Pages

Tuesday, June 25, 2013

எனக்கேன் ஓன்றும் நடக்கவில்லை? - திரு. கர்மயோகி அவர்கள்

எனக்கேன் ஓன்றும் நடக்கவில்லை' 

- திரு. கர்மயோகி அவர்கள் எழுதிய கட்டுரை 


1943 முதல் அன்னை, பகவான் தரிசனம் தவறாது செய்த குடும்பம் ரூ.60சம்பளத்திலிருந்து ரூ.10,000 சம்பளம்வரை உயர்ந்தது. M.A.. படித்த இரு பெண்களுக்கு பட்டம் எடுத்து 15 ஆண்டுகள் திருமணமாகவில்லை. ஒரு பெண் வேறு மதத்தில் கட்டிக்கொண்டாள். ஒரு பையன் பட்டம் முடித்தபின் எதற்கும் உதவாமற்போய் மீண்டும் 9ஆம் வகுப்பில் சேர்ந்து படித்தான். இன்று அன்னையை அறிந்தவர் தங்கள் பிள்ளைகள் படிப்பு, திருமணம், வருமானம், ஆகியவற்றில் அன்னை நிகழ்த்தும் அற்புதங்களைக் கண்டு கீழ்க்கண்டவாறு கூறுகின்றனர்.

*எங்களுக்கெல்லாம் அப்படி எதுவும் நடக்கவில்லையே.

* முதலில் நடக்கும், அத்துடன் நின்றுவிடும்.

*ஜாதகப்படி நடந்ததை அன்னை செய்தார் என ஏமாந்துவிட்டோம்.

நடந்ததை மறந்து நன்றியில்லாமல் பேசுபவர் தமக்கு நன்றி இல்லாததால் பிறகு பலிக்கவில்லை என அறிவதில்லை. அன்னை செய்ததை வேறு காரணத்தால் நடந்தது என நினைப்பவருக்குத் தொடர்ந்து நடப்பதில்லை. அளவுகடந்து அன்னையின் அதிர்ஷ்டத்தைப் பெற்றவர் வீட்டில் பல வருஷங்களாக ஒட்டடை அடிக்கவில்லை.அந்த அசுத்தத்தை மீறி அன்னை தொடர்ந்து செயல்பட முடியாது. அருளால் நடப்பதை தங்கள் மட்டமான சுபாவத்தின் பெருமைக்காகப் பயன்படுத்தினால் அருள் செயல்படாது. 

அன்பர்கள் குறையைச் சுட்டிக்காட்டுவதே பழக்கமானால் அருள் செயல்படுவது நின்றுவிடும். தரித்திரம் வெளிப்படும் குணங்கள்:

1. சிடுமூஞ்சித்தனம்;

2. ஒட்டுக் கேட்பது;

3. மனிதரைவிடப் பணம் முக்கியம் என நினைப்பது;

4. கையில் உள்ள பிடியை விடாமல் நடப்பது;

5. தொழில் 80 மடங்கு உயர்ந்தபின் காணிக்கையை உயர்த்தாதது;

6. அன்னைக்கு நேரடியாகத் துரோகம் செய்தவரைக் குருவாக நினைத்துக் காணிக்கை செலுத்துவது;

7. துடுக்காகப் பேசுவது;

8. அல்ப புத்தி;

9. வாயார, நெஞ்சாரப் பொய் சொல்வது;

10. தன் குறைகளை அறியாதது;

11. கர்வமாக, திமிராக நடப்பது;

12. முரட்டுத்தனம்;

13. பொறாமை;

14. சுத்தமாக நம்பிக்கையில்லாதது;

15. வீடு அசுத்தமாக இருப்பது;

16. சம்பிரதாயம் தீட்டு என அறியாமல் பின்பற்றுவது;

17. பிரார்த்தனை பலிப்பதால், பிறர் அழியப் பிரார்த்தனை
செய்வது;

18. எவருக்குத் துரோகம் செய்தாலும் அது அன்னைக்குத் துரோகம் செய்வது என அறியாதது; 

19. மிக மட்டமான எண்ணங்கள் மனத்தில் உலவுவது;

20. உள்ளே கறுப்பாகவும், வெளியே அழகாகவும் நடப்பது;

21. அருளைப் பெற்றுத் தருபவரை அழிக்க முயல்வது;

22. எதிரியை நண்பனாக நினைத்து அவனுக்குச் சேவை செய்வது; 

23. அடிப்படையாக அறிவில்லாதது, நன்றியில்லாதது.

No comments:

Post a Comment