Pages

Monday, January 14, 2013

அன்னையை ஏற்றுக்கொண்டபின் அன்பர்கள், வாழ்வுக்கும், வாழ்வைக் கட்டுப்படுத்தும் காலத்திற்கும் அடிமையில்லை.

அன்னையை ஏற்றுக்கொண்டபின் அன்பர்கள், வாழ்வுக்கும், வாழ்வைக் கட்டுப்படுத்தும் காலத்திற்கும் அடிமையில்லை.

மனிதன் வாழ்வுக்குட்பட்டவன். என்றுமே மனிதனால் சமூகத்தை எதிர்க்க முடியாது. அது சிரமம். சமூகத்தையே எதிர்க்க முடியாத மனிதனால் வாழ்வை நிச்சயமாக எதிர்க்க முடியாது. வாழ்வை ஒட்டியே அவன் போக வேண்டும், வாழ்வு காலனுக்குட்பட்டது. காலனை எதிர்ப்பது மனிதனுக்கில்லை. எனவே காலத்தின் குணத்திற்கு மனிதன் கட்டுப்படவேண்டும் என்பது உண்மை.

அன்னையை ஏற்றுக்கொண்டபின் மனிதன் வாழ்வுக்கும், வாழ்வைக் கட்டுப்படுத்தும் காலத்திற்கும் அடிமையில்லை. அதனால் காலத்தின் குணவிசேஷம் அவனை பாதிப்பதில்லை. அத்துடன் உலகத்தின் குணவிசேஷங்கள் அன்னையிடம் தலைகீழாகவும் செயல்படுவதுண்டு. கருமி என்று பெயர் வாங்கியவர்கள் அன்னையைப் பார்த்தபின் இதுவரை அவர்கள் வாழ்நாளிலில்லாதது போல் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொண்டதுண்டு. அதுபோல் கெட்ட வேளைகள் அன்னை பக்தர்கள் வாழ்வில் நல்ல காரியங்களைச் செய்வதும் உண்டு. 7,8 வருஷமாக ஒரு தொழிலை உற்பத்தி செய்து முதல் காரியம் ஒன்றை முடித்த வேளை, பொங்கல் போனபின் கரிநாளாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட project ஆக (திட்டம்) இருந்தாலும் பரவாயில்லை. 7 வருஷமாக தயார் செய்த தொழில், கரிநாள் அன்று ரிப்போர்ட்டைக் கொடுத்தால், தொழிலே வீணாகிவிடும். எந்த சாதாரண காரியமும் நாம் கரிநாளில் செய்வதில்லை. வருஷத்திற்கே மோசமான நாள். நாளின் குணத்தைப் புறக்கணித்து ரிப்போர்ட்டை அன்றே கொடுத்தார். பக்தர். தொழில் விருத்தியாயிற்று. உள்நாட்டை விட்டு அயல் நாட்டிற்கும் போயிற்று. பல திசைகளிலும் தொழில் வளர்ந்தது. எதிர்பார்த்ததைவிட அதிகமாகவும் வளர்ந்தது.

கெட்ட வேளையைக் கண்டு பயப்படுபவர்களை கெட்ட வேளை பாதிக்கும். அன்னை பக்தர்களைப் பாதிக்காது. நம்பிக்கையில்லாவிட்டால் (வேளையின் குணத்தை நம்பாவிட்டால்) நிச்சயமாகப் பாதிக்காது. அத்துடன் அன்னை மீதுள்ள நம்பிக்கை சாஸ்திரத்தின் மீதுள்ள நம்பிக்கையைவிட அதிகமானால், கெட்டவேளையும் நல்லது செய்யும்.நாள் செய்வதை நல்லவர்களால் கூட செய்ய முடியாது என்று ஆரம்பித்தேன். நல்லவர்கள் உலகில் குறைவு. ஒரு நல்லவரால் உலகுக்கு மழை அருளாகப் பெய்கிறது. அவர்களை விட நல்ல நாள் பலன்தரும் என்பது உண்மை.

அன்னை நல்லதை மட்டும் செய்வார். அனைத்தையும் நமக்கு நல்லதை மட்டும் செய்யச் சொல்வார். எவராலும் செய்ய முடியாத நல்லதை, அன்னையை நினைத்துச் செய்யும் காரியங்கள் செய்யும். அன்னையை நினைப்பதால் நேரம் அமிர்த நேரமாகிறது. அன்னை நினைவு நேரத்தின் தன்மையை நிர்ணயிக்கிறது. அன்னையை ஏற்றுக்கொண்டபின், நல்வாழ்வை நிர்ணயிக்கும் திறன் நேரத்திற்கு உள்பட அனைத்துக்கும் போய்விடும்.

-திரு கர்மயோகி அவர்கள் 

No comments:

Post a Comment