Pages

Wednesday, July 31, 2013

Audio - Tamil - அன்னை வழங்கும் மறுவாழ்வும் மறுமலர்ச்சியும்

Audio : Tamil : Book Reading Program on July 28, 2013

(Book Reading Program - July 21, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:
நம் அன்றாட வாழ்வின் சில உண்மைகள் 

மனிதனே அருளில் இருந்து விலகுகிறான்.

நம் வாழ்விற்கும் அன்னை வழங்கும் மறுவாழ்வுக்கும் உள்ள வித்தியாசம் 

அன்னை வழங்கும் மறு வாழ்வு 

அன்னை வழங்கும் மறுவாழ்வை பெற நாம் பின்பற்ற வேண்டிய சில முறைகள் 

அன்னையின் வாழ்வில் சில சட்டங்கள் 

முரண்பாடே உடன்பாடு.
முதலாளியே குரு.
உன் குழந்தையிடம் காண்பது உன் குணமே.
விசுவாசம் துரோகமாகத் துவங்குகிறது.
தீராத பிரச்சனைகள் தீராத யோகப் பொக்கிஷங்கள்.
திறமை முன்னேற்றத்திற்குத் தடை.
சிந்தனை அறிவிழக்கச் செய்யும்.
உதவாக்கரை நண்பன் ஆன்மாவின் நுழைவாசல்.

அன்னையின் மறுவாழ்விற்குரிய  சட்டங்களில் ஒன்றையாவது புரிந்து  கொள்ள முயன்றால், நம் வாழ்வு அன்னையின் வாழ்வாக மறுமலர்ச்சி அடையும்.

Book :Venugaanam
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 - Aug 4, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil -அன்னை வழங்கும் மறுவாழ்வும் மறுமலர்ச்சியும் - திரு. கர்மயோகி அவர்கள் 

Savitri - 333

Daily Savitri - 333

Sri Aurobindo's Savitri

 A wanderer in a world his thoughts have made, 
He turns in a chiaroscuro of error and truth 
To find a wisdom that on high is his. 
As one forgetting he searches for himself; 
As if he had lost an inner light he seeks: 
As a sojourner lingering amid alien scenes 
He journeys to a home he knows no more. 

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  68

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Tuesday, July 30, 2013

அன்னையின் சக்தி செயல்பட, அறியாமையால் நாமே ஏற்படுத்தும் தடைகளும், அதனை நம்மிடமிருந்து அகற்றுவதன் முக்கியத்துவமும்

- திரு கர்மயோகி அவர்கள் எழுதிய கட்டுரைகளில் இருந்து..

அன்னையை அழைத்தவுடன், அவர் மின்னல் போல் செயல்படும்பொழுது நம் மனம் குறுக்கே நிற்காது, எந்தச் சந்தர்ப்பமும் நம்மை நினைக்காததால் அன்னைக்குத் தடையாக இருக்காது. அதனால் விஷயம் கூடிவரும். நாம் நாடிச் செல்லும் விஷயங்களை மனம் இதுபோல் மறந்திருக்காது. மற்ற சந்தர்ப்பங்கள் தடை ஏற்படுத்த முனைந்திருக்கும். அதனால்தான் அன்னையின் சக்திக்குத் தடை ஏற்படுகிறது.

நீண்ட காலமாக உள்ளூரிலேயே உத்தியோகம் செய்து வந்த ஒருவர், பதவி உயர்வை எதிர்பார்த்தார். நியாயமான எதிர்பார்ப்புத்தான். அவருடைய பதவி உயர்வுக்கு அலுவலகத்தில் யாரும் முட்டுக்கட்டை போடவில்லை. என்றாலும் ஏதோ ஒன்று தடையாக இருந்தது. அது என்ன என்று கண்கூடாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் அன்னையின் பக்தர். ‘நான் அன்னையை உருக்கமாகப் பிரார்த்தித்துக்கொண்டு வருகின்றேன். பதவி உயர்வைத் தவிர மற்றவை எல்லாம் எனக்கு உடனுக்குடன் கிடைத்துவிடுகின்றன. அதற்கு மட்டும் என்ன தடை என்று புரியவில்லை’ என்று அடிக்கடி கூறி வேதனைப்படுவார் அவர்.

“உங்களுக்கு உள்ளூரைவிட்டுப் போகப் பிரியம் இல்லை. பதவி உயர்வு கிடைத்தால் நீங்கள் வெளியூருக்குப் போக வேண்டியதிருக்கும். அதனால்தான் தடை” என்று அவருக்கு விளக்கும்பொழுது, தமக்குத் தாமே தடையாக இருந்ததை உணர்ந்து, முதல் வேலையாக உள்ளூர் ஆசையைத் துறக்கின்றார். அவருக்கு உடனே பதவி உயர்வு கிடைத்துவிடுகின்றது. மனத்தால் விரும்பும் ஒன்றை, அவர் உணர்ச்சியால் விரும்பவில்லை. ஊரைவிட்டுப் போக விரும்பாத உணர்ச்சி, பதவி உயர்வுக்குத் தடையாக இருந்தது. அதுவே அன்னையின் சக்தி செயல்படத் தடையாகவும் இருந்தது.

ஓர் அடாவடிக்காரனிடம் பணம் கொடுத்து பிராமிசரி நோட்டு எழுதி வாங்கினால், ‘அந்த நோட்டு அவனைக் கட்டுப்படுத்தும்’ என்று நினைப்பது தவறு. அந்தத் தவற்றை உணராத வரையில் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனைகள், அந்தப் பணத்தைப் பெற்றுத் தாரா. ஆனால், செய்த பிரார்த்தனைகள் வீண் போகா. அவை வேறு காரியங்கள் கூடிவர உதவி செய்யும்.

சம்பந்தப்பட்டவரின் தவறான நினைவு, அந்தச் செயலின் மீது இருள் போலப் படிந்துள்ளது. பிரார்த்தனையால் நம் உள்ளே வரும் ஒளியை அது தடை செய்கின்றது. அது வெறும் இருளாக இருந்தால், அந்த ஒளியே அதைக் கரைத்துவிடும். ஆனால், அது சம்பந்தப்பட்டவருடைய அறிவின் துணையோடு ஏற்பட்ட இருள். அதனால் அன்னையின் ஒளியால்கூட அதைச் சுலபமாகக் கரைத்துவிட முடியாது. அதற்கு நீண்ட காலம் பிடிக்கும். அதுவரை சம்பந்தப்பட்டவருக்குப் பொறுமை வேண்டுமே!

‘பிரார்த்தனை பலிக்கவில்லை’ என்றுகூடச் சிலர் நினைக்கின்றார்கள். அது உண்மையே. அப்படி நினைக்கின்றவர்களுடைய குறைபாடு வெளிப்படையாக எல்லோருக்குமே தெரியும். ஆனால், அவர்களுக்குத் தெரிவது இல்லை. நோய் தெரியாமல் மருந்துண்ணுவது எப்படி? அவர்கள் முதலில் தங்களின் நோய் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தங்களுடைய குறைபாடு என்னவென்பதை நுணுகிச் சலித்து அறிய வேண்டும். அது முடியாத பட்சத்தில், நெருங்கிப் பழகுபவர்களிடம் பிரச்சினைக்குக் காரணமான நம் குறைபாடு என்ன என்பதைக் கேட்டறிந்து அந்தக் குறைபாட்டை விலக்கியபின், பிரார்த்தனை செய்வது முதல் வழி. இந்த முதல் வழியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தபிறகு, பிரச்சினையின் முழு விவரத்தையும் தினந்தோறும் ஒரு முறை அன்னையிடம் சொல்ல வேண்டும். இது இரண்டாவது வழி. முதல் வழியைப் பின்பற்றுவதன் மூலம் பிரச்சினை நாள் கடந்து தீரும். இரண்டாவது வழியின் மூலம் பிரச்சினை நிச்சயமாகத் தீரும். ஆனால், விரைவில் தீராது. ஏனென்றால் பிரார்த்தனைக்கு இரு கடமைகள் உண்டு. முதலில் பிரார்த்தனை, பிரச்சினைக்கு உரிய குறையை அகற்ற வேண்டும். பின்னர் பிரச்சினையைக் கரைக்க வேண்டும்.

ஒருவர் ஆலை முதலாளி. 10 கோடி மூலதனத்துடன் 500 தொழிலாளர்கள் வேலை பார்க்கும் ஆலை அவருடையது. வேலை பார்க்கும் ஒவ்வொரு தொழிலாளியும் ஒவ்வொரு பிரச்சினையுடன் வந்து சந்தித்தபோது அவர் எரிச்சலுடன், “இப்படி ஒவ்வொருவராக வந்து என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். எல்லாத் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து சங்கம் அமையுங்கள். தலைவரை நியமியுங்கள். உங்கள் எல்லோருக்குமாகச் சேர்த்து அவரை என்னிடம் அனுப்புங்கள்” என்று சொல்லிவிட்டார். பிறகு என்ன? ஆலைக்குள் சங்கம் வந்தது; தலைவர் வந்தார். கூடவே தாங்க முடியாத அளவுக்குப் பிரச்சினைகளும் வந்தன. இத்தனையும் வந்தபிறகு வழக்கமாக வரும் கோஷம், ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் போன்றவையும் வந்து ஒரு போராட்டத்தைத் தூண்டிவிட்டன.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தவர் அந்த ஆலை முதலாளிதான். சங்கத்தை ஆரம்பிக்கச் சொன்னவர் அவர்தாமே! வம்பை விலை கொடுத்து வாங்கிச் சிக்கலில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கிய நிலையில் அவர் என்னைச் சந்தித்து, “சிக்கல் தீர வழி கூறுங்கள்” என்று வேண்டினார்.

