Pages

Monday, September 16, 2013

சாவித்திரி - மலர்ந்த ஜீவியம் நவம்பர் 2000

சாவித்திரி

P.11 An absolute supernatural darkness falls On man sometimes when he draws near to God

இறைவனை நெருங்கும்பொழுது பூரண இருள் சூழ்வதுண்டு

ஒளியின் அடியில் இருள் என்பதும், விடியலுக்கு முன் இருள் அடர்ந்திருக்கும் என்பதும் வழக்கு. இதற்குரிய தத்துவம் என்ன? ஒளி  இருளாக மாறுகிறது என்றால் ஒளி  சுருங்கி, இருள் அதிகமாகிறது எனப் பொருள். இரண்டு முக்கியமான கருத்துண்டு.
  • அதிக இருள் என்பது அதிக ஒளி என்று பொருள்
  • மாற்றம் க்ஷணத்தில் எழுவது
ஆன்மீக ஒளியின் முன் நடுப்பகல் நள்ளிரவு போன்றது என்கிறார் அன்னை. அத்துடன் ஆன்மீக இருளின் மீது நள்ளிருள் பிரகாசமாக இருக்கும் என்கிறார். சூரியன் தரும் ஒளி  ஜடத்தின் ஒளி, அது ஒளியன்று எனவும் ஒளி  என்பது ஜீவியத்தின் பிரகாசம், அது ஜடத்தில்பட்டு பிரதிபலிப்பதால் ஏற்படும் ஒளியை நாம் சூரிய ஒளி  என்று காண்கிறோம் என்றும் பகவான் கூறும் தத்துவங்கள் நம் அறிவுக்கு எட்டாது. அவற்றை நாம் ஏற்க வேண்டுமானால் சில உதாரணங்கள் மூலமாக நாம் புரிந்துகொள்ள முயலலாம், நேரடியாகப் புரியாது.
  • வெண்மை என்பது 7 நிறங்கள் கலந்தது.
  • கருப்பு என்பது எல்லா நிறங்களையும் தன்னுட்கொண்டது.
  • பணம் என்பது செக் அல்லது, நோட் அல்லது, வெள்ளி ரூபாயன்று, மனித உழைப்பு. மனித உழைப்பே பணம் எனப்படும்.
  • படிப்பு என்பது பட்டமன்று, மனத்தின் அறியும் திறனே படிப்பு எனப்படும். 
  • விஞ்ஞானிக்கும், ஆதிமனிதனுக்கும் அறிவு ஒன்றே - ஸ்ரீ அரவிந்தர். மேற்சொன்ன கருத்துகளில் பொதிந்துள்ள உண்மையை நாம் ஏற்பதுபோல் சாவித்ரியின் வரியில் மறைந்துள்ள கருத்தை நாம் அறிய முயலலாம். இந்தப் பக்கத்திலுள்ள மற்ற கருத்துகளின் பகுதிகள்,
  • எண்ணத்தின் இரகஸ்யத்தினுள் மறைந்தாள்
  • பல உருவகங்களில் மனம் திளைத்தது
  • உயிர் பெற்றெழுந்த பின், முடிவைக் கண்டது
  • நீர்க்குமிழி போன்றது, ஊனக் கண்ணிருந்து விலகியது
  • ஆன்மாவின் ஜீவனற்ற நிழல் கண்ணுக்குப் புலப்படாது
  • எதிர்காலத்தைத் தாங்கி வரும் பேய் போன்ற இதயம்
  • விரைந்து மறையும் நிகழ்ச்சியின் சுவடு
  • காலத்தின் ஓடை வேகமிழந்தது
  • புரியாத புலனின் கரைகள்
  • மறைந்துபோன மனித உருவங்கள்
  • அழிந்தவற்றின் சூட்சும உருவங்கள்
  • காலத்தைக் கணக்கிடும் சாட்சி
  • கண்ட கனவும், நினைத்த நினைவும்
  • நினைவெனும் வானில் பறந்தவை
  • பல வண்ண உள்ளுறை உதயம்
  • வாழ்வின் இராஜ பாதைகளும், அவற்றின் இனிய கிளை வழிகளும்

No comments:

Post a Comment