Pages

Monday, September 23, 2013

அன்னையை ஏற்றுக்கொள்ளுதல் என்றால் என்ன?

திரு கர்மயோகி அவர்களின் புஷ்பாஞ்சலி என்ற நூலில் இருந்து.
 

அன்னையை ஏற்றுக்கொள்ளுதல் எனில், குறிப்பாக வாழ்க்கையில் அன்னையை 
ஏற்றுக்கொள்ளுதல் என்றால், தோல்வியை அறியாத வாழ்வை ஏற்றுக்கொள்ளுதல் என்று பொருள். மனிதன் வாழ்வின் பிடியில் இருக்கிறான். அதனால் வாழ்க்கை அவன் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். வாழ்க்கை அன்னையின் பிடியில் இருப்பதால், அன்னையை ஏற்றுக்கொண்ட மனிதனுடைய பிடியில் வாழ்வு வந்துவிடும். அவனிஷ்டப்படி வாழ்வு செயல்படும்.
வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக்கொள்ள மனிதன் அன்னையின் வழிமுறைகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். வாழ்க்கையின் விதிகளைப் பின்பற்றும் மனிதன் வாழ்க்கையின் பிடியில் வந்துவிடுகிறான். அன்னையின் முறைகளைப் பின்பற்றும் மனிதனுடைய பிடியில் வாழ்க்கை வந்துவிடும். வாழ்க்கையை ஒட்டிச்செல்லும் மனிதன் எவ்வளவு உயர்ந்த நிலையிலிருந்தாலும், தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த வாழ்க்கை ஒரு சமயம் இல்லாவிட்டாலும், ஒரு சமயம் அவனுக்குத் தோல்வியை அளிக்கிறது. அன்னைக்குத் தோல்வி தெரியாது. அன்னையைப் பிரதிஷ்டை செய்த வாழ்வில் தோல்வியில்லை. கோர்ட்டுக்குப் போகும் கட்சிக்காரனுக்கும், அவனுடைய வக்கீலுக்கும் வெற்றியா, தோல்வியா என்ற நிலையுண்டு. ஜட்ஜுக்குக் கடமையுண்டு. அவருக்கு வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. அவருடைய நிலை உயர்ந்தது. வெற்றி, தோல்விகளைக் கடந்தது.

ஒருவனுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது அவனுடைய தொழிலைப் பொருத்தது, படித்த பட்டத்தைப் பொருத்தது. பிறந்த குடும்பத்தைப் பொருத்தது. அவனுடைய சூழ்நிலையைப் பொருத்தது. எந்தச் சூழ்நிலையிலிருந்தாலும், ஒருவன் அன்னையைத் தன் வாழ்வில் ஏற்றுக்கொண்டவுடன், அவன் எதிர்காலத்தையும், அவன் முன்னேற்றத்தையும் அன்னை நிர்ணயித்துவிடுகிறார். அதன்பின் மனிதன் எந்தச் சூழ்நிலையிலிருந்தாலும், எந்தப் படிப்பைப் படித்தாலும், எந்தத் தொழிலைச் செய்தாலும், அதை ஒரு கருவியாக்கி, அன்னை வழங்குகிறார். நிர்ணயிப்பது அன்னை. படிப்பு, தொழில் ஆகியவை மார்க்கங்கள், கருவிகள். அன்னையை ஏற்றுக்கொண்டபின், நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் திறனுடையவை எல்லாம் கருவிகளாக மாறி அன்னையின் ஆணையை நிறைவேற்றுகின்றன.

No comments:

Post a Comment