“சொல்லப் போனால் வேலை நிறுத்தத் தலைவர் நீங்கள் தான். அதாவது சிக்கலுக்குக் காரணமான சங்கத்தை ஆரம்பிக்கச் சொன்னவர் நீங்கள் தானே? அன்னையிடம் இந்தப் பிரச்சினைக்குத் தோற்றுவாயாக அமைந்த உங்கள் குறைபாட்டைக் கூறிப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றேன் நான்.

அவர் தம் தவற்றை உணர்ந்து, தம் குறையை அன்னையிடம் சமர்ப்பித்து, நிவாரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்தார். சில நாட்களில் வேலை நிறுத்தம் பிசுபிசுத்தது. கடைசியில் யூனியனே காணாமல் போய்விட்டது!
ஏன் பக்தர்களுக்கு தீராத பிரச்சினைகள் இருக்கின்றன? ஏன் அவர்களால் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை? தீர்க்க முடியவில்லை என்பது உண்மையா? தீர்க்க முனைவதில்லை என்று பொருளா? தீர்வை விட முக்கியமானது ஒன்று அவர்களுக்குண்டா? குறிப்பிட்ட வழியில் தீர்க்க வேண்டும் என்ற பிடிவாதத்தால் தடையாக இருக்கிறதா? தடையென்று தெரிந்த விஷயத்தை விலக்க மறுப்பதால் தாமதமாகிறதா? அல்லது தங்கள் பழக்கத்தால் தடையை ஏற்படுத்துகிறார்களா? என்ற கேள்விகள் எழுகின்றன. பிரச்சினைகளைத் தீர்க்கும் எல்லா திறமைகளும் இருந்தபோதிலும், அவற்றைத் தீர்க்காமல் இருக்கின்றார்கள் என்பது விநோதமாக இருக்கின்றது. பக்தர்களால் தீர்க்க முடியாதது என்பதில்லை என்பதும் உண்மை. அவர்களுக்குத் தீராத பிரச்சினைகள் உண்டு என்பதும் உண்மை.

அன்னைக்கு வேண்டிக் கொண்டால், அது புனிதமான ஆன்மிக சக்தியை நம்முள்ளும், நம் சூழலும் கொணரும். அது பலிக்கத் தூய்மையான சூழல் தேவை. இருப்பிடம் சுத்தமாகவும், உணர்வுகள் தெளிந்து தூய்மையாகவும் இருந்தால் அன்னையின் சக்தி தடையின்றி செயல்படும்.

Ph.D. படித்துக்கொண்டிருந்த மாணவர், தன் பிரச்சினை ஒன்று தீர blessing packet பிரசாதம் பெற்றுக்கொண்டார். அதனால் பலன் ஏற்படவில்லை எனக் குறைப்பட்டார். அவர் வீட்டையும், துணிமணிகளையும் சுத்தமாக வைக்கவேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. அதைச் சுட்டிக்காட்டியபின் வீட்டைப் பெருக்கி, மெழுகி, துணிமணிகளைத் துவைத்த அன்றே பிரசாதம் பலன் கொடுத்தது. அழுக்குள்ள இடத்தில் அன்னையால் செயல்பட முடியாது.

மனம் எதிர்பார்க்கும் தன்மையுடையது. படபடக்கும் இயற்கையுடையது. அவை நோய் குணமாவதைத் தடுக்கும். தன் பிரார்த்தனையால் தன் நீண்டநாள் நோய் குணமடைந்து வருவதைக் கண்ட பக்தருக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. நாளை காலை நான் எழுந்தவுடன் நோய் மாயமாய் மறைந்து நான் விடுதலையடைய வேண்டும் என்று நினைக்கின்றார். இது இயற்கை. இதுவே மனம் செயல்படும் விதம். மனமே நோயின் அஸ்திவாரம். ஓரளவு குணத்தைக் கண்டவுடன் மனம் எதிர்பார்க்க ஆரம்பிக்கின்றது. மனம் எதிர்பார்க்கும்பொழுது நாமும் அத்துடன் சேர்ந்துகொண்டு கற்பனைக்கு ஜீவனத்தால் அது மனத்தை வலுப்படுத்துவதாகும். நோய்க்கு அஸ்திவாரமான மனத்தைத் தூண்டினால், மறுநாள் காலையில் எழுந்தவுடன் நோய் அதிகரித்திருப்பது தெரியும். எண்ணம் மனத்தை நாடினால் நோய் அதிகமாகும். நோயைவிட்டு அகன்று மனம் அன்னையை நாடினால் மனம் அமைதியுறும். நோய் குறையும். நோய் குறைய ஆரம்பித்தவுடன் அன்னை நினைவை அதிகப்படுத்திக் கொண்டும், நன்றியறிதலுடன் அன்னையை நினைத்தால் மனம் நிறைவுறும். அதனால் நோய் தீரும். இருந்தாலும் மனம் நோயைக் கருதினால் வேறு பக்கம் மனத்தைத் திருப்ப முயல வேண்டும். சிறு தேவதைகளைத் தொழும் வீட்டிலும், அவர்கள் படம், சிலையுள்ள இடங்களில் சூழல் கறைபட்டிருக்கும். கொச்சையான பாஷையில் கூறுவதானால் தீட்டுப்பட்டிருக்கும். அங்கு மனம் நோயை அதிகமாக நாடும். குப்பை, அழுக்கு மலிந்த இடத்திலும் மனம் நோயை நாடும். மனம் நோயை அதிகமாக சிந்தித்தால், குணம் தள்ளிப் போகும்.

குப்பை நிறைந்த வீட்டைச் சுத்தம் செய்யும் வரை, சிறு தேவதைகளை விட்டு அகலும் வரை, தன் அறிவில்லாத பிடிவாதத்தை விட்டொழிக்கும் வரை, இவர்களுடைய பிரச்சினை தீராது. வந்த வாய்ப்பு பலிக்காது. அவை பலிக்காத வாய்ப்பாகாது, தீராத பிரச்சினை ஆகாது.

தீராத பிரச்சினையுள்ள அன்னை பக்தர்களிடம் இது போன்ற குணம், செயல், போக்கு ஒன்றிருக்கும். அதை விட்டுவிட அவர்கள் முன்வராமல், அன்னை என் பிரச்சினையைத் தீர்க்கவில்லையே என்பது சரியாகாது. அருள் எந்தப் பிரச்சினையையும் தீர்க்கும். எந்த வகையிலும் நாம் அதற்குத் தடையாக இருத்தலாகாது.

அன்னையின் அருளுக்கு எல்லையில்லை. நாமே அதற்குத் தடை ஏற்படுத்தி விட்டு, அருளுக்கும் எல்லையுண்டு என்று நினைப்பது சரியில்லை.

நம் பிரார்த்தனை பூர்த்தியாக நம் மனத்தின் அபிப்பிராயங்கள் தடைகளாக இருப்பதுண்டு.

புதுவீடு குடிபோனபொழுது வீட்டுக்காரர் ஓர் அலமாரி செய்து தருவதாகச் சொன்னார். அது வரும்வரை எல்லாப் பொருள்களையும் தரையில்

வைத்திருந்தார் பக்தர். 5 மாத வாடகையை அட்வான்ஸாகப் பெற்றுக் கொண்டவர் மாதங்கள் கடந்தும் அலமாரி செய்து தரவில்லை. அடுத்தவர் ஒருவரிடம், தாம் அலமாரி செய்யப் போவதில்லை என்று அறிவித்ததைக் கேட்டுக் குடியிருக்கும் பக்தருக்கு எரிச்சல் வந்தது. சரி, அலமாரி வந்தால்தான், இந்த மாத வாடகை கொடுப்பது என்று முடிவு செய்தார். தொடர்ந்து செய்திகள் வந்தபடி இருந்தன. கொஞ்சம் சாமான்கள்தாமே, தரையில் இருந்தால் என்ன என்று ஒரு செய்தி. இந்த மாதம் வேறு செலவு இருக்கிறது என்று மற்றொரு செய்தி. அலமாரி கொடுப்பது எங்கள் இஷ்டம். நிர்ப்பந்தமில்லை என்று மற்றொரு செய்தி. பக்தர், சரி செய்திகள் வரட்டும், வாடகை கொடுத்தால்தானே, என்ன செய்வார் பார்க்கலாம் என்று தீவிரமாக முடிவு செய்தார். அதன்பின் யோசனை பிறந்தது. வாடகையை நிறுத்திக் காரியத்தைச் சாதித்தால், எனக்குப் பிடிப்பில் நம்பிக்கையிருக்கிறது. அன்னைமீது நம்பிக்கையில்லை என்றாகிறது அன்றோ? என்ற நினைவு வந்தது. தேதி வந்தவுடன் வாடகையைக் கொடுக்க முடிவு செய்தார். நம்பிக்கையை அன்னைமீது வைத்தார். வாடகையைக் கொடுத்தார். அடுத்த நாள் அலமாரி வந்திறங்கியபோது அவருக்கு ஏற்பட்ட ஆச்சரியம் பெரியது.

