Pages

Wednesday, November 7, 2012

Audio : Tamil -பிரச்சினை தீர, ஆத்ம சமர்ப்பணம் செய்யும் முறை


Audio : Tamil  : Book Reading Online Version 


Topic:   பிரச்சினை தீர, ஆத்ம சமர்ப்பணம் செய்யும் முறை  



Book : எல்லாம் தரும் அன்னை  - ஸ்ரீ கர்மயோகி அவர்கள் 

(Book Reading Program -Nov 2, 2012)  - 9 mins.

Dear Sri Annai & Sri Aurobindo Devotees,
Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil

Click this link to Play the Audio


Player 1:

======================================= Player 2



       Next Book Reading Program on , Nov 9, 2012 @ Auromere Meditation Center  ( 5.30 - 6.00 PM)




அன்னையிடம் நாம் ஒரு பிரச்சினையைச் சொல்கின்ற பொழுது, அது சம்பந்தமான எல்லா விவரங்களையும் அவர் ஒன்றுவிடாமல் கேட்பார். விவரங்களை எல்லாம் சரியாகவும், முறையாகவும் நாம் சமர்ப்பித்தால், அன்னைக்குச் செயல்படுவது எளிதாகின்றது.





ஆத்ம சமர்ப்பணம்’ என்ற சொல்லுக்கு யோகத்தில் கொள்ளும் பொருளை இங்கு கருதாது, அதன் சாரமான கருத்தை மட்டுமே நோக்குவோம்.

பிரச்சினைக்கு உரியவர் பிரச்சினையின் கூறுகளை, தன் உள்ளொளிக்குச் சமர்ப்பிப்பதை இங்கு ‘சமர்ப்பணம்’ என்ற பொருளில் கொள்ள வேண்டும்.




அன்று செய்த தவற்றை இன்று உணர்ந்தால், இருள் நீங்கி, உறுத்திக் கொண்டு இருந்த பிரச்சினை முற்றிலும் உலர்ந்து போகும்.



அன்னையின் ஒளிக்குப் பிரச்சினையைக் கரைப்பது சுலபம்; ஆனால், மனிதன் தன் அறிவால், சொல்லப் போனால் பிடிவாதத்தால் ஏற்படுத்திக் கொள்ளும் இருளைக் கரைப்பது சுலபம் அன்று. அது கரைய நாளாகும்.





‘பிரார்த்தனை பலிக்கவில்லை’ என்றுகூடச் சிலர் நினைக்கின்றார்கள்.



அவர்கள் முதலில் தங்களின் நோய் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தங்களுடைய குறைபாடு என்னவென்பதை நுணுகிச் சலித்து அறிய வேண்டும்.







ஒரு பிரச்சினையை அழிக்க வேண்டும்’ என்ற தீவிரமான எண்ணத்துடன் முயன்றால், அதற்குச் சமர்ப்பணம் ஒன்றே உரிய கருவி. அவ்வெண்ணம் பூரணமாகச் செயல் படும்பொழுது, மனிதனால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே இருக்க முடியாது.







அது முடியாத பட்சத்தில், நெருங்கிப் பழகுபவர்களிடம் பிரச்சினைக்குக் காரணமான நம் குறைபாடு என்ன என்பதைக் கேட்டறிந்து அந்தக் குறைபாட்டை விலக்கியபின், பிரார்த்தனை செய்வது முதல் வழி.







இந்த முதல் வழியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தபிறகு, பிரச்சினையின் முழு விவரத்தையும் தினந்தோறும் ஒரு முறை அன்னையிடம் சொல்ல வேண்டும். இது இரண்டாவது வழி. முதல் வழியைப் பின்பற்றுவதன் மூலம் பிரச்சினை நாள் கடந்து தீரும். இரண்டாவது வழியின் மூலம் பிரச்சினை நிச்சயமாகத் தீரும். ஆனால், விரைவில் தீராது. ஏனென்றால் பிரார்த்தனைக்கு இரு கடமைகள் உண்டு. முதலில் பிரார்த்தனை, பிரச்சினைக்கு உரிய குறையை அகற்ற வேண்டும். பின்னர் பிரச்சினையைக் கரைக்க வேண்டும்.









Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி  Audio : Tamil -பிரச்சனை தீர, ஆத்மா சமர்ப்பணம் செய்யும் முறை ள்  

No comments:

Post a Comment