Pages

Wednesday, August 29, 2012

எது ஆன்மீக வாழ்வு? - Message of the Day, August 29, 2012


  

வயிற்றுப் பிழைப்பைத் தேடுவது - கடைநிலை வாழ்வு
வசதியையும் அந்தஸ்தையும் தேடுவது - சாதாரண சமூகவாழ்வு
முன்னேற்றத்தை நாடுவது - ஆக்கபூர்வமான வாழ்வு
திருவுருமாற்றத்தை நாடுவது - ஆன்மீக வாழ்வு 


எந்த விஷயத்தில் மனம் முதலிலேயே நம்பிக்கை கொள்கிறதோ அந்த விஷயத்தில் அன்னை நம் நம்பிக்கை மூலம் நிலைமையை மாற்றுவார். நமக்கு அனுபவத்தால் நம்பிக்கை வருகிறது. அதற்குப் பதிலாக நம்பிக்கையால் அனுபவம் வரவேண்டும்.
  • சமூகம் மாறுவதால் மேற்சொன்ன நல்ல மாறுதல்கள் ஏற்படுகின்றன. அன்னை சக்தி உலகில் வந்தபின் அதை அறிந்து நம்புபவர்கட்கு உச்சகட்ட மாறுதல் உண்டு. நாம் எந்த நிலையில் இருந்தாலும் எந்த நிலைக்கும் போகலாம், உச்சகட்டம் நம்மை எதிர்கொள்ளும். நம் பங்கு, நல்லெண்ணம், நம்பிக்கை, முயற்சி.
  • சமூகத்தால் முன்னுக்கு வர உடலுழைப்பு, அறிவு தேவை.
  • அன்னையால் முன்னுக்கு வர நம்பிக்கையும், நல்லெண்ணமும் தேவை.
  • எந்த நிலையிலிருந்தாலும் முன்னேற்றத்தை நாடுபவர் குறைவு. பெறுபவர் மிகக் குறைவு. சமூகம் கட்டாயப்படுத்தினால்தான் பெரும்பாலோர் முன்னேறுவார்கள். 250 ஆண்டுகட்கு முன் பள்ளிப் படிப்பு வந்தது. இன்றும் பள்ளிக்குப் போகாதவருண்டு. சர்க்கார் படிக்க கட்டாயப்படுத்துகிறது. நாம் 250 ஆண்டுகள் காத்திருக்கப் போகிறோமா? அல்லது இன்றே முயன்று பலன் பெறலாமா என்பதே கேள்வி.
  • நாம் திருவுருமாற்றத்தை நாடினால் நம் திறமைக்கேற்ப ஆக்க பூர்வமான முன்னேற்றமோ, சமூக அந்தஸ்தோ வரும்.
  • அன்பர்கள் நேர்மையாக மட்டுமே சம்பாதிக்க முடியும். நேர்மைக்கு உத்திரவாதமளித்தால் பெரும் பணம் தேடி வரும். அப்படி வரும் செல்வம், செல்வமன்று, அருளை வெளிப்படுத்தும் செல்வம். அச்செல்வத்தை நாடுவது அருளின் வெளிப்பாட்டை நாடுவதாகும்.

-  அன்பர் உரை, மலர்ந்த ஜீவியம், ஜனவரி, 2000)

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Oppurtunity
               



No comments:

Post a Comment