பாத்ரூமில் தண்ணீர் தேங்கியுள்ளது என்று வீட்டுக்காரரிடம் சொன்னால் சில நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் அதுவரை எதிர் வீட்டில் போய் குளித்துக் கொள்ளுங்கள். பிறகு ரிப்பேர் செய்கிறேன்'

என்ற பதில் முனிவருக்கும் கோபத்தை ஏற்படுத்தும். வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, கோபம் வரக் கூடாது என்று பிரார்த்தனை செய்துவிட்டு ஆபீஸுக்குப் போய் திரும்பி வந்தால் ஆள்கள் பாத்ரூம் வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.

அன்னைக்குள்ள முறைகளைத் தவறாமல் பின் பற்றினால் பிரார்த்தனை பலிப்பதில் தாமதமிருக்காது. அன்னையின் சக்தி பலிப்பதற்கு நம் மனமும் அவர்கள் முறையை ஏற்றுக்கொண்டு ஒத்துழைக்க வேண்டும்.

Savitri - 332

Daily Savitri - 332

Sri Aurobindo's Savitri

 In a body obscuring the immortal Spirit 
A nameless Resident vesting unseen powers 
With Matter's shapes and motives beyond thought 
And the hazard of an unguessed consequence, 
An omnipotent indiscernible Influence, 
He sits, unfelt by the form in which he lives 
And veils his knowledge by the groping mind.    

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  68

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Monday, July 29, 2013

வருமானத்தை உயர்த்த நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான அன்னையின் முறைகள்

வருமானத்தை உயர்த்த நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான அன்னையின் முறைகள் 
- Sri Karmayogi Avarkal

எந்த வயதிலும் நாம் பெறும் வருமானத்தை உயர்த்த முடியுமா? அன்னை அன்பர்கட்குச் சிறப்பான வழியேதும் உண்டா? என்ற இரு கேள்விகளை எழுப்பி, நாம் பாடகரானாலும், பள்ளி ஆசிரியரானாலும், மார்க்கட்டில் கமிஷன் ஏஜெண்டானாலும் வியாபாரியானாலும், மேற் சொன்னவகைகளில் நாம் ஓர் அளவுக்கு வாழ்க்கையை அமைத்துக்கொண்டோம். அதன் பலன் சம்பளம் 7000 வருகிறது என்பவர் ஒருவர். கச்சேரிகளில் மாதம் 50,000 ரூபாய் வருகிறது என்பவர் மற்றொருவர். மாதம் 80,000 ரூபாய் சம்பாதித்த என் கடை தற்சமயம் அதில் பாதியை சம்பாதிக்கிறது என்பவர் அடுத்தவர். 

இவர்கள் வருமானம் உயர வழியுண்டா? அன்னையின் பங்கு என்ன? 
அன்பர் செய்யக் கூடியதென்ன?

வருமானத்தை உயர்த்த விரும்புபவர் தங்கள் துறைகளில் உள்ள வாய்ப்பை மட்டும் அறிவர். வேறு வாய்ப்புகளைத் தங்களுக்கில்லை என நினைப்பார்கள். வாய்ப்பு நம்மைத் தேடிவந்தால் அது நமக்குரியது. விழிப்பாக இருந்து, risk எடுத்து வாய்ப்பை ஏற்றுப் பலன் பெற முன்வருபவர்கட்கு அபரிமிதமான பலன் வரும்.

வருமானம் உயரவேண்டும் என்பவர் தம் வேலைகளை நினைத்துப் பார்த்தால், 10 இடங்களிலாவது தம் ஆர்வத்தை உயர்த்த முடியும் என்று காண்பார். அதைச் செய்தால் உடன்பலன் உண்டு. மனம் வருமானத்திலிருக்கும். எப்படி அதிகமாக உழைக்கலாம் என்பது தோன்றாது. வருமானத்தை விட்டு, உழைப்பை மனம் நாடினால் பலன் உண்டு. இந்த ஒரு விஷயத்தை மட்டும் முழுவதும் சரி செய்தவர் வருமானம் தவறாது இருமடங்காகும்.

ஆபீசில் சம்பளத்திற்கு வேலை செய்பவர் எனக்கெப்படி அதிக வருமானம் வரும் என நினைப்பார். பொதுவாக ஆபீஸ் வேலையை 50% உண்மையுடன் செய்கிறோம். 100% உண்மையுடன் செய்தால், பலன் ஆபீஸ் மூலமாக வரும். தவறினால், தவறாது வேறு வழியாக வரும். உண்மைக்குப் பலன் உண்டு. நம் சொந்த அனுபவத்தில் பலரை நாம் நினைவு படுத்த முடியும். அன்பர்கட்குப் பலன் அபரிமிதமாக உண்டு. சந்தேகமுள்ளவர் செய்து பார்த்தால் அறிவார். ஆபீஸ் வேலையை மட்டுமல்ல, சொந்த வேலையையே 50% ஆர்வத்துடன் செய்பவர் பலர்.

பொதுவாக வாழ்வின் அம்சங்கள் பல. வருமானத்தை உயர்த்த அவை பயன்படும். வருமானத்திற்கும் அவற்றிற்கும் உள்ள தொடர்புகளை நாம் அறிவதில்லை. சுத்தம், பேச்சு, கணக்கு, தொடர்பு, (correspondence between two events) காலம், punctuality, importance of records போன்றவை வருமானத்தை உயர்த்தப் பயன்படும்.

மேற்சொன்னவை மொத்தம் 12 அம்சங்கள். ஒவ்வோர் அம்சமும் 10 levels ஆகப் பிரிகின்றன. இந்தப் 12 அம்சங்களிலும் 1 level உயர்ந்தால் வருமானம் இருமடங்காகும். 3ஆம் levelஐ 12 அம்சங்களிலும் எட்டி, நாலாம் levelஐயும் அடைய முயலும் பொழுது வருமானம் 10 மடங்கை எட்டும். எட்டியபின் வருமானம் அங்கே நின்று நிலை பெற முயன்று வெற்றி பெற வேண்டும். முயற்சி அதிகம் தேவை. முயல முன்வருபவர்கட்குப் பலன் நிச்சயம். வழி தெரியாதவர் தெரிந்து பலனடையலாம். முறைகளைப் பின்பற்றாமல் பலன் வாராது. இவற்றை விரிவாகக் கருதுமுன் சில பொதுவான கருத்துகளைக் காண்போம்.

1) சுத்தம் 2) பேச்சு 3) கணக்கு 4) காலம் 5) punctuality 6) human relationship 7) குணம் 8) திட்டமிடுதல் 9) energy 10) silent will 11) efficiency 12) initiative ஆகிய 12 அம்சங்களை எடுத்து ஒவ்வொன்றையும் 10 levelகளாகப் பிரித்து எல்லாவற்றிலும் இரண்டாம் நிலையை அடைய முயல்பவர் வருமானம் இருமடங்காகும். இங்கு ஒவ்வொன்றிலும் 4 நிலைகளைக் கூறுகிறோம். 4ஆம் நிலையை எல்லா அம்சங்களிலும் அடைய முயன்றால் வருமானம் 10 மடங்காகும். நிச்சயமாக இருமடங்காகும்.

இப்பயிற்சியை ஆரம்பிக்கு முன் இப்பலன்கட்கு எதிரான குணங்கள், பழக்கங்கள், சுபாவமிருந்தால், அவற்றை அகற்ற முயலவேண்டும். அவற்றை அறவே அகற்றாமல் இம்முறைகள் பலன் தாராது.

சுத்தம்

  • இன்று நம் வீடுகள் உள்ள நிலை, தரையைப்பெருக்குவது.
  •  
  • ஒட்டடை, அலமாரி அடியில், ஸ்டோர் ரூமில் வாரம்தோறும் சுத்தம் செய்வது.
  •  
  • வெள்ளையடிப்பது, பெயிண்ட் அடிப்பது, அலமாரியுள்ளே துடைப்பது ஆகியவற்றை வாரம்தோறும் செய்வது.
  •  
  • பொருள்களை அழகாக அடுக்கித் துடைத்து வைப்பது.

பேச்சு

  • நம் பேச்சின் அளவையும் ஒலியையும் முடிந்தவரை குறைப்பது.
  •  
  • நம் பேச்சை எழுதிப்பார்த்து 2000 சொற்களிலுள்ள கருத்தை 200 சொற்களில் சொல்ல பயில்வது.
  •  
  • அடுத்தவருக்குக் கேட்கும் அளவுக்கே தொனி எழப்பயில்வது.
  •  
  • அனாவசியமான பேச்சு 90% இருப்பதை அறிந்து விலக்குவது.

