள்ள இறைவன், காலத்தைக் கடந்த இறைவனைவிடப் பெரியவன்.
அன்னையை ஏற்றபின் ஆயுள் உள்பட எதுவும் முடிவு அல்ல.
அன்னை நம் அழைப்புக்காகக் காத்திருக்கிறார்.
நாம் அன்னையைவிட வாழ்வை அதிகமாக நாடுகிறோம்.
வெறுப்பு செறிவான அன்பு.
வாழ்வு அட்சய பாத்திரம், அங்கு வறுமையில்லை, வறுமை மனத்திற்கு உரியது.
வாழ்வில் விரயம் என்பது இல்லவேயில்லை.
குழந்தைகளை அடிக்கக் கூடாது.
குழந்தைகளில் வெளிப்படும் குணம் பெற்றோருடைய குணம்.
ஆயுள் முழுவதையும் செய்த யோகத்தை ஒரு பொய் அழிக்கும்.
மோட்சத்தை நாடுவது ஆன்மாவின் சுயநலம்.
தன்னையறிந்த பகுதி, தன்னையறியாத முழுமையை விடப் பெரியது.
பேரின்பத்தைவிடப் பெரிய இன்பத்தை மனிதனுக்கு இறைவன் வாழ்வு மூலம் அளிக்கிறான்.
மனிதன் அதை அறியாமல் வாழ்வை ஏற்று ஏமாறுகிறான்.
அன்னை வேறு, ஸ்ரீ அரவிந்தர் வேறல்ல.
ஸ்ரீ அரவிந்தர் கருணையை மனிதன் அன்னை மூலமே பெற முடியும்.
பரோபகாரம் அகந்தைக்குரியது.
உடல்பெறும் ஞானம் முழுமையான வலிமையுடையது.
உடல் விலக்கப்பட வேண்டியதில்லை. ஞான பீடம்.
உடலை மனம் நிர்ணயித்தால், வாழ்வில் தோல்வி இல்லை.
பிரம்மத்தை அறிய மனிதன் சத்தியஜீவியத்தை அடைய வேண்டும்.
No comments:
Post a Comment