Pages

Friday, December 21, 2012

தன்னம்பிக்கை இழந்த ஒருவர் என்ன செய்ய வேண்டும்?




 தன்னம்பிக்கை இழந்த ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

நம்பிக்கை இரு வகையின. 

ஒன்று: மற்றவர்கள் மீதும், சூழ்நிலைகள் மீதும் வைக்கப்படும் நம்பிக்கை. 

மற்றொன்று: தன்னுடைய செயலில் வைக்கும் நம்பிக்கை. 

 ‘நான் வருந்தியும், உருகியும் அன்னைக்குத் தினமும் பிரார்த்தனை செய்து வருகின்றேன். பலன் ஏற்படவில்லை’ என ஒருவர் விரக்தியோடு குறிப்பிடுகின்றார். 

‘தன்னம்பிக்கை’ என்பதன் வேர்கள் வீழ்ந்த இடம் இதுதான்.

தன்னம்பிக்கை இழந்த ஒருவர் என்ன செய்ய வேண்டும்?’ என்பதை இனிப் பார்ப்போம்.

அன்னைக்குப் பிரார்த்தனை செய்வதால் பலன் ஏற்படுகின்றது. அதனால் பிரார்த்தனை தன்னம்பிக்கையை விளைவிக்கின்றது. இது மற்றவர்கள் மீதும், சூழ்நிலைகள் மீதும் வைக்கும் நம்பிக்கையைவிடச் சிறந்தது. ஆனால், அன்னையின் அருளில் மட்டுமே வைக்கின்ற நம்பிக்கைக்கு உள்ள சிறப்பும், புனிதத்துவமும் இதற்குக் கிடையா. தன்னம்பிக்கையில் ஏற்படுகின்ற பலன் ஒரு வரையறைக்கு உட்பட்டுத்தான் இருக்கும். அன்னையின் அருளில் மட்டுமே வைக்கின்ற நம்பிக்கைக்கு வரையறையே கிடையாது.

இந்த இடத்தில் மற்றவர் மீது வைக்கும் நம்பிக்கைக்கும், தன் மீது வைக்கும் நம்பிக்கைக்கும், அன்னையின் அருள் மீது வைக்கும் நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெரிந்து கொள்வதானது, குழப்பத்தைத் தவிர்க்கும்.

மற்றவர் மீது வைக்கும் நம்பிக்கை, எங்கிருந்தோ நன்மையை எதிர்பார்க்கின்றது. தன் மீது வைக்கும் நம்பிக்கை, ஒரு துணையைப் (பிரார்த்தனையை) பற்றி, தனக்கு நன்மையைத் தேடிக் கொள்ள முயல்கிறது. இந்தச் சுய தேடல் முயற்சியால் நன்மைகள் கிடைக்கலாம். ஆனால், முற்றுமாகக் கிடைக்கும் என்று கூற முடியாது. அன்னையின் அருள் மீது வைக்கும் நம்பிக்கை, தேட வேண்டிய அவசியம் இல்லாமலே நன்மைகளை வாரி வழங்குகின்றது.

இளநிலை, இடைநிலை ஆகிய முன்னிரு நம்பிக்கைகளையும் கடந்து முதுநிலையாகிய அன்னையின் அருள் நம்பிக்கையைப் பெறுவதே அரியது; பெரியது.

தன்னம்பிக்கை இழந்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நான் சொல்லியே ஆக வேண்டும்.

அவர்கள் அதாவது தன்னம்பிக்கை இழந்தவர்கள் தளராது, அதனினும் உயர்ந்த (அன்னையின் அருள்) நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, குறுக்கிடும் இடையூறுகளைக் கடந்து செல்ல வேண்டும்.

அன்னையின் அருளில் மட்டுமே நம்பிக்கை வைக்கத் தெரிந்தவர்களுக்கு எந்தச் சிக்கலும் தீரும்; எந்தத் துன்பமும் விலகும். தீராத பிரச்சினை என்பதே இருக்க முடியாது.


-எல்லாம் தரும் அன்னை  - திரு. கர்மயோகி அவர்கள் 


Thanks,
AuroMere Meditation Center ,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India


Tags: Sri Aurobindo, Sri Annai, Mother, Yoga Sakthi, Methods, Pratices, Karmayogi, Philosophy, Sri Aravindar, Sri Annai, character, transformation, Yoga, Yoga Sakti in life, எல்லாம் தரும் அன்னை, ஸ்ரீ அன்னை , ஸ்ரீ அரவிந்தர்  





         

No comments:

Post a Comment