கணக்கு

  • நாள் தவறாமல் கணக்கெழுதாமல் படுக்கப் போவதில்லை.
  •  
  • வருஷக் கணக்கை எழுதி, அனாவசியச் செலவை அறவே விலக்குவது.
  •  
  • நாம் கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுத்து, வரவேண்டியதை தவறாமல் வசூல் செய்வது.
  •  
  • சுமார் 40% நம் செலவு குறைவதைக் கணக்கு நமக்கு உணர்த்தும் வரை கணக்கையும், வாழ்க்கையையும் ஒத்திட்டுப் பார்த்து சிந்திப்பது.

காலம்

  • நம் செயல்களைக் கவனித்துப் பொதுவாக நாம் 50% அதிக நேரம் எந்தக் காரியத்திலும் செலவிடுதலைஅறிவது.
  •  
  • நம் முக்கியச் செயல்கள் எவ்வளவு நேரமாகிறது எனக்கணக்கிட்டுப் பார்த்தால், அதற்கு standard ஏற்படுத்தினால் நம் முக்கியமான காரியங்களை 1/3 நேரத்தில் முடிக்கலாம் என அறிந்து, அப்படி மாற்றுவது.
  •  
  • சில்லரைச் செயல்கள் 100% அதிக நேரம் எடுப்பதைக் கண்டு தவறாமல் அவற்றிற்குரிய நேரத்தைப் பாதியாகக்குறைப்பது.
  •  
  • We must become time conscious. நமக்குச் செய்ததை வீட்டிலுள்ளவர்கட்குச் செய்து பார்த்து, அவர்களிடம் சொல்லாமல் அவ்விரயத்தைத் தவிர்க்க முயலுவது.

Punctuality

  • வீட்டைவிட்டு வெளியே போவது, திரும்பி வருவது ஆகிய இரண்டையும் punctual ஆகச் செய்வது.
  •  
  • முக்கியக் காரியங்களை punctual ஆக செய்வது.
  •  
  • முக்கியமில்லாத சிறு காரியங்களை punctual ஆகச் செய்வது.
  •  
  • முக்கியமானவை, இல்லாதவை இரண்டையும், பெரும்பாலும் punctual ஆகச் செய்வது.

Human relationship

  • நம்மைச் சோர்வடையச் செய்யும் தேவையில்லாத உறவுகளை அகற்றுவது.
  •  
  • நம்மை உற்சாகப்படுத்தும் முக்கிய உறவுகளைப் புரிந்துகொண்டு நல்ல முறையில் பயன்படுத்துவது.
  •  
  • சோர்வடையச் செய்யும் அவசியமான உறவுகளை உற்சாகப்படுத்தும் உறவுகளாக மாற்றக் கற்றுக்கொள்வது.
  •  
  • நம் வேலையில் எந்த உறவும் உற்சாகம் மட்டும் தரும் உறவாக மாற்றி அமைக்கக் கற்றுக் கொள்ளுவது.

குணம்

  • கோபம், எரிச்சல், பொறாமை, inferiority complex போன்ற negative குணங்களை வருமானம் சம்பந்தப்பட்ட இடங்களில் அறவே விலக்குவது.
  •  
  • நம்மிடம் உள்ள பெருந்தன்மை, உதவி மனப்பான்மை, நாணயம், நல்லெண்ணம் போன்ற எல்லா உயர்ந்தகுணங்களும் வருமானம் சம்பந்தப்பட்ட எல்லா இடங்களிலும் அதிகமாக வெளிப்படச் செய்வது.
  •  
  • கெட்ட குணங்கள் பிறரிடம் கண்டால், react செய்யாமலிருப்பது.
  •  
  • பிறரிடம் காணும் கெட்ட குணங்கள் நம் குணங்களின் பிரதிபலிப்பு என ஏற்பது.

Planning

  • வேலையைத் திட்டமிட்டுச் செய்தல்.
  •  
  • ஒரு வருஷத்திற்கு வேலையைத் திட்டமிட்டு, சென்ற வருஷத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து வித்தியாசத்தை அறிதல்.
  •  
  • வேலையைப் பல பாகங்களாகப் பிரித்து ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் திட்டமிடுதல்.
  •  
  • வேலையை நேரம், இடம் நோக்கில் திட்டமிட்டுப் பயனடைதல்.

Energy

  • எனர்ஜி விரயமாகும் அனைத்தையும் உடனே நிறுத்துவது.
  •  
  • எனர்ஜி அதிகமாகும் அனைத்தையும் வருமானத்திற்குப் பயன்படுத்துவது.
  •  
  • விரயமாகும் எனர்ஜியை மாற்றி அதிகமாக்க அறிவது.
  •  
  • நம் சுபாவத்தில் எனர்ஜி விரயமாகும் இடங்களை வருமானத்திலிருந்து பிரிப்பது.

Silent will

  • கேட்டுப் பெறும் பழக்கத்தைக் கைவிடுதல்.
  •  
  • உரிமைகளைக் கேட்பதை நிறுத்துவது.
  •  
  • கேட்க நினைப்பதையும் மறப்பது.
  •  
  • சிறு உரிமைகளையும் அதுபோல் கேட்க நினைப்பதையும் மறுப்பது.

Efficiency

  • திறமைக் குறைவானவற்றைத் திறமையாக்குவது.
  •  
  • திறமையான செயல்களில் 50% திறமையை உயர்த்துவது.
  •  
  • திறமையான செயல்களில் 75% திறமையை உயர்த்துவது.
  •  
  • 100% உயர்த்துவது.

Initiative

  • நாமே initiative எடுக்கும் இடங்களில் நிர்ப்பந்தம் இல்லாத இடங்களில் initiativeவை நிறுத்துவது.
  •  
  • நிர்ப்பந்தம் உள்ள இடங்களில் முக்கியமில்லாத இடங்களில் initiativeயை கைவிடுவது.
  •  
  • எல்லா இடங்களிலும் கைவிடுவது.
  •  
  • மனத்தாலும் initiative எடுக்காதிருப்பது.

மேற்சொன்னவை வருமானத்தை 10 மடங்காக்கப் போதும். தனிமனிதனானாலும், வியாபாரமானாலும் சட்டம் ஒன்றே. மீண்டும் சில கருத்துகளை வலியுறுத்துகிறேன்.

எந்த மனிதனும் தானே முனைந்தால் எந்தக் காரியங்களையும் அவனால் செய்யமுடியும்.

அவற்றுள் பணம் சம்பாதிப்பதுவே மிக எளியது. நல்லவன் எனப் பெயர் எடுப்பது மிகக் கடினம்.

சம்பாதிப்பதற்கு உழைப்பு அத்தியாவசியம். உழைப்பை விரும்பும் மனம் எந்த அளவு பணமும் சம்பாதிக்கும்.

"நான்" என்பது எந்த அளவுக்கு விலகுகிறதோ அந்தஅளவுக்குப் பணம் எளிதில் வரும்.

குறுக்கு வழிகளை மனம் தேடினால், அவர் குட்டையில் விழுவார்.

சம்பாதிக்கத் தேவையான எனர்ஜி முழுவதும் நம்குணங்களில் புதைந்துள்ளது.

நம்மை நாம் அறிவது வருமானத்தைப் பெருக்க உதவும்.
மேற்சொன்னவை எதுவும் இல்லாமல் அன்னை மீது நம்பிக்கை மட்டும் ஆழமாக இருந்து வேலையை முன் போல் செய்தால் வருமானம் இருமடங்காகும். சில சமயங்களில் 10 மடங்காகி பிறகு இறங்குவதும் ஏறுவதுமாக இருக்கும்.

மேற்சொன்ன முறைகளை அன்னையை முன்னே வைத்து Mother First எனச் செய்தால் 12 அம்சங்களில் முதல் நிலையை எட்டினால் வருமானம் 10 மடங்காகும். 70,000 தினமும் வியாபாரமான கடையில் இம்முறைகள் பின்பற்ற எடுத்துக் கொண்டபொழுது 1,68,000 ஆகவும், 2,72,000 ரூபாயாகவும், 7,20,000 ரூபாயாகவும், 10,000,00மாகவும் தினசரி சேல்ஸ் 4 மாத காலத்தில் உயர்ந்தது. ஒரு சில நாள் வியாபாரம் அது. சராசரியில் 2 இலட்சமாக அது விற்கிறது. அக்கடையில் சுத்தம் கூட இன்னும் நிலையாக முதல் நிலையில் ஏற்படவில்லை. முடிந்ததை முடிந்தபொழுது ஆர்வமாகச் செய்ததில் வந்த ஒரு சில பலன்கள் இவை.

அன்னை மட்டும் வருமானத்தை இருமடங்காக்குவார்.

முறைகள் மட்டும் வருமானத்தை இருமடங்காக்கும்.

அன்னையும் முறைகளும் வருமானத்தை 10மடங்காக்கும்.

Savitri - 331

Daily Savitri - 331

Sri Aurobindo's Savitri

 But meanwhile all is a shadow cast by a dream 
And to the musing and immobile spirit 
Life and himself don the aspect of a myth, 
The burden of a long unmeaning tale. 
For the key is hid and by the Inconscient kept; 
The secret God beneath the threshold dwells.    

