Pages

Tuesday, June 11, 2013

அருள் அதிகரிக்கும்பொழுது அறியாமையும் அதிகரிக்கின்றது. ஏதோ ஒரு நிலையில் அருளும், அறியாமையும் ஒன்றன்றோ?

அருளும், அறியாமையும் ஒன்றன்றோ? உடலின் ஒரு பகுதி வளர்ந்தால், அடுத்த பகுதியும் வளர்கிறது. ஏனெனில் ஒரு பகுதியின் வளர்ச்சிக்கு மொத்த உடலின் வளர்ச்சி தேவை. எனவே முழு உடல் வளரும்பொழுது, அதனுள் உள்ள எல்லாப் பகுதிகளும் வளர்கின்றன. அருள் தெய்வத்தின் செயலானாலும் பிரம்மத்தின் ஒரு பகுதியாகும். ஒரு பகுதி வளர, முழுமையின் வளர்ச்சி தேவை, எனவே அடுத்த பகுதிகளும் வளர்கின்றன. அறியாமை ஒரு பகுதி என்பதால் அதுவும் வளர்கிறது.

அறியாமை, அறிவைவிட அதிக சக்தி வாய்ந்தது என்கிறார் பகவான், அறிவு என்பதே முதல் ஏற்பட்டது. அறிவு, சிருஷ்டியின் தேவைக்காக, தன்னை அறியாமையாக முயன்று மாற்றிக்கொண்டது. அந்த வகையில் அறியாமை அறிவைத் தாண்டிய நிலையிலுள்ளது. 


அடிப்படையில் அறியாமை என்பது அறிவிருந்து உற்பத்தியானது. ஆகையால் அறியாமை தன் வளர்ச்சி மூலம் தன் எல்லையை எட்டியபொழுது அறிவாக மாறிவிடும். அருள் செயல்படுவதால் அறியாமை அறிவாக மாறுவது இயற்கையன்றோ? இந்த இரு காரணங்களாலும் அருள் அதிகரிக்கும் பொழுது, அறியாமையும் அதிகரிக்கின்றது.


அதையும் தாண்டிய நிலையில் அருள் எதிருந்து புறப்பட்டதோ அதிருந்துதான் அறியாமையும் புறப்பட்டது என்பதால், அந்த ஒற்றுமையும் உண்டு.

-From யோக வாழ்க்கை விளக்கம் - திரு கர்மயோகி அவர்கள்

No comments:

Post a Comment