Pages

Monday, May 27, 2013

சூட்சும உலகில் நடப்பதற்கும், இந்த உலகித்தில் நடப்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது ?


அன்னை குறிப்பிடும் சூட்சும உலகம் என்பது என்ன? 
நனவுலகிற்கும், அதற்கும் தொடர்பு உள்ளதா?  
சூட்சும உடல் மற்றும் சூட்சும உணர்வு என்பது என்ன?

- யோக வாழ்கை விளக்கம் - By. Karmayogi Avarkal

நம்மைச் சுற்றியுள்ள சூட்சும உலகில் நுழைய நாம் கற்பனையைப் பயன்படுத்துகிறோம். அவ்வுலகம் அற்புதமானது, இனிமை நிறைந்தது, அழகு பொருந்தியது, சுமூகமான மணம் வாய்ந்தது. முயற்சியால், அங்குப் போக முடியுமானால் அங்கே தங்கலாம், தங்கி நம் கற்பனைத் திறனால் புதியவற்றைச் சிருஷ்டிக்கலாம். அவை பிறகு வாழ்வில் பலிக்கும்.

உலகில் நடப்பவை எல்லாம் முதலில் சூட்சும உலகில் உற்பத்தியானபின் வெளிப்படுகின்றன. 

நாம் வாழும் உலகில் மோட்சத்தின் வாயில் நின்ற விவேகானந்தர் அதை மறுத்தார். மோட்சத்தை ஏற்றிருந்தால் அவர் பூவுலகை விட்டகன்றதுபோல, சூட்சும உலகையும் விட்டகன்று இறைவனை அடைந்திருப்பார். அவர் உலகம் ஒளிமயமாகும் வரை தம் ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்ற முடிவு செய்தவர். அதனால் சூட்சும உலகில் தங்கியிருந்தார். அப்படியிருந்த பொழுது ஸ்ரீ அரவிந்தரை ஜெயிலில் "சந்தித்து'' கீதோபதேசம் செய்து சத்தியஜீவியத்தை நாடும்படி வழி நடத்தினார்.
இந்த உலகை அன்னை விளக்குகிறார்.
அங்கு ஜன்னல், கதவு, சுவரில்லை.
எழுத ஆரம்பித்தால் கையில் பேனா வருகிறது.
எழுதினால் எழுத்தின் அடியில் பேப்பர் இருக்கிறது என்று சொல்கிறார்.

சாதகர்கள் சூட்சும உடலிலிருந்து ஸ்தூல உடலுக்கு வந்து எழுந்தபின் சூட்சுமத்தில் நடந்ததை மறந்துவிடுகிறார்கள். அன்னை அப்படிப்பட்டவரைச் சந்திக்கும்பொழுது "நான் உங்களைச் சூட்சுமத்தில் சந்தித்தேன்'' என்று கூறுவதுண்டு. கேட்பவருக்ககோப் புரியாத புதிர். அன்னைக்கு அன்றாட அனுபவம்.

சூட்சுமத்தில் ஒரு காரியத்தை இன்று உற்பத்தி செய்துவிட்டால் தானே அது பிறகு நனவுலகத்தில் தன்னைப் பூர்த்தி செய்துகொள்ளும் திறனுடையது.


சூட்சும உடல் என்பது உண்மையான உடலிருந்து சற்று மாறுபட்டது.

சூட்சும உடல். பகவான் ஸ்ரீ அரவிந்தர் புதிய பதப்பிரயோகம் செய்து தம் யோகத்தை விளக்கியுள்ளார். அதில்  என்பதும் ஒன்று. உண்மையான உடல் என்பதைச் சூட்சும உடல் என்றும் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டு.

ஸ்தூல உடல், சூட்சும உடல் என உடலை இரண்டாகக் குறிப்பிடுவார்கள். மாடு தன் முதுகின் மீது உட்கார வரும் வண்டை உட்காருவதற்கு முன் வாலால் தட்டும்.