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  68

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Friday, July 26, 2013

Savitri - 330

Daily Savitri - 330

Sri Aurobindo's Savitri

This transfiguration is earth's due to heaven: 
A mutual debt binds man to the Supreme: 
His nature we must put on as he put ours; 
We are sons of God and must be even as he: 
His human portion, we must grow divine. 
Our life is a paradox with God for key.   

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  67

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Thursday, July 25, 2013

பேரம் பேசுதல் என்ற சுபாவம் அன்னை அன்பர்களுக்கு உகந்ததா?

பேரம் பேசுதல் என்ற சுபாவம் அன்னை அன்பர்களுக்கு உகந்ததா? - திரு. கர்மயோகி அவர்கள்

அன்னை முறை பெரிது; அன்னையை மட்டும் நம்பி நடக்க வேண்டுமென்பது. நாம் மாற்றத்தை நாடுகிறோம், சுபாவத்தை மாற்ற முயல்கிறோம் என்பதால் நம் சுபாவம் மாறும் வகையில் நாம் எதிரியிடம் பழக வேண்டும்.

நமக்குப் பதிலாக ஆன்மாவை (அன்னையை) வேலை செய்யச்சொன்னால், ஆன்மிகச் சக்தி எழுந்து செயல்படும். அவர் நம்மைத் தேடி வருவார். நாம் பேரம் பேசவேண்டியதை, நாம் கேட்பதற்கு முன் கொடுப்பார்.

அன்னையின் பொது முறை காரியத்தை முடிக்கும். நம் மாற்றத்திற்கேற்ற அன்னை முறை காரியத்தை முடிப்பதுடன், அதன் மூலம் மாற்றத்தையும் தரும்.

பேரம் பேசும் சந்தர்ப்பம் வந்தால், எதிராளியின் சௌகரியங்களையும், தேவைகளையும் ஆராய்ந்து பார்த்துப் பேசும் பழக்கத்தை மேற்கொள்ளுதல் நலம்.

பேரம் பேசும் மனநிலை உயர்ந்த மனப்பான்மைக்கு எதிரி.

உயர்ந்த மனப்பான்மை என்பது, கேட்டதைக் கொடுப்பது, அதுவும் கேட்கும் முன் கொடுப்பது, கேட்பதைவிட அதிகமாகக் கொடுப்பது. இவை அன்னையின் போக்கு. பேரம் என்பது, எவ்வளவு குறைவாகக் கொடுக்க முடியுமோ, அவ்வளவு குறைவாகக் கொடுக்க முயல்வது. இவை எதிரெதிரான நோக்கங்கள். நாம் அன்னையை நெருங்கிவர வேண்டுமானால் பேரம் பேசும் மனநிலையை விட்டுவிட வேண்டும். இன்றைய உலகில் பேரம் பேசாவிட்டால், நாம் சீக்கிரம் திவால் ஆகி விடுவோம். நம் சம்பளம் முதல் வாரத்தில் செலவாகும். பேரம் பேசக் கூடாது என்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடையவர் பேரம் பேசாவிட்டால், அதற்குப் பதிலாக நாம் நஷ்டப்படாமலிருக்க ஒரு வழி சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்.

நடைமுறை வாழ்வில் இதற்குப் பதில் இல்லை. ஆனால் பதிலேயில்லை என்று சொல்ல முடியாது. பதிலை அறிய நாம் பேரத்தின் உட்கருத்தை அறிய முன்வர வேண்டும்.

பேரம் பேசுவதன் மூலம் நாம் என்ன எதிர்ப்பார்க்கிறோம்? அநியாய விலைக்கு வாங்கக் கூடாது. நம் பொருளை அநியாயமாக இழக்கக் கூடாது என்று எதிர் பார்க்கின்றோம். இதற்கு, நமக்குத் தேவையானது வலிமை.

மார்க்கட்டில் ஒரு பொருளின் விலையை அதன் தரம், அடக்க விலை, பயன் ஆகியவற்றை மட்டும் கொண்டு நிர்ணயிப்பதில்லை. விற்பவர் யார்? ஏழை விற்றால் பொருளுக்கு விலை குறைவு. பணக்காரனிடமிருந்தால் அதே பொருளுக்கு விலை அதிகம். மார்க்கட் நிலவரப்படி ரூ.5000 பெறுமான சொத்தை, திவாலானவன் விற்பதால், ஏலம் எடுப்பதற்கு எவரும் முன் வரவில்லை. ரூ.1200 கடன் கொடுத்தவர் தம் கடனுக்காக அந்தச் சொத்தை ஏற்கவும் மறுத்தார். விலை விற்பவனைப் பொருத்தது. விற்பவன் ஏழையானால், அல்லது வெளியூர்க்காரனானால், அல்லது அவசரப்பட்டால், சொத்தின் விலை பாதியாகும். இதுவே பேரத்தின் உள்ளுறை உண்மை.

வலிமை என்பது பணத்தாலும், அந்தஸ்தாலும் வருவது. நமக்கு அதே வலிமை அன்னையால் வரும். அது பொறுமை, நிதானம் தெளிவு மூலமும் வரும். மனம் தெளிவு பெற்று, நிதானமாகப் பொறுமையாய்ச் செயல்பட்டால் அன்னை அதன் மூலம் பேரத்தில் நமக்கு வலிமையைத் தருகிறார் என்பதை பக்தர்கள் பார்க்காத நாள் இல்லை.

பெரிய உத்தியோகத்திலுள்ள நண்பரை அணுகி, உதவி கேட்டால் கொடுப்பாரா என்ற நிலையில், நண்பரை அணுகியவுடன், மனம் அன்னைக்குரியதாக இருந்தால், என்ன வேண்டும் என்று சொல்லுங்கள், செய்கிறேன் என்றவர் செய்த முறை தமக்கே செய்து கொண்டதைப் போலிருந்தது. மேலதிகாரிக்கு அவர் கீழ்ப்படிதல்போல் தாழ்ந்த பதவியிலுள்ள பழைய நண்பருக்கு உதவினார்.

காய்கறி வாங்க கொத்தவால் சாவடிக்குப் போன பெண்மணி சில நண்பர்களுடன் சென்றார். எல்லோரும் பேரம் பேசினர். இவர் பேரம் பேசவில்லை. வெண்டைக்காய் 1 கிலோ வாங்கினார். மறுநாள் சமையல் காய் மிகப் பிஞ்சாக, இனிமையாக இருந்ததை, இவர் கண்டார். மற்றவர்கள் வாங்கியதில் ஒரு பகுதி முற்றல், மீதியை உபயோகப்படுத்தினர்.

பேரம் என்பது பேச்சு முறை.
மனம் தெளிவானால், வலுவாக இருக்கும்.
அன்னைக்குரியவை நிதானம், பொறுமை.
பொறுமையும், நிதானமும் வலிமையைத் தரும்.
வலிமை நியாய விலையைப் பெற்றுத் தரும்.
பேரம் பேசும் அவசியம் அன்பர்க்கில்லை.

Savitri - 329

Daily Savitri - 329

Sri Aurobindo's Savitri

The Absolute, the Perfect, the Immune, 
One who is in us as our secret self, 
Our mask of imperfection has assumed, 
He has made this tenement of flesh his own, 
His image in the human measure cast 
That to his divine measure we might rise; 
Then in a figure of divinity 
The Maker shall recast us and impose 
A plan of godhead on the mortal's mould 
Lifting our finite minds to his infinite, 
Touching the moment with eternity.  

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  67

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Wednesday, July 24, 2013

Audio - Tamil : அதிர்ஷ்டத்தின் இரகசியம் என்ன?

Audio : Tamil : Book Reading Program on July 21, 2013

(Book Reading Program - July 21, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Sea Urchin Cactus
Cactus Flower - Luck Flower

Click this link to Play the Audio  (or)

Hedge Cactus
Player 1

Topic:
அதிர்ஷ்டம் வரும் வழிகள் 

பேரதிர்ஷ்டம் வரும் வழிகள் என ஸ்ரீ அரவிந்தர் கூறும் சித்தாந்தம் 

அதிர்ஷ்டம் தோல்வியிலும், கஷ்டத்தாலும், துரோகத்தாலும் கூட வரும். 

Book :Venugaanam
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 -  July 28, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil -அதிர்ஷ்டத்தின் இரகசியம் என்ன? - திரு. கர்மயோகி அவர்கள் 

Savitri - 328

Daily Savitri - 328

Sri Aurobindo's Savitri

The Absolute, the Perfect, the Alone 
Has entered with his silence into space: 
He has fashioned these countless persons of one self; 
He has built a million figures of his power; 
He lives in all, who lived in his Vast alone; 
Space is himself and Time is only he. 

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  67

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Tuesday, July 23, 2013

Savitri - 327

Daily Savitri - 327

Sri Aurobindo's Savitri

The Absolute, the Perfect, the Alone 
Has called out of the Silence his mute Force 
Where she lay in the featureless and formless hush 
Guarding from Time by her immobile sleep 
The ineffable puissance of his solitude. 

