AuroMere Meditation Centre (Sri Mother and Sri Aurobindo Center), Pallikaranai is running
from 2005 under the guidance of The Mother's Service Society (MSS), Pondicherry - founded by Sri Karmayogi Avarkal.
Pages
▼
Tuesday, September 17, 2013
ஸ்ரீ அரவிந்தர், அன்னை கூறியவை
திரு. கர்மயோகி அவர்களின் ஸ்ரீ அரவிந்தம் என்ற தொகுப்பில் இருந்து.
மனித செயல் வீரியம் பெற்று இறைவனை அடையும்பொழுது, அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகும்.
இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலை வந்த நேரமே அன்னை தம்மை அழைக்க சிறந்த தருணம் என்கிறார்.
மனிதன் ஏன் இறைவனை வணங்க வேண்டும்? அவனே இறைவனாக முடியும்.
உலகில் இறைவன் ஆனந்தம் தவிர வேறெதையும் படைக்கவில்லை.
இறைவன் ஸ்பர்சம் எதையும் சாதிக்கும்.
மனிதன் அழைத்து, இறைவன் ஏற்பது அதே க்ஷணம் நடைபெறும்.
புற நிகழ்ச்சிகள் அகவுணர்வைப் பிரதிபலிக்கும்.
அன்னையை அழைத்தால் கர்மம் கரையும்.
அன்னை நம்முள் எழுந்தால், விதி விலகும்.
ஆன்மாவுடன் தொடர்பு கொண்டால், பிறவி புத்திசாலித்தனமும் வளரும்.
உணர்ச்சி மாறினால் முகக்களை உடனே மாறும். உணர்வு அன்னையை ஏற்றால் முகம் அழகு பெறும்.
விதி முடிவல்ல, நம்பிக்கையே முடிவு.
அழைத்தால் அன்னை உடன் வருவார்.
மனம் அடங்கி அருளை ஏற்றால், அருள் பேரருளாகும்.
எதிரி இறைவனின் அன்புருவம்.
வலியே ஆனந்தம்.
தம் ஆன்மாவைக் காண்பதும், பிறர் அவர் ஆன்மாவைக் காண உதவுவதும் ஆன்மீக சேவை.
இறைவனை அறிவதே மனித லட்சியம்.
தெய்வத்தைக் கடந்த மனிதன் - சத்திய ஜீவன் - பிறப்பது உறுதி.
மனிதப் பிறவியே முடிவானதல்ல.
மதவழிபாட்டின் காலம் முடிந்து விட்டது. வரும் காலம் ஆன்மீகத்திற்கு உரியது.
அறியாமை அறிவைவிட உயர்ந்தது.
இருள் அடர்ந்த ஒளியாகும்.
திருடனுடைய அடி திருவடியாகும்.
பொது மகளிரின் ஆன்மா பெரியதாகும்.
மனிதன் கடவுள்களைவிட உயர்ந்தவன்.
அன்னையை ஏற்ற வாழ்வில் தோல்வியில்லை, நஷ்டம் இல்லை.
மனிதன் தன் வாழ்வில் அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்ய முடியும் . .
No comments:
Post a Comment