Pages

Wednesday, January 30, 2013

அன்றாட வாழ்க்கையில் ஒருவர், ஆன்மீகப் பரிசோதனை செய்வது எப்படி?

அன்றாட வாழ்க்கையில் ஒருவர், ஆன்மீகப் பரிசோதனை செய்வது எப்படி?


ஒருவருடைய வாழ்வில் பரிசோதனை செய்வதற்கு ஆன்மா அனுமதிக்கிறது. பரிசோதனையை நடத்துவதற்கு ஒருவருடைய சொந்த வாழ்வே ஏற்றது. இந்த ஆராய்ச்சி ஆன்மாவுடன் ஒப்பு நோக்குவதில் தடையேதும் இல்லையென்றாலும், இதை ஒரு முறைக்கு மேல் செய்ய முயற்சிக்கக் கூடாது. நம்பிக்கை மலைகளை நகர்த்தக் கூடியது. ஆனால் அது சாதாரண மனிதனால் அன்று. ஒருவருடைய வாழ்வில் மலைபோன்ற தீர்க்க முடியாத பிரச்சனைகள் உண்டு. ஆனால் பெரிய வாய்ப்புக்களும் வாழ்வில் உண்டு.
வாய்ப்புக்களைப் பெறுவதற்கும் தடைகளை விலக்கிக் கொள்வதற்கும், நாம் ஆன்மாவை அழைக்கலாம்.
(ஆன்மாவினை அழைக்கும் முறை பற்றிய கட்டுரையை http://auromerecenter.blogspot.in/2012/08/invocation-of-spirit-message-of-day-aug.html என்ற link-ல் அன்பர்கள் காணலாம்.)
 கணவன் தீய பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தாலோ, ஒரு கம்பெனி சிறுகச் சிறுக நஷ்டத்தில் போய், அது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போய்க்கொண்டிருந்தாலோ, அல்லது நீதிமன்ற வழக்கில் அரசியல், இலஞ்சம், போன்றவற்றால் அநீதி இழைக்கப்பட்ட பொழுதும், ஆன்மாவை அழைக்கலாம். வருமானம் எட்டுக் கோடியை தொடும் பொழுதுதான் ஒரு கம்பெனி லாபமோ, நஷ்டமோ இல்லாமல் நடுநிலையை எட்டுமென்னும் பொழுது அதனுடைய வருமானம் ஒரு ஏழு கோடியை தாண்ட முடியாத நிலையில் இருக்குமானால், இந்த ஆராய்ச்சியினால் வருமானம் 8 கோடியைத் தாண்டும். முரண்பாடான சுபாவத்தையும் எண்ணங்களையும் விலக்கி, முழு உண்மையுடன் வேலையில் ஈடுபட்டு செயல்படும் பொழுது, வருமானம் அடுத்த மாதமே 80 கோடிகள் வரும். இதை எவ்வாறு செய்வது?
  1. ஒரு கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) வேலையில் ஊக்கமுடையவராய், தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவராய், மதசார்பு அற்றவராய், பாரம்பரிய சடங்குகள் முதலான கொள்கைகளை விலக்கி செயல்பட வேண்டும். இந்தக் கொள்கைகள் யாவும் ஆன்மாவுக்கு தீங்கானவைகளாகும்.
  2. இலக்கு தலைமை அதிகாரியினால் மட்டுமே அடைய முடியும். மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவும் பொன்னானது.
  3. இதில் தலையாய முக்கியத் தேவை என்னவென்றால், ஆன்மா எதையும் சாதிக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும்.
  4. ஆன்மாவை தாராளமாக வேலையில் ஈடுபடுத்த, எல்லா தடைகளையும் விலக்கி ஆன்மாவை தொடர்ந்து அழைக்க வேண்டும்.
  5. இலக்கு சம்மந்தப்பட்ட எல்லா எண்ணங்களையும் ஒருமுகப்படுத்தி, வேண்டாதவைகளை மெல்ல விலக்கி, அற்பத்தனமான விஷயத்தில் மனதை போகவிடாமல் தடுத்து, மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும்.
  6. இது நிச்சயமாக அமைதியையும் மௌனத்தையும் கொடுப்பதால், மனத்தில் சக்தியின் அழுத்தத்தை உணர முடியும். இந்த அனுபவம் ஆன்மீக பாதை சரியானது என்பதைக் காட்டும்.
  7. உன் உணர்ச்சிகளில் இலக்கை அடைவதில் நம்பிக்கை வைக்கவேண்டும். அப்பொழுது மனதைவிட்டு அகலாத தீவிர ஆர்வம் விலகி, அவ்வப்பொழுது சந்தோஷம் எழும்.
  8. ஒரு நிலையில் இவ்வாறு எவ்வித காரணமுமின்றி தானாகவே சந்தோஷம் எழும். 
வழக்கமாக நூற்றுக்கணக்கான சிறியதும் பெரியதுமான தொடர்ந்து தொல்லைக் கொடுத்துக் கொண்டு வந்த சூழ்நிலைகள் யாவும் மறைந்து, இப்பொழுது இனிமையான சூழ்நிலையாக மாறுவதைக் காணலாம். எதிர்பார்ப்புக்களை அதிகமாக வளர்த்துக் கொள்ளாமல், இலக்கைப் பற்றிய நினைவை விலக்கினால், நீ 8 கோடிகளுக்கு மேல் வருமானம் வருவதைக் காண்பாய். அது 80 கோடிகளைக் கூட எட்டுமென்பதும் சாத்தியம்.

- திரு. கர்மயோகி அவர்கள்,
 ஆன்மீகமும் ஐஸ்வர்யமும் என்ற நூலில் இருந்து.

No comments:

Post a Comment