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  67

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Monday, July 22, 2013

ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் -10

ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் -10

(From the Book : அருளமுதம்)

- திரு. கர்மயோகி அவர்கள்

இடையறாத அன்னையின் நினைவு என்ற நிலையை அடைதல் எப்படி?

"நினைவு என்பதென்ன'' என்பது ஒரு பெரிய தத்துவ விசாரம். ஞாபகம் என்பது அனைவருக்கும் முழு அளவில் இருப்பதில்லை. அதிக ஞாபக சக்தி உள்ளவர்களைக் கண்டு உலகம் வியக்கும். ஞாபகமே மனிதன் என்றும் கருதுபவருண்டு. மேல் மனத்திற்குத்தான் (surface mind) ஞாபகம் உண்டா, இல்லையா என்ற பிரச்சினை. உள்மனம் (inner mind) அப்பிரச்சினையைக் கடந்தது. அதற்கு அத்தனையும் நினைவுண்டு. நம் காதில் படாமல் நம்மைச் சுற்றி எழும் ஒலிகளும், நம் கவனத்தைக் கவராத காட்சிகளும் அங்குப் பதிவு செய்யப்படுகின்றன. மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டுவரும் திறன் உள்மனத்திற்குண்டு. மேல்மனம், உள்மனத்திலிருந்து பிரிக்கப்பட்டு, அறியாமையால் செப்பனிடப்பட்டது. அதனால், அதற்கு மற்ற அம்சங்களைப்போல, நினைவும் அளவுக்குட்பட்டது. மனத்திற்கு ஒரு மையம் உண்டு. அம்மையத்திற்கு அக்கரையுண்டு. அந்த அக்கரையில் படும் நிகழ்ச்சிகளை மனம் நினைவிருத்தும். மற்றவற்றை நினைவில் இருத்துவதில்லை. நிகழும்பொழுதே நினைவிருத்தப்படாதவற்றை, மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவதில்லை. எனவே, இடையறாத நினைவு என்பது எந்த விஷயத்திலும் மனிதனுக்கு இருப்பதில்லை.

நாயன்மார் ஆண்டவனை இறைஞ்சிக் கேட்பது இடையறாத நினைவு. பகவானுடனிருந்த சாதகர் அவர் அறையிலேயே தூங்குவார். ஒரு மணி நேரம்கூட அறையை விட்டு வெளியில் போகாதவர். தனக்கு ஏதாவது கூறும்படி பகவானைக் கேட்டார். இரவும், பகலும், எப்பொழுதும் அகலாத இறைவன் நினைவு வேண்டும் எனப் பிரார்த்திக்கச் சொன்னார். அந்தச் சாதகர் இறைவன் முன்னாலேயே இரவும், பகலும் இருக்கிறார். இருந்தாலும், கண் முன்னாலிருப்பது மனத்தில் நிலைத்திருக்கும் என்பதில்லை. மனத்தில் நீங்காமல் பகவான் குடிகொண்டால்தான் நீங்காத நினைவு ஏற்படும். இந்த நினைவு அன்னை மீதிருக்க வேண்டுமெனில் மனத்திற்கு அதிகத் திறன் வேண்டும். எளியவற்றை எளிமையாக நினைவிருத்தலாம். சிக்கலானவை, பெரியவை, விளங்காதவை நினைவில் எளிதில் தங்கா. அன்னையை மனத்திலிருத்த முழுத் திறனும் - சக்தி - தேவை. மனம் வேறெதிலும் ஈடுபடாமலிருந்தால் அன்னையை நினைக்க முடியும். மனத்தில் எண்ணம் எழுந்தால், மனத்தின் சக்தியை ஓரளவு எண்ணம் எடுத்துக்கொள்ளும். அதனால் அன்னையை நினைவுபடுத்துதல் கடினம். எண்ணமற்ற மனம் அன்னையை நினைவுகூரத் தேவை. எண்ணமே கூடாதுஎனில், எண்ணம் பேச்சாக மாறி வெளிவந்தால் அன்னை நினைவு அகலும். எனவே, வாயால் ஒரு வார்த்தை பேசினாலும் அன்னை நினைவு விலகும் என்பது உண்மை. மௌனத்தைத் தபஸ்விகள் நாடியதன் காரணத்தில் இதுவும் ஒன்று. பேசும் அவசியம் ஏற்பட்டால் என்ன செய்வது? அன்னையை நீங்காத நினைவுடன் பெற மனம் விழைந்த பின் பேச்சு தானே அற்றுப்போய், குறைந்துவிடும். அன்னை மௌனத்தைப் பாராட்டவில்லை. Controlled Speech அளவுடன் பேசுவதையே அன்னை பாராட்டினார். பேசும் சந்தர்ப்பம் எழுந்தால், நாம் பேசினால் அது பேச்சு. பேச்சு மனத்தை அன்னையிடமிருந்து விலக்கும். எழும் பேச்சை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், தேவையான பேச்சுக்கு அவர் அனுமதி அளிப்பார். அது அளவோடுள்ள பேச்சு. இது நாம் பேசுவதில்லை. இது நம்முள் அன்னை பேசுவதாகும். இப்பேச்சு மௌனத்தைக் கலைக்காது, அன்னை நினைவை அதிகப்படுத்தும். இதன்றி நம் மனத்தில் எழும் எண்ணம், சமர்ப்பணமின்றி வெளிவருவது பேச்சு. அதுபோன்ற சொல் வாயால் ஒன்றுகூட வரக்கூடாது.

இது முதல் நிபந்தனை. இடையறாத அன்னை நினைவை நாடுபவர் வாயால், ஒரு சொல்லும் சமர்ப்பணமின்றி வரக்கூடாது. ஒலி, ஒளி, மணம் போன்றவை புலன் வழி உள்ளே வருகின்றன. புலன் வழி வருபவற்றை மனம் ஏற்றுப் புரிந்துகொள்கிறது. அன்னை புலன்களிலில்லை, மனத்திலில்லை, ஆன்மாவில் - சைத்தியப்புருஷன் - இருக்கிறார். ஆன்மாவே அன்னையை நினைக்க முடியும். மனத்தில் எழும் எண்ணம் அன்னை நினைவுக்குப் புறம்பானது. எனவே, மனத்தையும் கடந்து புறவெளியில் உலவும் புலன்களால் அன்னையை நெருங்க முடிவது இல்லை. ஓர் ஒலி கேட்கிறதுஎனில், காது மனத்திற்கு அதைச் சொல்கிறது. ஒயை ஏற்கும் மனம், ஒலியை ஏற்று, அதன் பாதை வழியே ஒலி உற்பத்தியான இடத்தை நாடுகிறது. அன்னை வெளியில் இல்லை. அகத்தில் ஆன்மாவிலிருக்கிறார். அன்னை நினைவை நாடுபவர் ஒலி கேட்டவுடன், மனத்தைத் தாண்டி உள்ளே வீற்றிருக்கும் ஆன்மாவைத் தட்டி எழுப்பி, வெளியே போகும் சந்தர்ப்பம் வருகிறது. போகாதே, உள்ளே போய் அன்னையைக் காணுதல் தேவை என்று சொல்ல வேண்டும். அதைச் சொல்ல ஒயை உள்ளே அனுமதிக்காமல், ஒலி மனத்தைத் தொடுமுன் அன்னையை நினைந்து, ஆன்மாவை நாட வேண்டும்.

எந்தச் சப்தம் கேட்டாலும், சப்தம் மனத்தைத் தொடுமுன் அன்னையை அழைக்க வேண்டும்.

நாம் நடமாடிக்கொண்டிருக்கிறோம், பேசுகிறோம், ஏதாவது செய்துகொண்டேயிருக்கிறோம். சும்மா உட்கார்ந்திருக்கும் பொழுதும் உடல் லேசாக அசைகிறது, கை, கால்களை அசைக்கிறோம், கண் சிமிட்டுகிறோம், ஆடையைத் திருத்துகிறோம். உடல் இருள் நிறைந்தது. மனம் ஒளியுடையது. உடலால் அன்னையை நினைப்பது கடினம். மனத்தில் அன்னை நினைவை நிலைநிறுத்தியபின், உணர்வைக் (vital) கவனித்தால், உணர்வு ஓயாமல் அசைந்துகொண்டே இருப்பதைக் காணலாம். விளையாடும் குழந்தையிடம் எதையும் சொல்வது சிரமம் என்பதுபோல், வேகமாக அசையும் உணர்விடம்எதையுமே சொல்ல முடியாது. அதை நிறுத்தி, அன்னையை நினைக்கும்படி சொல்வது எளிதல்ல. இது எவ்வளவு சிரமம் என அறிய உணர்வையே அன்னையை அழைக்கச் சொன்னால், அது முடியாது என எளிதில் காணலாம். அது முடிந்தால், க்ஷணத்தில் உடல் சக்தியால் நிரம்பி, யானை பலம் வருவது தெரியும். உடல் அதையும் தாண்டி இருளே உருவானது. உடலிடம் அன்னையைப் பற்றிச் சொல்ல மனம் முயன்றால், உடலைத் தொட்டவுடன், அதனிருளில் மனம் தன்னையே இழந்து திகைப்பதைக் காணலாம். இடையறாத அன்னை நினைவு பலிக்க வேண்டுமானால், உடலே அன்னையை நினைவுகூர வேண்டும். (Gross) ஸ்தூல உடலில்லாத தெய்வங்களால் இடையறாத நினைவு முடியாது எனத் துர்கா அன்னையிடம் கூறினார். இடையறாத அன்னை நினைவு ஸ்தூல உடலுக்குரியது. அது இருள் மயமானதெனினும் அதுவே சாதிக்க வல்லது. எனவே, உடல் அசைந்தால், அசைவுள்ள இடத்தில் உணர்வு எழுந்து மனத்தை அடையும்.

