Pages

Friday, December 14, 2012

அன்னை நம் பிரார்த்தனைகளை, எவ்விதம் பூர்த்தி செய்கிறார் ?

அன்னை நம் பிரார்த்தனைகளை, எவ்விதம் பூர்த்தி செய்கிறார் ?

நமது மனம் உலகை பாராட்டினால், நாம் உலகத்தில் ஆளும் சிறுமைக்கு ஆளாவோம். உண்மையை பாராட்ட உலகத்தை உதாசீனம் செய்ய வேண்டும். நம் மனம் அதற்கு இடம் தராது. 

அன்னைக்கு, நம் பிரார்த்தனைக்கு பலனாக, சிறியன கொடுக்கும் பழக்கம் இல்லை. அவர் கொடுப்பது அபரிமிதம். இரு கைகளாலும் பெற முடியாதது. பொங்கி வழியும். 

அன்பர் ஒருவர் ஐ.ஐ.டி - க்கு விண்ணப்பித்து இருந்தார். அதிகமான போட்டியால், ஏராளமானவருக்கு ஏமாற்றம். அதில் அன்பரும் ஒருவர். 

ஆனால் வாழ்வு தரும் ஏமாற்றம், அன்னை தரும் பெரிய வாய்ப்பு.

ஏமாந்தவர் சிங்கபூருக்கு விண்ணப்பித்தார். செலக்ஷனாயிற்று. முழு ஸ்காலர்ஷிப்புடன் அட்மிஷன் கிடைத்தது. இது போல, அவர், பல இடங்களுக்கும் விண்ணப்பித்து இருந்தார் . ஹாலந்தில் இருந்து, பேர் போன ஸ்தாபனத்தில் இருந்து அட்மிஷன் வந்தது. பெரிய இடம், பெரிய சலுகைகள் என வந்தது. 

இது அன்பர்களுக்கு அன்னை செயல்படும் விதம். நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இதை அறிவதில்லை. 

பலிக்காத சிறுயது, பலித்த பெரியது. 

எதற்கு பிரார்த்தனை செய்வது, ப்படிச் செய்வது என அறியாதவற்கு அவர்கள் நாடும் சிறியதை மறுத்து அவர்கட்குரிய பெரியதை தருவது அன்னையின் வழக்கம்.

- மலர்ந்த ஜீவியம் டிசம்பர் - 2012 






No comments:

Post a Comment