உடல் உட்காருவதற்கு முன், கண்ணால் பார்க்காமல் வண்டு வருவது மாட்டின் சூட்சும உடலுக்குத் தெரிகிறது. சர்க்கரையைக் கொண்டு வந்தவுடன் எங்கிருந்தோ எறும்பு அதைத் தெரிந்து வருகிறது. விலங்கினங்களுக்குச் சூட்சும உடல், சூட்சும உணர்வுண்டு. மனிதனுக்கு அறிவு வளர்ந்து விட்டதால், சூட்சுமக் குணங்கள் மறைந்து விடுகின்றன. ஓரளவு இருப்பதுண்டு.

குழந்தை பிறந்தவுடன் தெய்வாம்சத்துடனிருக்கிறது. சிறு வயதில் பொய், சூது தெரிவதில்லை. வளர வளர எல்லா வக்ரங்களையும் கற்றுக் கொள்கிறது. வக்ரங்களைக் கற்றுக் கொள்வதற்கு முன் குழந்தை மனம்  உண்மையாக இருப்பதால் அதை உண்மையான மனம் என்று ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். மனத்திற்கும், உடலுக்கிருப்பதைப் போல் சூட்சுமம் உண்டு. மனம் உண்மையாக இருப்பதாலும் சூட்சுமம் ஏற்படும். இது உயர்ந்த சூட்சுமம். 


எல்லாக் கரணங்களுக்கும் சூட்சுமம் உண்டு. எல்லாக் கரணங்களும் உண்மையாக இருப்பதால் உயர்ந்த நிலையில் சூட்சுமம் பெறுகின்றன, திருடன் திருடுவதற்குக் கூர்மையான புத்தியுடையவனாக இருக்கின்றான். போலீஸ்காரன் திருடனைக் கண்டுபிடிக்க கூர்மையான புத்தியைப் பெறுகிறான். இது உயர்ந்தது. மனம் வக்ரங்களை இழந்து  உண்மையாகிறது. உடல் சுயமாகச் செயல்படுவதில்லை, அறிவால் உடல் ஆளப்படுகிறது. அதனால் தன் உண்மையை இழக்கின்றது. அறிவு உடலுக்கு விடுதலையளித்தால் உடல் உண்மை உடலாகி விடும். எப்படி மனம் வக்ரங்களை இழந்து உண்மையாகிறதோ அப்படி உடல் மனத்தின் ஆக்கிரமிப்பை இழந்து உண்மையாகிறது. விபத்தில் உடல் தன்னை அதிசயமாகக் காப்பாற்றுவதைப் பார்க்கின்றோம். மனத்தின் ஆணையை மட்டும் செய்து வந்தவுடல், ஆபத்தில் தன்னை மனம் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிந்தவுடன், மனத்தை மீறி தன் உண்மையான சக்தியை வெளிப்படுத்தி தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது. இந்தச் சக்தி பெரியது.

அதுவே உண்மை மனத்தின் சக்தி, அதற்குரிய சூட்சுமம் உயர்ந்த சூட்சுமம்.

உடல் மனத்தின் ஆக்கிரமிப்பை விட்டு விடுதலை பெற்று பெருந்திறன் பெறும்பொழுது உண்மை உடலாகிறது. விலங்கினங்களுக்குள்ள சூட்சும உடலுடன் இந்த உண்மை உடன் திறத்தை நாம் சேர்த்துப் பார்த்து குழப்பம் விளைவிக்கக் கூடாது. சூட்சுமம் தாழ்ந்த நிலையிலுள்ள விலங்கினத்திற்கு உண்டு. உயர்ந்த தெய்வ நிலையிலுள்ள உண்மை உடலுக்குண்டு. இது உச்சக்கட்ட சக்தி.

விலங்கு பெற்றுள்ளது சூட்சும உடல், இது மனம் வளர்வதற்கு முன் உள்ள திறன், மனம் வளர்ந்த பொழுது இந்த சூட்சுமம் மாறுகிறது. மனிதன் அதனால் இதை இழந்துவிட்டான். ஆனால் மனத்தின் பிடியை மீறி உடல் மீண்டும் பெறும் சூட்சுமம் விலங்கின் சூட்சுமத்தை விட உயர்ந்தது. அதை பகவான் உண்மை உடல் என்கிறார்.

No comments:

Post a Comment