அதற்குப் பதிலாக, அசைவு எழுமுன் அங்கு அன்னையைக் கண்டால், அன்னை எழுந்து மனத்தையடைந்து, ஆன்மாவுக்குச் சென்று நினைவை நிலைப்படுத்துவார்.

உடல் அசையும்பொழுது அசையுமிடத்தில் அன்னையைக் காணுவது அவசியம்.

நம்முடலின் அசைவு நம்முள் எழுவது. உடலின் பகுதிகள் வேறு பொருளைத் தொட்டு, தொடு உணர்வு ஏற்பட்டாலும் சட்டம் இதுவே ஆகும்.

எந்தப் பொருளைத் தொட்டாலும், தொடுமுன் அதன்மீது அன்னையின் திருவுருவத்தைக் காண வேண்டும்.

காது ஒளியைக் கேட்டு மனத்தை அடைவதைப்போல், கண்

தான் கண்ட காட்சியை மனத்திற்கு எடுத்துச் செல்வதால்,கண்ணில் கண்ட காட்சிகள் மனத்தைத் தொடுமுன் அன்னையின் உருவம் மனத்தைத் தொட வேண்டும்.

நம் மனதில் எழும் எண்ணங்களை கட்டுப் படுத்திவதன் முக்கியத்துவம்: 

அதேபோல் எண்ணத்தைப் பற்றி முதல் சொல்லியதால்,ஓர் எண்ணம் தோன்றினால் அதை விலக்கி, அன்னை நினைவால் அதை மாற்ற வேண்டும்.

எண்ணம் தோன்றியபின் மின்னல் வேகத்தில் - மனோ வேகத்தில் - நகருவதால், தோன்றியபின் அதைக் கட்டுப்படுத்துவது இயலாது. எண்ணம் மனத்திற்குரியது; மனத்தில் தோன்றுகிறது. அன்னை நினைவு ஆன்மாவுக்குரியது; ஆன்மாவில் எழுவது. நாம் மனத்தில் விழிப்பாக இருப்பதால் எண்ணம் தோன்றுகிறது. ஆன்மா, எண்ணம் தோன்றும் மனத்தைவிடப் பெரியது; வலிமையானது. ஆன்மாவில் நாம் விழிப்பாக இருந்தால், மனம் அசைந்து எண்ணம் எழுமுன், ஆன்மா அசைந்து அன்னை நினைவு எழும். இந்த விழிப்பும் (உஷாரும்) அன்னை நினைவுக்கு அவசியம்.

எண்ணங்கள் தோன்றுமுன் அன்னை ஒளி ஆன்மாவிலிருந்து புறப்பட்டு மனத்தில் பளிச்சிட வேண்டும்.

ஐம்புலன்களை நாம் அறிவோம். எண்ணம், கவலை போன்றவை அவற்றைக் கடந்தவை. எண்ணம் மனத்திற்குரியது; கவலை உணர்வுக்குரியது. கவலை சகஜமாக எழும். எழுந்தமாத்திரம் உணர்வைக் கவ்விக்கொள்ளும். உணர்விலிருந்து மனத்தை எட்டி, கவலை நியாயமானது எனக் கூறும். மனம் அதை ஏற்றால், பிறகு கவலையை அழித்தல் கடினம். மனத்தைக் கட்டுப்படுத்துவதைவிட உணர்வைக் கட்டுப்படுத்துவது சிரமம். சிரமமாயினும் செய்வது அவசியம்.

ஒரு கவலை மனத்தில் எழுந்தால், வலிய அதை விலக்கி, அன்னையை அங்கு, இனி அக்கவலை எழாவண்ணம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

யோசனை என்பது பல எண்ணங்கள் சேர்ந்தது. இந்தக் காரியத்தைச் செய்யலாமா எனில், அதனுள் பல எண்ணங்கள் திரண்டிருக்கும். யோசிக்க ஆரம்பித்தால் எண்ணங்கள் செயல்படும். செயல்பட ஆரம்பித்த எண்ணங்கட்கு வலிமை அதிகம். வலிமை சேர்ந்தபின் அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம். அவற்றை மீறி அன்னை நினைவு எழாது. யோசித்து நாம் ஒரு முடிவுக்கு வருகிறோம். முடிவைச் செயல்படுத்தினால், பலன் வரும். அப்பலன் நம் முடிவையும், யோசனையையும் பொருத்தது. தினமும் நமக்குப் பல்வேறு யோசனைகள் எழுகின்றன. எனவே, அன்னை நினைவு யோசனையற்ற மற்ற நேரங்களுக்கேயுரியது எனத் தோன்றுகிறது. இந்த மனப்பான்மையுடன் அன்னை நினைவைப் பெறலாம். ஆனால் இடையறாது பெற முடியாது. இதை மாற்ற வேண்டும். யோசிக்கும் பொழுது யோசனையை நம்புகிறோம். அதை நம்பினால் பலன் யோசனையால் நிர்ணயிக்கப்படும். யோசிக்காமல் செயல்படுவதைவிட யோசனை மேல். யோசனையைவிட நம்பிக்கை உயர்ந்தது. நாம் யோசிப்பதற்குப் பதிலாக, நம் முடிவை விட உயர்ந்த அன்னை முடிவை நாடுதல் சிறப்பு. அன்னையை நினைவுகூர்ந்தால் நம்பிக்கை நம்மிடமிருந்து அன்னைக்கு மாறுகிறது. மாறியபின் செயல்படுவது அன்னை முடிவு. அது பெரியது. அதை நம்பினால், யோசனையை விலக்கி, அன்னையை நினைவுகூர வேண்டும்.

ஒரு யோசனை மனதில் தோன்றினால், இதை யோசிப்பதைவிட அன்னையை நினைப்பதால், யோசனையால் ஏற்படும் பலன் முழுவதும் ஏற்படும் என்று அன்னையை நினைக்க வேண்டும்.

நாம் செய்யும் காரியங்களை நாம் ஆரம்பிக்கிறோம்; செய்கிறோம். அதற்கு வரும் பலனைப் பெறுகிறோம். சமர்ப்பணம் செய்தால் அன்னையின் பலன் வருகிறது. அதைவிட உயர்ந்த நிலை

ஒன்றுண்டு. காரியத்தைப் பல பாகங்களாக்கி, ஒவ்வொரு பாகத்தையும் சமர்ப்பணம் செய்தால், காரியம் பெரிய அளவில் அன்னை பலனை அளிக்கும்.

ஒரு காரியம் செய்யும்பொழுது அதைப் பல பாகங்களாக்கி ஒவ்வொரு பாகத்தை நினைக்கும் முன்னும், மனம் அன்னையை நினைக்க வேண்டும்.

கடந்த கால நினைவு வந்தபடியிருக்கும். அவற்றுள் நல்லவை, கெட்டவை கலந்திருக்கும். நல்ல காரியங்கள் மனத்தைச் சந்தோஷப்படுத்தும். அந்நேரம் நாம் அன்னையை மனதால் நமஸ்காரம் செய்து, நன்றியுணர்வால் நிறைதல் நினைவை நிலைப்படுத்தும்.

நமக்கு நடந்த எந்த நல்ல காரியம் நினைவுக்கு வந்தாலும், உடனே அன்னையை மனதால் நமஸ்கரித்து, நெஞ்சால் நன்றியை உணர வேண்டும்.

கெட்டவை நினைவுக்கு வந்தால், மனம் வேதனைப்படுகிறது. வேதனைப்பட்டாலும், வருத்தப்பட்டாலும் நடந்தவை - கெட்டவை - வலுப்படும். நாம் எப்பொழுதும் உணர வேண்டிய ஒரேயுணர்வு சந்தோஷம். கெட்டவை நினைவு வந்தால் சந்தோஷம் எப்படி வரும்?

கெட்டவை பல காரணங்களுக்காக நடக்கின்றன.

