Pages

Thursday, September 19, 2013

Audio - Tamil : நீங்கள் வாழ்வின் எந்த நிலையில் இருக்கிறீர்கள்?


Audio : Tamil : Book Reading Program on Sep 15, 2013



(Book Reading Program -Sep 8, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.


Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)



Click this link to Play the Audio  (or)


Player 1

Topic:



ஒரு தனி மனிதன் என்று எடுத்துக்கொண்டாலும், மனம் ஒழுங்கைப் போற்றி, உணர்வு அதை ஏற்று, செயலை முறைப்படுத்தி, ஒழுங்காகச் செய்யும்பொழுது, அங்கே சாதனை பிறக்கின்றது.

நம் எல்லோருக்கும் சக்தி, திறமை, நேரம் என்பவை எல்லாம் நம் கைக்குள் இருக்கின்றன.

இவை யாவற்றையும் நாம் சரியான முறையில், சரியான செயல் முறைப்படுத்திச் செயல்பட்டால், சாதனை என்பது அன்றாட நிகழ்ச்சியாகும்.

இன்று வாழ்க்கையில் சாதித்தவர்களையும், மற்றவர்களையும் கூர்ந்து நோக்கினால், சாதித்தவர்கள் தங்கள் வாழ்க்கையை முறைப்படுத்தி, கட்டுக்கோப்பாக அமைத்து, நடத்திச் சென்றது தெளிவாகத் தெரியும். வாழ்வில் தோற்றவர்களுடைய வாழ்க்கையை கவனித்துப் பார்த்தால், அவர்கள் ஒரு குறிக்கோள் இல்லாமல், தான் தோன்றியாகத் தறிகெட்டுச் செயல்பட்டது தெரியும்.

இதைப் பார்க்கும் பொழுது organisation என்பது ஒரு தனி மனிதனின் வாழ்வில் சுயகட்டுப்பாடு என்ற இடத்தை நிரப்புகிறது.

சுயகட்டுப்பாட்டுடன் வாழும் மனிதன் குறித்த நேரத்தில் செயல்படுபவனாகவும், தன்னுடைய வருமானத்திற்குள் செலவு செய்பவனாகவும் (கடன் இல்லாத வாழ்க்கை வாழ்பவனாகவும்), சுமுகமான உறவு உடையவனாகவும்,நேர்மையானவனாகவும் இருப்பதுடன், வாழ்வில் தொடர்ந்த முன்னேற்றம் அடைபவனாகவும் இருப்பான். ஆகவே, சுயகட்டுப்பாடு என்பது தனி மனிதனுடைய வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.

இதற்கு மாறாகக் கட்டுப்பாடில்லாத வாழ்க்கை உடையவன், வாழ்வில் தொடர்ந்த தோல்வியைச் சந்திப்பவனாக இருப்பான்.

சாதாரண வாழ்வில் சாதிப்பதற்குச் சுயகட்டுப்பாடு அவசியம் என்றால், ஆன்மீக வாழ்வில் நாட்டம் உள்ளவர்க்குக் கடுமையான சுயகட்டுப்பாடு அவசியம் என்றாகிறது.

நம்முடைய வாழ்வு ஆன்மீகப் பண்புகளாகிய ஆர்வம் (aspiration), சரணாகதி (surrender), சமர்ப்பணம் (consecration), தரமான செயல் (perfection), உண்மை (purity), மேலும், விட்டுக் கொடுப்பது (self-giving) போன்ற பண்புகளால் நிரப்பப்பட்டு, முறைப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது என்றால், நம் சாதாரண வாழ்வு ஆன்மீக வாழ்வாக மாறுகிறது, அதாவது வாழ்வு யோகமாக மாறும் பாதையில் காலடி எடுத்து வைக்கின்றது என்று கூறலாம்.

அப்படிப்பட்ட வாழ்வு அன்பருக்கு ஆன்மீக அதிர்ஷ்டத்தைப் பெற்றுத் தருகிறது.



ஒருவருடைய அனுபவத்தில் உண்மையில் பலன் கிடைக்கப் பெற்றதை ஒரு முறை பார்த்தபின், சிறிய நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். 


நிகழ்ச்சிகள் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய ஆரம்பிக்கும்.

பலன் எப்படி ஏற்பட்டது என்ற நடைமுறையைப் பற்றிய விளக்கமானது மிகவும் உதவிகரமாக இருக்கும்.


Book :
By Sri. Karmayogi Avl.


Next Book Reading Program : 

 - Sep 22, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 



Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil -  நேரம் வந்துவிட்டது - திரு. கர்மயோகி அவர்கள் 

No comments:

Post a Comment