1. பின்னால் வரக்கூடிய பெரிய கெட்டதைத் தவிர்க்க,

2. நம் மனம் உணர வேண்டியவைகளை உணர,

3. நம்மை விட்டு விலக்க வேண்டியவர்களை விலக்க,

என்பன போன்ற பல காரணங்களுக்காக அவை நடப்பதை நாம் அறிந்து, வருத்தப்படுவதையும், வேதனைப்படுவதையும் மாற்றி, நமக்கு ஏன் அவை நடந்தன எனப் புரியவில்லை; எனவே, வருத்தப்படுவதுசரியில்லை என்று முடிவு செய்தால் சரி. அப்படியும் அந்நிகழ்ச்சி மனத்தை விட்டகலவில்லைஎனில், அவற்றின் வரலாற்றைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

நமக்கு நடந்த எந்தக் கெட்டது நினைவு வந்தாலும் அந்நினைவைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

நமக்குப் பலர் பற்றிய நினைவுகள் வந்தபடியிருக்கின்றன. ஒருவரைப் பற்றி நினைத்தால் நினைவு அவ்வழியே பல நிகழ்ச்சிகளுக்கு ஓடுகிறது. ஓடியபின் அன்னை நினைவு விலகும். யாரையும் நினைப்பதைவிட, அன்னையை நினைப்பது மேல் என மனத்தை மனிதரிடமிருந்து அன்னைக்கு மாற்ற வேண்டும்.

யார் நினைவு வந்தாலும், அன்னையை நினைப்பது மேல் என நினைவை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எரிச்சல் பல விதம். கோபத்தை அடக்கினால் எரிச்சல் வகிறது. எரிச்சலை அடக்கினால் விரக்தி ஏற்படுகிறது. அதை விலக்க முயன்றால் படபடப்பு வருகிறது. Irritation, annoyance, irksomeness, pinpricks, tension, listlessness, impatiencence எரிச்சல், குத்தல், சலிப்பு, பொறுக்க முடியவில்லை எனப் பல உருவங்களில் எரிச்சலும், அதன் உருவங்களும் நம்மை நாடுகின்றன. இவை அன்னையை விட்டு விலகி அகலும் பாதைகள் என நாம் அறிய வேண்டும். அறிந்து, விலகி, அவற்றைச் சந்தோஷமாக மாற்ற வேண்டும்.

ஏதேனும் எரிச்சல் எழுந்தால், நாம் அன்னையை விட்டு விலகிப் போகிறோம் என அறிந்து, மனத்தின் திசையை மாற்றி, எரிச்சலை அடக்கி, அழித்து, கூடுமானவரை அதைச் சந்தோஷமாக மாற்ற வேண்டும்.

நமக்குப் பழக்கமில்லாத புதிய சூழ்நிலைகள் ஏற்பட்டால், நாம் யோசிக்கிறோம்; பிறரைக் கலந்து ஆலோசிக்கிறோம். அவை நல்லவை. அன்னை இதைப் பற்றி ஏதேனும் சொல்யிருக்கிறாரா என அறிய முயல வேண்டும். அன்னை இது போன்ற காரியங்களை எப்படிச் செய்வார் என நினைக்க வேண்டும். இடையறாத அன்னை நினைவுக்குப் பெருந்துணை இது. . ஒரு காரியத்தை மேற்கொள்ளுமுன், அன்னை இதைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார், அவர் இதை எப்படிச் செய்வார் எனக் கருத வேண்டும்.

பாசம் இயல்பாக எழுகிறது. பிரியம் சில சமயம் உதயம் ஆகிறது. ஆசைக்கு எப்பொழுதும் அலுவலுண்டு. வேலையில் ஆர்வம் திறமையுள்ளவர்க்குண்டு. வேகம், ஆவேசம், தீவிரம் மனதுள் எழும் நேரமுண்டு. அன்னையை ஏற்றுக்கொண்ட பின் ஆர்வம் அன்னையை மட்டும் நாட வேண்டும். எனவே, மேற்சொன்ன உணர்வுகளை அன்னை மீது ஆர்வமாக மாற்ற வேண்டும். எப்படி? குழந்தை மீது பாசம், மனைவி மீது பிரியம், துணி மீது ஆசை, வேலையில் ஆர்வம் எழும்பொழுது, இவற்றை அனுமதித்தால் நாம் மனிதனாக இருக்கிறோம். நாம் அனுமதிக்கக் கூடியது அன்னை ஆர்வமே என உணர்வு மையத்திலிருந்து - பாசம் போன்றவை எழுமிடம் - ஆன்மாவுக்குச் சென்று ஆர்வத்தை எழுப்ப வேண்டும்.

பாசம், பிரியம், ஆசை, வேலையில் ஆர்வம், வேகம், தீவிரம் மனதுள் எழுந்தால், அவற்றை aspiration ஆன்மீக ஆர்வமாக மாற்ற வேண்டும்.
செய்திகள் கவலையைத் தாங்கி வருகின்றன. சில ஏக்கத்தைக் கிளப்புகின்றன. மற்றவை மனத்தில் பாரமாகின்றன. சில உற்சாகத்தைக் கொடுக்கின்றன. நல்ல உற்சாகமானாலும், கெட்ட கவலையானாலும், இவை அனுமதிக்கப்படக்கூடியவையல்ல. சந்தோஷம், சுகம், ஆர்வம் ஆகியவை அனுமதிக்கப்படக்கூடியவை என அறிந்து, அவற்றை மாற்ற முயல வேண்டும்

ஒரு செய்தி கேட்டுக் கவலை, ஏக்கம், பாரம், உற்சாகம் எழுந்தால், இவற்றை எல்லாம் அனுமதிக்கக்கூடாது; பதிலாக அன்னை நினைவு, சந்தோஷம், சுகம், ஆர்வத்தை எழுப்பவேண்டும் என அறியவேண்டும்.

நாம் செய்தவற்றில் குறையானவையுண்டு. அவை நினைவு வரலாம். வந்தால் மனம் குறைபடும், கவலைப்படும். அதற்குப் பதிலாக, ஏன் காரியம் குறையாக நின்றது எனச் சிந்தித்தால், நம் நம்பிக்கை குறையாக இருப்பதால், காரியம் குறையாக நின்றுவிட்டது எனப் புரியவேண்டும்.

குறையான காரியங்கள் நினைவு வரும்பொழுது, கவலை ஏற்பட்டால் நம்பிக்கை குறையாக இருக்கிறது என அறிந்து, அன்னை நினைவை நம்பிக்கை வளரும் வகையில் கொண்டுவர வேண்டும்.

கோபம் வந்தபடி இருக்கும். அதேபோல் பிரியம் எழுந்தபடி இருக்கும். கோபம் பொல்லாதது; பிரியம் நல்லது. நாம் எக்காரணத்திற்காகக் கோபப்பட்டாலும், யார் மீது கோபப்பட்டாலும், நஷ்டம் நமக்கு என்ற தெளிவிருந்தால், கோபம் தணியும். தணிந்த கோபம் தணலாக நிற்கும். அன்னை நினைவு குளிர்ந்த தென்றல். அன்னையை நினைத்தால் தணிந்த கோபம் குளிர்ந்தடங்கும். கோபம் இருக்கும்வரை அன்னை நினைவு நிலைக்காது என்பதால், கோபம் எழும்பொழுது, அன்னையை நினைவுபடுத்துதல் நலம். பிரியம் நல்லது; கோபத்தைப்போல் பொல்லாததல்ல. ஆனால், யார் மீது பிரியம் எழுகிறதோ, எது மீது பிரியம் எழுகிறதோ, அதை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். பிரியம் வளர்ந்தால், அப்பொருளோடு நாம் ஐக்கியமடைய வேண்டிவரும். இது அன்னையை நினைக்கவோ, அடையவோ, இடையறாது நினைக்கவோ பயன்படாது.

யார் மீது கோபம், பிரியம் வந்தாலும், அதைவிட அன்னை நினைவு சிறப்பு என அதை நினைக்க வேண்டும்.

மனம் பக்குவப்படவில்லை எனப் பொருள். மனம் பக்குவப்பட பல வழிகள் உள. அவற்றுள் சிறந்தது அன்னையை நினைப்பது. அதைவிடச் சிறந்தது, பழிவாங்கும் எண்ணத்தையும், அதனுடன் சேர்ந்த நிகழ்ச்சிகளையும் சமர்ப்பணம் செய்து, பிறகு அன்னையை நினைப்பதாகும்.

கடந்தகாலப் பழிவாங்கும் நினைவுகள் எழுந்தால், நாம் அன்னையை நெருங்க முடியாத தூரத்தில் உள்ளோம் எனப் புரிந்து, பழிவாங்கும் நினைவை அன்னை நினைவால் மாற்ற வேண்டும்.

இடையறாத நினைவு சித்தியாகும். அது சித்தித்தால் அடுத்த கட்டத்தில் இடையறாத தரிசனம் சித்திக்கும். அதன் விளைவாக பரமாத்மா, பிரபஞ்சத்தின் ஆன்மா, ஜீவாத்மா தரிசனம் கிடைக்கும். சர்வம் பிரம்மம் என்பதை ரிஷிகள் கண்டபின், கீதையே முதன்முதலாக இம்மூன்று புருஷர்களையும் பிரித்துத் தத்துவத்தை விளக்கியதாகப் பகவான் எழுதுகிறார். ஆத்ம தரிசனம் மோட்சம். பரமாத்மாவை ஜீவாத்மா ஒன்றி, பரமாத்மாவை அடைவது பூரணயோக சித்தி, அதற்கு அடிப்படை இடையறாத தரிசனம். அதற்கு முன் நிலை இடையறாத அன்னை நினைவு.